“கலியுகத்தில் விரைவில் எனது தலைமையில் சித்தர்கள் ஆட்சி
தொடங்க இருக்கிறது. அதன் தாக்கம் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளது.
மக்கள் பல வகையில் துன்பத்திற்கு உள்ளாக இருக்கிறார்கள். குடும்பம்
எனும் அமைப்பே சிதைந்து தன்னந்தனியாகத் திரியப்போகிறார்கள். போட்டி,
பொறாமை, கள்ளம், கபடம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இயற்கைச்
சீற்றங்களும், புதிய நோய்க் கிருமிகளும் தோன்றி மிகப் பெரும் சவாலாக
இருக்கும். ஆனாலும் ஆலய வழிபாடுகள் அதிகமாகும். ஆலயத்தில் கூட
மக்கள் ஆடம்பர வழிபாடுகள் செய்து வந்தாலும் எந்தவித மனமாற்றமும்,
பக்குவகும் வந்ததாகத் தெரியவில்லை. சித்தர்கள் பெயராலும்,
என் பெயராலும், பல போலி வேலைகள் நடந்து வருவது கண்டு
வருத்தமடைந்தாலும் நமது ஆன்மிகம் தன்னைத்தானே சுத்தம் செய்து
கொள்ளும். என் பெயரையும், சித்தர்கள் பெயரையும் சொல்லி போலியாகப்
பிழைப்பு நடத்துபவர்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றுவது கடினமாகும்.
ஆனாலும் சில இடங்களில் ஒளி ரூபமாகவும்,. அரூபமாகவும் தோன்றி
உண்மையான நாடி மூலம் உரைத்து வருகின்றோம். உண்மையான
பக்தர்களுக்கு எனது எண்ணத்தைத் தெரிவிக்கும் செயல் அது. அதே
போல் இந்த நாடியில் முருகனது விருப்பம் இருந்தால் இது போன்று
தோன்றி அருள் தருவேன். முருகப் பெருமானும், நானும் மக்களின் கர்ம
வினை தீர்க்கும் வழி வகைகளை இதில் உனக்குத் தோன்றச் செய்வோம்.
நாங்கள் இரகசியம் என உரைப்பதை எதிரே வந்து நாடி கேட்கும் நபருக்கு
நீ உரைக்கக் கூடாது. அதே போல் யாருக்கு எங்கள் கருணை பார்வை
இருக்கிறதோ அவர்களுக்கே 100% உன்னால் நாடி படிக்க முடியும்.
பூஜைகள், தானங்கள், தர்மங்கள், யந்திரங்கள், மந்திரங்கள், தந்திரங்கள்,
மணி, மந்திரம், ஔஷதம், மூலிகை, மர்மங்கள், ஆலய வழிபாடுகள்
போன்றவற்றை வந்து அமர்கின்ற உண்மையான பக்தர்களுக்கு தெரிவித்து
அவனுக்கு இகலோகத்திற்கு தேவையான ஆரோக்யம், ஆயுள், கல்வி,
திருமணம், புத்திரபாக்கியம், பதவி, செல்வம், செல்வாக்கு, போன்ற
விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வழி வகைகளை உரைப்போம்.
முன்ஜென்மம் உரைப்போம். முன்ஜென்ம சாபங்களையும், அது தீர்க்கின்ற
மர்மங்களையும் உரைப்போம். எல்லாமே வழிபாடுகளாகவே இருக்கும்.
முருகப் பெருமானது வாக்கு மிகச் சாதாரணமானது அல்ல. எனது வாக்கும்
அவர் சொல்வதை சொல்லும் வாக்கு. என்னை இழிவு செய்பவர்களை நான்
மன்னித்து விடுவேன். முருகப் பெருமானை இழிவு செய்பவர்களை நான்
மன்னிக்கவே மாட்டேன். எனது குருதுரோகமாக அதை நினைக்கிறேன்.
எனவே நீயும் பக்தி இல்லாதவர்க்கும், நம்பிக்கை இல்லாதவர்க்கும் இதை
உரைக்கக் கூடாது. பரிகாசம் செய்பவர்கள் பாவத்தை சம்பாதிப்பவர்கள்.
அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சுவடியை ஆங்காங்கு
இருக்கும் சில அபூர்வ இடங்களில் வைத்து நீ பூஜிக்க வேண்டி வரும்.
எனவே அதற்கு உன்னைத் தயார் படுத்திக் கொள். போற்றுபவர்களைக்
கண்டும் ஏமாறாதே. தூற்றுபவர்களைக் கண்டும் கோபம் கொள்ளாதே
நான் பார்த்துக் கொள்கிறேன். முருகன் பார்த்துக் கொள்வார். எனது ஆசி
எப்போதும் உண்டு மகனே ஆசி ஆசி ஆசி.
இவ்விதம் ஒரு நீண்ட உரையை அகத்தியப் பெருமான் உரைத்து
முடித்தார். ஓர் இனம் புரியாத அனுபத்தில் திளைத்தேன். எனக்குள் சில
சந்தேகங்கள் வந்தது. அதை அகத்தியப் பெருமானிடம் கேட்கலாம் என்று
தோன்றியது. அதைக் கேட்ட உடன் நல்ல பதில்களை குரு முனிவர்
அகத்தியர் பகர்ந்தார்.
கேள்வி 1: சுவாமி திருமணம், வேலை, குழந்தை பாக்யம் போன்றவை
தருவதாகச் சொல்லியுள்ளதால் அதைத் தருவதன் நோக்கம் என்ன?
அகத்தியர் பதில்: மகனே நீ என்ன அர்த்தத்தில் கேட்கிறாய் என்பது
எனக்குப் புரிகிறது. இது போன்ற ஆசைகளை நிறைவேற்றுவதால்
பந்தத்தில் ஆழ்த்துவது ஆகிறதே என்பதுதான். நிச்சயம் இல்லை.
இல்லறத்தில் இருந்து பல கடமைகளை ஆற்றிக் கொண்டே இறை
சாதனையில் முன்னேற முடியும். அது மட்டும் இல்லாமல் பூர்வ ஜென்ம
சாபம் தீரவும் சிலர் இவ்விதக் கோரிக்கைகளோடு வருவதுண்டு. எனவே
அவரவர் பிராப்தப்படி இந்த அகத்தியன் வழிகாட்டுவேன் கர்ம வினை
தீரும் வழிகளை உரைப்பேன். முருகப் பெருமான் சில நபர்களுக்கு என்னை
உரைக்கச் சொல்வார். காரணம் அவர்கள் என்னோடு பலஜென்மங்களில்
தொடர்பு உடையவர்களாக இருப்பார்கள்.
கேள்வி 2: சுவாமி நம்பிக்கை இல்லாதவர்களுக்கும், சோதிக்க
நினைப்பவர்களுக்கும் உரைக்கக்கூடாது என்கிறீர்கள். அவர்களை நான்
எப்படி கண்டு பிடிப்பது?
அகத்தியர் பதில்: அதை முருகப் பெருமானும், நானும் பார்த்துக்
கொள்கிறோம். சோதிக்க வருபவர்களுக்கு பல சோதனை வைக்கும்
பலன்களை உரைத்து அவர்களை அவர்கள் வழியிலேயே சென்று
திருத்துவோம். ஆனாலும் முருகனது கோபம் உனக்கு நன்றாகவே
தெரியும் என்பதால் ஒருவருக்கு ஜீவநாடி படிக்கும் முன்பு என்னிடமும்,
முருகனிடமும் உத்தரவு கேள். நாங்கள் படி என்றால் படி. இல்லாவிடில்
விட்டு விடு. அவ்வளவுதான். காரணம் வருவோர் போவோர் எல்லாம்
கிள்ளுகின்ற கீரைகள் இல்லை சித்தர்கள். இறை நிந்தை செய்பவர்களைக்
கண்டால் நாங்கள் காதைப் பொத்திக் கொண்டு சிவ சிவ என உச்சரித்து
காத தூரம் சென்று கடலிலோ அல்லது அருவியிலோ குளித்து பின்பு சிவ
பூஜை செய்துதான் நிம்மதி அடைவோம். இவ்விதமிருக்க இந்த விஷயத்தில்
கருணை காட்ட முடியாது.
கேள்வி 3: நாடி படித்த உடனேயே பல அதிர்ஷ்டங்கள் வரவேண்டும்
என்பவர்கள் பற்றி?
அகத்தியர் பதில்: ஜீவ நாடியில் எங்களது வாக்குவருவதே அங்களது
ஆசியும் விருப்பமும் இருப்பதால் தான் என்பதால் நிச்சயம் நாங்கள்
சொல்கின்ற வழிகளைக் கடைபிடித்தால் அதிர்ஷ்டங்கள் வரும். வரக்கூடிய
அதிர்ஷ்டங்கள் அவர்களது கர்மவினைகளைப் பொருத்தும் அமையும்.
எனவே நாடி கேட்பதால் மட்டுமே பெரிய மாற்றம் நிகழாது. தொடர்ந்து
நம்பிக்கையுடன் கடைபிடித்து வரவேண்டும்.
இப்படிச்சொன்ன அகத்திய பெருமான் ஆசி கொடுத்து விட்டு சுவடியில்
இருந்து மறைந்து கொண்டார். இப்படி ஒவ்வொரு நாளும் எனக்கு பல
அதிசயங்கள் நடந்து வருகிறது. ஜீவநாடி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட
அதிசயங்களைக் கண்டிருக்கிறேன். எனவேதான் உத்தரவு இல்லாமல் நாடி
உரைப்பதில்லை. இவ்வித சம்பவங்கள் சிலருக்கு நம்பிக்கையின்மையைத்
தரலாம். அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையுமில்லை. உத்தரவு
இருப்பவர்களுக்கு ஜீவநாடி படிப்பேன். இல்லாவிடில் இல்லை என்பது
அகத்தியர் வாக்கு. இன்னும் பல இரகசியங்களைத் தொடர்ந்து சொல்லப்
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”
நமசிவய!
பதிலளிநீக்குவணக்கம் ஐயா, தங்களின் தொடர்பு விபரங்களை தரவும். நாடியின் பதிவு மிக அருமை,. சித்தர்களின் ஆட்சியை எதிர் பார்க்கிறேன்.
Beautiful revelation Aiya. I have used some portions of your posts at http://agathiyarvanam.blogspot.com/2015/03/the-gnana-skanda-jeeva-nadi.html. Mikka Nandri.
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா!
நீக்குவணக்கம் அய்யா
பதிலளிநீக்குதங்களை நேரில் சந்திப்பதற்கு அனுமதி வேண்டும் ஐய்யா
நன்றி ஐயா,
பதிலளிநீக்குஓம் அகத்தீசாய நம:மிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குமிகவும் அருமையான பதிவு. இப்பதிப்பை படிக்க கிடைத்தது மிக பெரிய பாக்கியம். தங்களை நேரில் சந்திக்கும் அனுமதி கிடைக்குமா ஐயா?
பதிலளிநீக்குமேலும் தொடர்ந்து படிக்க ஆவலாய் உள்ளேன். நன்றி.
பதிலளிநீக்குமிக அருமையான பதிவு.
பதிலளிநீக்குஐயா எமது பிறவிகடனை முடிக்க முருகன் அருள் புரிவார் என நம்புகிறேன் அவர் சொல் கேட்க ஆவலாய் உள்ளேன்
முகவரி மற்றும் தொடர் எண்னை( iyarkairajesh@gmail.com 9474292606 ) பகிரஇயலுமா
அந்தமானிலிருந்து