வெள்ளி, 26 செப்டம்பர், 2014

தெய்வானை-வள்ளி அவதார விளக்கம்






சுப்பிரமணியர் கண்டவீர்ப்பு என்ற இடத்தில் தங்கி இருந்த பொழுதுமகாவிஷ்ணுவின் இரண்டு புதல்விகளான அமிருதவல்லியும்சுந்தரவல்லியும் தங்களுக்கு சுப்பிரமணிய கடவுளுடன் திருமணம்நடக்க  வேண்டும் என்று ஆசை கொண்டு சரவணப்பொய்கைக்கு வந்துதங்கி தவம் இருந்தனர்.
அவர்கள் தவத்தை மெச்சி அவர்கள் முன் காட்சி தந்த சுப்பிரமணியகடவுள் அமிருதவல்லியை நோக்கி நீ இந்திரனின் மகளாகப்பிறந்தவுடன் தக்க சமயத்தில் வந்து உன்னை மணப்பேன் என்றார்அதுபோலவே இளையவளான சுந்தரவல்லிக்கும் காட்சி தந்தார்அதனால்அவள் சிவ முனிவரின் மகளாகப் பிறந்து நம்பி என்ற வேடர் குலத்தலைவனால் வள்ளி என பெயரிட்டு வளர்க்கப்பட்டாள்.
அமிருதவல்லி சிறிய பெண்ணாக வடிவெடுத்து இமயமலையில்இருந்த இந்திரனிடம் சென்று நான் மகாவிஷ்ணுவின் மகள் ஆவேன்.என்னை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை உங்களுக்குத் தந்துஇருக்கின்றார் என்பதினால் இங்கு வந்தேன் என்றாள்அதனால்மிகவும் மகிழ்ச்சி அடைந்த இந்திரனும் யானை ஐராவதனை அழைத்துஅந்தக் குழந்தையைப் பாதுகாக்கும்படிக் கூறினார்.
அதனால்தான் அவள் யானையால் வளர்க்கப்பட்டாள் என்பதைக்குறிக்கும் விதத்தில் தெய்வானை என்ற பெயர் பெற்றாள்சூரபத்மனைஅழித்துவிட்டு சுப்பிரமணியர் திரும்பியதும் அவருடன் அவளுக்கு திருமணம் ஆயிற்று.

முருகனின் ஆறு திருமுகங் களைப் பற்றி!



முருகனைப் பாடும் சங்க இலக்கியங்கள் திருமுருகாற்றுப்படையும்பரிபாடலில் சிலபாடல்களும் ஆகும்முருகனின் ஆறு திருமுகங் களைப் பற்றி திருமுருகாற்றுப்படையில்நக்கீரர்.

உலகை பிரகாசிக்கச் செய்வது ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள்வது ஒரு முகம்
உபதேசம் புரிவது ஒரு முகம்
வேள்விகளைக் காக்க ஒரு முகம்
தீயோரை அழிக்க ஒரு முகம்
வள்ளியுடன் குலவ ஒரு முகம்என்கிறார்.

திருச்செந்தூர் முருகன் அருளால் ஊமை நீங்கி முதன் முதலில் ‘கந்தர் கலிவெண்பா’ (குட்டிக்கந்தபுராணம்பாடியவர் குமரகுருபர சுவாமிகள்ஆறுமுகங்களின் செயலை
சத்ரு ஸம்ஹாரத்திற்கு ஒரு முகம்
அஞ்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்
ஞானம் அளிக்க ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
சத்ரு சம்ஹாரம் என்பது தந்தைசிவனின் தொழில்முக்தி அளிப்பது மாமன் திருமாலின்பணிதேவர் மூவரின் சக்தியும் இணைந்தவன் ஆனதால் முருகனே அப்பணிகளையும்புரிகிறான்.

திருப்புகழில் ஆறுமுகங்கள்
ஏறுமயிலேறி வினையாடு முகம் ஒன்று
ஈசருடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே
குன்றுருவவேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளவேண்டும்
ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே
-
திருப்புகழ்


கந்தன் கலியுக வரதன்!


கந்தன் கலியுக வரதன் எனப்படுகின்றான். இதன் உட்பொருளை நாம் அறிந்துகொள்வது அவசியம். நான்கு யுகங்களுள் கடையாயது கலியுகம். அதில் அறம் மிகக் குறைந்துள்ளது. ஆதலால் தெய்வத்தை அறிந்துகொள்ளவும், தெய்வத்தைத் தொழவும் முயலுபவர் கலியுகத்தில் மிகக் குறைந்திருக்கின்றனர். இனி, தெய்வம் எனும் சொல் எப்பொருளைக்


குறிக்கிறது என அறிந்துகொள்வது அவசியம். இயற்கை வேறு, தெய்வம் வேறு அல்ல. ஒரே பொருள் இரண்டு விதங்களில் காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஐம்பொறிகள் வாயிலாக நுகர்கின்றவிடத்து அது இயற்கை. ஞானக்கண் கொண்டு காணுமிடத்து அதே பொருள் கடவுள் எனப் பெயர்பெறுகிறது. கடவுள் காட்சி மெய்க் காட்சி. இயற்கைக் காட்சி பொய்யானது, நிலையற்றது. ஆதலால்தான் இயற்கையாகக் காணும் காட்சியைக் கடந்து மெய்ப்பொருளை உள்ளவாறு காணுதல் வேண்டும். அதை உள்ளவாறு அறிகின்றவிடத்து வாழ்க்கைச் சிக்கல்களெல்லாம் தாமாக அடிபட்டுப் போய்விடுகின்றன.கடவுள் காட்சிகளுள் செம்பொருளைக் கந்தனாகக் காணும் காட்சி மிக எளியது; பக்குவமடையாத உயிர்களுக்கும் விளங்கவல்லது. கந்தனை அறிந்து அவனைப் போற்றுகின்றவிடத்துப் போற்றுகிறவன் விரைவில் பெருநிலை எய்துகிறான்.ஆதலால்தான் கந்தன் கலியுக வரதன்எனப்படுகின்றான்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

தோப்புக்கரணம் [ Super Brain Yoga ]


தோப்புக்கரணம்.....

நம் நாட்டில் விநாயகரை வழிபடும் போதும்....,

படிக்கும் வயதில் ஆசிரியர் தண்டனையாக செய்ய சொல்வதும் “தோப்புக்கரணம்”

தோப்புக்கரணத்தின் பயன்கள்.. மூளைசெல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன நாடிகள் சுத்தம் பெறுகின்றன.

நம் உடலிலுள்ள நரம்பு மண்டலங்கள் அனைத்தும் சேருமிடம் காது மடல்கள்.

தோப்புக்கரணம் செய்யும் போது காது மடல்களை இழுப்பதால் அனைத்து நரம்புகளும் தூண்டப்படுகின்றன.


செய்முறை:
.

முதலில் கால்களுக்கு இடையில் ஒரு ஜான் அளவு இடவெளி விட்டு நிற்கவேண்டும்.

இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக்கொண்டு..

மூச்சை இழுத்துக்கொண்டே அமரவும் அமர்ந்த நிலையில் ஒரு மூச்சு விட்டு..

பிறகு எழ வேண்டும் இப்பொழுது நின்ற நிலையில் ஒருமூச்சு விட வேண்டும்.

இவ்வாறு பத்து முறை தினமும் செய்தால் மாற்றம் உங்களுக்கே தெரியும்..
இதனை நம் முன்னோர்கள் பல வருடங்களுக்கு முன்னமே நமக்கு காட்டியுள்ளார்கள் ஆனால் நாம் அதை அலட்சியப்படுத்திவிட்டோம்.

இதனை வெள்ளைக்காரன் ஆராய்ச்சி செய்து அவன் பணம் சம்பாரிக்கிறான்.......

சந்தேகமெனில் youtube- ல் super brain yoga என்று தேடிப்பாருங்கள் விடயம்
உங்களுக்கே புரியும



வியாழன், 18 செப்டம்பர், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி – 14



ஞான ஸ்கந்த மூர்த்தியை குருவிடம் முறைப்படி தீட்சை பெற்று உபாசனை

செய்து வந்த ஆரம்ப காலம். எனது 16 வயதில் பாதி புரிந்தும், பாதி

புரியாமலும் மந்திர ஜபத்தை மட்டும் விடாது குருவுடன் அடிக்கடி

சத்-சங்கத்தில் ஈடுபட்ட காலம். ஒரு முறை எனது பேனா தொலைந்து

விட்டது. அப்போது நான் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன். பேனாவின் விலை

ரூ.5/- மட்டுமே அது அப்போது என்னைப் பொறுத்தவரையில் அது பெரிய

தொகை. எப்படி வீட்டில் பொய் சொல்வது யார் எடுத்தார்களோ முருகா

அவர்களை மன்னித்து விடு. அந்த வயதிலும் ஒரு பக்குவம் தந்தது

முருகப் பெருமானும் எனது குருவின் அமுத மொழிகளும் தான். முருகன்

உன் கையில் இருக்கிறார் என நினைத்துக் கொண்டு யாருக்கும் துன்பம்

நினைக்காதே! அது முருகனுக்குப் பிடிக்காத ஒன்று இப்படி உபதேசித்த

குரு எப்படி இருப்பார். அவரது திருவடியை நான் என்றுமே மறந்தது

இல்லை. எனது குருவிடமும் நான் எதையும் மறைத்ததும் இல்லை.

ஆனால் இந்த பேனா காணாமல் போன விஷயத்தை மட்டும் மறைத்து

விட்டேன். காரணம் பயம். எனது குருநாதர் 48 ஆண்டுகள் வெள்ளிக்கிழமை

விரதம் இருந்து ஒரு வெள்ளி கூட கண் மூடி தூங்காதவர். வெள்ளியில்

ஒரு பொழுது உண்டு கண் மூடாமல் கந்தனையே சிந்தனை செய்வது

அவரது தவம். அவரது தவத்தின் பலன் முக்காலத்தையும் முருகன் உள்

நின்று உரைத்திடும் பாக்கியம் அவருக்கு இளமை முதலே கிட்டியது.

முருகன் உரைப்பதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் வருகின்ற

பக்தர்களுக்கு விடிய விடிய அருள்வாக்கு உரைப்பார். அப்படியே 100%

துல்லியமாக இருக்கும். தீர்ந்த பிரச்சினைகள் ஏராளம். ஓய்ந்த அவலங்கள்

ஏராளம். நீங்கிய ஆவிகள், சாந்தியான தேவதைகள் ஏராளம். இப்படி

தாராளமாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

 அன்று ஒரு நாள் வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடிந்து குருநாதர்

அருள்வாக்கு பீடத்தில் அமர்ந்தார். சாதாரண மனிதன் போல் அன்பாகப்

பேசுவார். அருள்வாக்கு சொல்லும்போது காவியுடை அணிந்து காவியில்

முண்டாசு கட்டி ருத்திராட்சம் போட்டு அந்த ஆசனத்தின் மீது அமர்ந்து

கையில் பிரம்புகளை வைத்து அமர்ந்தால் சாட்சாத் மிகப் பெரிய சித்தர்

அமர்ந்திருப்பது போன்றே கம்பீரமாக இருக்கும். ஆட மாட்டார். பாடுவார்

மடை திறந்த வெள்ளம் போல் பாடல் வகை வகையாய் வந்து கொட்டும்.

வந்திருக்கும் மக்கள் அனைவரும் கை கட்டி வாய் பொத்தி கேட்டு விட்டு

ஆச்சரியத்துடன் வெளியேறுவார்கள். சொன்னது சொன்னபடி நடந்து

விடும். பின்பு அருள்வாக்கு முடிந்த உடன் சாதாரண மனிதன் போல்

மாறி விடுவார். காவி கட்டுவதில்லை. அருகில் நான் அமர்ந்துக் கொண்டு

இருப்பேன். குருவை மிஞ்சிய சிஷ்யனாக இவன் வருவான் என்று அடிக்கடி

சொல்வார். அன்று கேட்ட அந்த கேள்வி என்னை மீண்டும் முருகனிடம்

நெருங்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

 ஏம்பா? உன் பேனா தொலைந்து விட்டதே? கிடைத்ததா?

எனக்கு தூக்கி வாரி போட்டது. பேசுவது அந்த முருகப் பெருமான்

அன்றோ. எனக்கும் அந்த முருகனுக்கும் மட்டுமே தெரிந்த அந்த இரகசியம்

இப்போது வெளிச்சமிடப்பட்டது. ஆம் சுவாமி என சொன்னேன். சரி

கிடைக்கும் போ என்றார். சரி என்றேன் அந்த வயதில் எனக்கு இது பெரிய

புதிராக இருந்தது. ஆச்சரியமாக இருந்தது. சொன்னது சொன்னபடி ஒரே

வாரத்தில் ரூ.5/- எனக்கு பரிசாக வந்தது. பேனா கிடைக்கவில்லை. அந்த

பேனாவிற்குரிய பணம் கிடைத்தது.

 குருநாதரிடம் இருந்து சிறுகச் சிறுக அனுபவம் பெறப் பெற அவரது

அனைத்து சக்திகளும் எனக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதை அவர்

பலமுறை உறுதி செய்தார். அன்று ஒரு நாள் அமாவாஸை பூஜை முடிந்து

நமது ஞானஸ்கந்தர் நாடியில் முருகன் என்ன உரைப்பார் என மக்கள்

கூடி குழுமியிருந்தார்கள். நாடியைப் பிரிக்காமலேயே ஒரு பெண்மணியைப்

பார்த்து அருள்வாக்கு மேடையில் இருந்து என் மூலம் முருகப் பெருமான்

கேட்டார்.

 என்னம்மா, பாயாசம் வைத்து அனைவரும் பங்கிட்டுக் குடித்தீர்களே

அங்கேயே எனது படமும் இருந்தது அதன் முன்பு சிறிது பாயாசம்

வைத்திருக்கலாமே? ஏன் நீ குடிக்கும் அந்தப் பாயாசத்தை நான்

குடிக்கக் கூடாதா? என்ற கேள்வியை கேட்டவுடன் குழுமி இருந்த

மக்கள் குதூகலித்து குமரனின் கருணையையும் சக்தியையும் எண்ணி

வியந்தார்கள். இது முற்றும் உண்மை. சுவாமி படத்திற்கு எப்போதுமே

நைவேத்யம் செய்து அதன் பின்பே சாப்பிடும் அந்த பெண்மணி அன்று ஒரு

நாள் மட்டும் வைக்காமல் விட்டு விட்டதை முருகப் பெருமான் சொல்லி

விட்டார் என்றால் முருகப் பெருமானின் பார்வை எப்போதுமே அவர்கள்

மீது பட்டு வருவது தானே அர்த்தம். அந்தப் பெண்மணி மெய் சிலிர்த்தார்.

முருகன் மீது அவருக்கு எப்போதுமே மாறாத பக்தி. இது எப்படி என்னால்

சொல்ல முடிகிறது? என்று பலர் கேட்கிறார்கள். எல்லாம் முருகனின்

செயல். என் மனதில் அவர் சொல்வதை நான் அப்படியே சொல்கிறேன். மாய

வித்தியோ, மந்திர வித்தையோ அல்லது மை வித்தையோ கிடையாது.

முருகனது தூய அருள் வாக்கை எட்சினி சொல்லும் குறி போல ஒப்பிட்டுப்

பேசுவதே மாபாதகமான செயல், அனுபவத்தில் தண்டனைகளையும்

பார்த்திருக்கிறேன்.

 எட்சினிகள் என்பது சிறு தேவதை. முறைப்படி பூஜை செய்து சிலர்

எட்சினைகளை வசியம் செய்து வைத்துக் கொண்டு வருவோர் வியக்கும்

வண்ணம் சில சூட்சுமங்களைச் சொல்லி அசத்துவார்கள். எட்சினியை

வைத்து குறி சொல்வார்கள். இது ஒரு சாதாரண பிரச்சினைகளைத் தீர்க்க

உதவும் ஜீவநாடி படிப்பவர்கள் கூட இந்த எட்சினி மூலமே சொல்கிறார்கள்

என்று இணையத்தில் படித்ததாக எனது வாசகர் ஒருவர் கேட்டிருந்தார்.

இருக்கலாம். எட்சினிகள் சொல்வதை ஜீவநாடி என்று கூட சொல்லலாம்.

ஆனால் எதிர்காலத்தில் நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் துல்லியமாக

எட்சினிகளால் சொல்ல முடியாது.

                                     ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

சுப்ரம்மணியம்






சு+பிரம்ம+நியம் என்பதே சுப்ரம்மணியம் என்று சொல்லப்படுகிறது.

 சு என்றால் உயர்வான அல்லது மேலான என்று பொருள். ப்ரம்மம் என்பது பரமாத்மா அதாவது சதாசிவத்தைக் குறிப்பது.... நியம் என்றால் தோன்றிப் பிரகாசிப்பது அல்லது ஒளிர்வது. அதாவது சதாசிவத்தின் ஞானத்திலிருந்து(நெற்றிக்கண்) உதித்து ஞானமே வடிவாகப் பிரகாசிப்பவன் என்பது பொருள். எனவேதான் ஞான சூரியன் என்றும். சேந்தன் என்றும் கூறுவார்கள். தமிழர்களுக்கே சொந்தமான முருகன் வேறு தமிழ் வேறு அல்ல என்பது தமிழ் அறிஞர்கள் கருத்து. 12 தோள்களையும் 12 உயிரெழுத்தாகவும், 18 கண்களை 18 மெய்யெழுத்தாகவும், 6 இன எழுத்துக்களை ஆறு முகங்களாகவும், ஃ என்ற ஆயுத எழுத்து வேலாகவும் குறிப்பிடுவார்கள்.

 உலகில் தோன்றிய சித்தர்களுக்கெல்லாம் தலைவன் முருகனே. எனவேதான் சித்தநாதன் என்பார்கள். அதனால்தான் போகர் பழனியில் தங்கள் குலகுருவான சுப்ரமண்ய சித்தருக்கு நவபாசான சிலையைச் செய்து பிரதிஷ்டை செய்தார். அகத்தியர், அருணகிரி போன்றவர்களுக்கும் அவ்வளவு ஏன், சிவனுக்கும் கூட குருவாக முருகன் குருபரன் என்று சொல்லப்படுவதன் காரணம் அவர் பகுத்தறிவின் அடையாளமாக, மனிதனின் வடிவமாகவேத் திகழ்வதுதான். அவர் மூலமாகவே தமிழ் பூமிக்கு வந்தது என்பது ஆன்றோர் வாக்கு. காந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்தே ஸ்கந்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. 

சிவபெருமான் கொண்டுள்ள ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்களோடு அதோமுகமும் சேர்த்தே முருகனுக்கு ஆறுமுகம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கீழ் நோக்கிய முகம் என்பது பொருள். சிவபெருமானின் உலகத்தை நோக்கிய முகமாகிய ஞானக் கண்ணாகிய நெற்றிக்கண்ணை தனது ஆறாவது முகமாகக் கொண்டவன் முருகன். எனவே முருகனின் தத்துவத்தை முழுவதும் உணர்ந்தவன் ஞானத்தை உணர்ந்தவனாவான். வேல் என்பது அறிவின் நிலையைக் குறிப்பது. கூர்மையாக, அகலமாக, ஆழமாக சிந்திப்பவன் உலகையே வெல்லலாம் என்பது நுட்பம். மனிதனின் ஆறு ஆதாரங்களும் ஆறு படைவீடுகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. ஆணவம், கன்மம், மாயை இந்த மூன்றையும் அடக்குபவன் ஞானத்தை அடையலாம் என்பதைக் குறிக்கும் விதமாகவே மயில், யானை, ஆடு இந்த மூன்றையும் அடக்கி வாகனமாக வைத்திருப்பதாகக் காட்டப்படுகிறது. யோகத்தில் திளைத்து ஞானத்தை உணர்ந்தவனுக்கு முதுமை என்பதே கிடையாது என்பதை உணர்த்தவே குமரன் என்பார்கள். முருகு என்றால் அழகு என்பது பொருள். தமிழ் அறிஞர்கள் மு என்றால் மெல்லினமென்றும், ரு என்றால் இடையினம் என்றும், கு என்றால் வல்லினம் என்று அழகு தமிழில் குறிப்பிடுவார்கள். இவை சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று மண்டலங்களைக் குறிப்பதாகவும் சொல்வதுண்டு. சரவணபவ என்றால் நாணல் காட்டில் பிறந்தவன் என்று வடமொழிக்காரர்கள் கதை கட்டுவார்கள். ஆனால் தமிழ் மொழியைப் பொருத்தவரை சரம் என்றால் மூச்சு அவணன் என்றால் திண்ணிய அல்லது பூரணமான, செல்வாக்கு உடைய என்று பொருள். அதாவது உயிர்களுக்கு மூச்சாக விளங்குபவன் என்றும், மூச்சை கவனித்து முறையாக சுவாசிப்பவர்களுக்குள் ஞானமே வடிவாகத் தோன்றுபவன் என்று பொருள். சதாசிவத்தில் சக்தி ஒடுங்கி நிற்கிறது. பிரபஞ்சத்தில் சிவ சொரூபம், சக்தி சொரூபம் என்று இரண்டு நிலைகளில் விளங்குகிறது. 

நாம் பெற்றுள்ள உடல் சக்தியின் சொரூபமாகும். அதற்குள் உயிராக விளங்கும் அறிவுப் பொருள் சிவ சொரூபமாகும். இந்த இரண்டையும் இணைத்து அதன் பயனால் மேன்மையடைவதையே திருக்கல்யாணம் என்று சொல்கிறார்கள். அவ்வேளையில் வடகோடு தாழ்ந்து தெற்கு உயர்வது என்று சொல்வது எதற்காகவென்றால், வடக்கு என்பது நம் தலைப்பகுதியைக் குறிப்பது, அதாவது பரமாத்வை அடைவதற்கான அனைத்து விஷயங்களும் அடங்கிய பகுதி. ஞான வாசலே அங்குதான் உள்ளது. தெற்கு என்பது மனிதனை கீழ் நோக்கி அழுத்தி இந்திரிய சுகங்களில் அழுத்தி வைக்கும் உடல் பகுதியைக் குறிப்பது. 

திருமணம் ஆனவர்கள் மனம் முழுவதும் இந்திரிய சுகத்தில் திளைத்து அதிலேயே உழன்று கொண்டிருப்பதால் அவர்கள் ஞானத்தை அடைய முடியாமல் போகிறது. இதையே வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது என்றார்கள். அதற்காகவே அகத்தீயான ஞானத்தை அனுப்பி அதை சமன் செய்ததாகச் சொல்வார்கள். அதாவது யோக நிலையில் உண்மையை உணர்ந்து அளவும் நெறி முறையும் கடைபிடித்தால் இரண்டு பகுதியும் சமநிலையில் திகழும். இதையே முருகனும் உணர்த்துகிறார். அவருக்கு இரண்டு சக்திகள். ஒன்று தெய்வயானை கிரியா சக்தி, இரண்டு வள்ளி இச்சா சக்தி. தெய்வயானை தேவர்கள் நிலையைக் குறிக்கும் கிரியா சக்தி. எனவேதான் அவளை தேவர்களின் அரசனின் மகளாகச் சொன்னார்கள். அதாவது மனிதர்களும் தேவர்களுக்கு நிகராக கிரியையாகிய மேலான செயல்களின் மூலம் தெய்வத்தை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதைக் குறிப்பவள் தெய்வயானை. 

வள்ளியைப் பொருத்தவரை இச்சை அதாவது கடவுள் மேல் உண்மையான பற்று அல்லது அன்பு கொண்டு கடவளை மணந்திடலாம் அதாவது இணைந்திடலாம் என்பதை உணர்த்துகிறாள். இதில் மற்றொரு சூக்குமமான கருத்தும் உண்டு. குலத்தில் மேலானவர், கீழானவர் என்பதெல்லாம் கடவுளுக்கு முன் கிடையாது. தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்களும் உண்மையான பக்தியின் மூலம் இறைவனை அடையலாம். அதாவது யோகத்தின் மூலம் ஞானமே வடிவான இறைவனை அடைவதைக் குறிப்பவள் தெய்வயானை. பக்தியின் மூலம் இறைவனை அடைவதைக் குறிப்பவள் வள்ளி. எனவே குலத்தில் தாழ்ந்தவர்கள் என்று சொல்லி பிற மனிதர்களை தன்னிடத்தில் வர அனுமதிகாதவர்களை இறைவன் தன்னிடத்தில் வர அனுமதிக்கமாட்டான். இது தெரியாமல் பல்லாயிரம் ஆண்டுகளாக பல இலட்சம் மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படாமலேயே இருந்தார்கள். தற்போதுதான் அந்த நிலை மாறியுள்ளது. 

ஏனென்றால் தற்போது நடைபெறுவது அறிவின் காலம். அதாவது அறிவு இயல் காலம். விண்ணாகிய இறைவனின் காலம். அதுவே விண் ஞான காலம். கலிகாலத்தில் இறைவன் நியாயமான தீர்ப்பை வழங்க வருவார் என்பது இதைத்தான். இப்போதுதான் இறைவனின் நடுநிலையான ஆட்சி பேராற்றலின் ஆட்சி, பேரறிவின் ஆட்சி உலகில் நடைபெறுகிறது. இதுவே சித்தம் உணர்ந்த சித்தர்களின் காலம். நாமும் அதை உணர்ந்து அறிவால் அறிவை அறிந்துணர்ந்து பேரறிவைப் பெற்று மேன்மை  அடையலாம்

முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவது பற்றி?



முருகனை விநாயகரின் தம்பி என்றும் சிவனின் மகன் என்றும் சிலர் கூறுவர். உன்மை அதுவல்ல என்பதே சைவத்தின் கொள்கை. உண்மை, அறிவு, இன்பமா...ய் விளங்கும் சிவத்தின் இன்னொரு அருள் வடிவமே தமிழ்க் கடவுள் என்று போற்றப்படும் முருகன். எல்லாவற்றையும் கடந்தும் உள்ளும் இருக்கின்ற சிவம் என்கின்ற பரம்பொருள் தனது சிறப்பு நிலையிலிருந்து பொதுநிலைக்கு உயிர்களுக்கு அருள் புரிவதற்கு எடுத்து வந்த இன்னொரு வடிவமே முருகனின் வடிவம். அச்சிவம் ஓசை வடிவமாக, பிரணவ வடிவமாக, ‘ஓம்’ வடிவமாக வந்தபோது விநாயகர் என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அச்சிவம் அறிவு வடிவாக, ஒளி வடிவாக வருகின்றபோது அதை முருகன் அல்லது ஞானபண்டிதன் என்கிறோம். எனவேதான் முருகனுக்கு அருவுருவமாக ஆழ்ந்து அகன்று நுண்ணியதாக இருக்கின்ற வேலைச் சமமாகச் சொல்கின்றோம்.

உலகைத் தோற்றுவித்து உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் முதலில் ஓசையாகவும் பின்பு ஒளியாகவும் தன் திருவருளை வெளிப்படுத்தியதாகச் சைவம் குறிப்பிடும். எனவேதான் ஓசையாக இருக்கின்ற விநாயகர் வடிவத்தை அண்ணன் என்றும் அடுத்து வந்த ஒளிவடிவத்தை முருகனாகக் கூறி தம்பி என்றும் அழைக்கும் வழக்கு வந்தது. முருகனும் சிவமும் வேறு அல்ல என்று பாமர மக்களுக்குப் புராணம் மூலம் கூற வந்ததே கச்சியப்ப முனிவரின் கந்த புராணம். முருகனும் சிவமும் வேறு அல்ல என்பதை, இப்படிக் கூறுவர்.
‘அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பது ஓர் மேனியாகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒருதிருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய ‘
- கந்தபுராணம்