சண்முகக் கவசத்தின் மகிமை:-
பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.
சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.
தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக