வியாழன், 6 பிப்ரவரி, 2014

பசு வழிபாடு

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும்புண்ணியமாகக்  கருதுகின்றனர்இந்தப் பசுவைகோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர் பசுவின் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும்,
 புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாகக் கருதுகின்றனர்.
*பசுவின் கொம்புகளின் அடியில் – பிரம்மன்,திருமால்
*கொம்புகளின் நுனியில் – கோதாவரி முதலியபுண்ணிய தீர்த்தங்கள்,
*சிரம் – சிவபெருமான்
*நெற்றி நடுவில் – சிவசக்தி
*மூக்கு நுனியில் – குமரக் கடவுள்
*மூக்கினுள் – வித்தியாதரர்
*இரு காதுகளின் நடுவில் – அசுவினி தேவர்
*இரு கண்கள் – சந்திரர்சூரியர்
*பற்கள் – வாயு தேவர்
*ஒளியுள்ள நாவில் – வருண பகவான்
*ஓங்காரமுடைய நெஞ்சில் – கலைமகள்
*மணித்தலம் – இமயனும் இயக்கர்களும்
*உதட்டில் – உதயாத்தமன சந்தி தேவதைகள்
*கழுத்தில் – இந்திரன்
*முரிப்பில் – பன்னிரு ஆரியர்கள்
*மார்பில் – சாத்திய தேவர்கள்
*நான்கு கால்களில் – அனிலன் எனும் வாயு
*முழந்தாள்களில் – மருத்துவர்
*குளம்பு நுனியில் – சர்ப்பர்கள்
*குளம்பின் நடுவில் – கந்தவர்கள்
*குளம்பிம் மேல் இடத்தில் – அரம்பை மாதர்
*முதுகில் – உருத்திரர்
*சந்திகள் தோறும் – எட்டு வசுக்கள்
*அரைப் பரப்பில் – பிதிர் தேவதைகள்
*யோனியில் – ஏழு மாதர்கள்
*குதத்தில் – இலக்குமி தேவி
*வாயில் – சர்ப்பரசர்கள்
*வாலின் முடியில் – ஆத்திகன்
*மூத்திரத்தில் – ஆகாய கங்கை
*சாணத்தில் – யமுனை நதி
*ரோமங்களில் – மகாமுனிவர்கள்
*வயிற்றில் – பூமாதேவி
*மடிக்காம்பில் – சகல சமுத்திரங்கள்
*சடாத்களியில் – காருக பத்தியம்
*இதயத்தில் – ஆசுவனீயம்
*முகத்தில் – தட்சிணாக்கினி
*எலும்பிலும்சுக்கிலத்திலும் – யாகத் தொழில்முழுவதும்
*எல்லா அங்கங்கள் தோறும் – கலங்காநிறையுடைய
 கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள் .
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டனஅவைநந்தாபத்திரைசுரபிசுசீலைசுமனை ஆகியவை. . இவைபொன்னிறம்கருமைவெண்மைபுகைசிவப்பு நிறம்கொண்டிருந்தனஇவற்றின் சந்ததிகளே பூலோகத்தில்நமக்கு உதவியாக இருந்து வருகின்றனஇவற்றில்இருந்துவரும் கோமயம்(சாணம்),  மூத்திரம்(கோமியம்), பால்தயிர்வெண்ணெய் ஆகியஐந்தும் புனிதமானவைஇவற்றை குறிப்பிட்ட அளவில்கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது
இப்பசுக்களில் மும்மூர்த்திகள்சத்தியம்தர்மம்என்று எல்லா தேவதைகளும்வசிக்கின்றனர்செல்வவளம் தரும் திருமகள் இதன்பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்வசிக்கிறாள்இப்பகுதியைதொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள்விலகும்காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில்காண்பது சுபசகுனம் தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால்இன்னும் விசேஷம்பாற்கடலில் பிறந்த ஐந்துபசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்துஅருள்பாலிப்பதாக ஐதீகம்பசுவைத் தெய்வமாகவழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம்உண்டாகும்.வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின்வாசஸ்தலம்.
 வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவதுகோலோகம்.
கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும்தெய்வங்களும்
1. முகம் மத்தியில்                       சிவன்
2. வலக் கண்                               சூரியன்
3. இடக் கண்                               சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                     ராகு
8. கழுத்து கீழ்புறம்                        கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்           சரஸ்வதிவிஷ்ணு
11. முன்வலக்கால்                         பைரவர்        
12. 
முன் இடக்கால்                        ஹனுமார்
13. பின்னங்கால்கள்                      ப்ராசரர்விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி             நாரதர்வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கை
16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                           பரத்வாஜர்குபேரர் வருணன்,அக்னி    
18. 
வயிற்றுப்பகுதி                        ஜனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                     நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                       ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                            வீமன்
22. இடக்கொம்பு                            இந்திரன்
23. முன்வலக்குளம்பு                     விந்தியமலை
24. முன்இடக்குளம்பு                      இமயமலை
25. பின் வலக்குளம்பு                      மந்திரமலை
26. பின் இடக்குளம்பு                      த்ரோணமலை
27. பால்மடி                                      அமுதக்கடல் 
பசு வழிபாடு வகை
 வழிபாடு இரண்டு வகைப்படும்.
1. பசு மாடுகளை சந்தன குங்குமம் போன்றவற்றால்அலங்கரித்து
எல்லா மந்திரங்களும் கூறிமலர்களால் அர்ச்சித்துதூப,தீபநிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.ஈசனைவிக்ரஹங்கள் வைத்து விரிவாக வழிபடமுடியாதவர் இறைவனின் படத்தை மட்டும் வைத்துவழிபடுவது போலவீட்டில்கோமாதாவின் படத்தைமட்டும் வைத்து 
வழிபாடு செய்வதும் முதல் வகையிலேயே அடங்கும்
2. பசுவைத் திருநாமங்கள் கூறி வழிபடாவிட்டாலும்வீட்டுப்பசுவுக்கு மட்டுமின்றி பசு இனத்துக்கேஉதவுவதாக அவற்றின் நலனைப் பாதுகாத்துப்பராமரிப்பதும் பசுவழிபாடேஇரண்டாம் வகை பராமரிப்புவழிபாடு இருந்தால் தான் முதல் வகை பூஜை வழிபாடுநடக்க முடியும்.கோமாதாவில் (பசுமுப்பத்து முக்கோடிதேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்அதன்பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.எனவேகோமாதா பூஜை செய்யும் போதுபசுவைமுன்புறமாக தரிசிப்பதைவிடபின்புறம் தரிசனம் செய்வதுமிகவும் நன்மை தரும்
பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால்பகுதியில் சந்தனம்குங்குமம் வைத்துமலர் அணிவித்துவழிபட வேண்டும்.பசுவின் சாணமும் லட்சுமிஅம்சமாகும்எனவேதான்அதிகாலையில் சாணத்தைவீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.பசுவுக்கு பூஜை செய்வதுபராசக்திக்கு பூஜை செய்வதற்குச்சமமாகும்.பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலானமும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம் என்றொருதெய்வம் உண்டு.
சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக திருமூர்த்திஇருக்கிறார்.
இவர்களுக்கும் மேலாக 10 வயது சிறுமியாகமனோன்மணி என்ற ஆதிபரப்பிரம்ம சக்திஇருக்கிறாள்.இவளே இந்த பிரபஞ்சம்,உலகம்,உயிர்கள்என அனைத்தையும் படைத்து,காத்து,ரட்சிப்பவளாகஇருக்கிறாள்
.இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன்வாழ்ந்து வருகிறாள்.இதனாலேயே,முப்பத்துமுக்கோடிதேவர்களும்,
நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சிசெய்கின்றன.
கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.எந்தஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.(உருவ வழிபாடுஇல்லை என சொல்லும் மதத்தினர் கூட 
கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச்செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)
கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம்நீங்கிவிடும்;குழந்தைபாக்கியம் உண்டாகும்.கெட்டசக்திகள் நெருங்காதுமுற்பிறவியில் செய்த பாவங்கள்நீங்கிவிடும்.
...

ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரம்

அதாதஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்
ஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்
ஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்
அஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.

இந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும்கேட்பவர்களுக்கும்,இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியதுவிரோதிகளைவெற்றி கொள்ளவும்நோய் நொடிகள் அண்டாமல்அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும்உலகிலுள்ளோர்அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமானமூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.

சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்
சரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.

சரவணப் பொய்கையில் பிறந்தவரும்ஸ்கந்தனும்தன்னைசரணமடைந்தவர்களை காப்பவருமானதாங்களை சரணடையூம்எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.

ராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்
ரதீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

குபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும்,தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும்கோடிமன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகலசெல்வங்களையும் அருள வேண்டும்.

பலாரி ப்ரமுகைர் வந்த்யவல்லீந்த்ராணி ஸுதாபதே!
வரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

இந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும்வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும்தன்னை அண்டியவர்களின்விருப்பத்தை நிறைவேற்றுபவனே!, எனக்கு சகல செல்வங்களையும்அருள வேண்டும்.

நாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்
நவவீரைபூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்


நாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும்சித்தர்கள்-கந்தர்வர்களாலும்வணங்கப்பட்டவரும்வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால்பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன்.எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.

பகவன் பார்வதீஸுநோஸ்வாமின் பக்தார்திபஞ்சன!
பவத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்

பகவானே!, பார்வதி குமாரா!, தலைவனேபக்தர்களின் கவலைகளைப்போக்குகின்றவனேதங்களுடைய பாத கமலங்களில் குறைவற்றபக்தியையும்அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்கவேண்டும்.

வஸுதான்யம் யசகீர்திம் அவிச்சேதம்  ஸ்ந்ததே:
சத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்

தங்கம்தான்யம்அளவற்ற புகழ்மகன்-பேரன் என்று வம்ச விருத்தி,விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து,செல்வத்தையும் அருள் புரிவீர்களாக!

இதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்
படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பதசிந்திதாதிகா:

ஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தைஎப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும்மேலாக செல்வங்கள் கிடைக்கும்.