சனி, 7 ஜூன், 2014

ஜீவநாடி இரகசியங்கள் பகுதி-3




அவரவர் கர்ம வினைகளைப் பொறுத்தே நாடியில் பலன்கள் அமைகிறது. 

எதிர்பார்த்த்து வராமல் ஏதேனும் எதிர்பாராத பலன்கள் கிடைப்பதும் 

உண்டு. ஓர் இளைஞர் ஒருவருக்கு நாடி படிக்கும்போது அவர் எனக்கு 

என்ன தொழில் அமையும் எனக் கேட்டார். படித்தது B.E. வேலை எதுவும் 

கிடைக்கவில்லை. அவர் DIPLOMO படிக்கும் போதே என்னிடம் தொடர்பு 

கொண்டார். மேலும் படி என நாடியில் வந்தது. அதே போல் B.E. படித்து 

முடித்தார். எதிர்பார்த்த அளவு வேலையில்லை வருத்தத்துடன் வந்தார். 

அவருக்கு பின்வருமாறு வந்தது.

“கற்ற கல்வியால்

காலம் முழுவதும்

கணிவான பலன் உண்டு

கட்டிய மனைவி வந்த பின்னே

காலம் கனியும் 

கச்சிதமாய் முடியும்

குருகுலச் சேவைசெய்

குணவதி ஒருவள் வருவாள்

குடும்பம் அமைப்பாள் பின்பே

மற்றவையாம்”

அந்த இளைஞர் சிரித்தார். காரணம் குருகுலச் சேவை என்றால் ஆசிரியப் 

பணி. அவருக்கு அது பிடிக்காத பணியாம். அதே போல் திருமணம் பற்றிய 

எண்ணமே இல்லை. இப்படி ஏறுக்கு மாறாக வருகிறதே என்ன செய்வேன் 

என்று புலம்பினார். எனக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது. என்ன 

வருகிறதோ அதை உரைப்பதே எமது வேலை. முக மகிழ்ச்சிக்காகவோ, 

வேறு ஏதேனும் ஆசைக்காகவோ பொய் உரைத்தால் சித்தர்கள் 

சபித்துவிடுவார்கள். தேவதை சாபம் குருவால் நீங்கும். ஆனால் குரு சாபம் 

எந்த ஒரு தேவதையாலும் நீங்காது. நீ முதலில் ஆசிரியப் பணி தேடு. 

உடனே மனைவி அமைவாள். அதன் பின்பே நிரந்தரப் பணி. தற்போது சுய 

தொழிலும் வேண்டாம். INDUSTRY செல்லவும் வழி இல்லை என்றேன். சரி 

முருகன் விட்ட வழி என்று வீடு திரும்பினார். சில பரிகாரங்களும் ஒரு 

சில ஆலய தரிசனங்களையும் செய்யுமாறு நாடியில் வந்தது. சொன்னபடி 

அத்துணை ஆலய தரிசனங்களையும் செய்தார். ஒரு தனியார் தொழில் 

நுட்பக் கல்லூரியில் இளநிலை விரிவுரையாளர் பணி கிடைத்தது. சொற்ப 

வருமானம். என்னிடம் சொன்னார். சேவை போல்தான் செய்ய வேண்டும் 

என வந்துள்ளதால் சேவையாகவே செய் என்றேன். ஒரு வருடத்தில் 

நல்ல சம்பள உயர்வை அடைகின்ற தருணம், தனது உறவினரி மகள் 

உறுதி வார்த்தை கூறி நிச்சயமானது திருமணம். ஓர் ஆண் குழந்தையும் 

பெற்றாகிவிட்டது. இப்போது தனியாரில்  இருந்தாலும் தரமான சம்பளத்துடன் 

தன்னம்பிக்கையுடன் வேலை செய்து வருகிறார் அந்த இளைஞர் அப்போது 

எதிர்பார்த்தது வேறு அவருக்கு நாடி உரைத்தது நடந்ததே உண்மை 

என ஆனது. சித்தர்கள் வாழ்வை அடைவார்கள் என்பதை இதன் மூலம் 

அடியேனும் உணர்ந்து கொண்டேன். 



ஜீவ நாடியைக் கையில் வைத்திருப்பது கத்தி மேல் நடப்பதற்குச் சமம். 

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான். என்ன வருகிறதோ அதை 

மட்டும் உரைக்க வேண்டும். விளக்கம் கூட பார்த்துத்தான் பக்குவமாகக் 

கொடுக்க வேண்டும். சொல்லுவது கவிதை நடையிலும் வரும். சாதாரண 

மொழியாகவும் வரும். அதைவிளக்குகிறேன் என்று இறங்கி விபரீதத்தை 

விளைவித்து விடக் கூடாது என்பதால் எனக்கு புரிந்ததை மட்டும் 

சொல்கிறேன். இங்கே அகம்பாவம் வந்துவிட்டாலும் அவ்வளவுதான்.

அதே போல் யார் ஒருவர் சித்தர்கள் மீதும் முருகப் பெருமான் மீதும் நூறு 

சதவீதம் நம்பிக்கை வைத்து வந்து நாடியில் அருள் வாக்கு கேட்கிறார்களோ 

அவர்களுக்கு அடுத்த நிமிடம் முதலே பல்வேறு ஆச்சரியங்களும், 

அதிசயங்களும் நடக்கக் காண்கிறார்கள். 



நாடியை பக்தி இல்லாதவர்க்கு உரைக்கக் கூடாது. வக்ர புத்தியுடன் 

சோதித்து பார்ப்பவர்க்கும் உரைக்கக் கூடாது. உள் ஒன்று வைத்து 

புறம் ஒன்று பேசுபவர்க்கும் உரைக்கக் கூடாது. அவ்விதம் உரைத்தால் 

உரைத்தவனுக்கும் இழுக்கு. இங்கு படிக்கும்போது கேட்டு விட்டு 

வெளியே சென்று வாய்க்கு வந்தபடி பேசுபவர்கள் எங்களுக்குத் தெரிந்தே 

சித்தர்களின் சாபத்திற்கு ஆளாகிறார்கள். இந்த தொடரை எழுதுவதற்கே 

பல முறை உத்தரவு கேட்டு சித்தர்களும், முருகப் பெருமானும் சரி என 

சம்மதம் தந்ததால்தான் எழுதுகிறோம். ஏனெனில் பல பேர் படிப்பதால் 

அனைவரும் ஒரே மாதிரி இருக்கமாட்டார்கள். அவர்களின் கசப்பான 

அனுபவங்கள் நாடி மீது வெறுப்போடு இருப்பவர்கள், நம்பிக்கை 

அற்றவர்கள் இதைப் பழித்துக் கூறி சித்தர்கள் சாபத்தைப் பெற நேரலாம். 

எனவே அடியேன் கேட்டுக் கொள்வது என்னவெனில் நம்பிக்கை 

இல்லாதவர்கள் இந்த தொடரைப் படிக்கவே வேண்டாம். நம்பிக்கையுடன் 

படிக்கும்போது பல கஷ்டங்கள் தீருவதை உணர்வீர்கள்.

ஏனெனில் இந்தத் தொடரில் எழுதப்படுகின்ற எழுத்துக்கள் சித்தர்களின் 

அருளால் செதுக்கப்படுபவை. எனது அத்துனை கட்டுரைகளும் பூஜை 

அறையில் தானாக எழுதும் முறையில் (AUTO WRITTING) கிடைக்கின்ற 

முத்துக்கள். பயன்படுத்தினால் நிச்சயம் மேன்மைகளைக் காண்பீர்கள்.



ஜீவநாடி மட்டுமல்ல ஜோதிடர்களிடம் செல்லும் போதும் அந்த 

ஜோதிடரை தெய்வக்ஞன் என்கிறோம். அவரையும் அவரது பேச்சையும் 

நம்பிக்கையுடன் மதித்துக் கேட்டீர்களாயின் அந்த ஜோதிடரைச் சுற்றிலும் 

உள்ள சூட்சும தேவதைகளால் ஆசிர்வதிக்கப்படுவீர்கள். அவரிடம் கேட்டு 

விட்டு வெளியே சென்று அவதூறு பேசினால் நிச்சயம் தேவதா சாபம் 

ஏற்படும். அதன் பின்பு எந்த ஜோதிடரிடம் சென்றாலும் ஜாதகம் வேலை 

செய்யாது. ஜோதிடர்களுக்கு கணிசமான தட்சிணைகள் கொடுங்கள். 



காரணம் தட்சிணை இல்லாமல் ஜோதிடம் கேட்டாலும், சொன்னாலும் 

தட்சிணா தேவி சபிப்பாள். ஏன் இப்படி எழுதுகிறார் என நினைக்க 

வேண்டாம். எல்லாம் எமது குருவின் உபதேச மொழிகள். ஜோதிடர்களும் 

நம்பி வருகின்ற மக்களை ஏமாற்றினாலும், தட்சிணை விஷயத்தில் 

ஏமாற்றி பிழை செய்தாலும் மேற்படியான சாபங்களைப் பெற நேரிடலாம். 

ஜோதிடமும் வளர வேண்டும். ஜோதிடர்களும் வளர வேண்டும். 

ஜோதிடர்த்தை நாடி வருகின்ற மக்களும் வாழ்க்கையில் உயர வேண்டும் 


என்பதே எமது அவா. அதற்காகவே இவற்றை எழுதும்படி ஆனதே தவிர 

எந்த நோக்கமும் இல்லை. இன்னும் ஜீவ நாடி மூலம் ஞானஸ்கந்தமூர்த்தி 

நடத்திய திருவிளையாடல்களைத் தொடர்ந்து பார்ப்போம். ஜீவ நாடி 

என்பதற்கு ஜீவனுள்ள எழுத்துக்களைத் தோன்றி மறையச் செய்யும் 

என்றே பொருள் உண்டு. ஆனாலும் எல்லா நேரங்களில் தோன்றுகின்ற 

எழுத்துக்களைப் பார்த்தே படிப்பது சுலபமாக இருப்பதில்லை. பல 

நேரங்களில் சுவடியைப் பிரித்த உடனேயே சரளமாகப் பாடல் வடிவில் 

முக்காலமும் வந்து விடுகின்றன. அப்போது எந்த எழுத்துக்களும் 

சுவடியில் இருப்பதில்லை. சில நேரங்களில் வரைபடங்கள் தோன்றும். 

சங்கு, சக்கரம் மற்றும் மந்திரங்கள் போன்றவை தோன்றும் அதை 

வைத்து வழிபடும் தெய்வம், செல்கின்ற ஆலயம், பரிகாரம் போன்றவற்றை 

அறிந்துக் கொள்ள முடிகிறது. சில நேரங்களில் மூச்சுவிடவே இடைவெளி 

தராமல் வேகமாக பாடல்கள் வருவதும் உண்டு. இது அத்தனையும் வந்து 

அமர்பவரின் கர்ம வினைகளையும், அவர்களது குல தெய்வ ஆவியையும் 

பொறுத்தே அமைகிறது.



ஜீவ நாடி படிப்பதற்கு எந்தத் தகவலையும் தரவேண்டும் என்ற அவசியம் 

இல்லை. ஆனால் சில நேரங்களில் கைப் பெருவிரல் ரேகை, நட்சத்திரம், 

இராசி, ஜாதகம், பிறந்த தேதி போன்ற பல தகவல்கள் தேவைப்படுகின்றன. 

சுருங்கச் சொல்வதென்றால் ஒருவருக்கு ஏற்படும் அனுபவம் மற்றவர்க்கு 

ஏற்படுவதில்லை. அதேபோல் பலன்கள் நடக்கும் விஷயத்தில் நாடியில் 

வந்த ஆலய தரிசனங்களை மனப்பூர்வமாகச் செய்யாமல் பலன்களும் 

நடப்பதில்லை. சென்ற ஜென்ம தீவினை அதிகம் உடையவர்கள் பல 

ஆண்டுகள் பரிகாரங்கள் செய்கின்ற நிலைகளும் ஏற்படுகின்றன. இது 

பொறுமையான அதே சமயத்தில் உறுதியான வழிமுறை அவசரம் கூடவே 

கூடாது. 



எனது நீண்ட கால நண்பர் ஒருவர் அரிசி ஆலை வைத்து நடத்துகிறார். 

கூட்டுத் தொழில் தான். பல இலட்சங்களை முதலீடாகப் போட்டு சிறப்பான 

நிலையில் செய்து வருகிறார். சில நாட்கள் செல்லச் செல்ல ஏதேனும் 

துர்ச்சம்பவங்கள் நடப்பது, நாய் ஆலையை நோக்கி ஊளையிடுவது, 

கூட்டாளிகளுக்குள் சண்டை வருவது என அவ்வப்போது குழப்பங்கள் 

ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. காரணம் புரியாமல் அவர்களின் 

ஜாதகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து ஞானஸ்கந்தர் நாடி படிக்க 

வேண்டும் என்று கேட்டனர். நெருங்கிய நண்பர் என்பதால் உத்தரவு 

கேட்டேன். ஒரு குறிப்பிட்ட நாளைச் சொல்லி அப்போது படி என உத்தரவு 

வந்தது. நண்பரும் சரி என சம்மதித்து குறிப்பிட்ட நாளில் வீடு, வாசல் 

சுத்தம் செய்து, பசுங்கோமியம் இறைத்து, குலதெய்வ பூஜைகளைச் 

செய்து சுவடியைப் பிரித்தேன். பலன்கள் பின்வருமாறு வந்தது.



“ஆகாத சிலபேர்கள் சேர்ந்துகொண்டு

அபிசாரப் பிரயோகம் செய்ததாலே 

ஆலைக்கும் பிரச்சினை உண்டு

ஆபத்தும் அருகிலே உண்டு உண்டு

ஆன்மியூரில் அருள் சமாதிக்குள் இருந்துகொண்டு

அற்புதம் பல புரியும் ஆறுமுகன் அடியார் அருளிய

ஆச்சரிய மூட்டும் சண்முகக் கவசத்தைச்

சரியாகப் படித்து வா பின்னர்

பைரவரின் அருளாலே பிரச்சினை தீரும்

பொறுமையிறு பொறுமையிறு

பெருமை கிட்டும் பொறுமையிறு” 


எதிரிகள் இல்லாதவர்கள் இந்தக் கலியுகத்தில் இருக்கவே முடியாது. 

எதிர்ப்பின் காரணமாக கண் திருஷ்டி ஏற்படுவதும் அதனால் பல்வேறு 

தடைகள் வருவதும் இயற்கை அதே சமயம் பிரச்சனைகள் உச்ச நிலையை 

அடையும்போது மனிதர்கள் கையில் எடுப்பது அபிசாரப் பிரயோகம். 

மாந்திரீகம், ஏவல், பில்லி, சூன்யம், செய்வினை என்று பல பெயர்களால் 

இதை அழைக்கிறார்கள்.

தொடரும்....

3 கருத்துகள்:

  1. அய்யா, என்னுடைய ஜாதகத்தை தாங்கள் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆவல்.தாங்கள் அனுமதி அளித்தால் போனில் தொடர்புக் கொள்கின்றேன்.........

    பதிலளிநீக்கு
  2. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல்கள் அற்புதம் !!!........

    பதிலளிநீக்கு