சனி, 1 நவம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 18!




 
மிகக் கடுமையான விரதங்கள், பூஜைகள் செய்து நாடி மூலம்

பரிகாரங்களும், பலன்களும் கண்டு மிகச் சிறப்பான முறையில் சனிப்

பெயர்ச்சி பலன்கள் தற்போது விறு விறுப்பாக விற்பனையாகிக்

கொண்டிருக்கிறது. பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே படித்துப் பயன்

அடைய முடியும் என்ற வாசகத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறது

அந்த சனிப்பெயர்ச்சி இதழ். இதுவரை எவராலும் செய்யப்படாத விஷயம்

செய்யப்பட்டு இருக்கிறது. ஜோதிட இதழின் வரலாற்றிலேயே முதன்

முதலாக நட்சத்திரங்களுக்கு ஏற்ப ஜீவ நாடி மூலம் மிகத் துல்லிய

பலனகள், பரிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 36

ஆலயங்களும்,  அதன் தொலைபேசி எண்களுடன் உரிய விபரங்கள்

அனைத்தும் அதில் அலசி ஆராய்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

   துலாம் இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு சனி மாறுகின்ற சமயம்

நாட்டிற்கு நாடி சொல்லும் செய்திகளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிரக ரீதியாக ஆராய்ந்தும், நட்சத்திர ரீதியாக நாடி மூலம் பரிகாரங்கள்

கொடுக்கப்பட்டும் வண்ணப் பக்கங்களுடன் வளமான முறையில் சனிப்

பெயர்ச்சிப் பலன்கள் வந்திருக்கிறது. ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே இந்த

தொடரைப் படிக்க முடியும். அதேபோல் ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே

அந்த சனிப்பெயர்ச்சி சிறப்பு இதழைப் படிக்க முடியும். காரணம் அதில்

சாட்சாத் முருகப் பெருமானின் வாக்கு ஜீவநாடி மூலம் வந்ததைக்

கொடுத்திருக்கிறேன். இப்போது இருக்கின்ற காலச் சூழ்நிலையில் எல்லா

மக்களுக்கும் என்னால் நேரடியாக நாடி படித்து பலன் சொல்ல முடியாது

என்பதால் இறை ஆசியுடன் இராகு-கேது பெயர்ச்சி மூலம் ஒரு

சேவையும், சனிப் பெயர்ச்சி மூலம் இன்னுமொரு சேவையும் நாடி மூலம்

நலம் ஏற்படும் விஷயங்களை தமிழக மக்களுக்காக செய்திருக்கிறேன்.

படித்து பலன் அடையுங்கள் பாங்கான வாழ்வு பெற்றிடுங்கள்.

   ஜீவ நாடி வாக்கு வருவது மிகத் துல்லியமாக இருக்கிறது. இதை

முழுமையாக நம்பி சொல்லும் விஷயங்களை 100% நம்பிக்கையுடன்

கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே 100% நலம் கிட்டுகிறது என்பது அனுபவ

உண்மை.



   ஒருவர் என்னிடம் முதன் முறையாக வந்து நாடி படிக்க வேண்டும்

என்றார். எனக்கு நன்கு தெரிந்தவர்தான். விவசாயத்தைத் தொழிலாகச்

செய்து வருகிறார். சரி ஞானஸ்கந்த மூர்த்தியை பிரார்த்தனை செய்து

ஜீவநாடி சுவடியைப் பிரித்து பாடல் வடிவில் வந்ததைப் படித்தேன்.

“இன்னவனும் ​இந்நேரம்

அரவிலே ஆபத்தை

எதிர்நோக்கியுள்ள நேரம்

ஆலயம்போல் உண்டு ஒன்று

கருப்பதுவும் உண்டு கேள்

கச்சிதமாய் சேவித்து

தீபமதை ஏற்றி வைத்து

பூஜித்து வா

ஆபத்துமது அருகிலுண்டு

ஆனாலும் கருப்புண்டு

காப்பாற்றும் செல்!

ஆசி”

   என்ற பாடல் வந்தது. அதாவது வந்து அமர்ந்து இருக்கின்ற இவனுக்கு

விரைவில் அரவு என்று சொல்லக்கூடிய பாம்பினால் ஆபத்து வரும். அதே

நேரத்தில் இவர்கள் விவசாய பூமியில் ஆலயம் உண்டு. அங்கு கருப்பு

என்று சொல்லப்படும் கருப்பண்ண சுவாமி உண்டு. அதற்கு தீபம் ஏற்றி

வழிபட்டு வர வருகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவாய் ஆசி! ஆசி!

எனச் சொல்லப்பட்டது. வந்தவர் தனியாக வரவில்லை. அவருடன் 4 பேர்

வந்திருந்தார்கள். அப்போது எனக்கு வயது 18 தான் ஆனது. சிறுவனான

என்னிடம் வாக்கு கேட்டு விட்டு வந்தவர் காணிக்கை என்றார். எனக்கு

எப்போதுமே பண ஆசையில்லை. வருகின்ற பணத்தை ஏதேனும்

ஆலயப்பணிக்கு சேமித்து வைத்து பயன்படுத்துவது வழக்கம். எந்த

காணிக்கையும் கேட்கவில்லை. இவர் தனது சட்டைப் பைக்குள் கையை

விட்டு ரூ.500ஐ எடுத்து தட்டில் வைக்கப் போனார், அவரது உறவினர்

ஒருவர் திடீரென எழுந்து வந்து வேண்டாம். அவர் காணிக்கை கேட்கவே

இல்லை. தர வேண்டாம் செல்லலாம் என்றார். வந்தவருக்கு மனதிருப்தி

உண்டாகவில்லை. அவரது உறவினரும் விடுவதாக இல்லை. எனக்கு சற்று

மனநிலை மாறியது. சட்டென சுவடியை கட்டி வைத்து விட்டுச் சென்று

விட்டேன்.

   காரணம் பணம் தரவில்லை என்கின்ற வருத்தமில்லை. சித்தர்களை ஒரு

பிள்ளைப் பூச்சி போல் பாவித்து உற்ற மரியாதை தராவிட்டல் அந்த பாவம்

எனக்குமல்லவா வந்து சேரும். என்வே கோபம் வந்துவிட்டது. எனது

வாயில் எது சொன்னாலும் பலித்து விடும். என்வே கோபத்தால் ஏதேனும்

சொல்லி விட்டால் என்ன செய்வது என்று அந்த இடத்தை விட்டு

நகர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவர்களும் சென்று விட்டார்கள். நானும்

இந்த சமபவத்தை மறந்துவிட்டேன்.

முக்கிய குறிப்பு :- இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள சனிபெயர்ச்சி பலன்கள் தனிப்புத்தகம் வேண்டுவோர் குருவருள் சக்தி,திருவருள் ஜோதிடம் மாத இதழ்களை வெளியிடும் அப்ஸரா பப்ளிகேஷன் ராயப்பேட்டை சென்னை என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.(அல்லது)திருவருள் சக்தி,குருவருள் ஜோதிடம் மாத இதழ் கிடைக்கும் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். 

                                       
                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

திங்கள், 20 அக்டோபர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 17 !



 நமது ஞானஸ்கந்தர் நாடியில் மகர இராசியினருக்கு வரும் மூன்று

முறை இந்த மகேஸ்வர பூஜை செய்ய வேண்டும் என்று வந்துள்ளது.

பலர் செய்து ஏராளமான அதிசயங்களைப் பெற்றுள்ளனர். ஆசிரமம் எங்கு

உள்ளது அவரது தொலைபேசி எண் வேண்டும் எனப் பலர் கேட்கிறார்கள்

என்பதால் அந்த தகவலையும் சொல்லி விடுகிறேன். கிரிவலப் பாதையில்

பழனி ஆண்டவர் சந்நதி பின்புறம் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் உள்ளது.

ஆசிரமத்தில் ஸ்ரீசரவணன் சுவாமிகளை 99448 00220 என்ற எண்ணில்

தொடர்பு கொள்ளலாம்.

 எதற்காக இவ்வளவு விளக்கம் கொடுக்கிறேன் என்றால் மேற்படி

சொன்ன நகைக்கடை அதிபர் திருவண்ணாமலையில் வேறு யாரிடமோ

பணத்தை மட்டும் கொடுத்து பூஜை செய்யச் சொல்லி விட்டார். அவர்கள்

செய்தார்களோ? இல்லையோ தெரியாது. மீண்டும் மூன்று மாதம் கழித்து

என்னிடம் வந்தார். ஐயா! நாங்கள் மகேஸ்வர பூஜை செய்து விட்டோம்

இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்கள். சரி ஏதேனும்

காரணம் இருக்கும் என்று முருகனைப் பூஜித்து மீண்டும் சுவடியைப்

பிரித்தேன். இப்போது அதே அகத்தியர் வந்தார். பின்வருமாறு உரைத்தார்.

 “பூஜையது இல்லை

 புண்ணியமாகவில்லை

 புவனமதில் இதுபோலும்

 பலருண்டு

 சிலருண்டு சிறப்பாகச் செய்ய

 முறையாகச் செய்துவா

 முடியுமது காரியம்

 முருகனது ஆசி! ஆசி! ஆசி!

 இவரிடம் பணம் வாங்கிய நபர் பூஜை செய்யவில்லை என்றும்,

புண்ணியம் உண்டாகவில்லை என்றும் இந்த உலகத்தில் இதுபோல்

ஏமாற்றுபவர் பலருண்டு என்றும், சிலர் மட்டுமே சிறப்பாகச் செய்கிறார்கள்

என்றும், அப்படி சிறப்பாகச் செய்யுமிடத்தில் முறையாகச் செய்து வந்தால்

நீநினைத்த காரியம் முருகனது அருளால் முடியும் என்றும் முருகனது

சீடர் அகத்தியர் உரைத்தார். அதன் பின்பு அவர் பணம் கொடுத்தவரை

விசாரித்து பார்க்கும்போது அவர் வேறொருவரிடம் பணம் கொடுத்து

விட்டதாகவும், அவர் செய்தாரோ இல்லையோ என்பது தெரியாது என்றும்

பதில் உரைத்தார். அதன் பின்பு தான் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் பற்றியும்

அதன் மகிமைகளையும் எடுத்துரைத்து சரவணன் சுவாமிகளிடம் தொடர்பு

செய்து கொடுத்தேன்.


செய்து முடித்து 90 நாளில் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர்

தனது மகனுக்கு இந்த நகைக்கடை அதிபரின் மகளை மணம் முடித்துக்

கொண்டார். ஏதோ சாதாரண பரிகாரம் செய்வது போன்று இந்த மகேஸ்வர

பூஜையை எண்ணி விடக் கூடாது. இல்லை இது பணம் சம்பாதிக்கும்

வழியோ என்று நினைத்து மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

என்னைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும். என்னை விட எனது

குருநாதரையும் அனைவருமே அறிவார்கள். எனவே நாடியில் வருவது

மகேஸ்வர பூஜை என்று தான் வரும் அதை எங்கு வேண்டுமானாலும்

செய்து கொள்ளலாம். ஆனால் முறையாகச் செய்ய வேண்டும். அது

தான் முக்கியம். தயவு ஆஸ்ரமத்தைப் பொறுத்த வரையில் மிகவும்

சிறப்பாக முறையாக மகேஸ்வர பூஜையை செய்யப்படுவதால் ப்ராப்தம்

இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் தான் இவ்வளவு

விளக்கம் இங்கு தர வேண்டியது அவசியமாகிறது.


அடியார்கள் சதா சர்வ காலமும் அந்த அருணாசலனையே துதித்து,

அந்த அருணாசலத்திலே வாழ்ந்து அந்த அருணாசலனுக்கு தம்மை

அர்ப்பணம் செய்த உண்மைத் துறவியாக வலம் வருகிறார்கள். எவர்

ஒருவர் சிவ சின்னங்களான விபூதி, ருத்திராட்சம், ஜடாமுடி, கமண்டலம்,

தவக்கோல் ஆகிய ஐந்தும் தரித்திருக்கிறார்களோ அவர்கள் சிவனடியார்கள்

மட்டுமில்லாது அவர்கள் உண்ணும் உணவு அந்த சிவனே உண்ணுவது

போலாகும் என்றும் புராணங்கள் புலப்படுத்துகின்றன. சாஸ்திரங்கள்

சாட்சி கூறுகின்றன. இதிகாசங்கள் இயம்புகின்றன. எனவே சாதாரண

மக்களுக்குச் செய்கின்ற அன்னதானம் ஒரு மடங்கு பலன் தரும் என்றால்

அடியார்களுக்கு செய்யப்படுகின்ற அன்னதானம் ஆயிரம் மடங்கு பலன்

தரும் என்பது அடுபவத்தின் கண்கூடு. சில உண்மைத் துறவிகள்

நேரிடையாக நாம் தரும் உணவை ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும்

வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.


ஜீவநாடி இரகசியங்கள் என்னும் தொடரில் வரும் உண்மைச் சம்பவங்கள்

நூற்றில் ஒன்றுதான். இது போல் ஆயிரம் இரகசியங்களை அனுபவித்து

வருகிறேன். பொதுவாக கர்ம வினை குறையாமல் எந்த காரியங்களும்

பலிப்பதில்லை. நமது கர்மவினையை மிகச் சுலபமாகக் குறைக்க ஒரே

வழி அன்னதானம் மட்டுமே,. அதனால் தான் மகேஸ்வர பூஜ மிக சிறப்பு


 இன்னும் ஒரு மாணவன் என்னைத் தேடி வந்து ஜீவநாடி கேட்க

வேண்டும் என்றார். வந்தவர் மீன ராசி. முருகப் பெருமான் பின்வருமாறு

 “மகிமை புகழ் மீனமதில்

 மேன்மையாய் அவதரித்து

 மலைபோலும் துன்பத்தை

 அனுபவிக்கும் காலமது

 மந்தனது சரியில்லா

 நிலை போலும் இக்காலம்

 அட்டமத்து சனியாலும்

 அடுக்கான துன்பமாகும்

 படிப்பிலே வெற்றி என்றால்

 பல வகையில் கஷ்டம்

 பங்காக பதினெட்டு அடிவேலு உண்டு

 பச்சரிசி மாவால் தீபம் பதினெட்டு போட்டு

 மதுரமது வைத்து பூஜித்து பின்

 தேர்வுக்கு செல் வெற்றியாம் ஆசி! ஆசி! ஆசி!

 மீன இராசியில் பிறந்துள்ளதால் இந்த காலம் மலைபோலும் துன்பத்தை

அனுபவிக்கும் காலம் ஆகும். மந்தன் என்று சொல்லப்படுகின்ற சனி

பகவான் 8ல் இருப்பதால் அடுக்கடுக்கான துன்பம் வரும். படிப்பிலே வெற்றி

உண்டு என்றாலும் பல வகையிலும் கஷ்டம் வரும் என்று பரிகாரம்

உரைத்தார் ஸ்ரீஞான ஸ்கந்தமூர்த்தி.

