வியாழன், 22 செப்டம்பர், 2016

ஜீவ நாடி உரைக்காதே என்று தடுத்து நிறுத்திய குலதெய்வம்


ஒருவர் வந்து ஜீவ நாடியில் முருகனின் அருள்வாக்கைக் கேட்க பிராத்தனை செய்து அமர்ந்தார். அப்போது ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் வழக்கம்போல் சுவடியைப் பிரித்து பிரார்த்தனை செய்து ஜீவ நாடியில் வரும் பாடல்களை வாசிக்கத் தொடங்கினார். சுமார் இரண்டு வரி பாடல்கள் வந்தவுடன் ஒரு பெரிய சூலம் ஒன்று ஜீவ நாடியில் தோன்றி அடுத்து வரும் எழுத்துக்களைப் படிக்கவிடாமல் தடை செய்தது. யார் இந்த சூலம் என்று முருகப்பெருமானிடம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் கேட்க இந்த சூலம் அங்காளம்மன் சூலம். அந்த சூலம் உடைய அம்மன் இவனது குலதெய்வம். குலதெய்வம் இருப்பதையே மறந்துவிட்டு இங்கு என்னிடம் வந்திருக்கின்றான். எனவே இவனுக்கு வாக்கு உரைக்காதே என்று அந்த அங்காளம்மன் தடை செய்கின்றது. எட்டு அமாவாசை தவறாமல் சென்று அந்த அம்மனை பூஜிக்கச்சொல் அதன் பின்பே இவனது வாழ்வு மாறும். குழந்தை பாக்கியம் கிட்டும். தொழில் சிறக்கும். என்னை வந்து பார்க்காமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு இங்கு உன்னிடம் வந்திருக்கின்றான் எனவே முருகா நீ இவனுக்கு வாக்கு உரைக்காதே என்று அந்த அம்பிகை உரைக்கின்றாள் என்று முருகப்பெருமான் உரைப்பதை ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் சொல்ல வந்தவர் அப்படியே உருக்குழைந்து போய்விட்டார் . சுவாமி முருகன் உரைப்பது சத்தியம். எதோ ஒரு காரணத்தால் குலதெய்வத்தை வணங்கவில்லை. எங்கள் குல தெய்வத்தில் தாங்கள் உரைப்பது போன்றே ஒரு பெரிய சூலம் உண்டு. அது சத்தியம். வருகின்ற அமாவாசை முதலாகவே நான் குலதெய்வ வழிபாட்டைத் தொடங்குகின்றேன் என்றார். ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் குலதெய்வம் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தை அவருக்குக் கொடுத்தார்கள். அதாவது குலதெய்வம் என்பது நமது குலத்தில் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு  வரும் தெய்வம் ஆகும்.  இத்தகைய குல தெய்வமே நமக்கு எளிமையாக அருள் தரும்.  மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் விரைவில் பெற்றுத் தரும். பெரும்பாலும் குலதெய்வம் சிறு தெய்வங்களாகவே காணப்படும்.  ஆனால் அதன் சக்தியை அளவிட்டுச் சொல்ல முடியாது.  அதே சமயம் சிறு தெய்வம்தானே என்று அலட்சியப் படுத்தவும் கூடாது.  ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதியைப் பெற்றுத்தான் எமன் கூட ஒருவரின் உயிரை எடுக்க முடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவைஎனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றனகுலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவையாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. ஒருவர் எந்த வழிபாடு செய்யாவிட்டாலும் பரவாயில்லைஆனால் குலதெய்வ வழிபாடு மட்டும் செய்யாமல் இருக்கவே கூடாதுஅது நமது குலத்திற்கே கேடு விளைவிக்கும். மற்ற கோவில்களுக்குச் செல்லும் போது தேங்காய், பழம் வாங்கி அர்ச்சனை செய்து திரும்புவீர்கள். ஆனால் குலதெய்வத்தை வழிபடச் செல்லும் போது கூடுதலாக அபிடேகம் செய்து பொங்கல் வைத்து படையல் போட்டு வணங்கிய பின்னரே, அர்ச்சனை செய்து திரும்ப வேண்டும்.இதை செய்வதே முறையான குலதெய்வ வழிபாடு ஆகும். இந்த குலதெய்வ வழிப்பாட்டில் குறைபாடுகள் ஏற்படும் போது எண்ணிய காரியங்கள் ஈடேறுவதில் சிக்கல், பொருளாதார நிலையில் மந்தமான போக்கு, செய்தொழில் முடக்கம், சேர்ந்தவரால் விரையம், பிள்ளைகள் வழியில் தொல்லை என்று பல்வேறு இடர்பாடுகள் தோன்றும்.
 நீண்ட நாட்கள் கடுமையான முயற்சி செய்த பின்பே ஜீவ நாடி கேட்க வந்துள்ளீர்கள். ஆனால் குலதெய்வ அருள் குறை இருந்ததால் தொடர்ந்து வாக்குரைக்க வேண்டாம் என்று முருகனிடம் உங்கள் குலதெய்வம் உரைத்துவிட்டடது. அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு காலம் எதற்கெடுத்தாலும் தடைகள் வந்திருக்கின்றது. எனவே குலதெய்வ வழிபாட்டை முறையாகச்செய்து விட்டு மீண்டும் வந்து ஜீவ நாடி கேட்டுக் கொள்ளும்படி சொல்லி திரு நீறு கொடுத்து ஆசி கூறி ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அவரை அனுப்பிவைத்தார்கள். வாசகர்கள் இந்த சம்பவத்தை மனதில் வைத்து உங்கள் குலதெய்வ வழிபாட்டைத் தவறாமல் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
          ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக