செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

சக்கர வழிபாடு

சக்கர வழிபாடு மிக சக்தி வாய்ந்தது. எந்த சக்கர வழிபாடு செய்கிறோமோ

அதற்குரிய பலன்கள்நிச்சயம்கிடைக்கும். அந்த வகையில்செல்வம்

சேர மகாலட்சுமி சக்கர வழிபாடு மிக அவசியமானது. மகாலட்சுமியின்

அருட்பார்வை ஒருவர் மீது விழுந்து விட்டால் அவருக்குச் செல்வ வளத்திற்கு

குறைவே இருக்காது.பொருட் செல்வம் வர ஆரம்பித்து விட்டால் இதரச்

செல்வங்களும் தானாகவே தேடி வரும் என்பதில் ஐயமில்லை. "ஸர்வ

ஸம்பத் ஸம்ருத்யர்த்தம்'' என்ற மந்திரத்தைத் தினந்தோறும்

இருபத்தையாயிரம் முறை ஆறு நாட்கள் உச்சரித்து வர வேண்டும்.

அதிகாலை வேளையில் காலைக் கடன்களை முடித்து விட்டுக்

கிழக்கு முகமாக அமர்ந்து இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

எத்ருஸா த்ராகீயஸ்யா தரதஸித-நீலோத்பல-ருசா

தலியாம்ஸம் தீ நம ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே

அநே நாயம் தந்யோ பவதி நசதே ஹாநி-ரியதா

வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர''

இந்த மந்திரத்தை ஜெபித்து மகாலட்சுமியை வணங்கும்போது தேவிக்கு

நிவேதனமாக தேன் அல்லது பாயசம் வைத்து வழிபட வேண்டும். தேவியின்

கடைக்கண் பார்வைப் பட்டால் வாழ்வில் முன்னேற்றம் தானாக வரும்.

ஒருவருக்கு வாழ்வில் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது என்றால்

முனைப்புடன் செயல்படும் ஆற்றலும், தைரியமும், பக்கபலமும் வந்து விடும்.

இவ்விதம் வருவதற்கு மகாலட்சுமி சக்கரத்தை வைத்துப்பூஜை செய்து வர

வேண்டும். செப்புத் தகட்டிலோ, வெள்ளித்தகட்டிலோஅல்லது பஞ்சலோகத்

தகட்டிலோ இந்தச் சக்கரத்தைப் பதித்துப் பூஜையறையில் வைத்தும் வணங்கி

வரலாம்.

வெள்ளியினால் செய்த தாயத்தினுள்ளோ, தங்கத்தினால் ஆன

தாயத்தினுள்ளோ இந்தச் சக்கரம் பாதிக்கப்பட்ட தகட்டை அடைத்துக் கையில்

கட்டிக் கொள்ளலாம். நிச்சயமாக நன்மைகள் பெருகவும், நலம் சேரவும் பக்கத்

துணையாக விளங்கும்.

ஆகாச கருடன்கிழங்கு



கட்டிப் போட்டால்குட்டி போடும்என்றழைக்கப்படும்ஆகாச

கருடன்கயிற்றில்கட்டித்தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை

உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து

வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.இந்தக் கிழங்கு ஒரு கருடனுக்குச்

சமம்.அதாவது கருடன் வந்தால் அந்த இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும்

அணுகாது.அப்படி வந்தால் அவற்றின் விடம் பங்கப்படும்.அவ்வளவு

சக்தியுள்ளது இந்த ஆகாச கருடன் கிழங்கு.

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை

போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன்

தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும்.அதாவது இதை மீறிய சக்தி

நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக

இட்டு நம்மைக் காக்கும்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்).

தொட்டால் சிணுங்கி.நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது.

தெய்வீக மூலிகையுமாம். தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள்

மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல்

பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும்.

மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை மிகுவிக்கும்.அதனால்

‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை உடையது.

“பகரவே இன்னமொரு மூலிகேளு

பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே

பூசையிடு மந்திரத்தால் நினைவாக

உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.”

என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம்

செய்யப் பயன்படுத்துவர்.

செல்வம் கொழிக்க செய்யும் சொர்ணபைரவர்அஷ்டகம்:



இந்த அஷ்டகத்தை தேய்பிறை அஷ்டமி தோறும் படித்து வந்தால் செல்வம் செழிக்கும்

என ஞான ஸ்கந்தர் ஜீவ நாடியில் வந்துள்ளது. அதே போல் செய்து பலர் பலன்

அடைந்துள்ளார்கள். ஆனால் அசைவம் தவிர்க்க வேண்டும்.

தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்

மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்

சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே

தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்

தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்

காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்

தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்

உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்

முழுமலர்த் தாமரை மாலையை செபித்து முடியினில் சூடிடுவான்

தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்

தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்

வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்

தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்

நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்

காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்

தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்

கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்

நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்

தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான் சத்தோடு சித்தானான்

புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்

பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்

தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்வந்தருள்செய்திடுவாய்

ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்ஜெயங்களைத்தந்திடுவாய்

ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்

தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.

சொர்ண பைரவர் போற்றி – 33 (ஸ்ரீ துர்க்கை சித்தர்)

1. ஓம் ஸ்ரீம் தனவயிரவா போற்றி

2. ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி

3. ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி

4. ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி

5. ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி

6. ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி

7. ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி

8. ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி

9. ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி

10. ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி

11. ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி

12. ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி

13. ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி

14. ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி

15. ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி

16. ஓம் ஸ்ரீம் தினந்தினங்காப்பாய் போற்றி

17. ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி

18. ஓம் ஸ்ரீம் திருவருள்திரண்டாய் போற்றி

19. ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி

20. ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி

21. ஓம் ஸ்ரீம் சித்தருக்குச் சித்தா போற்றி

22. ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி

23. ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி

24. ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி

25. ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி

26. ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி

27. ஓம் ஸ்ரீம் முழு தனம் தருவாய் போற்றி

28. ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி

29. ஓம் ஸ்ரீம் முகிழ் நகை வயிரவா போற்றி

30. ஓம் ஸ்ரீம்இரும்பைப்பொன்னாக்கினாய்போற்றி

31. ஓம் ஸ்ரீம்இருந்தருள்செய்ய வந்தாய்போற்றி

32. ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி

33. ஓம் ஸ்ரீம் சொர்ண வயிரவா போற்றி போற்றி போற்றி.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

சித்தர்கள் தவம் புரிந்த தோரணமலை

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.




அகத்திய மாமுனிவர் மற்றும் தேரையர் சித்தர் தவம் புரிந்த புண்ணிய பூமியான தோரணமலை திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் இருக்கிறது.இந்த மலையில் முருகப்பெருமாள் அருள்பாலிக்கிறார்.

தலசிறப்பு:-

                     சித்தரான தேரையர் தவம் புரிந்ததால் இம்மலையை "தேரையர் மலை"
என்று கூறுகின்றனர்.இச்சாலையில் வாகனங்களில் போகும்போது தோரணமலை உடன்வருவது  போலவும்,மலை உச்சியில் இருந்து வெளியேறும் பாறையில் வழிந்தோடும் சுண்ணாம்பு கலவை "தாடி" யுடன் தேரையர் தவம் புரிவது போல காட்சி அளிப்பது வேறெங்கும் காணாத அற்புதம்.


குமரன் பெருமை :-

குன்று இருக்கும்  இடமெல்லாம் குமரன் இருப்பான்  என்பதை போல இங்கு அடிவாரத்தில் இருந்து 998 படிக்கட்டுகளை கடந்து மலை உச்சியில் குடி கொண்டுள்ளார்.மலை  ஏறும்போது வரும் மூலிகை காற்று மனதுக்கு இதமாகவும் 
அரோகரா கோஷம் மலை ஏற்றத்துக்கு பதமாகவும் இருப்பதை அனுபவரீதியாக உணரமுடியும்.

வற்றாத சுனைகள் :-

தோரண மலையில் 65 விதமான வற்றாத சுனை ஊற்றுகள் இருக்கின்றன.இதில் முக்கியமான சுனை ஒன்று முருகன் கோயில் அருகில் உள்ளது. ஊற்றில் தீர்த்தமாடிய பின் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆழமான சுனை ஊற்றில் கோடையிலும் தண்ணீர் வற்றுவதில்லை.மூலிகை குணம் நிறைந்த இசுனை நீரை பருகிவர தீராத நோய்கள் குணமாகிறது.

தோரண மலையில் சித்தர்கள் தவம் புரிந்த இடங்களில் பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கின்றனர்.சுவாமி தரிசனத்துடன்  தியானமும் நடப்பது தோரண மலையில் மட்டுமே.

குன்றாத செல்வம்,குறைவில்லாத கல்வி,வளமிக்க வாழ்வுதரும் தோரண மலை முருகனை வழிபடுவோம்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

சங்கு ஸ்தாபண பூஜை


பணத்தைக் கொட்டி வீடு கட்டினேன் நிம்மதி இல்லை என்று புலம்புவர்களுக்கும் இனி வீடு கட்டப்போகிறவர்கள் குபேர சம்பத்துடன் வாழ்வதற்கும் சங்கு ஸ்தாபன முறை முக்கியமான விஷயம். ஒரு மனையில் சாபதோஷம்,பட்சி தோஷம், முனி தோஷம், சந்யாச தோஷம், சல்லிய தோஷங்கள் விலகி விட முற்கால கிரஹ சாஸ்திர விதிப்படி-

வீட்டில் ஆயாதநிலை பார்த்து ஓட்டு மொத்தப் பணிகளைச் செய்வதற்கு சங்கு ஸ்தாபணம் என்று சொல்வது வழக்கச்சொல். இவை தவிர சங்கு ஸ்தாபண பூஜை என்று ஒரு விதி இருக்கிறது.

வாஸ்து பகவான் விழித்திருக்கும் காலம் அல்லது சுப தினங்களில் வாசற்படி அருகே கலச பூஜையில் வாஸ்து பகவானை வழிபட்டு அதன் எதிரெ வடக்கு(அ) கிழக்கு முகமாக அரிசியில் வலம்புரிசங்கு ஒன்றை வைத்து அதற்கு உபசாரங்கள் செய்து.

தபினீ கலா முதல்... பூர்ணா கலா வரை 18 கலைகளை சங்கீன் மேல் வர்ணித்து நிலைவாசம் மேல் மையக்குறியீடு செய்து அதில் சங்கு அளவு பார்த்து சுழிமுனை உள்ளே வரும்படி பிரதிட்டை செய்தல் வேண்டும் சங்கினுள் நவரத்திம் பஞ்ச லோகம், லட்சுமிகாசு வைத்து ஆலய குடமுக்கில் யாகத்தில் இட்ட காசு ஒன்றையும் வைத்து இரண்டு சிமெண்டு கலவையால் மூடிவிட வேண்டும். 

நவதான்யம்,பூமிகிழங்கு, பூமிசமூலம் என்ற கலவை ஆகிய வற்றால் நிலை வாசல் அருகே உட்பகுதியில் வாஸ்து கிருஹலட்சுமி மூல மந்திரத்தால் சிறிதளவு(ஹோமம்) யக்ஞ வழிபாடு செய்து விடல் வேண்டும். சங்கு ஸ்தாபனம் பூஜை செய்து வலம்புரிச்சங்கு பதித்து பிரதிட்டா பணம் செய்யும் வீட்டில் பொருளாதார வசதி, ஏற்பட்டு பணம் காசுகள் சேர்ந்து கொண்டிருக்கும் குபேர சம்பத்துக்குக் குறைவு இருக்காது.

ஓம் ஐம் ஸ்ரீம் க்லிம் வாஸ்து க்குஹ லட்சுமியை குபேர ஸ்காயை ஐஸ்வர்ய நிலயாயை,சௌபாக்ய கராயைக்ரஹ பீடா கரணாயை
ஸ்ரீம் க்லீம் சுலாகா என்ற மூலமந்திரத்தால் அரசங்குச்சி நவதான்யத்தால் ஓம் செய்து ஜெபிக்க வேண்டும்.

ஓம் வாஸ்து தேவியே போற்றி
ஓம் கிருஹ லட்சுமியே போற்றி
ஓம்வளமூலமே போற்றி
ஓம்யோக சக்தியே போற்றி
ஓம் இல்லத்தின் செழிப்பேபோற்றி
ஓம் சிந்தாமணியே போற்றி
ஓம் கலசம் ஏந்திய போற்றி
ஓம் கற்பக விருட்சம் போற்றி
ஓம்சங்கு மூலமே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் தானியத் திருமகனே போற்றி
ஓம் கலைகள் உமையோப் போற்றி
வாஸ்து கிருஹ லட்சுமியே போற்றி

தானங்களால் ஏற்படும் பலன்கள்


1.ஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.

வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.


3.நெய்தானம்: பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.


4.தீப தானம்:இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை மற்றும் பிராமணர்களுக்கும் கோவில்களுக்கும் மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.


5.அரிசிதானம்: பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது பிராமணர்களுக்கு அரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உண்டு.


6.கம்பளி-பருத்தி தானம்:வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.

சனி, 15 பிப்ரவரி, 2014

திருப்பதி ஸ்ரீஏழுமலையான்திருவுருவச்சிலையில்சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்



1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்"

என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு

மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம்.

ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.


2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள்.

இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை

அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால்

கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில்

இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக்

திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள்.

ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.


3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின்

உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை

உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில்

அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை

எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான்

திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது

போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள்,

புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல்

பளபளப்பாகஇருக்கின்றன.


4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட்

வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம்.

அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம்

செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு

வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.

வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது,

ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள்,

சரித்திர சம்பவங்கள்அனைத்தும்அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.


1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல்,

தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம்,

போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி,

முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார்

செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில்

தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக்

குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள்

எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு

நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு

பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை

பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி

தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில்

ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள்.

இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு

மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய்

கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள்

சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம்

சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்

வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம்

செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து

கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை

திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு,

தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால்

அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை

4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு

சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா

மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன.

ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம்,

குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான்

திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை

வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில்

விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை

சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை.

பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில்

யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர்,

அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும்,

அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும்,

செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை

சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே,

அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன்

8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ

குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி

நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம்

குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு

உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும்

உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது.

அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை

சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா,

ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும்,

சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில்

எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான்

திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும்

சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர்

சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான

தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி

ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை

திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில்

ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில்

எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ்

இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று

அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில்

முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன்

என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை

பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம்

நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன்

போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த

ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள்மலையில்ஏதாவது ஒரு

பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்

தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி

பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள்.

பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக்

கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில்

பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள்

இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின்

திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று

வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள்.

வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு

அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு

சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள்

அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை

திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள்

விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று

வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது.

ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே

இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது

விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ

சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற"

என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ,

வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு

தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும்.

பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும்.

ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு

திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம்

தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து

தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள்

திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ

ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ,

சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள்

காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை.

147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை.

நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன.

கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில்

உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.