புதன், 5 நவம்பர், 2014

அபூர்வ ஆற்றல்களை அள்ளித் தரும் அருள் சாதனங்கள் !






 உபாசனையைப் பலர் பற்றி பலவாறு சொல்லி இருந்தாலும் கடந்த பதினான்கு ஆண்டுகளாக எமது பதினாறு வயதிலிருந்து செய்த உபாசனையால் பெற்ற அனுபவத்தாலும், ஜீவ நாடி மூலம் கிடைக்கும் செய்திகளாலும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஒருவரது ஜாதகத்தின் மூலம் உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சித்தர்கள் எழுதி வைத்த நாடி மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ உரிய தெய்வத்தைத் தேர்ந்தெடுப்பது உடனடி பலனைத் தருவதை அனுபவத்தில் பார்க்க முடிகிறது. ஏதெனும் ஒரு தேவதையைத் தொடர்ந்து உபாசிப்பதன் மூலம் உயர்ந்த வாழ்வை உறுதியாய்ப் பெறலாம். அதனால்தான் உயர்ந்த வாழ்வளிக்கும் உபாசனை சித்தி யோகம் என்று சொல்கிறோம். மனதை ஒருமுகப்படுத்தினால் ஏராளமான சக்திகளைப் பெற முடியும். அதற்கு உதவி செய்வது உபாசனை. யார் ஒருவர் குரு மூலம் சரியாக உபாசனை செய்கிறாரோ அவர் அஷ்டமா சித்திகளை அடைவதோடல்லமல் அனைத்துப் பிரச்சினைகளில் இருந்தும் விடுதலை பெறுவார். அப்படி மனதை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையானதல்ல. எனவெ ஏதாவது ஒரு உபாயத்தைப் பயன்படுத்தி உபாசனையால் ஏற்படும் அதிர்வுகளை எதேனும் ஒரு பொருளில் சேமித்து வைத்து அதை மற்றவர்களும் உப்யோகப் படுத்த வேண்டும் எனத் தீர்மானித்த சித்தர்கள் அருள் சாதனங்களை அனுபவத்தில் உபயோகம் செய்து பார்த்து அதை அனைவரும் கடைபிடிக்கும்படி உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்தனர். விபூதி, எலுமிச்சை, ருத்திராட்சம், சங்கு, யந்திரங்கள், வெற்றிலை, தர்ப்பைப்புல், போன்றவை அருள் சாதனங்கள் எனப்படும். நாம் மந்திரங்களைத் தொடர்ந்து ஜபம் செய்யச் செய்ய அதன் அதிர்வுகள் மேற்குறிப்பிட்ட பொருட்களில் பதிந்து அதன் சக்திகளை வெளியிடும் அமைப்பில் இறைவன் அவற்றைப் படைத்துள்ளான். அருளை வாங்கி வெளியிடும் தன்மை உடையதால் அவை அருள் சாதனங்கள் எனப் பெயர் பெறுகின்றன. நவக்கிரகங்களின் கதிர் வீச்சை பிரதிபலிக்கும் நவ ரத்தினங்கள், எண்கள், வண்ணங்கள் மற்றும் மூலிகைகள் போலவே நமது அருள் ஆற்றலை பிரதிபலிப்பது அருள் சாதனங்கள் ஆகும்.

எனவெ அனைத்து அருள் சாதனங்களையும் பயன்படுத்தி ஆத்ம சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். தியானம் செய்யும் போது வருகின்ற அருள் நிலையை அப்படியே தேக்கி வைக்கஅருள்சாதனங்கள்உதவும். தியானம் என்பது, மனதை இறைவனிடம் வைத்து, மனதில் இறைவனின்உருவத்தையே பதித்து, மந்திர ஜபம் செய்வது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் தனிமையான இடத்தில் அமர்ந்து, தியானம் செய்வது சிறப்பு. ஜன சந்தடியோ, வேறு ஏதாவது சப்தமோ இருக்கக் கூடாது. ஏதெனும் ஒரு ஆசனத்தின் மீது அமர்ந்து தான் தியானம் செய்ய வேண்டும். பொதுவாக ஆசனமானது நமது ஆற்றல்களை புவி ஈர்ப்ப்பு விசை ஈர்த்துக்கொள்ளாமல் தடை செய்கிறது. எனவெ எந்த ஒரு பூஜை, அல்லது உபாசனை ஆனாலும் வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது. ஜபம்செய்ய நதிக்கரை, மலை, புனித தலங்கள், சுத்தமான காற்று வீசும் இடங்கள் சிறந்தவை. 

பசுத்தொழுவத்தில் செய்யப்படும் ஜபம் பல மடங்கு பலன் தருகிறது. இதை அனுபவபூர்வமக உணரலாம். ஜபம் செய்ய ருத்ராட்சம், மணிமாலை, தாமரை மாலை, பவழம் போன்ற மாலைகளும், முத்து மாலைகளும் உபயோகப்படுகின்றன.  முக்கியமாக, மனம்  இறைவனிடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லமல் வெறும் மாலையை மட்டும் உருட்டிக் கொண்டு, உட்கார்ந்தபடி வேறு ஏதெனும் எண்ணிக் கொண்டிருந்தால், அது தியானமாகாது. இத்தனை விஷயங்களை கவனித்து ஜபம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் மனம் அங்கும் இங்கும் அலை பாயும். குருவைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மனம் தளராமல் ஜபம் செய்யச் செய்ய தாரணை சித்தியாகிறது. இப்படி பண்ணிரண்டு தாரணை சேர்ந்து தியானமாக மாறுகிறது. கீழ்க்கானும் வழிமுறையைக் கடைபிடித்தால் உபாசனயில் ஓரளவு வெற்றி பெறலாம்.

1. உங்கள் உபாசனை தெய்வத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதை ஜாதகம் மூலமோ அல்லது ஜீவ நாடி மூலமோ கண்டறிந்து கொள்ளவும். குரு மிக மிக அவசியம். குரு முறைப்படி உபாசிப்பதே மிக உயர்வானது. யாரை குருவாக எற்றுக் கொள்வது யாரிடம் தீட்சை பெறுவது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உண்மையான ஆர்வம் இருப்பின் குரு உங்களைத் தேடி வருவார்.யார் உங்களது ஆத்மாவை கவருகிறாரோ அவரை குருவாக எற்றுக் கொள்ளலாம். ஜீவ சமாதி ஆகியுள்ளவர்களை அதில் நீங்கள் விருப்பப்படுபவரை முதலில் மானசீக குருவாகக் கொண்டு அவரிடமே ஒரு உயிருடன் உள்ள குருவைக் காண்பிக்கச் சொல்லுங்கள். நிச்சயம் நடக்கும்.


2.உபாசனைக்காகஒரு நாளில் இரண்டு நேரங்களைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். உதாரணமாகக் காலை 5 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 7 மணி வரை . முடிந்தவரை இதே நேரத்தில் தினமும் உபாசனையில் அமர வேண்டும். நேரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தீவிர சாதனை புரிய பிரம்ம முஹூர்த்தத்தில் உபாசிப்பது விரைவான பலனைத் தரும். நடு நிசி பூஜையைத் தவிர்க்கவும்

3.வீட்டிலஒருகுறிப்பிட்ட இடத்தை உபாசனைக்காகத் தேர்ந்தெடுங்கள். அது பூஜை அறையாகவோ, வேறு அமைதியான இடமாகவோ இருக்கலாம். பூஜை அறை இல்லையென்றால், இஷ்ட தெய்வத்தை வைப்பதற்கு ஒரு சிறு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும்.

4. அங்கு ஆசனத்தை விரித்து அதில் அமரவும். தலை, கழுத்து, மற்றும் முதுகெழும்பு நேராக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். கைகள் மடி மீது இருக்கட்டும். கண்களை மூடிக் கொள்ளவும்.  வெறும் தரையில் அமர்ந்து செய்யக்கூடாது.

5. உங்கள் மூச்சின் மீது கவனம் வையுங்கள். உங்கள் மூச்சு இயல்பானதாக இருக்கட்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவும். பிரணாயாமம் செய்வது இன்னும் விரைவான பலன் தரும்.

6. மூச்சு சீரான பிறகு குருவிடம் உபதேசம் பெற்ற மந்திரத்தை மௌனமாக மனதிற்குள் சொல்ல ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் அது சிரமமாகத் தோன்றுபவர்கள் சில நாட்களுக்கு மட்டும் வாய் விட்டே மெல்ல சொல்லலாம். ஆனால் சில நாட்கள் கழிந்த பின் மனதிற்குள் மௌனமாக உச்சரிக்க ஆரம்பித்து விட வேண்டும்.

7. உங்கள் உபாசனை தெய்வத்திடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்யவும். உங்கள் கோரிக்கை என்னவோ அதைப் பிரார்த்திக்கவும். இதற்கு சங்கல்பம் என்று பெயர். எவன் ஒருவன் சங்கல்பிக்கிறானோ அவன் சிந்திக்கிறான் பின்னர் செயல்படுகிறான் அதன் மூலம் சாதிக்கிறான் என்பதை நினைவில் கொள்ளவும்.

8. ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உபாசனை தெய்வத்தைத் தியானிக்கவும். மனம் அங்கும் இங்கும் ஓடினாலும் அதை இழுத்து வந்து உங்கள் உபாசனை  தெய்வத்திடம் வைராக்கியத்துடன் நிறுத்தவும்.

9.பின்புகுருவிடம்உபதேசம்பெற்றமந்திரத்தை ஜபம் செய்யவும். குறைந்த பட்சம் 108 முறையாவது ஜபம் செய்ய வேண்டும். சிலர் அதிகமாக செய்ய விரும்பினால் அது 1008, 10008, 10008 ஆக இருக்கட்டும்.

10. உங்கள் முழு கவனமும் நீங்கள் மனதில் உச்சரிக்கும் அந்த மந்திரத்தின் மீதே இருக்கட்டும்.
11. 
எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் ஒரு லட்சம் முறை ஜபித்தால்தான் பலன் தர ஆரம்பிக்கும் என்பதை மறக்க வேண்டாம்.

12. தியானத்தை முடித்த பின்னர் ஓரிரு நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்து பின்னர் எழுங்கள்

13. குருவிடம் அவ்வப்போது சத்-சங்கம் வைத்துக் கொள்ளவும். அது மேலும் உபாசனை சித்திக்கு வழி கொடுக்கும்.
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று பகவத் கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.

·         சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.

·         பூஜை அறை, பசுக்கொட்டகை, நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.
·         கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.

·         சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.

·         கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

இது சாத்வீக உபாசனை முறையாகும். இது மாந்திரீகம் அல்ல. எந்த ஒரு தவறான நோக்கிலும் பயன்படுத்தக்கூடது. மற்றவர்க்குச் செய்கின்ற தீமை திரும்ப வந்து உங்களையே தாக்கிவிடும். ஒரு சிலர் குரளி, எட்சினி, ஜின் போன்ற தேவதைகளை மந்திர உபாசனை மூலம் வசியப் படுத்திக் கொண்டு அற்புதங்கள் செய்து காட்டுவார்கள். அவா்களால் ஒருவரை ஆன்மிகத்தில் உயா்த்த முடியாது. ஒருவரது ஊழ்வினையைக் கரைக்க முடியாது. தெய்வீக அனுபவங்களைக் கொடுக்க முடியாது. ஆனாலும் அத்தகைய சிலா் மிகப் பெரிய மகான்கள் போலவும், ஞானிகள் போலவும் தெய்வ அவதாரங்கள் போலும் தம்மைக் காட்டிக் கொண்டு உலா வருவார்கள். மோடி மஸ்தான் வித்தை செய்பவா்கள் யார்? யட்சணி வித்தை செய்பவா்கள் யார்? மந்திர சித்திகள் மூலம் அற்புதம் செய்பவா்கள் யார்? உண்மையான மகான்கள் யார்? சித்தா்கள் யார்? தெய்வ அவதாரங்கள் யார்? என்றெல்லாம் புரிந்து கொள்ள ஆன்மிக அறிவு வேண்டும். அனுபவ அறிவு வேண்டும். எனவே ஒரு சரியான குருவைத் தேர்ந்த்தெடுக்க பூர்வ புண்ணியமும் சிறந்த அனுபவமும் வேண்டும்.இதற்கு கீதையில் சொல்லியபடி நமது உள்ளத்தில் இறைவன் இருக்கிறார். நமது தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். நமது   பக்குவத்திற்கு தகுந்தபடி குருவைக் காட்டுகிறார். மாயை எனும் திரையால் தன்னை முழுதும் மறத்துள்ளார்.


எனவே முடிந்த அளவு மற்றவர்க்கு நன்மை செய்வோம். தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பது வள்ளுவன் வாக்கு.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எல்லா உபாசனைகளுக்கும் பொருந்தும். முதலில் குருவிடம் பெற்ற மந்திரத்தை ஒரு லட்சம் முறை உச்சரித்து உரு ஏற்றிய பின்பே அருள் சாதனங்களைக் கையாள வேண்டும். ஒரே நாளில் ஒரு லட்சம் உச்சரிப்பது என்பது உடலில் காந்த சக்தியை திடீரென கூட்டி விடும் என்பதால் தினசரி 108 முறை காலை, மாலை உச்சரித்து உரு எற்றுவதே சிறப்பு. இப்போதெல்லாம் சுமார் ஒரு மணி நேரத்தில் எல்லா வகையான சித்தியும் கிடைத்து விட வேண்டும் என்று பலர் எதிர் பார்க்கிரார்கள் ஆனால் உபாசனை உயர்வான மார்க்கம், இது சித்தர்கள் கண்ட சாத்வீக முறை. பொறுமை மிக மிக அவசியம் தேவை. நாம் உச்சரித்த மந்திரங்கள் ஒரு லட்சத்தை தாண்டிய பின்னர் மேலே சொன்ன அருள் சாதனங்களைக் கையால் தொட்ட உடனேயே நம்மிடம் உள்ள சக்தி அலைகள் உடனடியாக அதில் பதிந்து அதை யார் பெறுகிறார்களோ அவர்களுக்கு உடனடியான நல்ல பலன்கள் கிடைகின்றன. எனவேதான் மஹான்கள் தொட்டு ஆசிர்வாதம் செய்த விபூதி, எலுமிச்சை போன்றவைகள் அருள் நிறைந்து அதன் மூலம் பல்வேறு அதிசயங்கள் நடக்கின்றன. மந்திர உரு இல்லாமல் அருள் சாதனங்கள் வேலை செய்யாது. சாதரமாண விபூதியை விட முறைப்படி தயார் செய்த விபூதியில் நமது கை பட்டவுடன் உடனடி நற்பலன்கள் கிடைக்கிறது. அனைத்து விதமான அருள் சாதனங்களையும் விரிவாகப் பார்ப்போம். முதலில் விபூதியைப் பற்றிப்  பார்ப்போம். விபூதி குறித்து ஏராளமான தகவல்கள் அனைவருக்கும் தெரிந்தாலும் ஒரு உபாசகர் விபூதி என்கிற அருள் சாதனத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை குறிப்பாகப் பார்க்கலாம்.
திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவை
1.   கல்பம்
2.   அணுகல்பம்
3.   உபகல்பம்
4.   அகல்பம்
கல்பம்:
கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும். பஞ்ச பிரம்ம மந்திரங்களை தக்க குரு மூலம் அறிந்து கொள்ளவும். வைத்தீஸ்வரன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திரத்தின் அன்று இந்த கல்ப விபூதி விற்பனைக்குக் கிடைக்கிறது என்ற தகவலை இந்த கட்டுரை எழுதும் போது ஒரு நண்பர் இந்த தகவலைச் சொன்னார்.
அணுகல்பம்
காடுகளில் கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.
உபகல்பம்
மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.
அகல்பம்
அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.
இதில் கல்பம் என்று சொல்லப்படும் வகையான விபூதியே மிகச்சிறப்பான அருள் சாதனமாக கருதப்படுகிறது. சாதாரணமாக கடையில் விற்கப்படும் விபூதி அகல்பமாகக்கூட இருக்கலாம். வியாபர நோக்கில் எருமை போன்ற விலங்குகளின் சாணமும் விபூதி தயாரிக்கப் பயன்படுகிறது. இந்த விபூதியை மந்தரித்து கொடுத்தால் எந்த நற்பலனையும் உபாசகர்கள் எதிர்பார்க்க முடியாது. எனவே நீங்களே கல்ப விபூதியை தயார் செய்வதே சிறப்பு என்பது எனது கருத்தாகும். பொதுவாக விபூதியில் வேறு எந்தப் பொருளும் கலக்காமல் இருப்பதே நல்லது. நல்ல ஒரு மஹானால் தொடப்பட்ட விபூதி எந்த ஒரு நறுமணமும் கலக்காமலே மிகச் சிறப்பான வாசனையைத் தருவதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம்.சில சித்தர்கள் அரிய வகையான மூலிகைகளை விபூதியில் கலந்தும் பயன்படுத்தி பல காரியங்களைச் சாதித்துள்ளார்கள். அவற்றையும் குரு மூலம் தெரிந்து கொள்வதே சிறப்பான முறையாகும்.
  விபூதியை ஐஸ்வர்யம் என்று சொல்வர். செல்வத்தை அளிப்பது விபூதி! நம்மை எல்லாம் காத்து ரட்சிப்பதால், “ரட்சை’ என்ற பெயரும் விபூதிக்கு உண்டு. விபூதியில் உயர்வானது, “அக்னி ஹோத்ரம்’ செய்து கிடைக்கும் விபூதி. இது அக்னிஹோத்ரிகளிடம் கிடைக்கும். அதற்கடுத்து, பசுஞ் சாணத்தால் வரட்டி தட்டி, பசு மாட்டின் கோமியத்தால், “விரஜா’ ஹோமம் செய்து, வீட்டிலேயே மந்திரத்துடன் தயாரிக்கப்படும் விபூதி உயர்ந்தது.
