வியாழன், 6 பிப்ரவரி, 2014

அஷ்டகர்ம மூலிகைகள் அறுபத்தி நான்கு

 பண்டைய காலத்தில் வாழ்ந்து பல அற்புதங்களை செய்த நம்தமிழக சித்தர்கள் மூலிகைகளை கொண்டே மந்திர உருவேற்றி பலகாரியங்களில் வெற்றியடைந்தனர்அதன்படி அவர்கள் பயன்படுத்தியமூலிகைகள் அஷ்டகர்மங்கள் ( எட்டு சித்திகள் )  செய்ய ஒரு சித்திக்கு 8மூலிகை என அஷ்ட சித்திக்கு 64 மூலிகைகள் ஆகும்அஷ்டகர்ம்ம்என்பது 1. ஆகர்ஷனம், 2. உச்சாடனம், 3. தம்பனம், 4. பேதனம், 5.மாரணம், 6. மோகனம், 7. வசியம, 8. வித்வேஷனம் ஆகும்இந்தஅஷ்ட கர்ம செயல்களை பற்றி விரிவாக காணலாம்.
          1. 
ஆகர்ஷனம் : நமக்கு தேவையானதை இருக்கும்இடத்திலிருந்து நாம் இருக்கும் இடத்திற்கே வரவழைக்கும்வித்தையாகும்இதற்கு உதவும் மூலிகைகள் 1. வேளை, 2.உள்ளொட்டி, 3. புறவொட்டி, 4.சிறு முன்னை, 5. குப்பைமேனி, 6.அழுகண்ணி, 7. சிறியாநங்கை, 8. எருக்கு என எட்டு மூலிகைகளாகும்.இதில்
        
மிருகங்களை அழைப்பதற்கு - வேளைகுப்பைமேனி.
        
பெண்களை அழப்பதற்கு -  உள்ளொட்டிஅழுகண்ணி.
        
அரசர்பிரபுக்ளை அழைப்பதற்கு - சிறுமுன்னை.
        
துர்தேவதைகளை அழைப்பதற்கு - புறவொட்டி.
        
தேவதைகளை அழைப்பதற்கு - எருக்கு.
         
அனைத்து அழைப்பிற்கும் - சிறியாநங்கை.

   
      2. உச்சாடனம் : பேய்பிசாசுகெட்ட ஆவிகள்நோய்கள்தீமைகளை விரட்டியடித்தல்இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பேய்மிரட்டி,  2. மான் செவிகள்ளி, 3. தேள்கொடுக்கி, 4. கொட்டைகரந்தை, 5.வெள்ளை கண்டங்கத்திரி, 6. மருதோன்றி, 7. பிரமதண்டு, 8. புல்லுருவிஆகும்இதில்
           
மிருகங்களை விரட்ட - பேய்மிரட்டி.
           
எதிரிகளை விரட்ட - மான்செவிகள்ளி.
           
உடலில் ஏறிய விஷங்களை விரட்ட - தேள்கொடுக்கி.
           
நீர்வாழ் உயிரனங்களை விரட்ட - கொட்டைகரந்தை.
           
கால்நடைகளை விரட்ட - வெள்ளை கண்டங்கத்தரி.
   
         பூத பைசாசங்களை விரட்ட - மருதோன்றிபுல்லுருவி
            
பிறர் நமக்கு செய்யும் தீமகளை விரட்ட - பிரமதண்டு.

           3. 
பேதனம் : ஒன்றை மற்றொன்றாக மாற்றுதல்அதாவது  ஒருவிஷயத்தை நினைத்து நம்மிடம் வருபவரை அந்த நினைப்பைவேறுபட்டு போகும்படி செய்தல்இதற்கு பயன்படும் மூலிகைகள் 1.வட்டதுத்தி, 2. செம்பசளை, 3. மாவிலங்கு, 4. பாதிரி, 5. கோழியாவரை, 6. சீந்தில்கொடி, 7. புடலங்கொடி, 8. ஆகாயதாமரை ஆகும்.
               
நெருப்பின் உக்கிரத்தை பேதிக்க - வட்டதுத்தி,
                
மனிதனின் எண்ணத்தை பேதிக்க - செம்பசளை,
                
பூதபிசாசுகளை பேதிக்க - மாவிலங்குபாதிரி,
                
துர்தேவதைகளை பேதிக்க - கோழியாவரை,
                
எதிரிகளை பேதிக்க - சீந்தில்கொடி,
                
பெண்களை பேதிக்க - புடலங்கொடி,
                
வியாதிகளை பேதிக்க - ஆகாயதாமரை.
      
              4. 
மாரணம்  : கொல்வது அல்லது மாற்றுவதுஉலோகங்களைஅதன் தன்மையில் இருந்து மாற்றுவதுஎதிரிகளுக்கு நோயைஉண்டாக்கி கொல்வதுஇதற்கு  பயன்படும்  மூலிகைகள் 1. நச்சுப்புல், 2. நிர்விஷம், 3. சித்திரமூலம், 4. அம்மன் பச்சரிசி, 5. கார்த்திகைகிழங்கு, 6. மருதோன்றி, 7. கருஞ்சூரி, 8. நாவி  ஆகும்.
                  
மனிதர்களை மாரணம் செய்ய - நச்சுப்புல்நிர்விஷம்,
                  
வியாதிகளை மாரணம் செய்ய  - சித்திரமூலம்கருஞ்சூரை,
                  
கண்ணாடிகளை மாற்ற - அம்மன் பச்சரிசி,
                
   மிருகங்களை  மாரணம் செய்ய - மருதோன்றிகார்திகைகிழங்கு.

              5. 
மோகனம் : பிறரை நம்மிடம் மயங்கி இருக்க செய்வது.இதற்கு பயன்படும் மூலிகைகள் 1. பொன்னூமத்தை, 2. கஞ்சா வேர், 3.வெண்ணூமத்தை, 4. கோரைக்கிழங்கு, 5. மருளூமத்தை, 6. ஆலமரவிழுது, 7. நன்னாரி, 8. கிராம்பு ஆகும்.
                     
பெண்களை மோகிக்க  - பொன்னூமத்தை,
                     
பொதுமக்களை மோகிக்க - கஞ்சா வேர்,
                     
உலகத்தை மோகிக்க - வெண்ணூமத்தை,
                     
விலங்குகளை மோகிக்க - கோரைக்கிழங்கு 
                      
தேவதைகளை மோகிக்க - மருளூமத்தை,
                      
அரசர்களை மோகிக்க -  ஆலம்விழுது,
                       
மனிதர்களை மோகிக்க  -  கிராம்பு,
                       
எல்லாவற்றையும் மோகிக்க - நன்னாரி.

                    6. 
வசியம் : எல்லாவற்றையும் நம்மிடம் விருப்பமாகவும் இஷ்டமாயும் இருக்க வைத்தல்இதற்கு பயன்படு்ம் மூலிகைகள் 1.சீதேவிச் செங்கழுநீர், 2.  நிலவூமத்தை, 3. வெள்ளை விஷ்ணுகிரந்தி, 4.கருஞ்செம்பை, 5. வெள்ளை குன்றி மணி, 6. பொன்ணாங்கன்னி, 7.செந்நாயுருவி, 8. வெள்ளெருக்கு ஆகும்.
                   
    இராஜ வசியத்திற்கு - சீதேவி செங்கழுநீர்,
                       
பெண் வசியத்திற்கு - நிலவூமத்தை,
                       
லோக வசியத்திற்கு - வெள்ளெருக்கு,
                        
ஜன வசியத்திற்கு - கருஞ்செம்பைவிஷ்ணுகிராந்தி,
                        
விலங்கு வசியத்திற்கு - வெள்ளை குன்றி மணி,
                         
தேவ வசியத்திற்கு - பொனணாங்கன்னி,
                          
சாபம்வழக்குகள் வசியத்திற்கு - செந்நாயுருவி.

                       7. 
வித்துவேஷனம் : பகையை உண்டாக்குதல்இதற்குபயன்படும் மூலிகைகள்1. கருங்காக்கனம், 2. வெள்ளை காக்கனம், 3.திருகு கள்ளி, 4. ஆடுதின்னாபாளை, 5. பூனைக்காலி, 6. கீழாநெல்லி, 7.ஏறண்டம், 8. சிற்றாமணக்கு ஆகும்.
                        
அரசர்களுக்குள் பகை உண்டாக்க - கருங்காக்கணம்,
                        
தேவர்களுக்கு - வெள்ளைக்காக்கணம்திருகுகள்ளி,
                        
பூதபைசாசங்களுக்கு - ஆடுதின்னாபாளை,
                        
பெண்களுக்கு நோய் உண்டாக்க  -  பூனைக்காலி,
                         
எதிரிகளால் உண்டாகும்  ஆபத்தை  தடுக்க - கீழாநெல்லி,
                         
உணவை உண்ணாமல் செய்ய - சிற்றாமணக்கு.

                       8.  
தம்பனம் : தடுத்து நிறுத்துத்தல்,  விலங்குகளின்வாயை கட்டுதல்இதற்க்கு  பயன்படும் மூலிகைகள் 1.  கட்டுக்கொடி, 2.  பால்புரண்டி, 3.  பரட்டை, 4. நீர்முள்ளி, 5. நத்தைச்சூரி, 6.  சத்திசாரணை, 7. பூமிச்சர்கரை,  8. குதிரைவாலி  ஆகும்.
                        
விந்துவை  கட்ட - கட்டுக்கொடிபால்புரண்டிநீர்முள்ளி,
                        
தண்ணீரைக்கட்டி அதன் மேல் அமர  - கட்டுக்கொடி,
                        
பெண்களின் முலைபாலை கட்ட - பால்புரண்டி,
                  
      வயிற்றுப் போக்கை நிறுத்த  - பரட்டை,
                        
கற்களை கறைக்க - நத்தைச்சூரி,
                        
செயல்களை செயல்படாமல் கட்ட - சத்திசாரணை,
                         
திரவத்தை கட்டி திடமாக்க  - பூமிச்சர்கரை கிழங்கு,
                       
  கருப்பையில் உள்ள கருவை கட்ட - குதிரைவாலி. 
       
 
                   
மேற்படி மூலிகைகளை உரிய நாளில் காப்பு கட்டி,சாபநிவர்த்தி மந்திரம் சொல்லி பிடுங்கி வந்து உரிய மந்திர உருவேற்றிமேற்பட்ட அஷ்டகர்ம செயல்களை  செய்ய அனைத்தும் ஜெயமாகும். 

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

சகலகலாவல்லிமாலை

2. சகலகலாவல்லிமாலை
(ஸரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
3

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.
6

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தௌிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.
7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.
9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
10

கந்தர் கலிவெண்பா

1. திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

(ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளியது)


(குறிப்பு: எங்கெங்கு பதம் பிறிப்பதனால் பொருள் மாறுபடவில்லையோ அங்கெல்லாம் பதம் பிறிக்கப்பட்டுள்ளது.)
பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமும் நாதாந்த(1) முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத(2) போதமாய் - ஆதிநடு
.1
(1) நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
(2) போதமுங் காணாத

அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
.2

அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத .
.3

பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியல்
இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும்
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
.4

கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம்
போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து .
5

உருவும் அருவும் உருஅருவும் ஆகிப்
பருவ வடிவம் பலவாய் - இருண்மலத்துள்
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல
பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத்
.6

தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான்
பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல்
ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற்
கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும்
7

ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனிஎன்பான்
ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய
கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற்
சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய ..
.8

சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால்
நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும்
தொன்னுால் பரசமயம் தோறும் அதுவதுவே
நன்னுால் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் .
9

விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைத்
சரியைகிரி யாபோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சர்ரூபமும் புசிப்பித்து
ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் .
.10

சத்திநி பாதம் தருதற்கு இருவினையும்
ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த
மலபரி பாகம் வருமளவில் பன்னாள்
அலமருதல் கண்ணுற்று அருளி - உலவா
.11

தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா
நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக்
கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக்
குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் .
.12

ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம்
ஏழும் அத்துவாக்கள் இருமுன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில்
காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும் ..
.13

அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக்
கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது
தேக்குபர மானந்த தெள்ளமுதம் ஆகிஎங்கும்
நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் ..
.14

வரவு நினைப்பு மறப்பும் பகலும்
இரவுங் கடந்துஉலவா இன்பம் -மருவுவித்துக்
கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும்
வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் - மின்னிடத்துப் .
.15

பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில்
வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த
கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து (1)உள்நின்று
ஒருமலர்த்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு ..
.16
(1) கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள்செய் துண்ணின்

முன்றவத்தை யும்கழற்றி முத்தருட னேயிருத்தி
ஆன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும்
யானெனதென்று அற்ற இடமே திருவடியா
மோனபரா னந்த முடியாக - ஞானம் .
.17

திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா
அருளதுவே செங்கை அலரா - இருநிலமே
சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும்
பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் .
.18

தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத்
துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய
புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட .
.19

பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு
அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி
பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக்
குலவு மகரக் குழையும் - நிலவுமிழும் ..
.20

புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும்
சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் - வின்மலிதோள்
வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து
தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் .
.21

ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப
வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - சூழ்வோர்
வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப்
பாச இருள்துரந்து (1) பல்கதிரில் சோதிவிடும்
.22
(1) பாச விருடுரந்து ப்ல்கதிரிற் சோதிவிடும்

வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன்
போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன்
.23

வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும்
தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த
வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த
பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம்
.24

தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர்
வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஓவாது
மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல்
சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில்
.25

வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும்
உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த
சிறுதொடிசேர் கையும்மணி சேர் ந்ததடங் கையும்
கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர்
.26

அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும்
கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத
கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்
.27

புரிநுாலும் கண்டிகையும் பூம்பட் டுடையும்
அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும்
நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும்
பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி .
.28

இளம்பருதி நுாறா யிரங்கொடி போல
வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தனில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஓதியஐந்து
.29

ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும்
நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய
மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத்
தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
30

ஒத்த புவனத் துருவே உரோமமாத்
தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின்
நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி .
31

அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ
32

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து
அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள்
புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப்
33

பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம்
தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு
அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்
34

ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தசிவ .
35

பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள்
ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாத மணிமுரசும் -சந்ததமும்
36

நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம்
ஆக்கி அசைந்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து
வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே
பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ்
37

பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப்
பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள்
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து
38

திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும்
ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம்
எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும்
பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் - அங்கண் .
39

எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான்
கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் - அடுத்ததொரு
பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள்
சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று .
40

அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில்
சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் - முன்னர்
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் - குறுமுறுவல்
41

கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும்
அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் - தன்னிரண்டு
கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து
மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய .
42

முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால்
அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து
உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி .
43

மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள்
விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
44

அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும்
செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து - எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும்
நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
45

அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று
உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால்
சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும்
46

பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப
முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல்
தாரகனும் மாயத் தடங்கிரியும் துாளாக
வீரவடி வேல் விடுத்தோனே - சீரலைவாய்த்
47

தெள்ளு திரை கொழிக்கும் செந்துாரில் போய்க்கருணை
வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ்
மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் - சயேந்திரனாம்
48

சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய
வீரனைத் துாதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய
தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு .
49

பகைவன் முதலாய பாலருடன் சிங்க
முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும்
சூருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்
50

அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் - அங்கவற்றுள்
சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு .
51

சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மோலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர்
சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே - மறைமுடிவாம்
52

சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும்
தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால்
வாமமட மானின் வயிற்றுதித்தப் - பூமருவு .
53

கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல்
ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத்
தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த
வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம் உவந்து .
54

ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன்
கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்
கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச்
செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் .
55

பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும்
பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி
பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல்
பூதமுந்தீீ நீரும் பொருபடையும் - தீது அகலா .
56

வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும்
எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில்
பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும்
அச்சம் அகற்றும் மயில்வேலும் - கச்சைத்
57

திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு
அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும்
எந்தத் திசையும் எதிர்தோன்ற - வந்திடுக்கண் .
58

எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம்
ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப்
பேசும் இயல் பல்காப் பியத் தொகையும் - ஓசை
59

எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து
பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன்
இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி
மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
60

ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித்
தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.
61

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று