சனி, 4 அக்டோபர், 2014

சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?





சூரபத்மனை வதைத்த முருகப்பெருமான் அவனுக்கு நற்கதி அளித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஏற்றதாகப் படித்திருக்கிறேன். ஆனால்... சூர சம்ஹாரத்துக்கும் முன்னதாகவே மயிலின் மீது ஏறி முருகன் உலகை வலம் வந்தார் என்கின்றன புராணங்கள். எனில், சூர வதத்துக்கு முன்பே முருகப்பெருமான் மயில் வாகனராகத் திகழ்ந்தாரா?
அத்தனை உயிரினங்களிலும் ஊடுருவியிருக்கும் பரம்பொருள் முருகப்பெருமான். அவர், ஈசனின் நெற்றிக்கண் நெருப்பில் இருந்து தோன்றியவர்; பிறந்தவர் அல்ல. பிறப்பும் இறப்பும் அற்றவர். அவர், எந்த வேளையிலும் மயில் வாகனத்தில் தோன்றலாம்.
ஒருவனது உயிர் பிரிந்ததும் பூத உடல் மறைந்துவிடும். கண்ணுக்குப் புலப்படாத சூட்சும வடிவில் அவனது ஆன்மா இருக்கும். அதுதான் அழியாத பொருள். சூரன் உயிர் பிரிந்தது. பூத உடல் மறைந்தது. சூட்சும வடிவம், வாகனமான மயிலில் ஒன்றியது. ஸாரூப்யம், ஸாமீப்யம், ஸாலோக்யம், ஸாயுஜ்யம் என்கிற நான்கு நிலைகளில்... மயிலோடு சாயுஜ்யத்தை அளித்தார் முருகப்பெருமான். இப்போது, அவன் மயில் வடிவில் நமக்குத் தென்படுகிறான் என்றே அதற்குப் பொருள். உயிரினங்களில் நஞ்சை உமிழ்ந்த தாரகனை, நஞ்சை அழிக்கும் மயிலில் இணைத்தார் முருகப்பெருமான் என்று சொல்வது பொருந்தும்.
சூரபத்மன் இறக்கும் வரை வாகனம் இல்லாமல் இருந்து, பிறகு கிடைத்தது என்று, மனிதப் பிறவியின் சாதாரண சிந்தனையை இந்த இடத்தில் செயல்படுத்தக் கூடாது. 'உலகையே உலுக்கிய தீய சக்தியையும் அருள்பாலித்து ஆட்கொண்டார் முருகப்பெருமான்’ எனும் முருகனின் பெருமையைப் பறைசாற்றும் நோக்கத்தில் இந்த நிகழ்வு விளங்குகிறது.
வேதம் அறிமுகம் செய்த உயிரினம் மயில் (ஸெளரீ பலாக்ர்ச் யோமயூர:). வேதப்பொருள் (முருகன்) அதனுடன் என்றென்றும் ஒன்றியிருப்பதில் ஆச்சரியம் இல்லை. புராணங்களைத் தெரிந்து கொள்வதில் தனி அணுகுமுறை உண்டு. கதையில் ஒளிந்திருக்கும் தத்துவத்துக்கே முதலிடம் உண்டு. அவனது விளையாட்டிலும் செயல்பாட்டிலும் ஒளிந்திருக்கும் குறிக்கோளை உணர வேண்டும். பாமரர்களை ஈர்க்க கதை வடிவம் தேவைப்படுவதால், அதன் போக்கு விறுவிறுப்புடன் அமைந்திருக்கும்.
மோகினி அவதாரத்தில் அமுது பரிமாறும்போது, அரக்கன் ஒருவன் அமுதைப் பருகினான். மோகினி அதைக் கவனித்து, பாம்பாக மாறிய அவனை கரண்டியால் துண்டித்தாள். ஒருவன் இருவரானான். அவ்விருவருமே நவக்கிரகத்தில் இணைந்த ராகு- கேதுக்கள் என்ற தகவல் உண்டு.
வேதம் ராகுவை அறிமுகம் செய்தது. வேத கால வேதம் ஓதுபவர்கள், தினமும் மூன்று வேளை ராகு-கேதுவுக்கு தர்ப்பணம் செய்வார்கள். அப்படியிருக்க, பாற்கடலை கடைவதற்கு முன்பு ராகு-கேது இல்லை என்றாகுமா? வானவியல், ராகு சாரத்தை வரையறுத்துக் கூறும். உலகம் தோன்றிய நாளிலிருந்து கிரகணமும் தொடங்குகிறது.
காயத்ரீயை விஸ்வாமித்திரர் வெளியிட்டதாக புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலிருந்தே காயத்ரீ ஜபம் தொடர்கிறது. கங்கையை வரவழைத்தவன் பகீரதன் என்று புராணம் கூறும். ஆனால், வேத காலத்திலேயே கங்கை பற்றிய தகவல் உண்டு. (கங்காயமுறயோர்மத்யே...)
வேதத்தின் விளக்கவுரையாக புராணம் செயல்படுவதால், ஒரு கதையோடு அதன் தொடர்பை சிறப்பித்துக் காட்டும். யுகத்துக்கு யுகம் புராணக் கதைகளில் மாற்றம் உண்டு. வால்மீகி இயற்றிய ராமாயணம், மற்ற மொழிகளில் பல மாற்றங்களுடன் இருப்பது கண்கூடு. ஆகவே, ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மட்டும் ஆராயாமல், முன்னும் பின்னுமான தகவல்களையும் திரட்டி விரிவாக அதை அணுகும்போது உண்மை விளங்கும்.

திருப்பணி புண்ணியம் !!!



திருப்பணி புண்ணியம்:
ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாமாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏதாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும்.

ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், 'ஐயா... என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டார். 'சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்...' என்றார். 'பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...'என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு வாழைப்பழம்.) அவரும், ஓரணாவுக்கு வாழைப்பழம் வாங்கி வைத்து, பூஜையை முடித்தார்.தேவேந்திரன், ஒரு நாள், தர்மராஜன் சபைக்கு வந்தான். எமதர்மன், தேவேந்திரனை உபசரித்து வரவேற்றான். சபையில், ஒரு ரத்ன சிம்மாசனமும், ஒரு தங்கத்தாலான சிம்மாசனமும், போடப்பட்டிருந்தது. அந்த சமயம், இரண்டு தேவ விமானங்கள் வந்தன. 


எமதர்மன், ஓடிப்போய் விமானத்திலிருந்தவரை வரவேற்று உபசரித்தான். ஒவ்வொரு விமானத்திலிருந்தும், ஒவ்வொரு புண்ணிய புருஷர் இறங்கினர். எமதர்மன், ஒருவரை, ரத்ன சிம்மாசனத்திலும், மற்றொருவரை, தங்க சிம்மாசனத்திலும், உட்கார வைத்தான். 'புண்ணிய புருஷர்களான நீங்கள் இங்கு வந்தது என் பாக்யம்...' என்று சொல்லி, அவர்களை, எமதர்மன் உபசரித்ததை பார்த்த தேவேந்திரன், எமதர்மனைப் பார்த்து, 'இவர்கள் அப்படி என்ன புண்ணியம் செய்தனர்! அதிலும், ஒருவரை ரத்ன சிம்மாசனத்திலும், ஒருவரை தங்க சிம்மாசனத்திலும் உட்கார வைத்திருக்கிறாயே...' என்று கேட்டான்.

அதற்கு எமதர்மன், 'இதோ தங்க சிம்மாசனத்தில் இருப்பவர், தினமும், சிரத்தையுடன் சிவ பூஜை செய்தவர். அந்த புண்ணியத்தினால், இவரை தங்க சிம்மாசனத்தில் உட்கார வைத்திருக்கிறேன். மற்றொருவரோ சிவ பூஜைக்கு உதவி செய்தவர். ஒரு நாள், சிவ பூஜைக்கு வாழைப்பழம் வாங்க வைத்திருந்த காசை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் போது, இந்த ரத்ன சிம்மாசனத்தில் இருப்பவர், அவருக்கு காசு கொடுத்து வாழைப்பழம் வாங்க, உதவி செய்தவர். அதனால், இவருக்கு ரத்ன சிம்மாசனம்...' என்றான் எமதர்மன்.
தேவேந்திரன் ஆச்சரியப்பட்டு, 'சிவபூஜை செய்தவரை விட, சிவ பூஜைக்கு உதவி செய்தவருக்குத்தான் அதிக புண்ணியம் என்பதை தெரிந்து கொண்டேன்...' என்று சொல்லி, எமதர்மனிடம் விடைபெற்று, தேவலோகம் சென்றான்.

இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒரு சிவபூஜை அல்லது கும்பாபிஷேகம் ஆகியவற்றை முன் நின்று நடத்துபவரை விட, அதற்கு உதவி செய்பவர்களுக்கு புண்ணியம் அதிகமாம். அதனால் தான், எங்கேயாவது கும்பாபிஷேகம், திருப்பணி என்றால், 'என் பணமும் அதில் சேரட்டும்...' என்று, பணம் கொடுத்து. புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றனர். தெய்வத் திருப்பணிகளுக்குக் கொடுத்தால், புண்ணியம். கொடுத்து பாருங்கள், அந்த புண்ணியம் எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வீர்கள்!திருப்பணியாளர்கள் இப்பிறவியில் அரசனைப் போல் வாழ்வார்கள் அல்லது அரசனாக வாழ்வார்கள். இழந்த பதவியை மீண்டும் பெற்று, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வாழ்வார்கள். தெய்வலோகத்திலும் பதவி பெற்று தேவர்களின் ஒரு பிரி விற்கு தலைமை வகிக்கும் நிலையையும் பெற்று தேவ அரசனாக வாழ்வதுடன் மோட்சத்தின் நான்காம் படியான (கடைசி படியாக) சாயுச்சியம் என்னும் இறைவனோடு கலக்கும் முழு முக்தியை அடைவதுடன் பிறவியின் பெரும் பயனை அடைவதுடன் பிறவியிலா பெருவாழ்வும் அடைவார்கள். 


இவர்களின் தலைமுறையில் இவருக்கு பின் வரும் 108 தலைமுறையினரும் அரசனுக்கு நிகராக பேரும் புகழும் தனமும் செல்வாக்கும் பெற்று வாழ்வார்கள். இவர்களின் குலம் தெய்வகுலம் என்று உலகத்தாரால் பேசப்படும். திருப்பணிக்கு நன்கொடை அளிப்பவர்கள் பூலோகத்தில் வாழும் போதே தெய்வமாக வழிபடுவார்கள். மனித ரூபத்தில் உள்ளவரை உலகம் தெய்வமாக வழிபடும். தெய்வத்திற்கு கிடைக்கும் அனைத்தும் உயர்வுகளையும் பெறுவார்கள். ஜீவ நிலையிலேயே (ஜீவ சமாதி) இறைவனை அடைவதுடன் தான் விரும்பிய வகையில் தேவர்களுக்கு தலைமை பதவி பெற்று இந்திரனுக்கு சமமா க தேவலோகத்தில் தேவர்களுக்கு தலைமை வகித்து பல கற்பகாலங்கள் தேவலோகத்தில் தவம் பெற்று வாழக்கூடிய பாக்கியத்தை பெறுவர். 


இவர்களது வருங்கால தலைமுறையினர் பல தெய்வீகத் திருப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெற்று குறைவில்லாமல் வாழ்வார்கள். பூலோ கத்தில் வாழும் காலத்தில் அட்டமாசித்துகளிலும் வல்லமை பெற்று சித்தனுக்கு சித்தனாய், குருவிற்கு குருவாய் நீடூடி வாழ்வார்கள். இவர்களுக்கு நிகர் பூலோகத்தில் யாரும் இல்லை எனும் நிலையை அடைவார்கள்.திருப்பணி வாழும் மக்களுக்கு மட்டும் அல்லாமல் இறந்த ஆன்மாக்களுக்கும் உயர்வு அளிக்கும் சர்வ வல்லமை படைத்தாகும். 


உங்கள் தாய், தந்தை, பாட்டன், பாட்டி, அண்ணன், தம்பி, தங்கை போன்ற ரத்த உறவினர் யாராவது அண்மையில் இறந்ததிருக்கலாம். அப்படி இறந்தவர்கள் தேவையான புண்ணிய பலம் இல்லாமல் சூன்ய திதி காலத்தில் உயர்வு நிலை பெற முடியாமல் பேய், பிசாசாக சுற்றிக் கொண்டிருக்கலாம். சிலர் பிதுர்லோகத்தில் அடுத்த பிறவி எடுப்பதற்கான புண்ணிய பலம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். சிலர் நரக லோகத்தில் வதைபட்டுக் கொண்டிருக்கலாம். சிலர் மோட்சம் அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கலாம். மேற்கண்ட குறைபாடுடன் ஏதேனும் கொண்டு உங்கள் ரத்த உறவினர்களின் ஆத்மா தத்தளித்துக் கொண்டிருந்தால் அவர்களின் திருப் பெயரால் சங்கல்பம் செய்து ஓர் கோயில் உபயத்தினை நீங்கள் செய்தால் 48 நாட்களில் (ஒரு மண்டல காலத்தில்) அந்த ஆன்மாக்கள் வேண்டிய வரத்தை ஈசன் அருளால் பெறும் என்பது பேருண்மையாகும்.

அவ்வையாரின் அறிவுரை!!!




அவ்வையாரின் அறிவுரை
பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.
ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானேதனது கடமையைச் செய்ய வேண்டும்.
மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.
பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.
தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.
நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

குருவின் பெருமை !!!



அகல் விளக்கும், கோதுமை குளவியும் மனிதனின் வாழ்க்கையும் : - 


                                                                    மனிதனின் வாழ்க்கையானது அகல் விளக்கை போன்றது.அகல் விளக்கில் நெய் இருக்கும் வரை அது எரிகின்றது அதுபோல மனிதனின் வாழ்க்கை உயிர் இருக்கும் வரைதான். அகல் விளக்கில் எரிகின்ற ஜோதி நிலையானது அதுபோல மனித உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா என்றும் அழிவதில்லை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருளும் அணுக்களின் தொகுப்பே.எனவே இந்த உலகத்தில் உள்ள அணைத்து உயிர்களுக்கும் உணர்வுதான் உயிராகிறது.அந்த உணர்வுதான் கடவுளாகும்.அந்த உணர்வை அடைவதற்குதான் இந்த மனிதப்பிறவியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார்.

நம்மை படைத்த கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இறை தன்மையை உணர சந்தர்ப்பம் கொடுத்து கொண்டே இருக்கிறார். அதற்க்கு உதாரணம் கோதுமை குளவியனது புல்வெளிகளில் இருக்கும் புலுவிடம் சென்று ரீங்காரம் செய்கிறது.அதில் எந்த புழு தன்னை பார்க்கிறதோ 
அதை தன் கூட்டுக்கு கொண்டு வந்து ரீங்காரம் பாடியே அந்த புழுவை குளவியாக மாற்றுகிறது.அதுபோல எந்த ஒரு மனிதன் குருவின் வழியாக தனக்கு பிடித்த தெய்வத்தின்  உபாசனை மந்திரத்தை தினமும் ஜெபம் செய்கிறானோ அவனே கடவுள் தன்மையை அடைய தகுதி ஆகிறான்.

எனது வாழ்கையில் ஏற்பட்ட எல்லாவித மாற்றங்களுக்கும் எனது குருவே காரணமாகிறார். குரு தொட்டு காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியை போல குரு உபதேசித்த அனைத்தையும் சரியாக செய்தாலே இவுலக்திலும் அவ்வுலகதிலும் இடம் உண்டு என்பது சத்தியமான உண்மையாகும்.

               குரு வாழ்க ! குருவே சரணம் ! குருவே துணை ! குருவின் திருவடி போற்றி!

                                                          வடிவேல் முருகா !

திங்கள், 29 செப்டம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 15




முக்கிய குறிப்பு : முருகப்பெருமானின் திருவடிகளின் கீழ் உள்ள லிங்கமானது முருகப்பெருமானேசுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த லிங்க வடிவில் உள்ள முருகப்பெருமானே நமது ஸ்கந்த உபாசகரை ஆட்கொண்டு ஜீவநாடி மூலம் முக்காலத்தையும் உணர்த்தி வருகிறார்.ப்ராப்தம் உள்ளவர்கள் மட்டுமே இந்த சுயம்பு லிங்க முருகப்பெருமானை தரிசனம் செய்யவும்,ஜீவநாடியின் மூலம்  அருள்வாக்கு கேட்கவும் முடியும் என்பது அனுபவ உண்மையாகும்.

ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடியைப் பொறுத்தவரை 100% முருகனின்

அருள்வாக்கே. இதில் மந்திரமோ, மை வித்தையோ, எட்சினியோ கிடையாது.

எனது குருநாதரிடமும் கிடையாது. என்னிடமும் கிடையாது. சிலர்

எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பதற்குக் காரணம் மிகத்

துல்லியமாக வருவதால் தான். இதை எப்படிச் சொல்ல முடியும் என்று

நினைக்கிறார்கள். மேலும் ஒரு சம்பவம் நமது ஞானஸ்கந்த மூர்த்தியிடம்

தீட்சை பெற்று ஸ்ரீமுருக உபாசனை செய்து வரும் சுரேந்திரமான அடியார்

ஒருவரும், பிரகாசமான அடியார் ஒருவரும் பவானி லட்சுமி நகரில் ஒரு

டீகடையில் டீகுடித்தார்கள். அதற்கு சுரேந்திரமான அடியார் பணம்

கொடுத்து அதுவும் ரூ100/- கொடுத்து சில்லறை வாங்கியிருக்கிறார். இதை

அப்படியே ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி உரைத்தார். கேட்ட அனைவருக்கும்

அதிர்ச்சி. இது எப்படி சாத்தியம். நிச்சயம் மை, மந்திரம், எட்சினி

இருக்குமோ? ஏன் அப்படி நினைக்க வேண்டும். எட்சினியை விடவா முருகப்

பெருமான் கீழாகப் போய்விட்டார். இதை உரைத்தது முருகப் பெருமான் இது

தான் இரகசியம்.

 ஜீவநாடியைப் பிரிக்காமல் அதை கையில் வைத்துக் கொண்டே இத்தனை

இரகசியங்களையும் ஞானஸ்கந்த மூர்த்தி உரைத்து விடுகிறார்.

எனவே ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு ஆறுமுகப் பெருமானே கதி

என்று சரணாகதி அடைபவர்களுக்கே ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி நூறு

சதவீதம் நன்மை செய்கிறார். ஆராய்ச்சியில் விளைவது குழப்பம் மட்டுமே.

 நாடியில் வருகின்ற பரிகாரங்கள் அனைத்தும் ஆலய தரிசனங்களாகவே

இருக்கின்றன. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு ஆலயம் வருகிறது. அவர்

அந்த குறிப்பிட்ட ஆலயத்தை தரிசனம் செய்த உடனேயே பல அற்புத

மாற்றங்கள் நடந்து விடுகின்றன. சிலருக்கு அந்த ஆலயங்களிலேயே பல

அதிசயங்கள் நடக்க ஆரம்பித்து விடுகின்றன. இதெல்லாம் நமது

ஞானஸ்கந்த மூர்த்தி நம் மீது காட்டுகின்ற கருணை. நமது ஞானஸ்கந்தர்

ஜீவநாடி பணத்திற்கு அடிமை அல்ல. நாடி படிக்க ஒரு சிறு காணிக்கை

சித்தர்களே நிர்ணயம் செய்து வைத்ததை தவிர வேறு எந்த பணமும்

வாங்கப்படுவதில்லை. பணம் குறிக்கோள் இல்லை என்பதால் உண்மையை

மட்டுமே உரைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளேன். சித்தர்கள் நிர்ணயம்

செய்துக் கொடுத்த தொகைக்கு கீழ் வாங்கப்படுவதில்லை. அதற்கு

மேலும் வாங்குவதில்லை. எல்லாமே சித்தர்களாலும், ஞானஸ்கந்த

மூர்த்தியாலும் வழி நடத்தப்படுவதால் பொய் என்பது இங்கு

பொய்யாகவே இருக்கும். உண்மை இருப்பதை உணர்ந்து மாதந்தோறும்

ஒவ்வொறு அமாவாசையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வந்து ஞான

தரிசனம் செய்து அற்புத மாற்றங்களை உடனே அடைகிறார்கள்.

 ஒருவர் நாடி கேட்க வேண்டும் என்று வந்து அமர்ந்தார். முருகப்

பெருமான் பின் வருமாறு உரைத்தார்.

“தோஷமது உண்டு

தொந்தரவும் உண்டு

தொல்லைகளும் உண்டு

உண்டுண்டு கேள்

உறுதியில்லா இதயமாய்

அடைப்பு போலும்

அதிசயமாக நீங்க

வழியுரைப்போம்

வகை வகையாய்

வழி வழியாய்

பூஜித்து வந்த

வரிசை தெய்வம்

கற்சிலையாய் நின்று காக்கும்

கன்னி தெய்வம்

கச்சிதமாய்க் காசோலை

கருகு மணி வைத்து

கற்கண்டை நிவேதனம் செய்து

கைதொழுது பின்

ரண சிகிச்சை செய்

அஷ்டமம் தன்னியே

ஆட்சியான மங்களன்

ஆயுள் தருவான் அஞ்சிடாதே!

செய்ய வேண்டும்

ஜெயமாகுமே செய்”

 என்ற நீண்ட விளக்கப் பாடலை மட மடவென நாடியில் உரைத்தார்

முருகப் பெருமான் வந்து அமர்ந்தவருக்கு இதயத்தில் அடைப்பு. அதைப்

பற்றிய விபரம் எதுவும் முன்பே எனக்குத் தெரியாது. தொலைபேசியில்

தொடர்பு கொண்டது மட்டுமே அறிமுகம். ஆனால் அருகில் இருந்து

பார்த்ததைப் போல் அப்படியே அப்பட்டமாக உரைத்ததோடல்லாமல்

உரிய பரிகாரமும் சொல்லி அந்த இதய அடைப்பு சரியாகி ஆபரேசன்

செய்தாலும் உயிர் பிரியாது என்பதையும் துல்லியமாக உரைத்தார். வந்து

நாடி கேட்டவருக்கு வயது 45. இந்த வயதிலேயே இதயத்தில் அடைப்பு

இருந்தது.

அதுவும் தொன்னூறு சதவீதம் அடைப்பு. மருத்துவர்களே மலைத்து

விட்டார்கள். இவரது மனைவி இதை நினைத்து நினைத்து அழுது அழுது

பாதி காலியாகி விட்ட நிலைக்கு தள்ளபட்டார். மிகவும் சிறிய குழந்தைகள்

இவர்களுக்கு நாடியை படித்து விளக்கம் சொல்லி முடித்த பின்பு சொன்ன

சம்பவங்கள் இத்துணையும், சேலத்தில் மிகப் பிரபலமான தனியார்

பேருந்தின் உரிமையாளர். ஏற்கனவே என்னிடம் அடிக்கடி நாடி கேட்பவர்

அதன் மூலம் அவருக்கும் ஏராளமான அதிசயங்கள் கிடைக்கப் பெற்றவர்.

அவரிடம் சென்று இந்த இதய அடைப்பு உடையவரின் மனைவி அழ

அவர் ஞானஸ்கந்தர் ஜீவநாடியில் நிச்சயம் வழி கிடைக்கும் என என்னிடம்

தேதி வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். அவரும் என்னிடம் எதுவும்

சொல்லவில்லை. இது எப்படி சாத்தியம் 100% பலன் வந்திருக்கிறதே என

அதிசயப்பட்ட இருவரும் மருத்துவர்களே கை விட்ட நிலையில் நாங்கள்

எப்படி ஐயா ஆபரேஷன் செய்வது எனப் புலம்பினார்கள்.

 அதற்கு நாடியில் வந்த விபரங்களை மீண்டும் விளக்கினேன்.

 “பூஜித்து வந்த

 வரிசை தெய்வம்”

 “கற்சிலையாய் நின்று காக்கும்

 கன்னி தெய்வம்”

 எது எனக் கண்டு பிடியுங்கள் அதாவது முன்னோர்கள் பூஜித்த

கன்னிமார் எங்கு உள்ளது எனக் கேட்டேன். ஐயா எங்களது பூர்விக

சொத்தில் தோட்டத்திலேயே கன்னிமார் 7 பேரும் உண்டு. சிலை கிடையாது.

கல் வடிவில் சுயம்பு போன்று உள்ளது. அதற்கு வருடம் ஒரு முறை

பொங்கல் வைத்து, காதோலை கருகுமணி போட்டு பூஜித்து வருவோம்.

ஆனால் கடந்த 5 வருடங்களாக அந்த பூஜையை நாங்கள் செய்யவில்லை

என்றார்கள். முதலில் அந்த அம்மனை ஒரு சுப நாளில் பூஜித்து வந்து

பின்பு அதே மருத்துவரிடம் செல்லுங்கள் உற்ற வழி கிடைக்கும் என்றேன்.

ஐயா எப்படியாவது குணம் கிடைக்க வேண்டும் என்றார்கள். ஆசிர்வதித்து

மந்திர விபூதி கொடுத்து அணியச் சொன்னேன்.

 2 மாதம் எந்தத் தகவலும் இல்லை. நானும் அலுவல் காரணமாக மறந்து

விட்டேன். 2 மாதம் கழித்து அந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது.

ஐயா தங்களைப் பார்க்க வேண்டும் என்றனர். சரி என ஒரு தேதியைச்

சொல்லி வரச் சொன்னேன். மீண்டும் கணவன்/மனைவி இருவருமே

வந்தனர். சரி இன்னும் ஆபரேசன் செய்யவில்லை போலும் என நினைத்து

என்னாயிற்று எனக் கேட்டேன்.

 இருவரும் தேம்பித் தேம்பி அழுதார்கள். சரி பெரிய பிரச்சினை போல்

தெரிகிறது என நினைத்து ஞானஸ்கந்த மூர்த்தியைப் பூஜித்து சுவடியைப்

பிரித்தேன்.

 “சுபமானது

 சுகமானது

 சூட்சுமமானது”

 என வந்தது. ஐயா அதை சொல்லத்தான் நாங்கள் வந்தோம். உங்களைப்

பார்த்ததில் பேச்சே வரவில்லை. மிகப் பெரிய மரணப் போராட்டத்தின்

பின்பு அறுவை சிகிச்சை வெற்றி பெற்று இவர் பூரண குணமாகி விட்டார்

என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார்கள். இப்படி அவசரத்திலும்

ஆபத்திலும் காப்பாற்றிய ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

கல்லூரியில் பணி புரிவதாலும், வாரம் ஒரு முறை ஞாயிறு மட்டுமே

நாடி படிக்க முடிவதாலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே

தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்

கொள்கிறேன். நாடி படிக்க பல மாதங்கள் ஆனாலும் ஆகும்,பொறுமை

தேவை!

                         “ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

படித்ததில் பிடித்தது!

                              "குருவின் திருவடிகளுக்கு வணக்கம்"


                         குரு =  ஞானத்தின் திறவுகோல்!
                         குரு =  அன்பின் வெளிபாடு!
                         குரு =  தெய்வத்தின் வடிவம்.

எல்லையற்ற அன்பால் எங்கும் வியாபித்துள்ள  குருவின் திருவடிகளுக்கு வணக்கம். சுகம் அந்த சுகம் எங்குள்ளது.கல்வியிலா,செல்வத்திலா,பதவியிலா,பட்டத்திலா எங்கே நிரந்தர சுகம்.
 
ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேவையும்,தேடலும் உண்டு.அதற்கேற்பத்தான் அவரவர் சுகம் அமையும்.உடல் சுகம் , உள்ள சுகம் இரண்டும் சேர்ந்து இருப்பதுதான் சுகமா! இதையும் கடந்து போனால் சுகம் எங்குள்ளது.வேத சாஸ்திரங்களில் உள்ளதா இல்லை மந்திர தந்திரங்களில் உள்ளதா? குருவின் அருள் இல்லாமல் வேறு இடத்தில இப்புவியில் சுகமில்லை என்று குருகீதை சொல்கிறது.

சுகம் பற்றி எவ்வளவு சுருக்கமான செய்தி இது. குருவின் அருள் அல்லவா உண்மையான சுகம்.அவரின் அருளை பெற எத்தனை காலம் நாம் தவமிருந்து காத்திருக்க வேண்டும்.தேடுதலுக்கு ஏற்ப குருதேவரின் அருள் நம்மை அனைத்துக் கொள்ளும்.நாம் குருவிற்காக காத்திருப்பது போன்று குருவும் நமக்காக காத்திருப்பார்.

 

                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

சனி, 27 செப்டம்பர், 2014

செல்வ செழிப்புடன் வாழ சித்தர்கள் காட்டிய வழிமுறை!!!




இலக்குமி தோத்திரம்:-

அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். கொல்லாபுரத்தில் உள்ள திருமகள் திருக்கோவிலிற்கு சென்று இங்கு குடிகொணடிருக்கும் திருமகளை போற்றி பின்வரும் பாடலைப் பாடினார். திருமகளும் மனமகிழ்ந்து அகத்திய மகரிசியிற்கு காட்சி கொடுத்து “அகத்திய மகரிசியே தங்களின் போற்றிப் பாடலிற்கு நான் மிகவும் மனமகிழ்ந்தேன். இப் பாடலை யாரொருவர் உள்ளத்தூய்மையோடு பாடி போற்றுகிறாரோ அவர் அரிய பெரிய இன்பங்களை நுகர்வார். இப் பாடல்கள் எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடைய மாட்டாள்.” என்று திருவாய் மலர்ந்தருளினாரகள். இப் பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் வறுமை நீங்கி செல்வத்தையடைந்து அச் செல்வத்தினாலான பயனையும் நுகர்வர் இது நடைமுறையில் கண்டறிந்த உண்மை. இந் நூல் வீட்டிலிருக்குமானால் செல்வ நலம் சிறந்தோங்கும்.

1

மூவுலகம் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்

மூன்று உலகங்களுக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிரை ஒழிக்கின்றதும், பூவையொத்த மென்மையான, அழகிய உடலை கொண்ட அருட் கடவுளான திருமாலின் மார்பில் தோன்றிய தாயே, தேவர் உலகத்திலும் சிறப்பான புகழ்மிக்க கொல்லாபுரம் ஊரில் சேர்ந்து இனிதாக வீற்றிருக்கும் பாவையாகிய திருமகளின் இரண்டு திரு அடிகளையும் வணங்கி, பழைமையான சாத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து குரு முனிவரான அகத்திய முனிவர் பாடுகின்றார்.

2

கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகு மானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்த்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர
அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.


தேனிற்காக வரும் வண்டினம் பண்களை பாடுவதற்கு இடமாக இருக்கும் தாமரை மலரின் கொட்டையில் உறைகின்ற தத்துவம் போன்ற மழை நீர் நிரம்பிய கருமுகிலினை ஒத்த நிறத்தினையுடைய திருவுடம்பினையுடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழுகின்ற மான் போன்ற அருட்பார்வை கொண்ட திருமகளே. உலகம் முழுவதும் உனது அருளினால் தீன்றிய அருட்கொடியே. என்னாளும் உனை மறவாது தாமரை மலர் போல் இரு காரமும் குவித்து உன்னை மிகுந்த காதலோடு அதாவது மிகுந்த அன்போடு வணங்குபவர்களின் தீவினை தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே!

3

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன் றிடவொளிருஞ் செழுஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ.

தாமரை மலர் போன்ற கண்ணுடைய திருமகளே. அழகிய மறுவமைந்த மார்பினை உடைய திருமாலின் இல்லத்தரசியே. செழுமை நிறைந்த தாமரை மலரினை ஒத்த கையினை உடையவளே, செந்நிறமான விமலையே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கும் வேனிற் காலத்திற்குரியவனான காமனைப் பெற்றவளே, தூய்மையான அமுதகலசத்தை ஏந்திய பூ போன்ற மென்மையான கையினை உடையவளே, பாற்கடலில் பிறந்தவளே, அன்பர்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஒளிரச் செய்யும் செழுமையான பேரொளியே என்று போற்றி வணக்கிறேன்.

4
மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ.

அழகிய இதழ்களையுடைய நல்ல மணமுள்ள தாமரை பூக் கொட்டையில் அரசாயிருக்கும் நற்பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய மயில் போன்றவளே, மற்றும் உன் கடைக்கண் பாரரவை அருள் பெற்றல்லவா நீல மணி நிறத்தினையுடைய திருமால் உலகையெல்லாம் காக்கும் தொழிலை மேற்கொண்டார். நான்கு முகக்கடவுள் படைத்தல் தொழிலை செய்தார். பசுமையான பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும் அழித்தற் தொழிலைச் செய்தார். நின் பெருங் கீர்த்தி என்னை போன்றோரால் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்
 

5
மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சி யோரும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
அருள்நோக்கம் அடைந்துள்ளாரே.

வளம் பொருந்திய பரந்த பூமி முழுவதையும் பொதுவானவற்றிலிருந்து விலகி தனியே ஆட்சி செய்யும் அரசர்கள் தானும், கல்வியிலும், பெரிய அறிவிலும், மிகுந்த அழகிலும் சிறந்து விளங்குவோரும், வெல்லுகிற படையினால் பகைவர்களை துரத்தி கொடிய போரில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் தானும், தாமரை மலரின் அகவிதழாம் அல்லி வட்டத்தினுள் உள்ள கொட்டையின் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளாம் தங்களின் திருஅருளைப் பெற்றவர்களே ஆவர்.

6
செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்
எழின்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.

செந்தாமரை மலரின் பொன்னிறமான மகரந்தத்தை போல் சிறந்து ஒளிரும் அழகிய எழில் மேனியினளே திருமகளே, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் இருளை விரட்டும் சூரியனாய், வெண்மையான சந்திரனாய், தேவர்களை மகிழ்விக்கும் பொங்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே! நீண்ட காட்டில், மலையில், நிலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செல்வ வளம் சிறப்பாக ஓங்கி இருக்கிறதம்மா.

7
என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்சலோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யாள்.

என்று திருமகளை புகழ்ந்து பாடிய தமிழிற்கு இலக்கணம் செய்த குறு முனியாகிய அகத்திய முனிவர் தனது மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கலானார். அங்கு தோன்றிய திருமகளும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வல்லவனே நீ என்னை புகழ்ந்து பாடிய பாடலிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்பாடல்களை முறைப்படி படிப்பவர்கள் பெரிய இன்பத்தை அனுபவிப்பார்கள். என்னை புகழ்ந்த இந்த பாடல்கள் எழுதிய ஏடு யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிற்கு வறுமையைத் தரும் எனது தமக்கையானவள் வரமாட்டாள் என வரமளித்தார்கள்.இப்பாடல்கள் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்த காசி காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.
பூசிக்கும் முறை:-
பூசை அறையில் பஞ்சமுக தீபமேற்றி வைத்து நறுமணம் தரக்கூடிய சாம்பிராணி தூபம் அல்லது பத்தி பொருத்தி வைத்து, முதலில் விக்கின வினாயகரை காரிய சித்தி வேண்டி வணங்க வேண்டும். பின்னர் அகத்திய மகரிசியிற்கு குரு வணக்கம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் மகாலட்சுமி தாயிற்கு மந்திர புட்ப, தூப தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும். பிறகு இப்பாடல்களை 3. 5, 9 முறை என படித்து தூப தீப நைவேத்திய ஆராதனை செய்து முடிக்க வேண்டும்.

அகத்திய மகரிசி காட்டிய வழியில் மகாலட்சுமி தாயை வணங்கி நாமும் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.

ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்தியின் புகழ் ஓங்கட்டும் !