வியாழன், 28 மே, 2015

ஜீவ நாடி பேரதிசயம் ! ! !



ஒருவர் நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடி கேட்க வந்தார். அவர் வயிற்றில் வலி ஏற்பட்டுக் கொண்டே இருந்த்தாகக் கூறினார். பூஜை செய்து நாடி படிக்கப் பட்டது. முருகப் பெருமான் அவரது வயிற்றில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் அந்த வலிக்கு இவர் முன் ஜென்மத்தில் ஒருவரை கத்தியால் குத்தி வயிற்றில் வேதனையை உண்டாக்கி இருந்ததாகவும் நல்ல வேளையாக அவர் பிழைத்துக் கொண்டதாகவும் ஆனாலும் நீண்ட நாட்கள் மரண வயிற்று வலியை அவர் அனுபவித்து வந்ததாகவும் கூறி அந்த கர்ம
வினையைக் கரைக்காமல் நீ வேறு எந்த வைத்தியம் செய்தாலும் பலிதம் ஆகாது என்றும் கூறினார்.

 வந்து நாடி கேட்டவருக்கு ஒரே அதிர்ச்சி. ஐயா இந்த ஜென்மத்தில் நான் யாருக்கும் எந்த விதக் கெடுதலும் செய்ய வில்லை என்றார். அதற்கு முருகப் பெருமான் இந்த ஜென்மத்தில் நீ நல்லவன் என்பது எனக்கும் தெரியும் அதனால்தான் உனக்கு இந்த நாடி மூலம் நான் வாக்குரைக்கிறேன் என்றார். தெய்வமே பேசுகிறது என்று கண்ணீர் மல்கக் கதறி அழுதார். சிறிது நேரம் அழுத பின்பு சுவாமி இதற்குத் தக்கதான ஒரு பரிகாரம் சொல்ல வேண்டும் என்றார். அந்த கர்ம வினையை நீக்கும் பரிகாரம் உரைத்தார் முருகப் பெருமான்.


யாம் திருத்தணி செல்லும் போது எனது பாதம் பட்ட இடம். யாம் ஜீவ நாடியில்
தோன்றி அருள் வாக்கு சொல்லும் அற்புத ஸ்தலம். எனது பாதம் பட்ட இடம் என்று மீனா நாடியிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்தில் இரண்டு மூலவர்கள் உண்டு. ஒன்று சுயம்பு வடிவில் உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியாகிய யாம் இரண்டாவது ஸ்ரீ பால சுப்ரமண்யர். யாம் அருளாசி செய்யும் இந்த ஆலயத்தில் மூலவர் முன்பு இரண்டு வாகனங்கள் உண்டு. ஒன்று கஜ வாகனம், இரண்டாவது மயில் வாகனம்.இரண்டு பலி பீடங்கள் உண்டு.இரண்டு விநாயகர்கள் உண்டு.


ஒன்று வலம்புரி விநாயகர்,  இரண்டாவது இடம்புரி விநாயகர். எனக்கு முன்பு 18 சித்தர்களைக் குறிக்கும் விதமாக 18 அடி வேல் உள்ளது. இந்த வேலை பிரதிஷ்டை செய்யச் சொன்னது மீனாட்சி தேவி தனது நாடி மூலம் என்பதால் எனது கந்த லோகத்தில் இருந்து ஒரு நேரடியான கதிர்வீச்சு இந்த 18 அடி வேலின் மீது விழுகிறது.போகர் தவம் செய்த இடம். எனது தேவிகளான வள்ளி மற்றும் தெய்வானை பாதம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட பெருமைகளை உடைய இந்த ஸ்தலத்தில் நீ வந்து எனது வாக்கை இந்த ஜீவ நாடியில் கேட்பதால் மூன்று மாதம் அமாவாஸை அன்று நடக்கும் பூஜையில் வந்து கலந்து கொண்டு ஆலயத்தை 27 முறை சுற்றி வா நிச்சயம் மருந்து மாத்திரை ஏதுமில்லாமல் உனக்கு பூரண குணம் உண்டாகும் என்று முருகப் பெருமான் தனது ஆலயச் சிறப்பை தானே உரைத்து ஆனந்தம் அடையச் செய்தார். அதன் பின்பு மற்றொன்று உரைக்கிறேன் என்று முருகப் பெருமான் உரைத்தார். இந்த ஆலயம் நமது குருநாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களால் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி படிக்கும் ஆலயமாகும்.


அமாவாஸை இரவில் நடக்கும் பூஜையில் மட்டுமே நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஆசி பெற முடியும். பணிச்சுமை காரணமாக அதிக அளவில் ஜீவ நாடி தற்சமயம் படிக்கப்படுவதில்லை. முழுமையாக அனைவருக்கும் படிக்கும் காலம் வரும்போது அறிவிப்பு வரும்.


ஈரோடுபவானிஅந்தியூர்புதுக்காடு(மந்தை பஸ் ஸ்டாப்)மலைக்காரன்
இந்த முகவரியில் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் தோட்டத்தின் நடுவே ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில்தான் ஜீவ நாடி
படிக்கப்படுகிறது. முன் அனுமதி தேவை. எங்கு முருகன் நாடியில் தோன்றி வாக்கு உரைக்கிறாரோ அந்த ஆலயத்தையே பரிகாரஸ்தலமாக உரைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் அதேபோல் செய்து தனது வயிற்று வலியை நீக்கிக் கொண்டார்.

இது முருகப் பெருமான் தனது ஜீவ நாடியில் நடத்திய அதிசயம் எனப் பலரால்
பேசப்பட்டது எனலாம்.

                                  ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


செவ்வாய், 26 மே, 2015

அன்னாபிஷேகம் ! ! !


அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று சிவன் கோவில்களில் அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மூட்டைக் கணக்கில் அரிசியைச் சாதமாக வடித்து, கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, அதனை ஏழைகளுக்கு விநியோகம் செய்வார்கள். அபிஷேகத்திற்கு என்று சந்தனம், நல்லெண்ணெய், பன்னீர் என்று பல பொருட்கள் இருக்க, அன்னாபிஷேகத்தில் என்ன விசேஷம்?

மனித வாழ்வின் ரகசியமே இதில்தான் அடங்கியிருக்கிறது. மனிதனை இயக்குகின்ற சக்தியின் நிலைக் களனாய் விளங்குவது உணவு. மனிதனின் பிராணனோடும் தொடர்பு உடையது அன்னம். அதனால்தான் 'அன்னமயா பிராணமயா' என்ற சொற்றொடர் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதுமட்டும் அல்ல. அன்னம் இறைவனின் ரூபமாகவே கருதப்படுகிறது என்பதை "அன்னம் பரப்பிரம்ம சொரூபம்" என்ற பழமொழி மூலம் உணர்ந்து கொள்ளலாம். அதிகப்பசி இருக்கும் போது நாம், "பசி பிராணன் போகிறது" என்று சொல்வது உண்டு. உயிர் சக்தியைத் தருவது அன்னம். அதனால்தான் தானத்தில் சிறந்த தானமாகக் கருதப்படுவது அன்னதானம்.

உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும், அவரவர்க்கு ஏற்றபடி உணவுப் பங்கீட்டு முறையை சரிவர அளிப்பவர், இறைவன். உணவு என்று வரும் போது அதனை அளிப்பவள் அன்னை. அதனால்தான் காசி மாநகரில், உலகைக் காக்கும் பொருட்டு, அன்னை அன்னத்தை அளிக்கும் அன்னபூரணியாக அருள் பாலிக்கிறாள். ஆம்! நாம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நமக்கு உணவு வேண்டும் என்பதற்காகவே தொப்புள் கொடி மூலம் நமக்கு உணவு அனுப்பி வைக்கப்படுகிறது! அது மட்டும் அல்ல. 

பசி என்பது அனைவருக்கும் உரியது. எவ்வளவுதான் பணம் படைத்தவர்களாய் இருந்தாலும், அவர்களும் பசி வரும் நேரம் உணவைத்தான் தேடிச் செல்கின்றனர்.

மனிதன் விதவிதமான உணவு வகைகளை உண்டு வந்தாலும், அவனுக்கு அலுக்காத உணவு அன்னம். வருடம் 365 நாட்களும் மனிதன் அன்னத்தைத்தான் உண்கிறான். வளரும் குழந்தை முதல் தடவை அன்னம் உண்பதையே, அன்னப்பிராசனம் என்று விழாவாகக் கொண்டாடுவது இன்றளவும் உள்ளது. எவ்வளவுதான் மனிதன் அரிசி மூட்டையை வாங்கி அடுக்கி வைத்தாலும், அதை உண்பதற்கும் மனிதனுக்கு ஒரு பாக்கியம் வேண்டும். எனவேதான் பதினாறு வகைப் பேறில் ஒன்றாகக் கருதப்படுவது 


உணவு. அதிலும் நம் பெயர் எழுதப்பட்டிருந்தாலே கிடைக்கும். பல நேரங்களில் நாம் நினைத்த படி உண்ண முடிகிறது. சில நேரங்களில் நோய் வாய்ப்படுதல், ஆரோக்கியக் குறைவு ஆகிவற்றின் காரணமாக உண்ண முடிவதில்லை. அது போன்ற நேரங்களில், வீட்டில் உள்ள முதியவர்கள், "சாப்பாட்டில் இன்று உன் பெயர் எழுதப்படவில்லை" என்று சொல்வார்கள்.

அதுமட்டும் அல்ல. மனத்துக்கும் வயிற்றிற்கும் நிறைவைத் தரக் கூடியது உணவு ஒன்றே. மேலும் மனிதன் "போதும்" என்று சொல்வது உணவுக்கு மட்டுமே! இத்தருணத்தில் ஒரு விஷயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். விழா, விருந்து என்று செல்லும் இடங்களில் நம்மில் பலர் உணவுப் பண்டத்தை வீணடிக்கிறோம். உலகமே உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்கையில், கிடைக்கும் உணவை வீணடிப்பது மிகப் பெரிய குற்றமல்லவா?

இனியாகிலும், உணவுப் பண்டத்தை வீணடிக்காமல் இருப்பது என்பதைக் கடைபிடித்தால், அது யாரேனும் ஒருவரின் பசியைத் தீர்க்கும் அமுதாகிவிடும். ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் போது நினைத்துக் கொள்ளுங்கள். "நாமெல்லாம் பாக்கியவான்கள்" என்று! ஏனெனில் இறையருள் இருந்தாலே அன்னம் கிடைக்கும் எனபதை திருநாவுக்கரசர்,

"அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும் இப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே

என்று அழகாகப் பாடுகிறார். எனவே நமக்கு கிடைக்கும் உணவை வீணடிக்காமல் பிறருடன் பகிர்ந்துண்போம்! வயிறோடு மனமும் நிறைந்து விடும்!

கந்தரனுபூதி பாடிய கிளி ! ! !


கந்தன் திருவருளால் கந்தரனு பூதி பாடிய கிளி 


திருவண்ணா மலையில் அரசாட்சி செய்து கொண்டிருந்தான் மன்னன் பிரபுட தேவராயன். அவன் மக்கள் சந்தோசம் அடையும் வண்ணம் செங்கோலாட்சி செலுத்தி வந்தான். அவன் அண்ணாமலை ஈசன் மீதும் அம்பிகை மீதும் அளவுகடந்த பக்தி செலுத்தி வந்தான். அவர் சபையில் பல புலவர்கள் ரிஷிகள் முனி குமாரர்கள் இருந்தனர். அதில் சக்தி உபாசகர் எனப் போற்றப்படும் சம்பந்தாண்டான் என்ற புலவர் இருந்தார். மன்னன் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.


ஒரு நாள் மன்னனுக்கு சுகவீனம் திடீரென்று ஏற்பட்டது. அது அதிகமாகி கூடிக் கொண்டு போகத் தொடங்கியது. வைத்தியர்கள் வைத்தியம் செய்து பலனில்லாது போக கவலை அடைந்தார். கந்தன் புகழ் பாடும் அருணகிரி வந்து கந்தன் புகழ்பாடி அண்ணா மலையானை தரிசிக்க வந்த போது பிரபுட தேவராய மன்னன் தீராத நோயில் அவதிபடுவதை அறிந்து அரண்மனை சென்றார். அங்கு வைத்தியர்கள் கூறுவதைக் கேட்டு அவர்களை அனுகி நோய் தீர வழியுண்டா எனக்கேட்டார். வைத்தியர்களும் என்ன வழி தெரியாமல் திகைத்திருந்தனர். ஏற்கனவே அரசபையில் முருகனின் இறைபக்தியை அறிய அருணகிரியுடன் போட்டியிட்டு தனது சக்தியை வரவழைக்க முடியாது தோற்று போயிருந்த சம்பந்தாண்டான், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவரை மடக்கலாம் என எண்ணி அருணகிரியிடம் "நீர் முருக பக்தன் என்பது உன்மையானால் நான் ஆனையிடுகிறேன், நீர் தேவலோகம் சென்று பாரிஜாத மலரைக் கொண்டு வந்தால் மன்னன் நோய் நீங்கும்" என்றார்.

அருணகிரியும் "முருகனருளால் பாரிஜாத மலரை கொண்டு வருவேன்" என்று கூறி, முருகனை நினைந்து திருவண்ணாமலைக் கோயிலுக்குச் உள்ளே சென்று கோபுரத்தில் உள்ள மேல் அறையில் தியானத்தில் அமர்ந்தார். அதே நேரம் ஒரு கிளி கோபுர உச்சியில் பறந்து வந்து அங்கே அமர்ந்தது. இறையருள் நிரம்பப் பெற்ற அருணகிரிநாதர் சித்தர் கலைகலில் ஒன்றான கூடு விட்டு கூடு பாயும் கலையில் தேர்ச்சி பெற்றவர். ஆதலால் கிளியின் உடலில் உயிர் பாய்ச்சி, அதாவது தமது உடலை மறைத்து அங்கே வைத்துவிட்டு கிளி உருவில் தேவலோகம் சென்றார்.

அமராவதி நகரில் உள்ள தேவர்கள் தலைவனான இந்திரன் சபையில் வீற்றிருந்தார். அப்போது அவர் மடியில் கிளி பறந்து வந்தமர்ந்தது. அதைக் கண்ட தேவேந்திரன் ஒரு கணம் அக்கிளியை உற்று நோக்கி விட்டு "அருணகிரிநாதரே வருக வருக! என் ஐயன் முருகன் ஏற்கனவே எனக்கு இட்ட கட்டளைப்படி இந்த பாரிஜாத மலரை எடுத்து வைத்திருக்கிறேன்" என மலரை கொடுத்தார். "அமரர்க்கு அரசே அடியேனின் நன்றி" எனக்கூறிய கிளி பாரிஜாத மலருடன் பறந்து விட்டது.

கிளிபறந்து வந்து திருவண்ணாமலையில் அரசன் பிரபுட தேவராயன் அரண்மனையை அடைந்து மன்னன் அருகில் பாரிஜாதமலரை வைத்தது. "கீ கீ" என்று கத்தியது. திரும்பிப் பார்த்தான் மன்னன் "பாரிஜாத மலரை இந்தக் கிளியா கொண்டு வந்தது" என வியந்தான். கிளி பறந்துவிட்டது. அருணகிரிநாதர் தான் கிளி உருவில் சென்று மலரைக்கொண்டு வந்துள்ளார். என நிணைத்து வைத்தியர்களிடம் கொடுக்க அவர்கள் அம்மலரால் அரசன் நோய் தீர்த்தனர். மகிழ்ச்சியடைந்த மன்னன் சம்பந்தாண்டாரை வரவழைத்தார். "என்ன

சம்பந்தாண்டாரே தாங்கள் விதித்த நிபந்தனையின் படி மலரைக் கொண்டு வந்து என் நோய் நீக்கி விட்டார், தோல்வியை ஒப்புக் கொள்ளும்"என்றார். அதைமறுத்து ஏளனமாக சிரித்தார். "சம்பந்தாண்டான் ஏன் சிரிப்பு?" என கோபத்துடன் வினவிய மன்னனைப் பார்த்து "அருணகிரியாவது தேவலோகம் சென்று திரும்பி வருவதாவது, அவர் வந்திருந்தால் எங்கே இருக்கிறார் என்று தங்களால் கூறமுடியுமா" எனக்கேட்டார். உடனே அரசனும் "ஆம் அருணகிரி கிளி உருவில் வந்தார், என் அருகே பாரிஜாத மலரை வைத்து விட்டு பறந்து விட்டது கிளி இது சத்தியம்" எனக் கூறினார்.

கிளியாக வந்த அருணகிரி தமது உடலை கோபுரத்தில் தேடியது உடலைக்கான முடியவில்லை அருணகிரியாரும் முருகனை நினைந்து தொழுதார். முருகன் அவன் முன் காட்சி அளித்தான். "அருணகிரி கவலை வேண்டாம், இதே கிளியுருவில் இருந்து எம்மைப் பாடுவதைத் தொடருங்கள்" என்று அருள் புரிந்தார். இதே போல் மன்னன் கனவிலும் தோன்றி "அரசே அருனகிரி கிளி உருவில் திருவருணைக் கோபுரத்தில் எப்போதும் இருப்பார். கவலை வேண்டாம்" என்றருள் புரியவும் அரசன் ஒடோடிச் சென்றான். அருணைக் கோபுரத்துக் கிளி மன்னனைக் கண்டதும் "கீகீ" என்று அவரது தோள்மீது வந்தமர்ந்து அவர் தலை முடியைக் கோதி ஆசி கூறியது. அன்று முதல் பிரபுட தேவராயன் முருக பக்தனாக மாறிவிட்டான்.
அருனகிரியாரும் தான் மரணமடையாமல் காத்த முருகன் திருவருளை 
கிளியாக இருந்து பாடிய திருப்புகழே, கந்தரனுபூதி ஆகும். அவர் உடல் மறைந்தாலும் கிளியுருவில் அவர் எமக்கு அருலிய பாடல்கள் திருப்புகழ், க்ந்தரனுபூதி, வேல்வகுப்பு என்பதாகும். சம்பந்தாண்டான்னால் யாருக்கும் தெரியாமல் அருணகிரியின் உடலைதான் அழிக்க முடிந்தது. ஆனால் உயிரை அழிக்கமுடியவில்லை. திருப்புகழ் பாடினால் வாய் மணக்கும்,கந்தன் அனுபூதி பாடினால் வாழ்வு சிறக்கும்.  
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் ! ! ! 

குருவுக்கு மரியாதை செய்வோம் ! ! !


குருவுக்கு மரியாதை செய்வோம்

மாதா, பிதாவால் நம் ஜனனம் நிகழ்கிறது. இந்த பிறப்பை அர்த்தமுள்ளதாகச் செய்பவர்கள் நம் ஆசிரியர்களே! குருவருளால் தான் திருவருள் – இறைவனின் அருள் கிடைத்து நிம்மதியாக வாழ முடியும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, “அ’வில் துவங்கி, உயர்கல்வி வரை கற்றுத் தந்து அவர்களை சீர்திருத்தும் சிற்பிகள் ஆசிரியர்களே! ஆசிரியர்கள் சொன்னதைக் கேட்டு எந்த ஒரு மாணவன் தன்னை சீர்படுத்திக் கொள்கிறானோ, அவன் பிற்காலத்தில் நிம்மதியாக இருப்பான்.


பகவான் கிருஷ்ணரும், குசேலரும் பள்ளிக்கூட நண்பர்கள். அக்காலத்தில் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள், அங்கேயே தங் கிப் படிக்க வேண்டும்; பள்ளி நேரம் தவிர, மற்ற சமயங்களில் குரு இடும் கட்டளைகளைச் செய்ய வேண்டும். ஒருநாள், இவர்களது குரு சாந்தீபனி முனிவரின் மனைவி, கிருஷ்ணரையும், குசேலரையும் சமைப்பதற்கு விறகு பொறுக்கி வரச்சொல்லி விட்டாள்.

குருவின் மனைவியின் கட்டளையை ஏற்ற அந்தக் குழந்தைகள், காட்டில் சென்று விறகு பொறுக்கினர். மழை வந்துவிட்டது. விறகு நனையாமல் இருக்க, ஒரு மரப்பொந்தில் அதை வைத்துவிட்டு, மழையில் நனைந்தபடி நின்றனர். இருட்டி விட்டது. குழந்தைகளைக் காணாத குரு, மனைவியைக் கடிந்து கொண்டு குழந்தைகளைத் தேடிச்சென்றார்.

குரு பத்தினியின் கட்டளையை நிறைவேற்ற விறகை மறைத்து விட்டு, மழையில் அவர்கள் நனைந்தது கண்டு கண்ணீர் வடித்தார். “நீங்கள் மிக நன்றாக இருப்பீர்கள்…’ என ஆசிர்வதித்தார். அவரது ஆசிர்வாதம் பலித்தது. துவாரகையின் மன்னரானார் கிருஷ்ணர்; ஏழையான குசேலர், தன் நண்பனின் உதவியால் பெரும் செல்வந்தரானார்.

குருவின் சொல்லை இளமையில் கேட்டு நடப்பவர்கள் எதிர்காலத்தில் செல்வந்தர்களாக விளங்குவர்.

குரு வணக்க நாள், ஆடி மாத பவுர்ணமியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் பஞ்சாங்கம் கணிப்பதில் மாறுபாடு ஏற்படுவதை ஒட்டி, ஆனிமாதக் கடைசியில் வரும் பவுர்ணமியில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த நாளில், அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டும். நீராடி, திருவிளக்கேற்றி, அதன் முன் அமர்ந்து, தங்களுக்கு கற்றுத்தந்த குருமார் மற்றும் தங்கள் ஆன்மிக குருக்களை மனதில் எண்ணி வணங்க வேண்டும்.

“த்யான மூலம் குரோர் மூர்த்தி
பூஜாமூலம் குரோர் பதம்
மந்த்ரமூலம் குரோர் வாக்யம்
மோக்ஷமூலம் குரோக்ருபா!

என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். சமஸ்கிருத உச்சரிப்பு வராதவர்கள், “தியானத்திற்கு உகந்தது குருவின் திருவுருவம்; பூஜிக்கத் தகுந்தது குருவின் திருப்பாதங்கள்; மந்திரத்திற்கு உகந்தது குருவின் வாக்கியங்கள்; குருவின் அருள், மோட்சம் நல்குகிறது…’ என்று சொல்ல வேண்டும்.

துறவிகளை வணங்க வேண்டும்; ஆன்மிக சொற் பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அன்று பகலில் பழம், பால் மட்டுமே சாப்பிட வேண்டும். மகான்கள் படம் இருந்தால், அதற்கு பூஜை செய்ய வேண்டும்.

ஆன்மிக ரீதியாக குரு இல்லாதவர்கள், மகாபாரத ஆசிரியர் வியாசரை தங்கள் குருவாக எண்ண வேண்டும். அவர் நான்கு வேதங்கள், பதினெட்டு புராணங்கள், ஸ்ரீமத் பாகவதம் ஆகியவற்றை உலகுக்கு தந்து உலக மக்களுக்கு தர்மத்தின் பாதையைக் காட்டியவர். அவரை இந்நாளில் பூஜிக்க வேண்டும். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அவருக்கு சன்னதி உள்ளது. அங்கு சென்று அவரைப் பூஜித்து வரலாம்.

மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!



மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்!
 மரு‌த்துவ குண‌ம் கொ‌ண்ட அரச மர‌ம்! , ஒரு அரச மரத்தை வைத்தால் சந்ததியினர் அனைவருக்கும் சொர்க்கத்தில் இடமுண்டு என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். ஒரு அரச கண் நடுவதற்கு, ஒரு அரச மரத்திற்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறதா?



 "அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்" என்றொரு பழமொழி இருக்கிறது. அரச மரத்தினுடைய காற்று கர்ப்பத்தையே பலப்படுத்தக்கூடிய அளவிற்கு மருத்துவ சக்தி பெற்றது. அரச மரத்தில் ஒருவித மின் ஆற்றல்கள், பாசிடிவ் எனர்ஜி அளிக்கக் கூடிய மின் ஆற்றல்கள் அரச இலை போன்றவற்றில் இருக்கிறது.


ஹோமங்களில் நாம் போடும் பொருட்களில் அரசங்குச்சி அவசியமாக அதில் இடம் பெறுகிறது. இந்த அரசங்குச்சியில் இருந்து வரக்கூடிய புகை மூச்சுத் திணறல், சளித் தொந்தரவுகளை போக்கக் கூடியது. நரம்புகளை முறுக்கேற்றக் கூடியது. சோர்வு, களைப்பு, நரம்புத் தளர்ச்சியுடன் இருப்பவர்களுக்கெல்லாம் மிகவும் நல்லது.


குறிப்பாக சொல்ல வேண்டுமானால், விந்தணுக்களினுடைய எண்ணிக்கை அதிகப்படுத்தக்கூடிய, பலப்படுத்தக்கூடியதெல்லாம் அரச பழத்தை பதப்படுத்தி உண்ணும் போது வருகிறதுநம்முடைய மூதாதையர்கள், முன்னோர்கள் மருத்துவ குணங்களை சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார்களே தவிர, நேரடியாக அறிவியலாக அதை சொல்லாமல் சென்றுவிட்டார்கள். அதனால், பாதியில் வந்தவர்கள் இதெல்லாம் மூட நம்பிக்கை, அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.


இதையே சிகாகோவில் இருக்கக் கூடிய பல்கலைக்கழகம், அரச மர இலையில் இவ்வளவு வீரியம் இருக்கிறது. அந்த மரத்திற்கு கீழ் உட்கார்ந்து அரை மணி நேரம் சுவாதித்தால் இத்தனை கலோரிகள் கிடைக்கிறது என்று அவர்கள் சொல்லும் போதுதான் மக்கள் நம்பப் போகிறார்கள்.


அதனால்தான், அரச, வேம்பு போன்றவைகளை பராமரிப்பது என்பது பரிகாரம் போன்றது என்று சொல்லியிருக்கிறார்கள். 4 அரச மரங்களை நட்டு அதற்கு கீழ் 4 பேர் உட்கார்ந்து மருத்துவ குணம் பெற்று உடல் நலம் தேறிச் செல்கிறார் என்றால், அந்தப் புண்ணியம் அந்த மரத்தை நட்டவரைப் போய்ச் சேரும்.


ஒரு ஆன்மாவைத் திருப்திப்படுத்தக் கூடிய செயல்தான் மரம் நடுதல். அதில் பயனுள்ள மரத்தை நடும்போது அவர்களுடைய புண்ணியம் இன்னமும் அதிகரிக்கிறது. அசோகர் மரம் நட்டார் என்று படிக்கிறோமே, இன்றைக்கும் அதையேதானே உலக நாடுகள் மரம் நடுவோம் என்று வலியுறுத்தி வருகின்றன.

வெள்ளி, 22 மே, 2015

முப்பத்து இரண்டு வகையான தர்மங்கள் ! ! !


நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?


1. ஆதுலர் சாலை - ஏழைகளுக்கான தர்ம விடுதி
2. ஓதுவார்க்கு உணவு - படிக்கிற பிள்ளைகளுக்கு உணவு
3. அறு சமயத்தார்க்கு உணவ - அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு
4. பசுக்கு உணவு
5. சிறைச் சோறு - சிறையிலிருக்கும் அனைவருக்கும் உணவு
6. ஐயம் - பிச்சையிடல்
7. திண்பண்டம் வழங்கல்
8. அறவைச் சோறு - அனாதைகளுக்கு உணவளித்தல்
9. மகப்பெறுவித்தல் - பிரசவம் பார்த்தல்
10. மகவு வளர்த்தல் - குழந்தைகள் வளர்த்தல்
11. மகப்பால் வளர்த்தல் - குழந்தைகளுக்குப் பால் வழங்குதல்
12. அறவைப் பிணஞ்சுடுதல் - அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்தல்
13. அறவைத் தூரியம் - அனாதைகளுக்கு உடையளித்தல்
14. சுண்ணம் - வெள்ளை கொத்தல்.
15. நோய் மருந்து - வைத்தியம்
16. துணிவெளுப்பவர் - ஏழைகளுக்கு இலவசமாகத் துணி வெளுத்தல்
17. நாவிதர் - ஏழைகளுக்கு இலவசமாகச் சவரம் செய்தல்
18. கண்ணாடி - முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளே முத்துக் கண்ணாடி
19. காதோலை (சுருட்டப்பட்ட பனை ஓலை)
20. கண் வைத்தியம்
21. தலைக்கெண்ணெய்
22. பெண்போகம் - காம நோயால் இறந்து படும் திக்கற்றவர்களுக்கு உதவுதல்
23. பிறர் துயர்காத்தல்
24. தண்ணீர்ப் பந்தல்
25. மடம் (சத்திரம்)
26. தடம் ( சாலை அமைத்தல்)
27. சோலை ( கோட்டம் வளர்த்தல்)
28. ஆவுரிஞ்கதறி - பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல்
29. விலங்கிற்கு உணவு - சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்
30. ஏறுவிடுதல் - நல்ல ஜாதி மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய் விடுதல்
31. விலை கொடுத்து உயிர் விடுதல்- விலை கொடுத்தாகிலும் உயிர்களைக் காப்பாற்றுதல்
32. கன்னிகாதானம் - கல்யாணம் செய்து வைத்தல்

முருகனுக்கு காவடி எடுப்பது ஏன்?




அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து , தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு சிகரங்களையும் கொண்டு வரும்படி கூறினார்.


அகஸ்தியரின் கட்டளைக்கிணங்க இடும்பனும் கயிலை சென்று இவ்விரு மலைகளையும் இருபுறமும் தொங்க, காவடியாகக் கட்டி எடுத்துக் கொண்டு வந்தான். முருகன் இவ்விரு கிரிகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.


இடும்பன் வழி தெரியாமல் திகைத்த போது, முருகன் குதிரை மேல் செல்லும் அரசனைப் போல் தோன்றி இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறுகிறார்.
இடும்பனும் காவடியை இறக்கி வைத்து ஓய்வெடுத்து விட்டுப் புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடினான். ஏன் இப்படி காவடியைத் தூக்க முடியாமல் போனது என்று சுற்றிப் பார்க்கும் போது சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணாண்டியாய் கையில் தண்டுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான்.


ஆனால் அந்த சிறுவன் இந்த மலை 'தனக்கே சொந்தம்' என்று உரிமை கொண்டாட, கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றான். அப்போது இடும்பன் வேரற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான்.
இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று வேண்ட, முருகன் இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி சந்தனம், பால், மலர் போன்ற அபிஷேகப் பொருட்களை தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார்.
அப்போது முதல் முருகனுக்கு இந்த காவடி எடுக்கும் பழக்கம் வழக்கமாகி விட்டது என்று ஆன்மீக வாதிகள் சொல்கிறார்கள்.


எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை


முருகனின் சிறப்பு நாட்களில் காவடிகளை எடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். 
பால் காவடி, பன்னீர் காவடி, வேல் காவடி என்று பல வகைக் காவடிகளைப் பார்த்திருப்பீர்கள் இந்தக் காவடியைப் பற்றிய ஒரு புராணக் கதையைப் பார்ப்போமா?


ஒரு சமயம் அகஸ்திய முனிவர் சிவகிரி, சக்தி கிரி என்ற இரு மலைகளைத் 
தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் செல்ல ஆசைப்பட்டு அதற்காக இடும்பன் என்ற அசுரனை நியமித்தார். இடும்பன் ஒருவன் தான் சூரபத்மன் வழியில் வந்தவர்களில் எஞ்சிநின்றான். சூரபத்மனும், சுராசுரனும் ஸ்ரீமுருகப் பெருமானால் அழிக்கப்பட்டனர். இடும்பன் எல்லோருடைய தவறுக்கும் வருந்தி மன்னிப்புக் கேட்டான், அன்றையத் தினத்திலிருந்து முருக பக்தன் ஆனான்.


அந்த இடும்பன் அகஸ்திய மகா முனிவரின் வேலையை, அதாவது இரு மலைகளையும் தூக்கிப் போகும் வேலையை ஒப்புக்கொண்டான். இரண்டு மலைகளையும் இரு பக்கமும் ஒரு தராசு போல் கட்டிக்கொண்டு தன் தோளில் சுமந்து ஸ்ரீ முருகனையே நினத்துக்கொண்டு பழனி வந்தான். சற்று இளைப்பாறலாம் என்று தன் சுமையை இறக்கி வைத்தான். பின் கொஞ்ச நேரம் கழித்து அதைத் தூக்க முயன்றான், முடியவில்லை. பல தடவைகள் முயன்றும் அசைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கந்தனை நினைக்க, ஒரு சிறுவன் கோமணத்துடன் தோன்றினான். தனக்கு மேலே ஏறிப் போக வேண்டும் அதனால் இந்த மலைகளை நகற்றச் சொன்னான். இடும்பனால் நகற்ற முடியவில்லை. பின் சிறு சண்டை ஆரம்பித்து, பெரிய சண்டையில் இடும்பனை அந்தச் சிறுவன் அடிக்க இடும்பன் இறந்தான். உடனே அந்தச் சிறுவன் முருகனாகக் காட்சி அளித்து இடும்பனைப் பிழைக்க வைத்தார். இடும்பனுக்கு வந்தது முருகப் பெருமானே என்று தெரிந்து வணங்கினான். அப்போது அவன் 

ஸ்ரீமுருகனிடம் கேட்டுக் கொண்டான், “யார் இதைப் போல் தோளில் காவடி போல் சுமந்து வருகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிய வேண்டும் .” என்று. அவர் குடி கொண்டிருக்கும் கோவில் வாசலில் என் சிலை இருக்க வேண்டும், வரும் பகதர்கள் என் சிலையை வணங்கிவிட்டுத்தான் உள்ளே போகவேண்டும் என்று வேண்டிக்கொண்டான். ஸ்ரீ முருகனும் அங்கனமே அருளினார். அதனால் தான் இடும்பன் முருகன் கோவிலில் முதலிலேயே காட்சி அளிப்பார்.

இப்போது காவடிகளைப் பார்ப்போம். காவடி என்பது இரு குடங்களில் பாலோ அல்லது தேனோ, இள்நீரோ நிரப்பி, அதை ஒரு கம்பில் இரு பக்கங்களும் தொங்க விட்டு. தோளில் தூக்குவது, பல வேல்களைப் பூக்களுடன் அமைத்து ஒரு பெரிய வில் போல் கம்பை வளைத்து, அதன் கீழே தூக்குவதற்கேற்ப ஒரு நீண்ட சட்டம் கொடுத்துத் தோளில் சுமப்பது போன்றவைகள் ஆகும். இதைத் தவிர சிலர் அலகு என்றுச் சொல்லப்படும் ஒரு நீண்ட ஊசியை ஒரு கன்னம் வழியாகக் குத்திக் கொண்டு மறு கன்னம் வழியாக வரவழைத்துப் பிரார்த்தனைச் செலுத்துவார்கள்.சிலர் 108 வேல்களை உடலில் குத்திக்கொண்டு முருகப் பெருமானிடம் மனதார ஒன்றி விடுவார்கள். சிலர் அக்னி மூட்டி அதன் மேல் நடப்பார்கள். அதற்குத் தீ மிதித்தல் என்று பெயர். மனம் முருகனிடம் ஒன்றி விடுவதால் வலி தெரிவதில்லை, இரத்தம் வருவதில்லை. விழா முடிந்தவுடன் அந்த இடத்தின் மேல் விபூதி பூச வடுக்களும் இருப்பதில்லை. இவை எல்லாம் முழு நம்பிக்கையின் ஆதாரத்தில் தான் நடக்கின்றன. நம் நாட்டில் மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இந்தக் காவடிகள் எடுக்கப்படுகின்றன.

எது எப்படியோ? ஒவ்வொரு மனிதனுக்கும் இன்பமும் துன்பமும் இரண்டு சுமைகளாக சரி சமமாக இருக்கிறது. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த இரண்டு சுமைகளையும் தாங்கித்தான் ஆக வேண்டும். இதற்கு கடவுள் பக்தி எனும் ஆன்மீக எண்ணம் இந்த இரண்டு சுமைகளையும் எளிமையாகச் சுமக்க உதவும் மையக் கோலாக உள்ளது என்பது மட்டும் உண்மை.

சனி, 16 மே, 2015

படித்ததில் பிடித்தது!


சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
நீங்கள் எத்தனை கோடி ,கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்றமகிழ்ச்சி…….
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை!.. ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்வழிபாடுதான்.உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்பஒற்றுமைவேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.அங்கேவாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,ஏழு,ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும் பறந்துவரும்.அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில்நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்எமன்மகிழ்வாராம்.எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும் திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.தந்திரமானகுணம்கொண்டகா காலையில்நாம்எழுவதற்குமுன்,காக்கையின் சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே எனவே,காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்வாழலாம்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சனி, 2 மே, 2015

முப்பெரும் விழாவில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு பண்டித காழியூர் நாராயணன் அவர்கள் வாழ்த்து!


உலகப் புகழ் ஜோதிட மேதை” பண்டித காழியூர் நாராயணன் அவர்கள் விழாவைத் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில் மக்கள்

"ஜோதிடம் என்றால் ஜோதிடத்தையே முழுதும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது, அதேபோல் மருத்துவர் என்றால் மருத்துவரையே முழுதும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது, கடவுள் என்றால் கடவுளையே நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது" 


தன்னம்பிக்கை மிக மிக அவசியம், ஒரு பேட்டியில் கூட என்னைக் கேட்டார்கள் நீங்கள் பெரியாரையும் சங்கராச்சாரியாரையும் கலந்த மாதிரி பேசுகிறீர்கள் என்று,உண்மைதான் ஜோதிடம் பொய் அல்ல அதே சமயம் அதையே பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாது.  நான் இப்படிச் சொல்வதால் சிலருக்கு என் கருத்துக்கள் பிடிக்காமல் கூட போகலாம் ஆனால் அதுதான் நல்லது. ஜோதிடரிடம் சென்று நல்ல சக்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே அல்லாது நமது கஷ்டங்களைச் சொல்லி ஒப்பாரி வைக்கும் இடம் என்று கருதக் கூடாது. இந்த நிக்ழ்ச்சிக்கு என்னை அழைத்தவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் ஒரு கேள்வி மட்டும் கேட்டேன். ஏதோ ஒரு கிராமத்தில் வைத்திருக்கிறீர்களே அங்கு கூட்டம் வருமா? என்பதுதான் அதற்கு அவர்கள் சொன்ன பதில் வந்து பாருங்கள் என்றார்கள். சரி ஒரு பத்து பதினைந்து பேர் இருப்பார்கள் என்று எண்ணி வந்தேன் உண்மையிலேயே அசந்து போய்விட்டேன். அடடா...என்ன கூட்டம்... என்ன கூட்டம்... உண்மையிலேயே மிக்க மகிழ்சியாக இருக்கிறது. 

இவ்வளவு அருமையான ஏற்பாடுகளை எப்படிச் செய்ய முடிகிறது எனக் கேட்டேன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்களின் சீடர்களும் தொண்டர்களும் இரவு பகல் பாராது இதற்காக உழைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி அடந்தேன். சாத்தியமே படாத ஒரு விஷயம் இன்று சாத்தியாமாகி இருக்கிறது. இந்த இடம் எனக்கு திருப்பதி போன்ற உணர்வைத் தருகிறது. ஜோதிட உலகில் பி.டி.ஜெகதீஸ்வரன் எனும் ஒரு இளம் புயல் கிளம்பி இருக்கிறது. இந்த வயதில் யாருமே தொடாத விஷயங்களை ஆய்வு செய்து மூன்று நூல்களை எழுதி இருப்பது பெரிய விஷயம். அவரிடம் திறமை இருக்கிறது, அறிவு இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது, பண்பு இருக்கிறது, பரிசுத்தம் இருக்கிறது அதேபோல் பணிவு இருப்பது பெருமையான விஷயம். இதை எல்லாம் விட மேலாக பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்களிடம் தெய்வ பலம் மிகுதியாக இருக்கிறது. இந்த வயதில் இவ்வளவு சாதனைகள் என்றால் இன்னும் பெரிய வயதில் பல அரிய சாதனைகள் படைப்பார். நிச்சயம் இந்த ஜோதிட உலகம் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கும். ஐம்பெரும் நூல்களை வெளிட்டு அவரும் ஒரு அற்புத நூலை எழுதிய சித்தர் அடிமை ஸ்ரீ சி.ராஜு அவர்கள் எனது நீண்ட கால நண்பர், கடின உழப்பாளி அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


F:\book release photos\DSC_7320.jpg

ஸ்ரீநிவாசன் பஞ்சாங்கம் ஆசிரியர் திரு. நர நாராயணன் அவர்களுடன் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர்
F:\book release photos\DSC_7243.jpg



உலகப் புகழ் தொலைதூரப் பரிகாரர் திரு.குருவருள் நடராஜன் அவர்களுக்கு நமது குருநாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்கள் பொன்னாடை, சந்தன மாலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அருகில் திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஆசிரியர் திரு ராஜீ அவர்கள்