ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

முருக பக்தர்கள் 4 வது மாநில மாநாடு

                                                         
                                           அனைவரும் வருக.... அருள் பெறுக....

பதிப்பு திட்ட ஆலோசனைக் கூட்டம்...


#வண்ணச்சரபம்_தண்டபாணி_சுவாமிகள் எண்ணற்ற பக்தி இலக்கிய பாடல்களை ஓலைச்சுவடிகள் மூலம் நமக்கு அருளிச் செய்துள்ளார்கள். சுவாமிகளின் ஒப்பற்ற இலக்கியப் படைப்புகளை ஓலைச் சுவடிகளிலிருந்து கணினியில் பதிவேற்றும் பணி தற்பொழுது நமது சிரவையாதீனத்தின் முயற்சியால் நடைபெற்று வருகின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க இப்பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அறிஞர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நமது சிரவையாதீன குருமகா சன்னிதானங்கள் தலைமையில், கௌமார மடாலயத்தில் 16.09.2018 அன்று நடைபெற்றது.

க்கூட்டத்தில்
மேனாள் பேராசிரியர். முனைவர் சு. வெங்கட்ராமன் அவர்கள், மதுரைப் பல்கலைக்கழகம்.
மேனாள் பேராசிரியர். முனைவர். ஐ.கே.சுப்பிரமணியம் அவர்கள், கோவை அரசு கலைக் கல்லூரி.
இணைப் பேராசிரியர். முனைவர் சதீசு அவர்கள், சென்னை - உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம்.
முனைவர் பட்ட ஆய்வாளர் சு. கலைவாணி ஆகியோர்கள் கலந்துகொண்டு பதிப்பு திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இக்குழுவின் முயற்சியால்
#வண்ணச்சரபம்_தண்டபாணி_சுவாமிகள் அருளிய நெல்லைப் பதிகங்கள் என்னும் 1300 பாடல்கள், ஓலைச் சுவடிகளிலிருந்து கணினியில் பதிவேற்றப்பட்டு தற்பொழுது 400 பக்கங்கள் கொண்ட புத்தகமாக அச்சிடப்பட்டுள்ளது, அடுத்த மாதம் திருநெல்வேலியில் நடைபெறயிருக்கும் மாநில முருக பக்தர்கள் மாநாட்டில் இந்நூல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய 45000 பாடல்கள் ஏற்கனவே அச்சேற்றப்பட்டு, பல்வேறு தொகுதிகளாக புத்தகவடிவில் உள்ளது. கோவை - கௌமார மடாலயம், தவத்திரு. கஜபூசைச் சுந்தர சுவாமிகள் தமிழாய்வு மையத்தில் கிடைக்கும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

பேரூர் ஆதீனம் கௌமார மடாலயம் வருகை

பேரூர் ஆதீனமாக தற்பொழுது அருளாட்சி ஏற்றுள்ள சீர்வளர்சீர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் 22.09.2018 சனிக்கிழமை அன்று நமது கௌமார மடாலயத்திற்கு வருகை புரிந்தார்கள். ஆதீனம் அவர்களுக்கு மடாலயம் சார்பில் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது, கௌமார மடாலய ஆதி குருமுதல்வர்களுக்கு ஒளி வழிபாடு செய்து மடாலய அன்பர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். அதில் சில படங்கள்.



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!