 திருவண்ணாமலை ஸ்ரீவகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் தனது மீனாட்சி

நாடியில் சொன்னபடி நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில்

18 சித்தர்களை முருகப் பெருமானது 18 கண்களாகக் கொண்டு 18

அடிவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமாவாசையிலும்

பன்னீரால் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு போட்டு பூஜை செய்ய

வேண்டும் என்று மீனாட்சி நாடியில் வந்த முறைப்படி அப்படியே

தவறாமல் செய்யப்படுகிறது. நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயம்

இருக்கின்ற இடத்தில் பல சித்தர்கள் தங்கம் செய்த இடம் என்று நாடியில்

சொல்லப்பட்டுள்ளது. இப்படி சிறப்புமிக்க ஆலயத்தில் உள்ள 18 அடி

வேல் முன்பு 18 நெய்தீபம் பச்சை மாவில் ஏற்ற வேண்டும் என்றும்,

தேன் வைத்து பூஜிக்க வேண்டும் என்றும் அந்த மாணவனுக்கு

முருகப்பெருமான் வாக்கில் உரைத்தார். அப்படி செய்தால் தேர்வில் வெற்றி

பெறலாம் என்றும் உரைத்தார்.


இதைக் கேட்ட அந்த மாணவனும் அவ்விதமே செய்து யாரும்

எதிர்பார்க்காத அளவில் மதிப்பெண் பெற்று தற்போது மேற்கல்வி படித்து

வருகிறார். நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும் சேவை

செய்கிறார். எனவே நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை

தீர்ப்பு நம்பிக்கை இல்லாமல் அந்த இறைவனே வந்தாலும் ஒரு பல
னும்

நடக்காது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

                                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

முருக வழிபாடு !!!


   
              ஞானஸ்கந்தமூர்த்தி கஜ வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு                        அருள்பாலிக்கும் காட்சி!!! 


சித்திரை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபட்டால் சகல போகங்கள் பெறலாம். தமிழரின் முதழ்கடவுள் எனவும் முருகனை பகர்வதுண்டு, எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வமாகலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும்.

சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். சிவனது ஐம்பொறிதளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு. இவை ஆறினாலுமான ஒளித்திரந் சரவணப் பொய்கையில் பிரவேசித்து ஆறுமுகன் உருவானான் என்பது விளக்கம்.

முருகன் சிவசொரூபம் சக்திசொரூபம் ஆகிய இரண்டும் அமையப் பெற்றவன். முருகன், மூலாதாரம், சுவாதிஷ்டானம் முதலிய உடலில் உள்ள 6 தாரங்கலுக்கு ஒப்பானது முருகனது அறுவடை வீடுகள். ஆறுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது. பல்வேறு தத்துவங்களை எமக்குப் புகட்டுகிறது.

ஐயபுலன்களையறியும் ஐம்பொறிகளும், எண்ணை உதவும் நல்ல மனதும், முருகனது ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை. முருக வழிபாட்டில் குறிஞ்சி நிலத் தெய்வமாக போற்றப்படுகிறான். இயற்கையின் வண்ணம் எல்லாம் கொண்ட குன்றுதோறும் விளையாடுகிறான், பாலமுருகன்.
மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும். மேலும் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது முருகப் பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ்வாறு நாட்களில் போது மக்களின் மனதில் உள்ள காமம், வெகுளி, ஈயாமை, செருக்கு, பொறாமை என்னும் ஆறு பகைகள் அழிக்கப்படுகின்றன.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் வீற்றிருக்கும்
முருகனை வணங்கி அருள் பெருவோமாக.

``உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் குருவாய்
வருவாய் அருவாய் குகனே!''

மனைவியின் காலில் விழுந்த முருகன்!



அருணகிரியார் திருப்புகழ் பாடல் ஒன்றில், வேடிச்சி காலி லன்று விழுவோனே என்று குறிப்பிடுகிறார். அதாவது, முருகப்பெருமான் தனது மனைவியான வள்ளியின் காலில் விழுந்தார் என்ற பொருளில் இப்பாடலை பாடினார். இதனை மேலோட்டமாக பார்த்தால் பொருள் புரியாது. உள்ளார்ந்து படித்தால் இதற்குள் இருக்கும் பொருள் விளங்கும்.வள்ளி, திருமாலின் மகள், இவள் முருகப்பெருமானின் மீது அதிக பக்தி கொண்டவள். தெய்வானையும் திருமாலின் மகள் தான். அவளும், முருக பக்தையே என்றாலும், தேவர்களை காத்ததற்காக அவளை இந்திரன் முருகனிடம் ஒப்படைத்து விட்டான். அவள் முருகனுடன் கலந்து விட்டாள். 

இது பயன் கருதி செய்த பக்தி வகையில் அடங்கும். ஆனால், வள்ளியம்மை பூமியில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்றில் பிறக்கிறாள். முருகனைக் குல தெய்வமாகக் கொள்கிறாள். அவளை ஒரு பக்தையாகவே பார்க்கிறார் முருகன். அவளது பக்தியின் ஆழத்தைச் சோதிக்கிறார். எல்லா சோதனையிலும் அவள் வெல்கிறாள். பக்தன் இறைவனின் காலில் விழுவது போல, வள்ளியம்மையாகிய பக்தையின் காலில் அவளது பக்தியைப் பாராட்டி முருகன் விழுந்து, அவளை ஆட்கொள்கிறார். அதாவது, தன்னிடம் பக்தி கொண்டவர்களை முருகன் ஆட்கொள்வார் என்ற பொருளில் அருணகிரியார் இப்பாடலை பாடினார். உலகுக்கே கொடுப்பவன் கண்ணன். அந்த கண்ணன் யாசகம் கேட்டு மகாபலியிடமும், கர்ணனிடமும் செல்லவில்லையா? அதுபோல், தான் இதுவும்! தெய்வத் திருவிளையாடல்களை மனிதத்துவத்துடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. தெய்வீக சிந்தனையுடன் மட்டும்தான் பார்க்க வேண்டும்.

முருகா என்று ஒரு தரம் சொன்னால் கோடி முறை சொன்ன பலன்!!!


முருகப்பெருமானின் மூலமந்திரமான சரவணபவ என்பதை சடாக்ஷரம் (ஆறெழுத்து மந்திரம்) என்று கூறுவர். தமிழில் இம்மந்திரம் சடக்கர மந்திரம் எனப்படும். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியத்தில் முருகனுக்குரிய தமிழ் மந்திரங்களான முருகா, குமரா போன்றவை குறிக்கப் பெற்றுள்ளன. இம்மந்திரங்களை அருணகிரிநாதர் தன் பாடல்களில் பயந்த தனி வழிக்குத் துணை, முன் செய்த பழிக்குத் துணை என்று குறிப்பிடுகிறார். தெய்வ உபாசனையில் மந்திரஜபங்களுக்கு விசேஷத்தன்மை உண்டு. இம்முருக மந்திரத்தின் பெருமையினை வாரியார் சுவாமி முருகா என்று ஒரு தரம் சொன்னால் கோடிமுறை தெய்வநாமாவை சொன்ன பலன் கிடைக்கும் என்று குறிப்பிடுகிறார்

பழநி முருகனின் கோவண ரகசியம்!



]


ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

பதினாறு லட்சுமிகளின் பெருமைகள்!!!



ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் பெருமைகளைக் காண்போம்.
1. சௌந்தர்ய லட்சுமி


நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால்தான் அவர்கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு "சௌந்தர்ய லட்சுமீ கரம்' என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.

2. சௌபாக்கிய லட்சுமி

போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

3. கீர்த்தி லட்சுமி

எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந் திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.

4. வீரலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மி டம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.

5. விஜயலட்சுமி

மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.

6. சந்தான லட்சுமி

மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

7. மேதா லட்சுமி

பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.

8. வித்யா லட்சுமி

கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.

9. துஷ்டி லட்சுமி

எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந் தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.

10. புஷ்டி லட்சுமி

வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.

11. ஞான லட்சுமி

வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும் என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.

12. சக்தி லட்சுமி

இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்திலட்சுமியை வணங்கினால் போதும்.

13. சாந்தி லட்சுமி

எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.

14. சாம்ராஜ்ய லட்சுமி

மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

15. ஆரோக்கிய லட்சுமி

மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.

16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.