சனி, 16 ஆகஸ்ட், 2014

திருவண்ணாமலை தீர்த்தங்கள்!


தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.

இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:

திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.

திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.

திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.

திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.

திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.

திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.

திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.

திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.

திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.

திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.

விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.

திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.

தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.

எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்

பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்



பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம் மணிகளும் வேண்டாம் மந்திரமும் வேண்டாம் நல்ல மனது இருந்தால் மட்டும் போதும் அதற்க்கு ஒரு சிறு விளக்கம் உண்டு


ரமணமகரிஷி திருவண்ணாமலை ஆசிரமத்தில் இருந்த போது, அவரைப் பார்க்க பல வேதவிற்பன்னர்கள் வருவார்கள். முக்தியடைவது பற்றி பல விஷயங்களை ரமணரும் அவர்களுடன் விவாதிப்பார்கள் அவருக்கு சேவை செய்யும் பக்தர் ஒருவர், இதையெல்லாம் பார்த்துகொண்டு இருப்பார் இந்த வேதவிற்பன்னர்களைப் போல பேச முடியவில்லையே, வேதத்தைப் படிக்காததால் முக்தி கிடைக்கும் வாய்ப்பு போய்விட்டதே என வருந்துவார். அவரது ஏக்கத்தைப் புரிந்துகொண்டார் ரமணர்.ஒருநாள், தனக்கு அவர் பணிவிடை செய்து கொண் டிருந்த போது, இன்று சவரம் செய்து கொண் டாயா?எனக் கேட்டார்.அவர் ஏதும் புரியாமல், ஆமாம் சுவாமி என்றார்.
கண்ணாடியைப் பார்த்து தானே சவரம் செய்தாய்?'' என்று திரும்பவும் கேட்டார் ரமணர்.பக்தர் கலவரத்துடன் ஏதும் புரியாமல்,ஆமாம் என்று பணிவுடன் தலையாட்டினார்.கண்ணாடியைப் பார்த்து நீ சவரம் செய்தாய். அதாவது, நீ சவரம் செய்யும்வரை அது உனக்கு தேவைப்படுகிறது. உன் முகத்தை அழகாக்கும் வரை அது <உதவுகிறது. ஆனால், அந்தக்கண்ணாடியில் உன் முகத்தைப் பார்க்கலாமே தவிர, கண்ணாடியே உனக்கு சவரம் செய்து விடுமா?' என்றார்

ரமணரிடம்,முடியாது சுவாமி,என்றார் பக்தர்.அதேபோல் தான் வேதங்களும், உபநிஷதங்களும், சாஸ்திரங்களும். நீ சிரமப்படாமல், காயப்படாமல், முக்தியடைய அவை உதவும். அவ்வளவு தான். அவற்றால் உனக்கு முக்தியை வாங்கித்தர முடியாது. தீவிர பக்தியும், இறைவழிபாடும் மட்டுமே உனக்கு முக்தியைத் தரும். உன்னை இறைவனடியில் சேர்க்கும். அதை மட்டும் நீ செய்தால் போதும் என்றார்.ஆகையால் நமக்கு தெரிந்த அளவில் உண்மையான அன்போடு இறைவனை வழிபடுதலும் இறைவனின் அங்கமான ஒவ்வரு உயிருக்கும் தொண்டு செய்வதே உண்மையான பக்தி உண்மையான இறைவழிபாடு

முருக பெருமானின் பெரு விழாக்கள்!


                                          முருக பெருமானின் பெரு விழாக்கள்!                              



* தைப் பூசம் = அன்னையிடம் வேல் பெற்ற நாள்
* பங்குனி உத்திரம் = திருமண நாள்
* வைகாசி விசாகம் = பிறந்த நாள்
* ஆடிக் கிருத்திகை = அறுவரும் ஒன்றான நாள்
* ஐப்பசியில் சஷ்டி = சூர சங்காரம்
* கார்த்திகையில் கார்த்திகை = தீபம் ஒளியாய் காணும் நாள்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள் !


விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க் உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!




ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.
About Andrew B. Newberg
ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.
பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.
அந்த ஆறு முக்கிய பகுதிகள் :
1) முன் மடல் (frontal lobe)
2) லிம்பிக் அமைப்பு (limbic system)
3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate)
4) அமிக்தலா (amygdale)
5) தாலமஸ்(thalamus)
6) சுவர் மடல்(parietal lobe)
தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.
இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்
ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.
அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்
பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.
1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)
2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)
3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)
4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)
5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது.
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)
கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.
இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!
நியூரோபிளாஸ்டிசிடி
நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.
ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!
ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.
ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்
ஆகவே
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள்.
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும்,
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.
தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!
இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம் !.

காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...!

இயற்கை அழிந்து வருகின்ற சூழ்நிலையில் கீழ்க்கண்ட மூலிகை செடிகளை  வளர்த்து நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துகொள்ள முயற்சிப்போம்.


வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும்.
மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே!

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி – 11

சென்ற  பதிவின் தொடர்ச்சி


இவருடைய ஜீவகாருண்யம் சரியானதுதான். அதற்கு புண்ணியம் நிச்சயம்

உண்டு. ஆனால் முறையாகப் பிரதிஷ்டை செய்து காலம் காலமாக

பூஜை செய்து வந்த காவல் தெய்வமான கருப்பசாமியை உடைப்பது

நியாயமா? வந்தது இந்த வடிவில் சோதனை. சென்ற ஜென்ம கர்ம

வினைகளே இன்னும் தீராத நிலையில் மீண்டும் இந்த ஜென்மத்தில்

கர்மவினையா? வாசகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். முடிந்த அளவு

பாவ காரியங்களைக் குறைத்து புண்ணிய காரியங்களைச் செய்ய பழகிக்

கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், தேவதைகள், தெய்வங்களோடு

விளையாடக் கூடாது.





நான் கோவையில் தங்கியிருந்த சமயம் ஆவிகளோடு பேசுவதாக ஒருவர்

அறிமுகமானார். அடிக்கடி எனது அறைக்கு வருவார். பூஜையில் கலந்து

கொள்வார். திடீரென இந்த ஆவியுடன் பேசுகிறேன். அந்த ஆவியுடன்

பேசுகிறேன் என்று சொல்வார். சொல்வது நூற்றுக்கு நூறு தவறாக

இருக்கும். ஏன் இவர் இப்படி பொய் சொல்கிறார் என அடிக்கடி உறுத்தியது.

இவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது. அதை அடைக்க காப்பீடு

திட்டம் மூலம் முயற்சி செய்தார். தோல்வியில் முடிந்தது. சிகிச்சை

முடிவு மரணம். அன்றே முருகன் உரைத்தார். இவருக்கு அற்ப ஆயுள்

என்று ஆனாலும் பல தீய கர்மாவையும் சம்பாதித்ததால் விளைவு

விபரீதம் ஆனது. பொய்சாமி சொல்வது எனச் சொல்வார்கள். அருள்

வராமலேயே அருள் வந்தது போல் ஆடுவது வாய்க்கு வந்ததை வாக்கு

எனச் சொல்வது போன்றவையும் வம்பை வெத்தலை பாக்கு வைத்து

அழைப்பதுதான். சூட்சும தேவதைகள் சபித்துவிடும். அடுத்தவர்

கர்மாவோடு விளையாடவே கூடாது. அதனால்தான் ஆன்மிகத்தை

கண்டபடி கையாளக்கூடாது என எச்சரித்தார்கள் முன்னோர்கள்.



இன்னுமொரு நபர் எட்சனி வசியம் செய்கிறேன் என களமிறங்கி தனது

தினசரி தூக்கத்தையே இழந்து தவித்து வருகிறார். இப்படி எமது வயது

சிறியதாக இருந்தாலும் ஆயிரமாயிரம் அனுபவங்களை ஞானஸ்கந்தமூர்த்தி

திருவிளையாடலாகச் செய்து வருகிறார்.



இப்படி கருப்பசாமி கோவிலை இடித்தவர் மீது கருணை, ஜீவகாருண்யம்

என்ற நியாயங்கள் இருந்ததால்தான் உனக்கு சொல்கின்ற பரிகாரம் பலிக்கும்

என முருகன் சொன்னார். வேறு ஏதேனும் உள் நோக்கம் இருந்திருப்பின்

விளைவு விபரீதம்தான். மேலும் நமது ஆலயத்திலேயே முருக தீட்சை

பெற்று அடியாராகி மந்திர ஜெபம் செய்து வருவதால் கர்மவினை குறைய

வழி ஏற்பட்டது எனலாம்.



திருவண்ணாமலையை ஒரு முறை கிரிவலம் வரவே பலர்

சிரமப்படுகிறார்கள். இவர் மூன்று முறை கிரிவலம் வருவார். பல

ஆஸ்ரமங்களில் அமர்ந்து தியானம் செய்வார். இதெல்லாம் இவரை

காப்பாற்றும் செயல்கள். ஆனால் இத்துணை பரிகாரங்கள், பூஜைகள்,

வழிபாடுகள், செய்தும் எதுவுமே பலன் தராமல் போனதற்குக் காரணம்

தேவதா சாபம். தேவதையின் சாபத்தை நீக்க அந்த தேவதையையே

உபாசித்து ஆலயம் கட்டி அர்ச்சித்து ஆராதிக்க வேண்டும். அதற்குரிய

ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சிறிது சிறிதாக, மாற்றம் ஏற்பட்டு

வருகிறது.



ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் வாக்கு கேட்க நினைப்பவர்கள்

கவனத்திற்கு ஜீவநாடியில் வந்த சில விதிமுறைகளைச் சொல்கிறேன்.

எவர் ஒருவர் மாதம் தவறாமல் ஞானஸ்கந்தமூர்த்தி ஆலயத்தை 27

முறை சுற்றி அமாவாசையில் வழிபாடு செய்கிறார்களோ அவர்களது

கர்மவினை தீரும் என்பது ஜீவ நாடி அருள்வாக்கு.




கந்தர் சஷ்டிக் கவசம் அரங்கேறிய ஸ்தலம் சென்னிமலை. சிரகிரி

வேலவன் சீக்கிரம் வருக என பாலதேவராய சுவாமிகளால் பாடப்

பெற்ற ஸ்தலம். அந்த சென்னிமலையில் முருகப் பெருமான்

பின்னாக்கு சித்தர் கோவிலுக்கு அருகில் அதிகாலை வேளையில்

மயில் மீது வந்து ஓய்வெடுக்கிறார். அந்த நேரத்தில் எவர் அங்கு

அமர்ந்து தியானம் செய்கிறார்களோ அவர் முருகனது தரிசனத்தையே

பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைகிறார்கள் இதுவும் ஜீவநாடி

அருள்வாக்கு.


ஞானஸ்கந்தர் ஜீவநாடியை பக்தியில்லாதவர்க்குச் சொல்லக்கூடாது.

சோதனை செய்ய வருபவர்களுக்கும் உரைக்கக் கூடாது. இதுவும்

ஜீவ நாடி அருள்வாக்கு. அப்படி சோதனை செய்தால் சோதனைக்கும்,

வேதனைக்கும் ஆளாவார்கள்.


ஜீவநாடியை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு உரைக்கக் கூடாது.

வியாபாரமாகவோ இதையே தொழிலாகவோ செய்யக்கூடாது.

இதுவும் ஜீவநாடி அருள்வாக்கு.


ஜீவநாடியை காணிக்கை வாங்காமல் படிக்கக்கூடாது. அவ்விதம்

படித்தால் தட்சிணா தேவியின் சாபம் ஏற்படும். இதுவும் ஜீவநாடி

அருள்வாக்கு.


நாடி கேட்க வருபவர் வீடு, வாசல் சுத்தம் செய்து தனது

குல தெய்வத்தை பூஜித்து வருதல் அவசியம். அப்போதுதான்

முழுமையான பலன்வரும். இதுவும் ஜீவ நாடி அருள்வாக்கு.

நாடிப் பரிகாரங்களை அவர்களேதான் செய்து கொள்ள வேண்டும்.

பரிகாரம் செய்து தருவது கிடையாது.


நாடியில் வருகின்ற பரிகாரங்களை முழுமையாக்க கடைபிடிக்காமல்

பிரச்சினை தீராது. ஆலய தரிசனம் அவசியம் சொன்னது சொன்னபடி

செய்ய வேண்டும்.

பலன் வருவதும், வராமல் போவதும் அவரவர் செய்த

கர்மவினைகளைப் பொறுத்து பலன் அமையும். ஆளைப் பார்த்தோ,

பணத்தைப் பார்த்தோ பலன் உரைக்க முடியாது. உரைக்கவும்

கூடாது.

நாடியில் வருவது அனைத்தும் முருகப்பெருமான், அகத்தியர், சுகர்

மகரிஷி, ஸ்ரீகாகபுஜண்டர் ஆகியோரின் அருள்வாக்கே. இதில்

இடைச்செருகல் ஏதும் இருக்காது. இருக்கவும் கூடாது. இல்லவே

இல்லை.

நாடி படிக்க எந்த திதியும், நட்சத்திரமும் தடை இல்லை. விசேஷமாக

படிக்க வேண்டுமாயின் குரு, சுக்கிரன், சந்திரன் மற்றும் புதன்

ஹோரையில் படிக்க வேண்டும்.

எந்த ஒரு குறிப்பும் ஜீவநாடிக்குத் தேவையில்லை. ஆனாலும் சில

நேரங்களில் ரேகை, ஜாதகம் தேவைப்படும்.

பரிகாரங்கள் செய்து பலன் ஏற்படவில்லை என்றால் மீண்டும் அதே

பரிகாரங்களைச் செய்ய வேண்டும். பலன் கிடைப்பதும், கிடைக்காமல்

போவதும் அவரவர் கர்மவினைப் பொறுத்தே அமையும்.

நாம் எதிர்பார்த்தது அனைத்தும் வரலாம் வராமலும் போகலாம்.

முருகன் என்ன உரைக்கின்றாரோ அதை மட்டும் கடைபிடித்தால்

போதும்.

கர்மாவைக் குறைக்க ஜீவநாடி வழிகாட்டும். அவதூறு பேசினால்

தீய கர்மா இரண்டு மடங்கு ஏற்படும். பொய் என்பது ஜீவ நாடியில்

இல்லை. அதை புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.

நாடி படிக்க உத்தரவு வராமல் யாராக இருந்தாலும் பலன் வராது.

படிக்கவும் முடியாது.

இதைக் கடைபிடிப்பவர்கள் நாடியால் நலன் அடைவார்கள் என்பது

நிச்சயம்.

                                    ஓம் ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 10




ஜீவநாடியில் வருகின்ற பலன்கள் சில நேரங்களில் என்னையே மெய்

சிலிர்க்க வைத்து விடுகின்றன. அதேபோல் அதில் வருகின்ற பூஜை

முறைகள், மந்திரங்கள், எந்திரங்கள், வழிபாட்டு முறைகள், மூலிகை

மர்மங்கள் மிகவும் அதிசயப்படத்தக்கவையாகவே இருக்கின்றன. சித்தர்கள்

வகையில் இதுவும் ஒரு அதிசய சித்தியே என்பதில் எந்த மாற்றமும்

இல்லை. அது எப்படி எழுதாத ஓலைச் சுவடியில் எழுத்துக்கள் தோன்றும்

என சிலர் சந்தேகப்படுகின்றனர். சந்தேகக் கண் கொண்டு பார்ப்பவர்களுக்கு

ஜீவநாடி புரியாத புதிர். நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு இதுவே

வாழ்க்கை வழிகாட்டி. இன்றைய நாளில் ஏராளமான ஏமாற்று வேலைகள்

வந்துவிட்டதால் மக்கள் உண்மையை நம்புவதற்க்கு கூட தயக்கம்

காட்டுவது போல் ஆகி விட்டது. எத்தனையோ முறை தொடர்பு

கொண்டும் நாடி படிக்க அனுமதி தரமாட்டேன் என்கிறீர்கள் என்பதின்

பலரின் கேள்வி. உண்மைதான் ஆனால் அதே சமயம் ஏராளமான நபர்கள்

என்னிடம் நாடி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ப்ராப்தம் எப்படியோ

அப்படிதான் நடக்கும். பணபலம், ஆராய்ச்சி எதுவுமே எடுபடுவதில்லை.

இறையருளும், நம்பிக்கையும் இருப்பவர்கள் மட்டுமே இந்த ஜீவ நாடியை

நெருங்க முடிகிறது. சூழ்ச்சி செய்வோரும், சோதனை செய்வோரும்

முருகனால் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இன்று

எல்லாமே வியாபாரமாகி விட்டது.



ஒரு பெண்மணி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐயா, நான்

காரைக்காலில் இருந்து பேசுகிறேன். நீங்கள் இந்த பக்கம் வருவீர்களா?

என்கிறார். இன்னும் ஒருவர் கோவைக்கு நீங்கள் வர முடியுமா? என்கிறார்.

கேட்டது இவர்கள் தவறில்லை. ஒரு சிலர் கூப்பிட்டால் போதும், பணம்

கிடைத்தால் போதும் என்று செய்வதாலும், போன் வந்தால் போதும்

என நினைப்பதாலும் இவ்விதம் நேர்கிறது. நான் யாரையும் குறை

கூறவில்லை. ஜீவநாடி இறைவனுக்குச் சமம். நான் எந்த காலத்திலேயும்

எனக்கு மரியாதை கொடுங்கள் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஊர்

ஊராக நாடியை எடுத்துக்கொண்டு வியாபார நோக்கமாகப் படிக்கின்ற நபர்

என நினைத்திருந்தால் தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். இது எமது

தாழ்மையான வேண்டுகோள்.



ஒரு நபர் சுமார் நான்கு ஆண்டுகளாக நாடியில் பலன் வேண்டும்

எனக் கேட்டு வந்தார். உத்தரவு வரவேயில்லை. மிகவும் துனபமும்,

சோதனையும் தொடர்ந்து அவரை வாட்டிக் கொண்டே இருந்தது.

படித்தது கணிப்பொறியியல் இளநிலை. சென்னையில் வேலை தேடி

அலுத்துவிட்டார். தொடர்ந்து தேடியும் வேலை கிடைக்கவில்லை. உரிய

வயது வந்தும் திருமணமும் ஆகவில்லை. தந்தையும் தலைமறைந்து

விட்டார். தாயாருக்கு தீராத வியாதி. குடியிருக்கும் வீடு கூட குடிசைதான்.

ஆனால் கோடிக்கணக்கான அளவில் நிலம் இருக்கிறது. வட்டிப்பணம்

மாதாமாதம் கைச்செலவுக்காக வருகிறது. மற்றபடி எந்த வருமானமும்

இல்லை. நாடோடி போல் ஊர் ஊராகச் சுற்றி வருகிறார். ஒரு சில நாட்கள்

வீட்டில் தங்கினாலும் இவருக்கும் இவரது தாய்க்கும் ஏடாகூடமாகி ஏழாம்

பொருத்தமாகி விடுகிறது. இப்படி இருந்தும் இவர் ஒரு பக்தர், மந்திர

ஜபம் செய்பவர். உயிர்கள் மீது கருணை கொண்டு புலால் மறுத்தல்

கொள்கையில் பிடிப்பு உள்ளவர். நல்லவர். இப்படி பல நல்ல குணம்

இருந்தாலும் இவரது வம்சத்தில் வருகின்ற ஆண்கள் ஒரு வயதை

நெருங்கியதும் ஏதாவது ஒரு வகையில் இறப்பைச் சந்தித்து எமலோகம்

சென்றுவிடுவர். இதுவும் ஒரு சோதனை.



இவ்வளவு பிரச்சினைகளையும் வைத்துக் கொண்டு ஒரே நாளில்

போன் செய்த அடுத்த நாளே வாங்க நாடி படிக்கலாம் என்று கூப்பிடும்

வித்தை எனக்கு சத்தியமாகத் தெரியாது. ஒவ்வொரு அமாவாசையிலும்

ஞானஸ்கந்த மூர்த்தி கோவிலில் நடக்கும் பூஜையில் தவறாது கலந்து

கொள்வார். அருள்வாக்கிலும் பெரிய பலன்கள் வரவில்லை. காரணம் கர்ம

வினை யாருடைய வினையையும் யாரும் வாங்க முடியாது. இறைவன்

ஆசியும், சித்தர்களின் கருணையும் சேர்ந்து வரும் போது நிச்சயம் அது

தீருகின்ற வழி பிறக்கிறது.



நான்கு ஆண்டுகள் என்றால் 48 அமாவாசை பூஜையை இவர் பார்த்து

விட்டதாலும், தீவிர வழிபாட்டை இவர் செய்து வந்ததாலும் முருகப்

பெருமான் மனமிரங்கினார். தைப்பூச திருவழாவில் சுமார் 700 பேர் கலந்து

கொண்ட பூஜையில் இவருக்கு மட்டும் நாடி படிக்கப்பட்டது. கர்ம

காண்டம் உரைக்கப்பட்டது. அதிர்ந்து போனார். ஆச்சரியத்தில் மூழ்கினர்

வந்திருந்த அனைவரும்.

“கெட்டது வாழ்வு

தொட்டிடித்த ஆலயம்

இடிந்தது போலும்

சரியாக ஆலயம்

முறையாக நீ எழுப்பு

பின்னே பிரியம்

நந்தி சமாதி மீது

நலமாக மூன்று இரவு

முழுமையாக தங்கிவா – பின்

பிரச்சினை தீர வழி பிறக்கும்

சரியாக சதுரகிரிபோ

முறையாகும்”

என்று உரைத்தார். முருகப்பெருமான் நீண்ட நேரம் படித்தவற்றின்

சுருக்கத்தையே இங்கு எழுதி இருக்கிறேன். இவர் வாழ்வு கெட்டதற்குக்

காரணம் சிறிய வயதில் ஒரு கருப்பண்ண சுவாமியின் ஆலயத்தை சுவாமி

சிலைகளை இடித்து உடைத்திருக்கிறார்.



அந்த ஆலயம் எப்படி இடிந்ததோ அதுபோல இவர் வீடும் சரிந்து வந்தது.

இப்படி ஒரு வீட்டில் எப்படி குடியிருப்பீர்கள் என கேட்கத் தோன்றும்.

இவர் வீடு சரிந்து கொண்டே இருக்கிறது. இவர் வாழ்வும்தான். மீண்டும்

அந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும். அதன் பின்புதான் இவர் வாழ்வு

வளமாகும் என வந்தது. சில ஆலய தரிசனங்களும் உரைக்கப்பட்டது.



இவர் இந்த ஆலயத்தை இடித்ததன் நோக்கம் வேறு. இவரது சகோதரர்

கருப்பண்ணசாமிக்கு ஓர் ஆட்டை பலியிட ஆயத்தமானார். அந்த

சமயத்தில் அங்கு சென்ற இவர் ஆடு பலியிடக்கூடாது, உயிர்க்கொலை

பாவம், ஜீவகாருண்யமே கடவுளை அடைய வழி என்று வாக்குவாதம்

செய்திருக்கிறார். பாரம்பரியமாக பலியிடும் வழக்கம் உடைய கோவில்

என்பதால் நமது முன்னோர்கள் வகுத்த வழியில் நான் செல்கிறேன்

என்று இவரது சகோதரர் ஆட்டை பலியிட ஆயத்தமானார். இவர் ஆட்டை

வெட்டினால் உன்னை வெட்டுவேன் என்றார். உன்னைப் பிடித்து இந்த

மரத்தில் கட்டிப்போட்டு உன் கண் முன்னே இந்த ஆட்டை கருப்பண்ண

சுவாமிக்குப் பலியிடுவேன் என்றார் இவர் சகோதரர். சுவாமி இருந்தால்

தானே பலியிட முடியும். சுவாமியையே அடித்து நொறுக்கிவிட்டால்

என்ன செய்வாய் என்றார் இவர். அதிர்ந்தார் அண்ணன். துணிந்தார் இவர்.



ஓங்கி அடித்து கருப்பண்ண சுவாமி கோவிலை துவம்சம் செய்துவிட்டார்.

அது சிறிய வயது. ஆனாலும் இவ்வளவு ஞானம் நல்லதுதான். ஞானம்

நலமாக இருந்தாலும் தேவதை சாபம் ஏற்பட்டுவிட்டது. இவரும் மறந்தார்.

படித்தார். சில மாதம் கழித்து இவரது தந்தை தவறினார். பேரிடி இவருக்கு.

கிராமத்தை விட்டு சென்னை சென்றார். அப்புறம் தான் கதை தெரியுமே?


                          ஓம் ஸ்ரீ  ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்  !!!