புதன், 5 நவம்பர், 2014

அபூர்வ ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள் !






 உபாசனையைப் பலர் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.

எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்கஅருள்சாதனங்கள்உதவும். தியானம் என்பதுமனதை இறைவனிடம் வைத்துமனதில் இறைவனின்உருவத்தையே பதித்துமந்திர ஜபம் செய்வதுதியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்துதியானம் செய்வது சிறப்புஜன சந்தடியோவேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாதுஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும்பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. ஜபம்செய்ய நதிக்கரைமலைபுனித தலங்கள்சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை

பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். ஜபம் செய்ய ருத்ராட்சம்மணிமாலைதாமரை மாலைபவழம் போன்ற மாலைகளும்முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன.  முக்கியமாகமனம்  இறைவனிடம் இருக்க வேண்டும்அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டுஉட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால்அது தியானமாகாதுஇத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.

1. உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்அதை ஜாதகம் மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம். குரு முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையான ஆர்வம் இருப்பின் குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை கவருகிறாரோ அவரை குருவாக எற்றுக் கொள்ளலாம். ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப்படுபவரை முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக் காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.


2.உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை மணி முதல் மணி வரை முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும்நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முஹூர்த்தத்தில் உபாசிப்பது விரைவான பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்

3.வீட்டிலஒருகுறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுங்கள்அது பூஜை அறையாகவோவேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம்பூஜை அறை இல்லையென்றால்இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும்தலைகழுத்துமற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்கைகள் மடி மீது இருக்கட்டும்கண்களை மூடிக் கொள்ளவும்.  வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.

5. உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.

6. மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

7. உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும்உங்கள் கோரிக்கை என்னவோ அதைப் பிரார்த்திக்கவும்இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன் ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான் பின்னர் செயல்படுகிறான் அதன் மூலம் சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.

8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும்மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை  தெய்வத்திடம் வைராக்கியத்துடன் நிறுத்தவும்.

9.பின்புகுருவிடம்உபதேசம்பெற்றமந்திரத்தை ஜபம் செய்யவும்குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும்சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008, 10008, 10008 ஆக இருக்கட்டும்.

10. உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும்.
11. 
எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால்தான் பலன் தர ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

12. தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்

13. குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும். அது மேலும் உபாசனை சித்திக்கு வழி கொடுக்கும்.
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று பகவத் கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

·         சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

·         பூஜை அறைபசுக்கொட்டகைநதிதீரம்கடற்கரைஆசிரமம்ஆலயம்தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
·         கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும்தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும்அக்னி மூலை (தென்கிழக்குநோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும்மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும்கிழக்கும்வடக்கும்நிஷ்காமியமானது.

·         சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றதுபத்ராஸனம்முக்தாஸனம்மயூராஸனம்ஸித்தாஸனம்பத்மாஸனம்ஸ்வஸ்திகாஸனம்வீராஸனம்கோமுகாஸனம்சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம்பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

·         கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதிவெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்திசிவப்பு வஸ்திரம் வசியம்கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம் வசியப் படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள்அவா்களால் ஒருவரை ஆன்மிகத்தில் உயா்த்த முடியாதுஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாதுதெய்வீக அனுபவங்களைக் கொடுக்க முடியாதுஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள் போலவும்ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு உலா வருவார்கள்மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்யட்சணி வித்தை செய்பவா்கள் யார்மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்உண்மையான மகான்கள் யார்சித்தா்கள் யார்தெய்வ அவதாரங்கள் யார்என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு வேண்டும்அனுபவ அறிவு வேண்டும்எனவே ஒரு சரியான குருவைத் தேர்ந்த்தெடுக்க பூர்வ புண்ணியமும் சிறந்த அனுபவமும் வேண்டும்.இதற்கு கீதையில் சொல்லியபடி நமது உள்ளத்தில் இறைவன் இருக்கிறார். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். நமது   பக்குவத்திற்கு தகுந்தபடி குருவைக் காட்டுகிறார். மாயை எனும் திரையால் தன்னை முழுதும் மறத்துள்ளார்.


எனவே முடிந்த அளவு மற்றவர்க்கு நன்மை செய்வோம். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது வள்ளுவன் வாக்கு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எல்லா உபாசனைகளுக்கும் பொருந்தும். முதலில் குருவிடம் பெற்ற மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து உரு ஏற்றிய பின்பே அருள் சாதனங்களைக் கையாள வேண்டும். ஒரே நாளில் ஒரு லட்சம் உச்சரிப்பது என்பது உடலில் காந்த சக்தியை திடீரென கூட்டி விடும் என்பதால் தினசரி 108 முறை காலை, மாலை உச்சரித்து உரு எற்றுவதே சிறப்பு. இப்போதெல்லாம் சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லா வகையான சித்தியும் கிடைத்து விட வேண்டும் என்று பலர் எதிர் பார்க்கிரார்கள் ஆனால் உபாசனை உயர்வான மார்க்கம், இது சித்தர்கள் கண்ட சாத்வீக முறை. பொறுமை மிக மிக அவசியம் தேவை. நாம் உச்சரித்த மந்திரங்கள் ஒரு லட்சத்தை தாண்டிய பின்னர் மேலே சொன்ன அருள் சாதனங்களைக் கையால் தொட்ட உடனேயே நம்மிடம் உள்ள சக்தி அலைகள் உடனடியாக அதில் பதிந்து அதை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடனடியான நல்ல பலன்கள் கிடைகின்றன. எனவேதான் மஹான்கள் தொட்டு ஆசிர்வாதம் செய்த விபூதி, எலுமிச்சை போன்றவைகள் அருள் நிறைந்து அதன் மூலம் பல்வேறு அதிசயங்கள் நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள் கிடைக்கிறது. அனைத்து விதமான அருள் சாதனங்களையும் விரிவாகப் பார்ப்போம். முதலில் விபூதியைப் பற்றிப்  பார்ப்போம். விபூதி குறித்து ஏராளமான தகவல்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் ஒரு உபாசகர் விபூதி என்கிற அருள் சாதனத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை குறிப்பாகப் பார்க்கலாம்.
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்அவை
1.   கல்பம்
2.   அணுகல்பம்
3.   உபகல்பம்
4.   அகல்பம்
கல்பம்:
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்பஞ்ச பிரம்ம மந்திரங்களை தக்க குரு மூலம் அறிந்து கொள்ளவும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தின் அன்று இந்த கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைக்கிறது என்ற தகவலை இந்த கட்டுரை எழுதும் போது ஒரு நண்பர் இந்த தகவலைச் சொன்னார்.
அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்துபின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
இதில் கல்பம் என்று சொல்லப்படும் வகையான விபூதியே மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபர நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த விபூதியை மந்தரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் உபாசகர்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே நீங்களே கல்ப விபூதியை தயார் செய்வதே சிறப்பு என்பது எனது கருத்தாகும். பொதுவாக விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. நல்ல ஒரு மஹானால் தொடப்பட்ட விபூதி எந்த ஒரு நறுமணமும் கலக்காமலே மிகச் சிறப்பான வாசனையைத் தருவதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.சில சித்தர்கள் அரிய வகையான மூலிகைகளை விபூதியில் கலந்தும் பயன்படுத்தி பல காரியங்களைச் சாதித்துள்ளார்கள். அவற்றையும் குரு மூலம் தெரிந்து கொள்வதே சிறப்பான முறையாகும்.
  விபூதியை ஐஸ்வர்யம் என்று சொல்வர்செல்வத்தை அளிப்பது விபூதிநம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், “ரட்சை’ என்ற பெயரும் விபூதிக்கு உண்டுவிபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதிஇது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும்அதற்கடுத்துபசுஞ் சாணத்தால் வரட்டி தட்டிபசு மாட்டின் கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்துவீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.
புருவத்தின் நடுவில் ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக ஜோதி தெரிவதை யோகியர்கள், சித்தர்கள், மஹான்கள், முனிவர்கள், ரிஷிகள் கண்டு சொல்லி உள்ளார்கள். அவ்விடத்தில் தியானம் கைகூடி ஜோதி தெரிய வேண்டுமென்பதற்காகவே சந்தனம்குங்குமம்திருநீறுதிருமண் முதலியவற்றினை இடுவர்மந்திர உருப்பெற்ற விபூதி ஒருவரின் ஆத்ம ஜோதியைத் தரிசிக்க வைக்கும். இதுவும் ஒரு வகையான தீட்சை ஆகும்.
 இறைவன் படைப்பில் நமது மனித உடல் ஒரு கோவிலாகும். அதில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம்அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படவும் அதே சமயம்உள்ளிழுக்கவும் செய்யும்ஏதெனும் ஒரு பொருளை புருவ மத்தியின் அருகே கொண்டு வர ஒருவித ஈர்ப்பு தோன்றுவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
புருவ மத்தியில் விபூதியை வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை விபூதி சரியாகச் செய்கிறது. அதை  அப்படியே கண்களை மூடி தியானம் செய்ய உள் ஒளி பிரகாசமாகத் தெரியும். உபாசகர்கள் சூரிய நமஸ்காரத்தை தினசரி செய்வது மிக மிக அவசியம். குறிப்பாக ஜோதிடர்கள் உபாசனை இல்லாமல் ஜோதிடம் சொன்னால் மற்றவர்களது கர்ம வினை அவர்களைப் பாதிக்கும். எனவே உபாசனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.
  நமது கண்களுக்கு ஏராளமான சக்திகள் உண்டு. அதைவிடப் பார்வைக்கு அதிக சக்தி ஊண்டு. மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும்அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம்மனோ தத்துவம்ஹிப்னாட்டிஸம்மெஸ்மரிஸம் போன்றவற்றில் பார்வையும்,  எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறதுகண் திருஷ்டி என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதைத் தடுக்கவும் திருநீறு பயன்படும்.எனவேதான் விபூதியைக் காப்பு என்று சொல்கிறோம்.
புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பிட்யூட்ரி சுரப்பியைத் தூண்டச்செய்யும் இடமும் இந்த நெற்றி ஆகும் அந்த ஆக்ஞா சக்கரத்தைத் தியானம் செய்பவர்களுக்கு உடல்  வெப்பம் அதிகரிக்கும்அந்த சூடு தணிய  சந்தனம் பூசுவதும் வழக்கத்தில் உள்ளது..
விபூதி எல்லா வகையான தோசங்களையும் நீக்கும் தன்மை உடையது. சைவர்கள் விரும்பி அணியும் விபூதி எல்லா மதத்தினர்க்கும் நன்மை பயக்ககூடியது.அருள் மிக்க விபூதியை பின்வரும் விதிப்படி அணிவது சிறப்பானது.
வடதிசை அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டுகீழே சிந்தாமல்வலது கையின் ஆள்காட்டி விரல்நடு விரல்மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்றுபூசிக்கொள்ளல் வேண்டும்எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும்முருக உபாசகர்கள் ஆறுமுகம்… ஆறுமுகம்… என்று ஆறு முறை கூறி அணிவது சிறப்பு. இதை அருணகிரினாதர் தமது திருப்புகழிழ் சொல்லி உள்ளார். அதை வரியார் சுவாமிகள் அடிக்கடி வலியுருத்திக் கூறியுள்ளார்.  நெற்றி முழுவதும் அல்லது மூன்று  கோடுகளாகத் தரிக்க வேண்டும்காலைமாலைபூசைக்கு முன்னும் பின்னும்ஆலயம் செல்வதற்கு முன்னும்இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்எனப்படும்மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்எனப்படும்.
மேல் கோடு சாம வேதம்நடுவில் உள்ளது யஜுர் வேதம்கீழே உள்ளது அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது
ராஜ சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், “இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று தெரிந்து கொள்கிறானோஅதே போலவிபூதி அணிந்தவனை சிவனும்திருமண் அணிந்தவனை விஷ்ணுவும்மஞ்சள் பூசிகுங்குமம் அணிந்த பெண்ணை மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம் செய்கின்றனர்!
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றனஇந்த முறைப்படிதான் சிவன், அம்பாள், வினாயகர், முருகன் உபாசகர்கள் விபூதி தரிக்க வேண்டும்.
1.   தலை நடுவில் (உச்சி)
2.   நெற்றி
3.   மார்பு
4.   தொப்புளுக்கு (கொப்பூழ்சற்று மேல்.
5.   இடது தோள்
6.   வலது தோள்
7.   இடது கையின் நடுவில்
8.   வலது கையின் நடுவில்
9.   இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

நவ நாகரிகமான இந்தக் காலத்தில் இம்முறைப்படி விபூதி தரிக்க இயலாதவவர்கள் முடிந்த அளவு உபாசனை செய்கின்ற பூஜா காலங்களிலாவது இம்முறைப்படி அணிந்து மற்ற நேரங்களில் புருவ மத்தியில் மட்டும் அணிந்து கொள்ளலாம்.
உபாசகர்கள் மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் முறைப்பபடி தயாரிக்கப்பட்ட விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதைப் பத்திரமாக ஒரு பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். அடுத்த முறை மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் அதே விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதே பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். இப்படியே செய்து வர வர ஜபம் செய்பவர்களது எண்ண அலைகள் விபூதியில் சேமிக்கப்படும். பின்பு ஏதேனும் ஒரு காரியத்திற்காக விபூதி கொடுக்கும் முன்னர் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்துக் கொடுக்க அந்த காரியம் அப்படியே பலிக்கும்.

நான் முன்பே குறிப்பிட்டபடி ஜபத்தை ஒரு முறை நதிக்கரையிலும், ஒரு முறை பசுத்தொழுவத்திலும், ஒரு முறை மலை உச்சியிலும், ஒரு முறை குருவின் பாதத்திற்கு அருகிலும். ஒரு முறை எதேனும் ஒரு சித்தரின் ஜீவ சமாதியிலும், ஒரு முறை கடற்கரையிலும் செய்வது மிக அதிக ஆற்றலைத் தரும். எங்கெல்லாம் சென்று ஜபம் செய்கிறோமோ அங்கெல்லாம் விபூதியை வலது உள்ளங்கையில் வைத்து உரு எற்றி வைத்துக் கொள்ளவும். இதன் நன்மைகள் கருதியே மேற்கண்ட இடங்களில் எல்லாம் ஆலயங்களை அமைத்து அற்புத வழிபாடுகளைச் செய்தார்கள் நம் முன்னோர்கள்.

1 கருத்து:

  1. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...ஞான ஜோதி அம்மா திருவடிகள் சரணம் சரணம்!!!

    பதிலளிநீக்கு