ஒரு
அன்பர் வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். அவருக்கு ஜீவ நாடியை வாசிக்க சுவடி பிரிக்கப்பட்டது.
முருகப்பெருமான் பின்வருமாறு உரைத்தார்.
ஜீவ நாடி: விபத்தொன்று
நேர்ந்த நேரம் மங்கையவள் மயங்கி மருத்துவமனையேகும் நேரம்…
அன்பர்: ஆம்
சுவாமி அது குறித்துதான் தங்களைப்பார்க்க வந்துள்ளோம். எங்கள் மிக நெருங்கிய உறவினப்
பெண் ரோட்டில் நடந்து செல்லும் போது ஒரு வண்டியில் மோதி மயங்கிய நிலையில் மருத்துவமனையில்
சேர்த்துள்ளோம் சுவாமி….முருகப்பெருமான்தான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் சுவாமி…
ஜீவ நாடி: ஊர் என்று
முடிகின்ற ஊர் தன்னில் வைத்தியம் கொள்
அன்பர்: கோயம்புத்தூரில்தான்
வைத்தியம் பார்க்க மருத்துவமனையில் வைத்திருக்கின்றோம் சுவாமி. அது ஊர் என்று முடிகின்ற
ஊர்தான்.
ஜீவ நாடி: வைத்தியனை
மாற்ற வேண்டாம் மகிமை வரும் அங்கே அஞ்சேல்
அன்பர்: மருத்துவமனையை
மாற்றலாம் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் முருகப்பெருமான் வாக்கு படி நடக்கலாம்
என்றுதான் இங்கு வந்தோம். சரி…மாற்றம் செய்ய மாட்டோம். முருகன் விட்ட வழி…
ஜீவ நாடி: மூன்று
ஆலயங்கள் சென்று வழிபட்டு கனி வைத்து பூஜித்து அந்தக் கனியை கொண்டு சென்று மங்கை இருக்கும்
இடத்தில் வை.
அன்பர்: அப்படியே
செய்கின்றோம் சுவாமி
இப்படி ஜீவ நாடியில் குறிப்பிட்டபடி அந்த அன்பர்
ஜீவ நாடியில் சொல்லிய அந்த மூன்று ஆலயங்கள் சென்று ஜீவ நாடியில் சொன்ன வழிபாடுகளைச்
செய்துவிட்டு ஒரு எலுமிச்சம் பழம் வைத்துப் பூசித்து பின் அந்த பெண் இருக்கும் மருத்துவ
மனையில் இருக்கும் அந்தப் பெண்ணின் கணவனிடம் வைத்துக் கொள்ளும்படி கொடுத்துவிட்டார்கள்.
பின்பு ஒருவாரம் கழித்து மீண்டும் ஜீவ நாடி கேட்க நமது ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்திற்கு
வந்தார்கள்.
ஜீவ நாடி: குணமுண்டு
குறையில்லை முன்னேற்றம் உண்டு பயமில்லை
அன்பர்: ஆம்
சுவாமி முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள்ள் சொல்கின்றார்கள். இருந்தாலும் இன்னும்
கண் திற்ககவிலை சுவாமி என்று அழுதார்கள்.
ஜீவ நாடி: ஆயுள்
உண்டு அவணியில் வாழ வழியுண்டு மூச்சிலே குறையுண்டு ஆதலால் மூளைக்கு சுகக்காற்று தடை
உண்டு மார்பெழும்பு ஒன்று உடைந்து காற்றுப்பையைத் தடை செய்யும் தருணமிது கவனியும்…கவனியும்…
முன்பு போல் இன்னும் மூன்று ஆலயங்களில் குங்கும பூஜை செய்து வா குணமாகும்.
இப்படி சொன்ன
பின்பு மருத்துவரிடம் இந்த உண்மைகளைச் சொல்ல நல்ல வேளையாய் மருத்துவரும் பக்தராக இருந்ததால்
முருகன் வாக்கை செவிமடுத்து நுரைஈரலைச் சோதிக்க முருகன் ஜீவ நாடியில் சொன்னது போல்
100% இருந்தது கண்டு பிரமித்து பின்பு வைத்தியம் செய்ய சில நாட்களிலேயே மூச்சு சீராகி
நினைவு திரும்பி கண்விழித்து பேசி பின் உணவு உண்டு இப்போது பூரண குணத்துடன் வீடு திரும்பி
விட்டார். இது தான் ஜீவ நாடியின் மகிமை. நவீன எந்திரங்களில் கண்டுபிடிக்காத பல இரகசியங்கள்
ஜீவ நாடியில் வெளிப்பட்டுவிடுவது நம்ப முடியாத பேரதிசயம்தான். இதை தாங்களே அனுபவித்துப்
பார்க்கும் போது மிகுந்த பிரமிப்பாக இருக்கும். ஜீவ நாடி மகிமை தெரியாதவர்களுக்கு நாடி
ஜோதிடம் என்று நினைத்து சாதரணமாக எடுத்துக் கொள்கின்றார்கள். இது நாடி ஜோதிடம் இல்லை
இறைவன் மற்றும் சித்தர்களின் ஜீவ வாக்கே ஜீவ நாடி என்பது அந்த சித்தர்கள் ஆசியிருந்தால்
மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்றது.
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!