புதன், 14 செப்டம்பர், 2016

ஜீவ நாடியில் தோன்றிய கிருஷ்ணர் உருவம்


ஒருவர் வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். அவருக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் ஜீவ நாடியில் வரும் வாக்குகளைப் பாடல் வடிவில் உரைத்து அதற்குரிய பொருளையும் உரைத்து வந்தார்கள். திடீரென ஜீவ நாடியில் பகவான் கிருஷ்ணரின் உருவம் தோன்றியது. அதைக் கண்ட சுவாமிகள் வந்தவரிடம் நீங்கள் கிருஷ்ணரை பூஜித்து வந்தீர்களா என்று கேட்டார் அதற்கு அவர் நான் கனடாவில் இருக்கும்போது அங்கு ஒரு கிருஷ்ணார் கோவில் உண்டு அடிக்கடி செல்வேன். அங்கு ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபம் செய்வேன். இப்போது இந்தியா வந்து சில ஆண்டுகளாக அந்த மந்திரத்தை ஜபம் செய்வதில்லை என்றார். இந்த ஜீவ நாடியில் கிருஷ்ணபரமாத்மாவின் உருவம் வருவதால் நீங்கள் அந்த மஹாமந்திரத்தைத் தொடர்ந்து ஜபிக்க வேண்டும் என்று சுவாமிகள் உரைத்தவுடனே வந்தவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் தங்களிடம் வந்து ஜீவ நாடி கேட்க வேண்டும் என நீண்ட காலமாக முயற்சி செய்து இப்போதுதான் வந்து பார்க்க முடிந்தது. முன் பின் என்னை உங்களுக்குத் தெரியாது. ஆனால் ஜீவ நாடியில் கிருஷ்ணர் உருவம் வந்தவுடன் நீங்கள் கேட்ட கேள்விகள் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என்று கூறினார். அந்த மஹா மந்திரம் பற்றி மேலும் உரைக்கப்பட்டது.  மந்திரம் என்றால் மனதை விடுவிப்பது என்று பொருள். அதாவது 'மன்' என்றால் மனம். 'திரா' என்றால் "விடுவிப்பது". மனதை அதன் துன்பங்களில் இருந்து விடுவிப்பது மந்திரம் ஆகும். ஒரு மந்திரம், ஒரு குறிப்பிட்ட துன்பத்தை மட்டும் நீக்க உதவலாம். ஆனால் மஹா மந்திரம் எனப்படுவது எல்லாவிதமான துன்பங்களிருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும்.
மனச்சஞ்சலங்கள், மனச்சோர்வு, மனஅழுத்தம், மனக்குழப்பம், பாவ விளைவுகள், தீய சிந்தனைகள், சண்டை சச்சரவுகள், காம, க்ரோத, மோஹ, லோப, மத, மாச்சர்யம் மற்றும் அனைத்து விதமான மனதின் துன்பங்களில் இருந்தும் மனதை விடுவிக்கும் சக்தி "ஹரே கிருஷ்ண" மந்திரத்திற்கு இருப்பதால் இம்மந்திரத்தை "மஹா மந்திரம்" என்று வேத சாஸ்த்திரங்கள் அழைக்கின்றன. ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தைச் சொல்லக் கட்டுபாடுகள் எதுவும் இல்லை. உச்சரிக்கும் முறையானது, நம் காதுகளுக்கு கேட்கும் வகையில் தினமும் குறைந்த பட்சம் 108 முறை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்து வந்தால் மன அமைதியையும் சந்தோஷத்தையும் பெறலாம்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
இந்த மஹா மந்திரம் கலியுகத்தின் எல்லா தோஷங்களியும் நீக்க வல்லது என ப்ருஹன் நாரதீய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம்
கலௌ நாஷ்தி ஏவ நாஷ்தி நாஷ்தி ஏவ கதிர் அன்யதா:
பொருள்:
துன்பங்கள் நிறைந்த இக்கலியுகத்தில் எம்மை, ஹரி நாம சங்கீர்த்தனத்தைத் தவிர வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது, வேறு எந்த வழிகளாலும் மீட்க முடியாது.
இப்படி மகிமை வாய்ந்த மஹா மந்திரத்தை நீங்கள் ஜபிக்காமல் விட்டதால்தான் இவ்வளவு கஷ்டம் வந்துள்ளது எனவே இனி தவறாமல் ஜபம் செய்யுங்கள் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் உரைத்தார்கள். இன்னும் ஏராளமான செய்திகள் அவருக்கு ஜீவ நாடியில் வந்தது. அது அவரது தனிப்பட்ட வாழ்வு குறித்தது என்பதால் நமக்கு இங்கு தேவையில்லை. எல்லோரும் இந்த மஹா மந்திரத்தின் ஆற்றலையும் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியின் வலிமையை உணரவே இந்த சம்பவம் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.
                ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக