புதன், 12 அக்டோபர், 2016

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி-43


முருகன் ஜீவ நாடியில் தோன்றி அருள் வாக்கு சொல்லும் அற்புத ஸ்தலம். முருகனின் பாதம் பட்ட இடம் என்று மீனாட்சி நாடியில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்தில் இரண்டு மூலவர்கள் உண்டு. ஒன்று சுயம்பு வடிவில் உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி இரண்டாவது ஸ்ரீ பால சுப்ரமண்யர்.மூலவர் முன்பு இரண்டு வாகனங்கள் உண்டு. ஒன்று கஜ வாகனம், இரண்டாவது மயில் வாகனம்.இரண்டு பலி பீடங்கள் உண்டு.இரண்டு விநாயகர்கள் உண்டு. ஒன்று வலம்புரி விநாயகர்இரண்டாவது இடம்புரி விநாயகர். முருகனுக்கு முன்பு 18 சித்தர்களைக் குறிக்கும் விதமாக 18 அடி வேல் உள்ளது. இந்த வேலை பிரதிஷ்டை செய்யச் சொன்னது மீனாட்சி நாடி, போகர் தவம் செய்த இடம். அகத்தியர் படுத்த கோலத்தில் மலை அருகில் உள்ளது. அமாவாஸை பூஜை மிகச் சிறப்பாக நடக்கும் ஸ்தலம். வைகாசி விசாகத்தில் குழந்தை பிறக்க ஆசிர்வாதம் தரப்படுகிறது. அதை உண்ட பல நூறு பேர்களுக்கு மகப்பேறு உண்டாகி இருக்கிறது. தைப்பூசத்தில் இரண்டு நாட்கள் பெருந்திருவிழா நடத்தி வழிபாடு செய்யப்படுகின்றது.இப்படி பல்வேறு சிறப்புகள் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்திற்கு இருப்பதால்தான் அந்த இடத்தில் முருகனின் அருள் ஜீவ நாடியில் வெளிப்பட்டு ஏராளமான அதிசயங்களைத் தர காரணமாக அமைகின்றது எனலாம். எங்கும் இல்லாத சிறப்பாக 18 அடி வேல் நமது ஆஸ்ரமத்தில் பூஜிக்கப்படுகின்றது.
முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப் பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத் திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில் கூர்மையாகவும் இருக்ச்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன் சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக இருக்கவேண்டும். அவ்வறிவைத் தருபவர் இறைவனே.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவரை நம்பி வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றார் முருகப் பெருமான். மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான் இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம் விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா சக்திகளையும் ஆட்சி செய்கின்றார் என்பதைக் காட்டுகிறது. தீராத நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகப்பெருமான். தமிழர்களின் பெயர்களில் சக்திவேல், ராஜவேல் பழனிவேல் போன்ற வேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன், வேலப்பன், வேலம்மாள் என்ற பெயர்களும் அதிகமாக காணப்படுகின்றன. முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும்,பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதைஉணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடிஅகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்றுகருதப்படுகிறது. கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றிகூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல்,வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும்முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர்தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரிநாதர் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெறலாயிற்று. ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரிநாதர் பாடிய வேல் வகுப்பு,வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார். வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரிநாதர் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடியகுறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத்தெளிவுப்படுத்துகின்றது. திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ளமுருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன்கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தமிழகத்தில்உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை.
இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாகஉள்ளன. முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார். பெரும்பாலான ஹிந்துமத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர்.இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை. வாஸனைகளும், அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூலகாரணம். இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணரமுதல் தடை. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான்.வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான். முருகனின் சக்திஆயுதமாகிய வேல், இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்லசக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்.
இப்படி பல்வேறு பெருமைகள் உடைய வேலை ஒன்பதின் தத்துவமாக 18 அடி எனும் 9ன் அமைப்பில் அமைக்கப்பட்டது இன்னும் சிறப்பு. அந்த ஒன்பதின் சிறப்புகளியும் தெரிந்து கொள்வோம்.
எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்கின்றனர், சீனர்களின் சொர்க்க கோபுரம், ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து, ஐரோப்பா, கிரீக் முதலான நாடுகளும் 9-ஆம் எண்ணை விசேஷமாகப் பயன்படுத்திப் போற்றுகின்றன. புத்த மதத்தில், மிக முக்கியமான சடங்குகள் யாவும் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறும். தங்கள், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் சுத்தத்தை 999 என்று மதிப்பிடுவார்கள். பெண்களின் கர்ப்பம், பூரணமாவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்! பரத கண்டத்தில், நம் இந்தியாவில் ஒன்பது எனும் எண் இன்னும் மகத்துவங்கள் கொண்டது. ஒன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். நவ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது.
