ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 10




ஜீவநாடியில் வருகின்ற பலன்கள் சில நேரங்களில் என்னையே மெய்

சிலிர்க்க வைத்து விடுகின்றன. அதேபோல் அதில் வருகின்ற பூஜை

முறைகள், மந்திரங்கள், எந்திரங்கள், வழிபாட்டு முறைகள், மூலிகை

மர்மங்கள் மிகவும் அதிசயப்படத்தக்கவையாகவே இருக்கின்றன. சித்தர்கள்

வகையில் இதுவும் ஒரு அதிசய சித்தியே என்பதில் எந்த மாற்றமும்

இல்லை. அது எப்படி எழுதாத ஓலைச் சுவடியில் எழுத்துக்கள் தோன்றும்

என சிலர் சந்தேகப்படுகின்றனர். சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு

ஜீவநாடி புரியாத புதிர். நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு இதுவே

வாழ்க்கை வழிகாட்டி. இன்றைய நாளில் ஏராளமான ஏமாற்று வேலைகள்

வந்துவிட்டதால் மக்கள் உண்மையை நம்புவதற்க்கு கூட தயக்கம்

காட்டுவது போல் ஆகி விட்டது. எத்தனையோ முறை தொடர்பு

கொண்டும் நாடி படிக்க அனுமதி தரமாட்டேன் என்கிறீர்கள் என்பதின்

பலரின் கேள்வி. உண்மைதான் ஆனால் அதே சமயம் ஏராளமான நபர்கள்

என்னிடம் நாடி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ப்ராப்தம் எப்படியோ

அப்படிதான் நடக்கும். பணபலம், ஆராய்ச்சி எதுவுமே எடுபடுவதில்லை.

இறையருளும், நம்பிக்கையும் இருப்பவர்கள் மட்டுமே இந்த ஜீவ நாடியை

நெருங்க முடிகிறது. சூழ்ச்சி செய்வோரும், சோதனை செய்வோரும்

முருகனால் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இன்று

எல்லாமே வியாபாரமாகி விட்டது.



ஒரு பெண்மணி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐயா, நான்

காரைக்காலில் இருந்து பேசுகிறேன். நீங்கள் இந்த பக்கம் வருவீர்களா?

என்கிறார். இன்னும் ஒருவர் கோவைக்கு நீங்கள் வர முடியுமா? என்கிறார்.

கேட்டது இவர்கள் தவறில்லை. ஒரு சிலர் கூப்பிட்டால் போதும், பணம்

கிடைத்தால் போதும் என்று செய்வதாலும், போன் வந்தால் போதும்

என நினைப்பதாலும் இவ்விதம் நேர்கிறது. நான் யாரையும் குறை

கூறவில்லை. ஜீவநாடி இறைவனுக்குச் சமம். நான் எந்த காலத்திலேயும்

எனக்கு மரியாதை கொடுங்கள் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஊர்

ஊராக நாடியை எடுத்துக்கொண்டு வியாபார நோக்கமாகப் படிக்கின்ற நபர்

என நினைத்திருந்தால் தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். இது எமது

தாழ்மையான வேண்டுகோள்.



ஒரு நபர் சுமார் நான்கு ஆண்டுகளாக நாடியில் பலன் வேண்டும்

எனக் கேட்டு வந்தார். உத்தரவு வரவேயில்லை. மிகவும் துனபமும்,

சோதனையும் தொடர்ந்து அவரை வாட்டிக் கொண்டே இருந்தது.

படித்தது கணிப்பொறியியல் இளநிலை. சென்னையில் வேலை தேடி

அலுத்துவிட்டார். தொடர்ந்து தேடியும் வேலை கிடைக்கவில்லை. உரிய

வயது வந்தும் திருமணமும் ஆகவில்லை. தந்தையும் தலைமறைந்து

விட்டார். தாயாருக்கு தீராத வியாதி. குடியிருக்கும் வீடு கூட குடிசைதான்.

ஆனால் கோடிக்கணக்கான அளவில் நிலம் இருக்கிறது. வட்டிப்பணம்

மாதாமாதம் கைச்செலவுக்காக வருகிறது. மற்றபடி எந்த வருமானமும்

இல்லை. நாடோடி போல் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். ஒரு சில நாட்கள்

வீட்டில் தங்கினாலும் இவருக்கும் இவரது தாய்க்கும் ஏடாகூடமாகி ஏழாம்

பொருத்தமாகி விடுகிறது. இப்படி இருந்தும் இவர் ஒரு பக்தர், மந்திர

ஜபம் செய்பவர். உயிர்கள் மீது கருணை கொண்டு புலால் மறுத்தல்

கொள்கையில் பிடிப்பு உள்ளவர். நல்லவர். இப்படி பல நல்ல குணம்

இருந்தாலும் இவரது வம்சத்தில் வருகின்ற ஆண்கள் ஒரு வயதை

நெருங்கியதும் ஏதாவது ஒரு வகையில் இறப்பைச் சந்தித்து எமலோகம்

சென்றுவிடுவர். இதுவும் ஒரு சோதனை.



இவ்வளவு பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு ஒரே நாளில்

போன் செய்த அடுத்த நாளே வாங்க நாடி படிக்கலாம் என்று கூப்பிடும்

வித்தை எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஒவ்வொரு அமாவாசையிலும்

ஞானஸ்கந்த மூர்த்தி கோவிலில் நடக்கும் பூஜையில் தவறாது கலந்து

கொள்வார். அருள்வாக்கிலும் பெரிய பலன்கள் வரவில்லை. காரணம் கர்ம

வினை யாருடைய வினையையும் யாரும் வாங்க முடியாது. இறைவன்

ஆசியும், சித்தர்களின் கருணையும் சேர்ந்து வரும் போது நிச்சயம் அது

தீருகின்ற வழி பிறக்கிறது.



நான்கு ஆண்டுகள் என்றால் 48 அமாவாசை பூஜையை இவர் பார்த்து

விட்டதாலும், தீவிர வழிபாட்டை இவர் செய்து வந்ததாலும் முருகப்

பெருமான் மனமிரங்கினார். தைப்பூச திருவழாவில் சுமார் 700 பேர் கலந்து

கொண்ட பூஜையில் இவருக்கு மட்டும் நாடி படிக்கப்பட்டது. கர்ம

காண்டம் உரைக்கப்பட்டது. அதிர்ந்து போனார். ஆச்சரியத்தில் மூழ்கினர்

வந்திருந்த அனைவரும்.

“கெட்டது வாழ்வு

தொட்டிடித்த ஆலயம்

இடிந்தது போலும்

சரியாக ஆலயம்

முறையாக நீ எழுப்பு

பின்னே பிரியம்

நந்தி சமாதி மீது

நலமாக மூன்று இரவு

முழுமையாக தங்கிவா – பின்

பிரச்சினை தீர வழி பிறக்கும்

சரியாக சதுரகிரிபோ

முறையாகும்”

என்று உரைத்தார். முருகப்பெருமான் நீண்ட நேரம் படித்தவற்றின்

சுருக்கத்தையே இங்கு எழுதி இருக்கிறேன். இவர் வாழ்வு கெட்டதற்குக்

காரணம் சிறிய வயதில் ஒரு கருப்பண்ண சுவாமியின் ஆலயத்தை சுவாமி

சிலைகளை இடித்து உடைத்திருக்கிறார்.



அந்த ஆலயம் எப்படி இடிந்ததோ அதுபோல இவர் வீடும் சரிந்து வந்தது.

இப்படி ஒரு வீட்டில் எப்படி குடியிருப்பீர்கள் என கேட்கத் தோன்றும்.

இவர் வீடு சரிந்து கொண்டே இருக்கிறது. இவர் வாழ்வும்தான். மீண்டும்

அந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும். அதன் பின்புதான் இவர் வாழ்வு

வளமாகும் என வந்தது. சில ஆலய தரிசனங்களும் உரைக்கப்பட்டது.



இவர் இந்த ஆலயத்தை இடித்ததன் நோக்கம் வேறு. இவரது சகோதரர்

கருப்பண்ணசாமிக்கு ஓர் ஆட்டை பலியிட ஆயத்தமானார். அந்த

சமயத்தில் அங்கு சென்ற இவர் ஆடு பலியிடக்கூடாது, உயிர்க்கொலை

பாவம், ஜீவகாருண்யமே கடவுளை அடைய வழி என்று வாக்குவாதம்

செய்திருக்கிறார். பாரம்பரியமாக பலியிடும் வழக்கம் உடைய கோவில்

என்பதால் நமது முன்னோர்கள் வகுத்த வழியில் நான் செல்கிறேன்

என்று இவரது சகோதரர் ஆட்டை பலியிட ஆயத்தமானார். இவர் ஆட்டை

வெட்டினால் உன்னை வெட்டுவேன் என்றார். உன்னைப் பிடித்து இந்த

மரத்தில் கட்டிப்போட்டு உன் கண் முன்னே இந்த ஆட்டை கருப்பண்ண

சுவாமிக்குப் பலியிடுவேன் என்றார் இவர் சகோதரர். சுவாமி இருந்தால்

தானே பலியிட முடியும். சுவாமியையே அடித்து நொறுக்கிவிட்டால்

என்ன செய்வாய் என்றார் இவர். அதிர்ந்தார் அண்ணன். துணிந்தார் இவர்.



ஓங்கி அடித்து கருப்பண்ண சுவாமி கோவிலை துவம்சம் செய்துவிட்டார்.

அது சிறிய வயது. ஆனாலும் இவ்வளவு ஞானம் நல்லதுதான். ஞானம்

நலமாக இருந்தாலும் தேவதை சாபம் ஏற்பட்டுவிட்டது. இவரும் மறந்தார்.

படித்தார். சில மாதம் கழித்து இவரது தந்தை தவறினார். பேரிடி இவருக்கு.

கிராமத்தை விட்டு சென்னை சென்றார். அப்புறம் தான் கதை தெரியுமே?


                          ஓம் ஸ்ரீ  ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்  !!!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக