திங்கள், 23 மே, 2016

வைகாசி விசாகம் அன்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அருளுரை

வைகாசி விசாகம் அன்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் வழங்கிய அருளுரையை பின்வரும் இணைப்புகளில் காணலாம்.


பகுதி-1  https://youtu.be/L1Cxe2aDuuQ

பகுதி-2    https://youtu.be/9UqC7i7pYpM

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வைகாசி விசாகம் விழா காட்சிகள்

 நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் 21.5.2016 சனிக்கிழமை இரவு நடந்த வைகாசி விசாகம் விழாவின் காட்சிகள்
முருகன் ஊஞ்சல் உற்சவம்

வெள்ளிக்கவசம் அலங்காரம்


ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அருளாசி 


                                                  திரண்டு வந்த மக்கள் கூட்டம்

                             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 20 மே, 2016

ஜீவ நாடி உரைத்தபடி செய்த பஞ்சேஷ்டி தீப விழா

ஜீவ நாடி உரைத்தபடி செய்த பஞ்சேஷ்டி தீப விழாவைக் காண பின்வரும் இணைப்புகளைச் சொடுக்கவும்.




ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 19 மே, 2016

ஜீவ நாடி உரைத்தபடி செய்த திருப்புகழ் வேள்வி

கந்த சஷ்டியில் ஜீவ நாடி உரைத்தபடி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியார்களுடன் செய்த திருப்புகழ் வேள்வி. வீடியோவைக் காண பின்வரும் இணைப்பை சொடுக்கவும்.



ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கௌமாரம் பற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளின் அருளுரை

கௌமாரம் பற்றி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் வழங்கிய அருளுரையை பின்வரும் இணைப்பில் கேட்கலாம்.

                                  https://youtu.be/3nNcyU7dfXw
   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சனி, 7 மே, 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-39


              6.5.2016 அன்று நடந்த அமாவாசை பூஜை அலங்காரம்
கொங்கு மண்டலத்தில் உள்ள மிகச்சிறப்பான முருகன் தலத்தில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைக்கும் அருள்வாக்கைக் கேட்க அமர்ந்தார். அவருக்கு மிகச்சிறப்பான முறையில் வாக்குரைத்து வந்த முருகப்பெருமான் திடீரென உன் வீட்டில் என் கௌபீனம் இருக்கின்றது அதை ஏன் ஒரு பெட்டியில் போட்டு அடைத்து வைத்திருக்கின்றாய் அந்தப் பெட்டியைத் திறந்து அந்த கௌபீனத்தைப் பூஜித்து வா என்று உரைத்தார். அதைக்கேட்ட அந்த அர்ச்சகர் முருகா…முருகா..என்று உரக்கக்கூறி கண்ணீர் மல்கினார். சத்தியமான உண்மை இந்த ஜீவ நாடியில் வாக்குரைப்பது அந்த முருகப்பெருமானே…ஏனென்றால் அந்த கௌபீனம் பழனியில் இருந்து பெறப்பட்டதாகும். கடந்த 3 ஆண்டுகளாக என் வீட்டில் இருக்கின்றது. அதை ஒரு சிறு பெட்டியில் பூட்டி அறியாமையினால் வைத்துவிட்டேன் முருகப்பெருமானே இனிமேல்  உன் வாக்குப்படியே அதை பூஜை செய்கின்றேன் என்று கூறி இன்னும் பல்வேறு இரகசியங்களை ஜீவ நாடி மூலம் அறிந்து கொண்டு விடைபெற்றார் அந்த அர்ச்சகர். இப்படி மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவங்களை ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடி மூலமும் நடத்தி வருகின்றார். தற்போது சிறுகச் சிறுக ஜீவ நாடி பொது மக்களுக்காக படிப்பது அதிகம் செய்யப்பட்டு வருகின்றது. முன் அனுமதியின் அடிப்படையில் வாரத்தின் இறுதி நாட்களாகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நமது ஜீவ நாடியை முன் அனுமதி பெறுபவர்களுக்குப் படிக்குமாறு உத்தரவு வந்துள்ளது. வருகின்ற ஜீன் - 2016 முதல் வார இறுதி நாட்களில் மட்டும் யாருக்கு பிராப்தம் இருக்கின்றதோ அவர்கள் ஜீவ நாடி வாக்கைக் கேட்டு வாழ்க்கையில் வளம் அடையலாம். அதற்கு முன் அனுமதி பெற அலைபேசியில் புதன் மற்றும் வியாழன் அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெறலாம். முருகப்பெருமான் எந்த தேதியில் படிக்க உத்தரவு தருகின்றாரோ அந்த தேதியில் தவறாமல் வந்து ஜீவ நாடி கேட்டுக் கொள்ள வேண்டியது எமதருமை வாசகர்களின் கடமையாகும். ஜீவ நாடி படிப்பது எமது தொழில் இல்லை என்பதாலும் நாடியை வைத்து பணம் சம்பாதிக்கும் எண்ணமோ அவசியமோ எமக்கு எப்போதும் இல்லை என்பதாலும் ஜீவ நாடி மூலம் நான் எந்த பரிகாரங்களும் செய்து தருவதில்லை என்பதாலும் உண்மையான ஜீவ நாடி இது என்று பெரிய பெரிய மடாதிபதிகள், மகான்கள், அர்ச்சகர்கள், ஆன்மீகவாதிகளால் புகழப்படுவதாலும் யாருக்கு உண்மையிலேயே முருகப்பெருமான் மீதும் என் மீதும் நமது ஜீவ நாடி மீதும் நம்பிக்கை இருக்கின்றதோ அவர்கள் மட்டும் வந்து ஜீவ நாடி வாக்கைக் கேட்டுக் கொள்ளும்படி உங்களை கேட்டுக் கொள்கின்றேன். அதே போல் 100% நம்பிக்கையோடு வந்து ஜீவ நாடி கேட்பவர்களுக்கே 100% பலிதம் உண்டாகின்றது என்பது பெரும்பாலோரின் அனுபவம் ஆகும். அதே போல் இது 100% சத்தியமாக
மந்திரமோ, மாய வித்தையோ, குறி சொல்வதோ, மை வித்தையோ, யட்சினி வசியமோ இல்லவே இல்லை. இது சத்தியமான 100% முருகப்பெருமான் வாக்கு என்பதை எனது 13 வயது முதல் கடந்த 20 ஆண்டுகளாக அனுபவத்தில் உணர்ந்து வருகின்றேன். தினசரி முருகப்பெருமான் நடத்தும் திருவிளையாடல்களே இதற்கு சாட்சி என்பது எம்மை நேரில் சந்தித்தவர்களுக்குத் தெரியும். எல்லோரும் ஒரே நாளில் ஜீவ நாடி பார்த்துவிட முடியாது என்பதால் பொறுமையாக இருந்து எந்த தேதியில் உங்களுக்கு சரியான ஜீவ நாடி அருள்வாக்கு கிடைக்குமோ அந்த தேதியில் மட்டும் வந்து கேட்டுக்கொள்ளவும். நன்றி.
சென்ற மாதத்தின் தொடர்ச்சியை இனி தொடர்ந்து காண்போம். கொங்கு ஏழு தலங்களில் அவிநாசி, திருமுருகன்பூண்டி, பவானி,திருச்செங்கோடு ஆகிய தலங்களைத் தரிசனம் செய்து விட்டோம். இன்னும் மூன்று தலங்களான கொடுமுடி, வெஞ்சமாக்கூடல், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் ஆகியவற்றைத் தரிசனம் செய்ய மீண்டும் ஆயத்தமானோம். முதலில் கொடுமுடியைத் தரிசனம் செய்தோம். தேவாரத்தில் பாடப்பட்டுள்ள கொங்கு மண்ணின் 7 தலங்களில் கொடுமுடி 6-வது தலமாக பாடப்பட்டு உள்ளது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் 3 பேரும் கொடுமுடியை பாடி உள்ளனர். இங்கு பிரம்மா வழிபட்டதால் `பிரம்மபுரிஎன்றும், திருமால் பூஜை செய்ததால் `அரிகரபுரம்என்றும் மேலும் பெயர்கள் உண்டு.
கருடன் இங்கு பூஜை செய்த பிறகே தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததாக ஐதீகம். அந்த அடிப்படையில் கொடுமுடிக்கு `அமுதபுரிஎன்ற பெயரும் உண்டு. மேலும் கன்மாடபுரம், திருப்பாண்டி கொடுமுடி, பரத்வாசசேத்திரம் என்ற பெயர்களும் கொடுமுடிக்கு வழங்கப்படுகிறது. மேரு மலையில் இருந்து ஒரு துண்டு வைரமணியாக கொடுமுடியில் விழுந்து பெரும் சிகரமாக அமைந்தது என்றும், அந்த சிகரமே மூல லிங்கமாகவும் அமைந்து இருப்பதால் தென் கயிலாயம் என்றும் கொடுமுடி அழைக்கப்படுவதாக கொடுமுடியின் தலவரலாறு கூறுகிறது. இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகுடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு திருமாலுக்கு என்று தனியாக கோவில் உள்ளது. அங்கே மகாவிஷ்ணு, பள்ளிகொண்ட கோலத்தில் வீரநாராயண பெருமாள் என்ற பெயரில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
அதுபோல் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வன்னி மரம் கோவில் தல விருட்சமாக உள்ளது. இந்த வன்னிமரம் பிரம்மாவின் அடையாளமாக உள்ளது. இப்படி ஒரே கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய 3 கடவுளுக்கும் சன்னதிகள் அமையப்பெற்று இருப்பது மிகவும் சிறப்பாகும். கொடுமுடி சிறந்த பரிகார தலமாக உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கொடுமுடியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதற்காக கோவில் வளாகத்தில் பரிகார மண்டபம் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. குரு பிரீதி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், திருமணத்தடை, பூர்வ ஜென்ம சாப தோஷம் உள்பட பல்வேறு தோஷங்களுக்கும் இங்கு பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த கொடுமுடி தலத்தை தரிசனம் செய்தபின்பு வெஞ்சமாக்கூடல் எனும் அடுத்த தலத்தை அடைந்தோம். அந்த தலம் கௌமார மடாலயம் மூன்றாம் குருமஹா சந்நிதானம் தவத்திரு கஜபூஜை சுந்தர சுவாமிகள் அவர்களால் பல்வேறு திருப்பணிகள் கண்ட தலமாகும்.
இத்தலம் கருவூருக்கு தெற்கில் அரவக்குறிச்சி பாதையில் உள்ள ஆறுரோடு பிரிவில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.சுந்தரரால் பாடப்பெற்ற தலம். கோவில் அருகில் சிற்றாறு உள்ளது.பழைய கோவில் வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டதால் புதிய கோவில் நிறுவப்பட்டு புதுப்பொலிவுடன் திகழ்கிறது. கோவில் பள்ளத்தில் உள்ளது. 15 படிகள் இற்ங்கிச் செல்லவேண்டும். ஆறுமுகக்கடவுள் தனிச் சந்நிதி உண்டு. அருணகிரிநாதர் இம் முருகன் மேல் திருப்புகழ் பாடியுள்ளார். 63 நாயன்மார் சிற்பங்கள் நேர்த்தியாக உள்ளன.வெஞ்சன் என்ற அசுரன் வழிபட்ட தலம். சிவபெருமான் தன் பக்தை யான ஒரு கிழவியிடம் தன் பிள்ளைகளை ஈடு காட்டி பொன்பெற்று சுந்தரருக்குக் கொடுத்ததாக வரலாறு. இன்றும் பிள்ளை தத்தெடுப்போர் இக்கோவிலில் இறைவரிடம் தவிட்டுக்கு வாங்குவது உண்டு.” இப்படிப்பட்ட சிறப்பான சிவத்தலத்தை தரிசனம் செய்துவிட்டு அடுத்த தலமான கரூர் பசுபதீஸ்வரர் கோவிலை அடைந்தோம். ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது. கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நினக கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின் பக்கன் உள்ளது.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், சிறிது சாய்வாக உள்ளது. ஆவுடையார் சதுரமாக உள்ளது. மாசி மாதத்தில் ஐந்து நாட்கள் சுவாமி மீது சூரிய ஒளி படுகிறது. கோயிலுக்குள் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதில் ஒரு பக்கத்தில் புகழ் சோழ நாயனார்கையில் தலையோடு கூடிய தட்டுடன் நிற்கும் சிற்பமுள்ளது. மறுபுறத்தில் பசு, சிவலிங்கத்தை நாவால் வருடுவதுபோலவும், அதன் பின் கால்களுக்கிடையில், பால் மடிக்கு நேர்கீழே சிவலிங்கம் அமைந்துள்ளதான சிற்பமும் உள்ளது. நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. சோழர்கள் இருந்து அரசாண்ட ஐந்து தலைநகரங்களுள் இந்நகரமும் ஒன்று. நடராஜர் சந்நிதியும், கோஷ்டமூர்த்தமாக மூர்த்தி முதலியவையும், உள் பிராகாரத்தில் ஒரு சவாமி சந்நிதியும், இலக்குமி சந்நிதியும் அடுத்து ஆறுமுகர் சந்நிதியும் உள்ளது. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூரார் என்ற சித்தர் வாழ்ந்து பேறு அடைந்த கோயில். இவர் ஆனிலையப்ப ரோடு ஐக்கியமானதால் கருவறையில் உள்ள சுயம்பு லிங்கம் சற்றே சாய்ந்தவாறு உள்ளது.
இதுவரை எந்தவிதமான அதிசய நிகழ்வுகளையும் நடத்தாத முருகப்பெருமான் கரூரில் ஜீவ நாடியில் உரைத்தபடியே ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார்.   கரூர் சிவாலயத்தில் அடியார்கள் சூழ வழிபாடு நடத்தி வெளியே வந்த போது முன் பின் அறிமுகம் இல்லாத தூய வெள்ளை ஆடை பூண்ட ஒரு சிவனடியவர் ஒருவர் வந்து நடு தார் ரோட்டில் அடியேனைப் பார்த்து சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க அதைக் கண்டு பதற்றம் கொண்டு உடனே அடியேனும் அவருக்கு சாஸ்டாங்கமாக நமஸ்கரிக்க அந்த சிவனடியார் எந்த ஊரு...எனக் கேட்க அடியேன் ஒருவித மெய்யுணர்வில் அந்தியூர் ஆறுமுகப்பெருமான் என உரைக்க அடுத்த கணமே அடியேன் இவன் அடிமை...அடியேன் இவன் அடிமை என்று கரூர் கோவில் கோபுரத்தைக் காட்டி வேகமாக சிவாயலத்தில் உள்ளே சென்று அந்த சிவனடியார் மறைந்துவிட்டார்கள். என்னுடன் இருந்த அடியார்கள் அனைவரும் முருகா...முருகா...என்னே உன் விளையாட்டு என்று பக்தியில் திளைத்தார்கள். இன்னும் சிறிது நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க மிகவும் அழகான ஒரு வாலிப இளைஞர் என்னிடம் வந்து நான் உள்ளே போகலாமா சுவாமி...எனக் கேட்க அதற்கு அடியேன் போலாம்..போலாம்...என்றும் எனக்குத் தெரியாது என்றும் மிகுந்த கோபமாக உரைக்க அடுத்த நொடி அந்த இளைஞர் வேகமாக சுப்ரமண்யர் ஆலயத்தை நோக்கி விரைந்து சென்று மறைந்து விட்டார். அங்கு வந்தது அந்த கருவூரார் சித்தரும், முருகப்பெருமானுமே என்பதை பின்பு ஒருமுறை ஜீவ நாடியில் அறிந்து கொண்டோம். அடுத்து கரூர் அருகில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த ஜீவ சமாதியையும் தரிசனம் செய்தோம். சதாசிவ பிரமேந்திரர் ஜீவசமாதி கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது. நெரூர், கரூரில் இருந்து பஞ்சமாதேவி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையில் உள்ளது . இங்கு மிகவும் பழமையான சிவபெருமான் கோயில் காவிரி ஆற்றின் கரை அருகில் அக்னீஸ்வரர் என்ற பெயரில் அமைந்துள்ளது கோயிலுக்கு பின்புறம் சதாசிவ பிரமேந்திரரின் ஜீவசமாதி அமைந்துள்ளது. இவர் ஒருமுறை கொடுமுடியில் காவிரி ஆற்றின் குறுக்கே இருந்த பாறையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார் சதாசிவ ப்ரமேந்திரர். தூரத்தே இருந்து அவர் தவம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மகானை அடித்துச் சென்றுவிட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் வெள்ளத்தினால் அவர் அடித்துச் செல்லப்பட்டு விட்டார் என்றே மக்கள் கருதினர். பல நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்தது. அப்போது வீடு கட்ட மணல் எடுப்பதற்காக வந்த சிலர் ஆற்றின் ஒருபுறத்தில் தோண்டினர். அப்போது திடீரென மண்வெட்டியில் இருந்து ரத்தமாக வந்ததைக் கண்டு அஞ்சிய அவர்கள் மேலும் தோண்டிப் பார்த்த போது,. உள்ளே அமர்ந்த நிலையில் கண்களை மூடி சதாசிவர் தவம் செய்து கொண்டிருப்பது தெரிந்தது. அவர் தலை மீது மண்வெட்டி பட்டு, அந்தக் காயத்திலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. மக்கள் கூக்குரல் கேட்டுக் கண் விழித்த சதாசிவர், எதுவும் நடக்காதது போல் அவ்விடம் விட்டு வேகமாகச் சென்று விட்டார். ஒருமுறை சதாசிவ பிரமேந்திரர் உடல்,மனம் என்ற உணர்வின்றி தான் எல்லையற்ற பிரமம் என்கிற ஏகாந்த உணர்வில் திகம்பரராய் ஒரு அரசரின் அரண்மனைக்குள் நுழைந்து விட்டார் பார்த்த  அரசன் பிரமேந்திரரைப் பற்றி அறியாததால்,  தன் அவையில் நுழைந்த பிரமேந்திரரின் மீது கடும் கோபம் கொண்டு அவரின் கையை வாளால் வெட்டி விட்டார் .ஆனாலும் பிரமேந்திரர் தான் சரீரமல்ல என்ற ஏகாந்த உணர்வில் இருந்ததால், தன் கை வெட்டுப்பட்டதை கூட உணராமல் சென்று கொண்டிருந்தார் .அரசன் தன் தவறை உணர்ந்து வருந்தி பிரமேந்திரரிடம் மன்னிப்பு கேட்டான். இப்படி முருகப்பெருமான் ஜீவ நாடியில் உரைத்தபடி கொங்கு ஏழு தலங்களையும் உடன் ஒரு மகானின் ஜீவ சமாதியையும் தரிசனம் செய்து முருகப்பெருமான் தமது ஜீவ நாடியில் உரைத்தது போலவே பல்வேறு அதிசயங்களைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம்.
(தொடரும்…)
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!