புருவத்தின் நடுவில் ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக ஜோதி தெரிவதை யோகியர்கள், சித்தர்கள், மஹான்கள், முனிவர்கள், ரிஷிகள் கண்டு சொல்லி உள்ளார்கள். அவ்விடத்தில் தியானம் கைகூடி ஜோதி தெரிய வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். மந்திர உருப்பெற்ற விபூதி ஒருவரின் ஆத்ம ஜோதியைத் தரிசிக்க வைக்கும். இதுவும் ஒரு வகையான தீட்சை ஆகும்.
 இறைவன் படைப்பில் நமது மனித உடல் ஒரு கோவிலாகும். அதில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படவும் அதே சமயம், உள்ளிழுக்கவும் செய்யும். ஏதெனும் ஒரு பொருளை புருவ மத்தியின் அருகே கொண்டு வர ஒருவித ஈர்ப்பு தோன்றுவதை நாம் அனுபவப்பூர்வமாக உணர முடியும்.
புருவ மத்தியில் விபூதியை வைத்து சூரிய நமஸ்காரம் செய்தால் சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை விபூதி சரியாகச் செய்கிறது. அதை  அப்படியே கண்களை மூடி தியானம் செய்ய உள் ஒளி பிரகாசமாகத் தெரியும். உபாசகர்கள் சூரிய நமஸ்காரத்தை தினசரி செய்வது மிக மிக அவசியம். குறிப்பாக ஜோதிடர்கள் உபாசனை இல்லாமல் ஜோதிடம் சொன்னால் மற்றவர்களது கர்ம வினை அவர்களைப் பாதிக்கும். எனவே உபாசனை என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும்.
  நமது கண்களுக்கு ஏராளமான சக்திகள் உண்டு. அதைவிடப் பார்வைக்கு அதிக சக்தி ஊண்டு. மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றில் பார்வையும்,  எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண் திருஷ்டி என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதைத் தடுக்கவும் திருநீறு பயன்படும்.எனவேதான் விபூதியைக் காப்பு என்று சொல்கிறோம்.
புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரம் உள்ளது. பிட்யூட்ரி சுரப்பியைத் தூண்டச்செய்யும் இடமும் இந்த நெற்றி ஆகும் அந்த ஆக்ஞா சக்கரத்தைத் தியானம் செய்பவர்களுக்கு உடல்  வெப்பம் அதிகரிக்கும். அந்த சூடு தணிய  சந்தனம் பூசுவதும் வழக்கத்தில் உள்ளது..
விபூதி எல்லா வகையான தோசங்களையும் நீக்கும் தன்மை உடையது. சைவர்கள் விரும்பி அணியும் விபூதி எல்லா மதத்தினர்க்கும் நன்மை பயக்ககூடியது.அருள் மிக்க விபூதியை பின்வரும் விதிப்படி அணிவது சிறப்பானது.
வடதிசை அல்லது கிழக்கு திசையை நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். முருக உபாசகர்கள் ஆறுமுகம்… ஆறுமுகம்… என்று ஆறு முறை கூறி அணிவது சிறப்பு. இதை அருணகிரினாதர் தமது திருப்புகழிழ் சொல்லி உள்ளார். அதை வரியார் சுவாமிகள் அடிக்கடி வலியுருத்திக் கூறியுள்ளார்.  நெற்றி முழுவதும் அல்லது மூன்று  கோடுகளாகத் தரிக்க வேண்டும். காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுகளாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும்.
மேல் கோடு சாம வேதம், நடுவில் உள்ளது யஜுர் வேதம், கீழே உள்ளது அதர்வண வேதம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது
ராஜ சின்னம் அணிந்தவனை எப்படி அரசன், “இவன் நம்மைச் சார்ந்தவன்’ என்று தெரிந்து கொள்கிறானோ, அதே போல, விபூதி அணிந்தவனை சிவனும், திருமண் அணிந்தவனை விஷ்ணுவும், மஞ்சள் பூசி, குங்குமம் அணிந்த பெண்ணை மகாலட்சுமியும் இவர் நம்மைச் சேர்ந்தவர் என்று எண்ணி அனுக்ரகம் செய்கின்றனர்!
உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. இந்த முறைப்படிதான் சிவன், அம்பாள், வினாயகர், முருகன் உபாசகர்கள் விபூதி தரிக்க வேண்டும்.
1.   தலை நடுவில் (உச்சி)
2.   நெற்றி
3.   மார்பு
4.   தொப்புளுக்கு (கொப்பூழ்) சற்று மேல்.
5.   இடது தோள்
6.   வலது தோள்
7.   இடது கையின் நடுவில்
8.   வலது கையின் நடுவில்
9.   இடது மணிக்கட்டு
10. வலது மணிக்கட்டு
11. இடது இடுப்பு
12. வலது இடுப்பு
13. இடது கால் நடுவில்
14. வலது கால் நடுவில்
15. முதுகுக்குக் கீழ்
16. கழுத்து முழுவதும்
17. வலது காதில் ஒரு பொட்டு
18. இடது காதில் ஒரு பொட்டு

நவ நாகரிகமான இந்தக் காலத்தில் இம்முறைப்படி விபூதி தரிக்க இயலாதவவர்கள் முடிந்த அளவு உபாசனை செய்கின்ற பூஜா காலங்களிலாவது இம்முறைப்படி அணிந்து மற்ற நேரங்களில் புருவ மத்தியில் மட்டும் அணிந்து கொள்ளலாம்.
உபாசகர்கள் மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் முறைப்பபடி தயாரிக்கப்பட்ட விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதைப் பத்திரமாக ஒரு பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். அடுத்த முறை மந்திர ஜபம் செய்யும் போது தனது வலது உள்ளங்கையில் அதே விபூதியை வைத்து பின்பு ஜபம் முடிந்தவுடன் அதே பட்டுப்பையில் சேமித்து வைக்கவும். இப்படியே செய்து வர வர ஜபம் செய்பவர்களது எண்ண அலைகள் விபூதியில் சேமிக்கப்படும். பின்பு ஏதேனும் ஒரு காரியத்திற்காக விபூதி கொடுக்கும் முன்னர் மூல மந்திரத்தை 108 முறை ஜபித்துக் கொடுக்க அந்த காரியம் அப்படியே பலிக்கும்.

நான் முன்பே குறிப்பிட்டபடி ஜபத்தை ஒரு முறை நதிக்கரையிலும், ஒரு முறை பசுத்தொழுவத்திலும், ஒரு முறை மலை உச்சியிலும், ஒரு முறை குருவின் பாதத்திற்கு அருகிலும். ஒரு முறை எதேனும் ஒரு சித்தரின் ஜீவ சமாதியிலும், ஒரு முறை கடற்கரையிலும் செய்வது மிக அதிக ஆற்றலைத் தரும். எங்கெல்லாம் சென்று ஜபம் செய்கிறோமோ அங்கெல்லாம் விபூதியை வலது உள்ளங்கையில் வைத்து உரு எற்றி வைத்துக் கொள்ளவும். இதன் நன்மைகள் கருதியே மேற்கண்ட இடங்களில் எல்லாம் ஆலயங்களை அமைத்து அற்புத வழிபாடுகளைச் செய்தார்கள் நம் முன்னோர்கள்.

சனி, 1 நவம்பர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 18!




 
மிகக் கடுமையான விரதங்கள், பூஜைகள் செய்து நாடி மூலம்

பரிகாரங்களும், பலன்களும் கண்டு மிகச் சிறப்பான முறையில் சனிப்

பெயர்ச்சி பலன்கள் தற்போது விறு விறுப்பாக விற்பனையாகிக்

கொண்டிருக்கிறது. பாக்கியம் உள்ளவர்கள் மட்டுமே படித்துப் பயன்

அடைய முடியும் என்ற வாசகத்தோடு வலம் வந்து கொண்டிருக்கிறது

அந்த சனிப்பெயர்ச்சி இதழ். இதுவரை எவராலும் செய்யப்படாத விஷயம்

செய்யப்பட்டு இருக்கிறது. ஜோதிட இதழின் வரலாற்றிலேயே முதன்

முதலாக நட்சத்திரங்களுக்கு ஏற்ப ஜீவ நாடி மூலம் மிகத் துல்லிய

பலனகள், பரிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 36

ஆலயங்களும்,  அதன் தொலைபேசி எண்களுடன் உரிய விபரங்கள்

அனைத்தும் அதில் அலசி ஆராய்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

   துலாம் இராசியில் இருந்து விருச்சிக இராசிக்கு சனி மாறுகின்ற சமயம்

நாட்டிற்கு நாடி சொல்லும் செய்திகளும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கிரக ரீதியாக ஆராய்ந்தும், நட்சத்திர ரீதியாக நாடி மூலம் பரிகாரங்கள்

கொடுக்கப்பட்டும் வண்ணப் பக்கங்களுடன் வளமான முறையில் சனிப்

பெயர்ச்சிப் பலன்கள் வந்திருக்கிறது. ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே இந்த

தொடரைப் படிக்க முடியும். அதேபோல் ப்ராப்தம் இருப்பவர்கள் மட்டுமே

அந்த சனிப்பெயர்ச்சி சிறப்பு இதழைப் படிக்க முடியும். காரணம் அதில்

சாட்சாத் முருகப் பெருமானின் வாக்கு ஜீவநாடி மூலம் வந்ததைக்

கொடுத்திருக்கிறேன். இப்போது இருக்கின்ற காலச் சூழ்நிலையில் எல்லா

மக்களுக்கும் என்னால் நேரடியாக நாடி படித்து பலன் சொல்ல முடியாது

என்பதால் இறை ஆசியுடன் இராகு-கேது பெயர்ச்சி மூலம் ஒரு

சேவையும், சனிப் பெயர்ச்சி மூலம் இன்னுமொரு சேவையும் நாடி மூலம்

நலம் ஏற்படும் விஷயங்களை தமிழக மக்களுக்காக செய்திருக்கிறேன்.

படித்து பலன் அடையுங்கள் பாங்கான வாழ்வு பெற்றிடுங்கள்.

   ஜீவ நாடி வாக்கு வருவது மிகத் துல்லியமாக இருக்கிறது. இதை

முழுமையாக நம்பி சொல்லும் விஷயங்களை 100% நம்பிக்கையுடன்

கடைபிடிப்பவர்களுக்கு மட்டுமே 100% நலம் கிட்டுகிறது என்பது அனுபவ

உண்மை.



   ஒருவர் என்னிடம் முதன் முறையாக வந்து நாடி படிக்க வேண்டும்

என்றார். எனக்கு நன்கு தெரிந்தவர்தான். விவசாயத்தைத் தொழிலாகச்

செய்து வருகிறார். சரி ஞானஸ்கந்த மூர்த்தியை பிரார்த்தனை செய்து

ஜீவநாடி சுவடியைப் பிரித்து பாடல் வடிவில் வந்ததைப் படித்தேன்.

“இன்னவனும் ​இந்நேரம்

அரவிலே ஆபத்தை

எதிர்நோக்கியுள்ள நேரம்

ஆலயம்போல் உண்டு ஒன்று

கருப்பதுவும் உண்டு கேள்

கச்சிதமாய் சேவித்து

தீபமதை ஏற்றி வைத்து

பூஜித்து வா

ஆபத்துமது அருகிலுண்டு

ஆனாலும் கருப்புண்டு

காப்பாற்றும் செல்!

ஆசி”

   என்ற பாடல் வந்தது. அதாவது வந்து அமர்ந்து இருக்கின்ற இவனுக்கு

விரைவில் அரவு என்று சொல்லக்கூடிய பாம்பினால் ஆபத்து வரும். அதே

நேரத்தில் இவர்கள் விவசாய பூமியில் ஆலயம் உண்டு. அங்கு கருப்பு

என்று சொல்லப்படும் கருப்பண்ண சுவாமி உண்டு. அதற்கு தீபம் ஏற்றி

வழிபட்டு வர வருகின்ற ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவாய் ஆசி! ஆசி!

எனச் சொல்லப்பட்டது. வந்தவர் தனியாக வரவில்லை. அவருடன் 4 பேர்

வந்திருந்தார்கள். அப்போது எனக்கு வயது 18 தான் ஆனது. சிறுவனான

என்னிடம் வாக்கு கேட்டு விட்டு வந்தவர் காணிக்கை என்றார். எனக்கு

எப்போதுமே பண ஆசையில்லை. வருகின்ற பணத்தை ஏதேனும்

ஆலயப்பணிக்கு சேமித்து வைத்து பயன்படுத்துவது வழக்கம். எந்த

காணிக்கையும் கேட்கவில்லை. இவர் தனது சட்டைப் பைக்குள் கையை

விட்டு ரூ.500ஐ எடுத்து தட்டில் வைக்கப் போனார், அவரது உறவினர்

ஒருவர் திடீரென எழுந்து வந்து வேண்டாம். அவர் காணிக்கை கேட்கவே

இல்லை. தர வேண்டாம் செல்லலாம் என்றார். வந்தவருக்கு மனதிருப்தி

உண்டாகவில்லை. அவரது உறவினரும் விடுவதாக இல்லை. எனக்கு சற்று

மனநிலை மாறியது. சட்டென சுவடியை கட்டி வைத்து விட்டுச் சென்று

விட்டேன்.

   காரணம் பணம் தரவில்லை என்கின்ற வருத்தமில்லை. சித்தர்களை ஒரு

பிள்ளைப் பூச்சி போல் பாவித்து உற்ற மரியாதை தராவிட்டல் அந்த பாவம்

எனக்குமல்லவா வந்து சேரும். என்வே கோபம் வந்துவிட்டது. எனது

வாயில் எது சொன்னாலும் பலித்து விடும். என்வே கோபத்தால் ஏதேனும்

சொல்லி விட்டால் என்ன செய்வது என்று அந்த இடத்தை விட்டு

நகர்ந்தேன். சிறிது நேரம் கழித்து அவர்களும் சென்று விட்டார்கள். நானும்

இந்த சமபவத்தை மறந்துவிட்டேன்.

முக்கிய குறிப்பு :- இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள சனிபெயர்ச்சி பலன்கள் தனிப்புத்தகம் வேண்டுவோர் குருவருள் சக்தி,திருவருள் ஜோதிடம் மாத இதழ்களை வெளியிடும் அப்ஸரா பப்ளிகேஷன் ராயப்பேட்டை சென்னை என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.(அல்லது)திருவருள் சக்தி,குருவருள் ஜோதிடம் மாத இதழ் கிடைக்கும் அனைத்து கடைகளிலும் கிடைக்கும். 

                                       
                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

திங்கள், 20 அக்டோபர், 2014

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 17 !



 நமது ஞானஸ்கந்தர் நாடியில் மகர இராசியினருக்கு வரும் மூன்று

முறை இந்த மகேஸ்வர பூஜை செய்ய வேண்டும் என்று வந்துள்ளது.

பலர் செய்து ஏராளமான அதிசயங்களைப் பெற்றுள்ளனர். ஆசிரமம் எங்கு

உள்ளது அவரது தொலைபேசி எண் வேண்டும் எனப் பலர் கேட்கிறார்கள்

என்பதால் அந்த தகவலையும் சொல்லி விடுகிறேன். கிரிவலப் பாதையில்

பழனி ஆண்டவர் சந்நதி பின்புறம் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் உள்ளது.

ஆசிரமத்தில் ஸ்ரீசரவணன் சுவாமிகளை 99448 00220 என்ற எண்ணில்

தொடர்பு கொள்ளலாம்.

 எதற்காக இவ்வளவு விளக்கம் கொடுக்கிறேன் என்றால் மேற்படி

சொன்ன நகைக்கடை அதிபர் திருவண்ணாமலையில் வேறு யாரிடமோ

பணத்தை மட்டும் கொடுத்து பூஜை செய்யச் சொல்லி விட்டார். அவர்கள்

செய்தார்களோ? இல்லையோ தெரியாது. மீண்டும் மூன்று மாதம் கழித்து

என்னிடம் வந்தார். ஐயா! நாங்கள் மகேஸ்வர பூஜை செய்து விட்டோம்

இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்கள். சரி ஏதேனும்

காரணம் இருக்கும் என்று முருகனைப் பூஜித்து மீண்டும் சுவடியைப்

பிரித்தேன். இப்போது அதே அகத்தியர் வந்தார். பின்வருமாறு உரைத்தார்.

 “பூஜையது இல்லை

 புண்ணியமாகவில்லை

 புவனமதில் இதுபோலும்

 பலருண்டு

 சிலருண்டு சிறப்பாகச் செய்ய

 முறையாகச் செய்துவா

 முடியுமது காரியம்

 முருகனது ஆசி! ஆசி! ஆசி!

 இவரிடம் பணம் வாங்கிய நபர் பூஜை செய்யவில்லை என்றும்,

புண்ணியம் உண்டாகவில்லை என்றும் இந்த உலகத்தில் இதுபோல்

ஏமாற்றுபவர் பலருண்டு என்றும், சிலர் மட்டுமே சிறப்பாகச் செய்கிறார்கள்

என்றும், அப்படி சிறப்பாகச் செய்யுமிடத்தில் முறையாகச் செய்து வந்தால்

நீநினைத்த காரியம் முருகனது அருளால் முடியும் என்றும் முருகனது

சீடர் அகத்தியர் உரைத்தார். அதன் பின்பு அவர் பணம் கொடுத்தவரை

விசாரித்து பார்க்கும்போது அவர் வேறொருவரிடம் பணம் கொடுத்து

விட்டதாகவும், அவர் செய்தாரோ இல்லையோ என்பது தெரியாது என்றும்

பதில் உரைத்தார். அதன் பின்பு தான் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் பற்றியும்

அதன் மகிமைகளையும் எடுத்துரைத்து சரவணன் சுவாமிகளிடம் தொடர்பு

செய்து கொடுத்தேன்.


செய்து முடித்து 90 நாளில் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர்

தனது மகனுக்கு இந்த நகைக்கடை அதிபரின் மகளை மணம் முடித்துக்

கொண்டார். ஏதோ சாதாரண பரிகாரம் செய்வது போன்று இந்த மகேஸ்வர

பூஜையை எண்ணி விடக் கூடாது. இல்லை இது பணம் சம்பாதிக்கும்

வழியோ என்று நினைத்து மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது.

என்னைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும். என்னை விட எனது

குருநாதரையும் அனைவருமே அறிவார்கள். எனவே நாடியில் வருவது

மகேஸ்வர பூஜை என்று தான் வரும் அதை எங்கு வேண்டுமானாலும்

செய்து கொள்ளலாம். ஆனால் முறையாகச் செய்ய வேண்டும். அது

தான் முக்கியம். தயவு ஆஸ்ரமத்தைப் பொறுத்த வரையில் மிகவும்

சிறப்பாக முறையாக மகேஸ்வர பூஜையை செய்யப்படுவதால் ப்ராப்தம்

இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் தான் இவ்வளவு

விளக்கம் இங்கு தர வேண்டியது அவசியமாகிறது.


அடியார்கள் சதா சர்வ காலமும் அந்த அருணாசலனையே துதித்து,

அந்த அருணாசலத்திலே வாழ்ந்து அந்த அருணாசலனுக்கு தம்மை

அர்ப்பணம் செய்த உண்மைத் துறவியாக வலம் வருகிறார்கள். எவர்

ஒருவர் சிவ சின்னங்களான விபூதி, ருத்திராட்சம், ஜடாமுடி, கமண்டலம்,

தவக்கோல் ஆகிய ஐந்தும் தரித்திருக்கிறார்களோ அவர்கள் சிவனடியார்கள்

மட்டுமில்லாது அவர்கள் உண்ணும் உணவு அந்த சிவனே உண்ணுவது

போலாகும் என்றும் புராணங்கள் புலப்படுத்துகின்றன. சாஸ்திரங்கள்

சாட்சி கூறுகின்றன. இதிகாசங்கள் இயம்புகின்றன. எனவே சாதாரண

மக்களுக்குச் செய்கின்ற அன்னதானம் ஒரு மடங்கு பலன் தரும் என்றால்

அடியார்களுக்கு செய்யப்படுகின்ற அன்னதானம் ஆயிரம் மடங்கு பலன்

தரும் என்பது அடுபவத்தின் கண்கூடு. சில உண்மைத் துறவிகள்

நேரிடையாக நாம் தரும் உணவை ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும்

வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.


ஜீவநாடி இரகசியங்கள் என்னும் தொடரில் வரும் உண்மைச் சம்பவங்கள்

நூற்றில் ஒன்றுதான். இது போல் ஆயிரம் இரகசியங்களை அனுபவித்து

வருகிறேன். பொதுவாக கர்ம வினை குறையாமல் எந்த காரியங்களும்

பலிப்பதில்லை. நமது கர்மவினையை மிகச் சுலபமாகக் குறைக்க ஒரே

வழி அன்னதானம் மட்டுமே,. அதனால் தான் மகேஸ்வர பூஜ மிக சிறப்பு


 இன்னும் ஒரு மாணவன் என்னைத் தேடி வந்து ஜீவநாடி கேட்க

வேண்டும் என்றார். வந்தவர் மீன ராசி. முருகப் பெருமான் பின்வருமாறு

 “மகிமை புகழ் மீனமதில்

 மேன்மையாய் அவதரித்து

 மலைபோலும் துன்பத்தை

 அனுபவிக்கும் காலமது

 மந்தனது சரியில்லா

 நிலை போலும் இக்காலம்

 அட்டமத்து சனியாலும்

 அடுக்கான துன்பமாகும்

 படிப்பிலே வெற்றி என்றால்

 பல வகையில் கஷ்டம்

 பங்காக பதினெட்டு அடிவேலு உண்டு

 பச்சரிசி மாவால் தீபம் பதினெட்டு போட்டு

 மதுரமது வைத்து பூஜித்து பின்

 தேர்வுக்கு செல் வெற்றியாம் ஆசி! ஆசி! ஆசி!

 மீன இராசியில் பிறந்துள்ளதால் இந்த காலம் மலைபோலும் துன்பத்தை

அனுபவிக்கும் காலம் ஆகும். மந்தன் என்று சொல்லப்படுகின்ற சனி

பகவான் 8ல் இருப்பதால் அடுக்கடுக்கான துன்பம் வரும். படிப்பிலே வெற்றி

உண்டு என்றாலும் பல வகையிலும் கஷ்டம் வரும் என்று பரிகாரம்

உரைத்தார் ஸ்ரீஞான ஸ்கந்தமூர்த்தி.

 திருவண்ணாமலை ஸ்ரீவகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் தனது மீனாட்சி

நாடியில் சொன்னபடி நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில்

18 சித்தர்களை முருகப் பெருமானது 18 கண்களாகக் கொண்டு 18

அடிவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமாவாசையிலும்

பன்னீரால் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு போட்டு பூஜை செய்ய

வேண்டும் என்று மீனாட்சி நாடியில் வந்த முறைப்படி அப்படியே

தவறாமல் செய்யப்படுகிறது. நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயம்

இருக்கின்ற இடத்தில் பல சித்தர்கள் தங்கம் செய்த இடம் என்று நாடியில்

சொல்லப்பட்டுள்ளது. இப்படி சிறப்புமிக்க ஆலயத்தில் உள்ள 18 அடி

வேல் முன்பு 18 நெய்தீபம் பச்சை மாவில் ஏற்ற வேண்டும் என்றும்,

தேன் வைத்து பூஜிக்க வேண்டும் என்றும் அந்த மாணவனுக்கு

முருகப்பெருமான் வாக்கில் உரைத்தார். அப்படி செய்தால் தேர்வில் வெற்றி

பெறலாம் என்றும் உரைத்தார்.


இதைக் கேட்ட அந்த மாணவனும் அவ்விதமே செய்து யாரும்

எதிர்பார்க்காத அளவில் மதிப்பெண் பெற்று தற்போது மேற்கல்வி படித்து

வருகிறார். நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும் சேவை

செய்கிறார். எனவே நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை

தீர்ப்பு நம்பிக்கை இல்லாமல் அந்த இறைவனே வந்தாலும் ஒரு பல
னும்

நடக்காது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

                                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

முருக வழிபாடு !!!


   
              ஞானஸ்கந்தமூர்த்தி கஜ வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு                        அருள்பாலிக்கும் காட்சி!!! 


சித்திரை நட்சத்திரக்காரர்கள் முருகனை வழிபட்டால் சகல போகங்கள் பெறலாம். தமிழரின் முதழ்கடவுள் எனவும் முருகனை பகர்வதுண்டு, எம்மனிதனும் மிக உயர்ந்த தெய்வமாகலாம் என்பதன் தெய்வக்காட்சியே முருகன் வடிவாகும்.

சூரபத்மனை அழித்து உலகை உய்விக்கும் பொருட்டு உருவானவன் முருகன். சிவனது ஐம்பொறிதளின்று உருவான ஐந்து ஒளிப்பிழம்பு, மனத்தின்று உருவான மற்றோர் ஒளிப்பிழம்பு. இவை ஆறினாலுமான ஒளித்திரந் சரவணப் பொய்கையில் பிரவேசித்து ஆறுமுகன் உருவானான் என்பது விளக்கம்.

முருகன் சிவசொரூபம் சக்திசொரூபம் ஆகிய இரண்டும் அமையப் பெற்றவன். முருகன், மூலாதாரம், சுவாதிஷ்டானம் முதலிய உடலில் உள்ள 6 தாரங்கலுக்கு ஒப்பானது முருகனது அறுவடை வீடுகள். ஆறுமுகப் பெருமானது சொரூப விளக்கமானது. பல்வேறு தத்துவங்களை எமக்குப் புகட்டுகிறது.

ஐயபுலன்களையறியும் ஐம்பொறிகளும், எண்ணை உதவும் நல்ல மனதும், முருகனது ஆறுமுகங்களுக்கு ஒப்பானவை. முருக வழிபாட்டில் குறிஞ்சி நிலத் தெய்வமாக போற்றப்படுகிறான். இயற்கையின் வண்ணம் எல்லாம் கொண்ட குன்றுதோறும் விளையாடுகிறான், பாலமுருகன்.
மாதந்தோறும் வரும் கார்த்திகைத் திருநாள் முருகப் பெருமானுக்கு உகந்த தினமாகும். மேலும் ஐப்பசி மாத சுக்கிலபட்ச பிரதமையன்று வரும். கந்தசஷ்டி நோன்பானது முருகப் பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இவ்வாறு நாட்களில் போது மக்களின் மனதில் உள்ள காமம், வெகுளி, ஈயாமை, செருக்கு, பொறாமை என்னும் ஆறு பகைகள் அழிக்கப்படுகின்றன.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் வீற்றிருக்கும்
முருகனை வணங்கி அருள் பெருவோமாக.

``உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் குருவாய்
வருவாய் அருவாய் குகனே!''

மனைவியின் காலில் விழுந்த முருகன்!



அருணகிரியார் திருப்புகழ் பாடல் ஒன்றில், வேடிச்சி காலி லன்று விழுவோனே என்று குறிப்பிடுகிறார். அதாவது, முருகப்பெருமான் தனது மனைவியான வள்ளியின் காலில் விழுந்தார் என்ற பொருளில் இப்பாடலை பாடினார். இதனை மேலோட்டமாக பார்த்தால் பொருள் புரியாது. உள்ளார்ந்து படித்தால் இதற்குள் இருக்கும் பொருள் விளங்கும்.வள்ளி, திருமாலின் மகள், இவள் முருகப்பெருமானின் மீது அதிக பக்தி கொண்டவள். தெய்வானையும் திருமாலின் மகள் தான். அவளும், முருக பக்தையே என்றாலும், தேவர்களை காத்ததற்காக அவளை இந்திரன் முருகனிடம் ஒப்படைத்து விட்டான். அவள் முருகனுடன் கலந்து விட்டாள். 

இது பயன் கருதி செய்த பக்தி வகையில் அடங்கும். ஆனால், வள்ளியம்மை பூமியில் தாழ்த்தப்பட்ட சமுதாயம் ஒன்றில் பிறக்கிறாள். முருகனைக் குல தெய்வமாகக் கொள்கிறாள். அவளை ஒரு பக்தையாகவே பார்க்கிறார் முருகன். அவளது பக்தியின் ஆழத்தைச் சோதிக்கிறார். எல்லா சோதனையிலும் அவள் வெல்கிறாள். பக்தன் இறைவனின் காலில் விழுவது போல, வள்ளியம்மையாகிய பக்தையின் காலில் அவளது பக்தியைப் பாராட்டி முருகன் விழுந்து, அவளை ஆட்கொள்கிறார். அதாவது, தன்னிடம் பக்தி கொண்டவர்களை முருகன் ஆட்கொள்வார் என்ற பொருளில் அருணகிரியார் இப்பாடலை பாடினார். உலகுக்கே கொடுப்பவன் கண்ணன். அந்த கண்ணன் யாசகம் கேட்டு மகாபலியிடமும், கர்ணனிடமும் செல்லவில்லையா? அதுபோல், தான் இதுவும்! தெய்வத் திருவிளையாடல்களை மனிதத்துவத்துடன் ஒப்பிட்டு பார்க்கக்கூடாது. தெய்வீக சிந்தனையுடன் மட்டும்தான் பார்க்க வேண்டும்.

முருகா என்று ஒரு தரம் சொன்னால் கோடி முறை சொன்ன பலன்!!!


முருகப்பெருமானின் மூலமந்திரமான சரவணபவ என்பதை சடாக்ஷரம் (ஆறெழுத்து மந்திரம்) என்று கூறுவர். தமிழில் இம்மந்திரம் சடக்கர மந்திரம் எனப்படும். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியத்தில் முருகனுக்குரிய தமிழ் மந்திரங்களான முருகா, குமரா போன்றவை குறிக்கப் பெற்றுள்ளன. இம்மந்திரங்களை அருணகிரிநாதர் தன் பாடல்களில் பயந்த தனி வழிக்குத் துணை, முன் செய்த பழிக்குத் துணை என்று குறிப்பிடுகிறார். தெய்வ உபாசனையில் மந்திரஜபங்களுக்கு விசேஷத்தன்மை உண்டு. இம்முருக மந்திரத்தின் பெருமையினை வாரியார் சுவாமி முருகா என்று ஒரு தரம் சொன்னால் கோடிமுறை தெய்வநாமாவை சொன்ன பலன் கிடைக்கும் என்று குறிப்பிடுகிறார்

பழநி முருகனின் கோவண ரகசியம்!



]


ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.