நவ சக்திகள் - வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி
நவ தீர்த்தங்கள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி
நவ வீரர்கள் - வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்திரன், வீரராக்ஷசன், வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன்
நவ அபிஷேகங்கள்: மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.
நவ ரசம்: இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்.
நவக்கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது
நவமணிகள் - கோமேதகம், நீலம், வைரம், பவளம், புட்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம்
நவ திரவியங்கள் - பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம்
நவலோகம் (தாது): பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்
நவ தானியங்கள் - நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை
சிவ விரதங்கள் ஒன்பது: சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்
நவசந்தி தாளங்கள் - அரிதாளம், அருமதாளம், சமதாளம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவர்த்திதாளம், படிமதாளம், விடதாளம்
அடியார்களின் பண்புகள்: எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்
நவரத்னங்கள் - தன்வந்த்ரி, க்ஷணபகர், அமரஸிம்ஹர், சங்கு, வேதாலபட்டர், கடகர்ப்பரர், காளிதாசர், வராகமிஹிரர், வரருசி (விக்ரமார்க்கனின் சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
அடியார்களின் நவகுணங்கள்: அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மவுனம்.
நவ நிதிகள் - சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம்
நவ குண்டங்கள்: யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்: சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.
நவவித பக்தி : சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்கியம், ஆத்ம நிவேதனம்
நவ பிரம்மாக்கள் : குமார பிரம்மன், அர்க்க பிரம்மன், வீர பிரம்மன், பால பிரம்மன், சுவர்க்க பிரம்மன், கருட பிரம்மன், விஸ்வ பிரம்மன், பத்ம பிரம்மன், தராக பிரம்மன்
நவக்கிரக தலங்கள் - சூரியனார் கோயிவில், திங்களூர், வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, ஆலங்குடி, கஞ்சனூர், திருநள்ளாறு, திருநாகேஸ்வரம், கீழ்ப்பெரும்பள்ளம்
நவபாஷாணம் - வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கண்டகம், கவுரி பாஷாணம், வெள்ளை பாஷாணம், ம்ருதர்சிங், சிலாஷத்
நவதுர்க்கா - ஸித்திதத்ரி, கஷ்முந்தா, பிரம்மாச்சாரினி, ஷைலபுத்ரி, மகா கவுரி, சந்திரகாந்தா, ஸ்கந்தமாதா, மகிஷாசுரமர்த்தினி, காளராத்ரி
நவ சக்கரங்கள் - த்ரைலோக்ய மோகன சக்கரம், சர்வசாபுரக சக்கரம், சர்வ சம்மோகன சக்கரம், சர்வ சவுபாக்ய சக்கரம், சர்வார்த்த சாதக சக்கரம், சர்வ ரக்ஷõகர சக்கரம், சர்வ ரோஹ ஹர சக்கரம், சர்வ ஸித்தி ப்ரத சக்கரம், சர்வனந்தமைய சக்கரம்.
நவநாதர்கள் - ஆதிநாதர், உதய நாதர், சத்ய நாதர், சந்தோஷ நாதர், ஆச்சாள் அசாம்பயநாதர், கஜ்வேலி கஜ்கண்டர் நாதர், சித்த சொவ்றங்கி நாதர், மச்சேந்திர நாதர், குரு கோரக்க நாதர்
உடலின் நவ துவாரங்கள் : இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், ஒரு வாய், இரண்டு மலஜல துவாரங்கள்
உடலின் ஒன்பது சக்கரங்கள் : தோல், ரத்தம், மாமிசம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை, சுக்கிலம், தேஜஸ், ரோமம்
18 புராணங்கள், 18 படிகள் என அனைத்தும் 9-ன் மூலமாக தான் உள்ளன. காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும். எல்லா தெய்வத்தின் நாமாவளியும் ஜப மாலையின் எண்ணிக்கையும் இதை அடிப்படையாகக் கொண்டதுதான்! புத்த மதத்தினர் 108 முறை மணியடித்து, புது வருடத்தை வரவேற்றுக் கொண்டாடுகின்றனர். சீனாவில், 36 மணிகளை மூன்று பிரிவாகக் கொண்டு, சு ஸூ எனப்படும் மாலையைக் கொண்டு ஜபம் செய்வார்கள்.
ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான மாதம்... மார்கழி. இது வருடத்தின் 9-வது மாதம்! மனிதராகப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டிய ஸ்ரீராமபிரான் பிறந்தது, 9-ஆம் திதியான நவமி நாளில்தான்.
இப்படி சிறப்பு மிக்க 9ம் எண்ணின் இரண்டு மடங்காகிய 18 எனும் எண்ணைக் குறிக்கும் விதமாக 18 அடி வேலுக்கு செய்கின்ற பூஜை மற்றும் வழிபாடுகள் எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் அதை நீக்கி வாழ்வில் ஒரு பெரிய அதிசய மாற்றத்தையே ஏற்படுத்துவதை அனுபவத்தில் பார்த்து வருகின்றோம். அந்த 18 அடி வேலை பிரதிஷ்டை செய்யத் தொடங்கிய அடுத்த நொடியே வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்ற அளவு மழை பொழிவு ஏற்பட்டது. அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் அரோகரா…எனும் கோஷம் போட்டு ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் என்று மெய்சிலிர்த்தார்கள். அதை இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கின்றது. மீனாட்சி நாடி சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட வேல் என்பதால் அம்பாளின் அருளும் அந்த வேலில் இருப்பதால் அமாவாசை பூஜையில் கலந்து கொள்பவர்களும் முன் அனுமதியின் படி ஜீவ நாடி கேட்க வருபவர்களும் தவறாமல் 18 அடி வேலின் முன்பு பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இன்னும் ஜீவ நாடி மூலம் நடந்து வருகின்ற அதிசயங்கள்                                    தொடரும்….

             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக