உலகப் புகழ் ஜோதிட மேதை” பண்டித காழியூர் நாராயணன் அவர்கள் விழாவைத் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில் மக்கள்
"ஜோதிடம் என்றால் ஜோதிடத்தையே முழுதும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது, அதேபோல் மருத்துவர் என்றால் மருத்துவரையே முழுதும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது, கடவுள் என்றால் கடவுளையே நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது"
தன்னம்பிக்கை மிக மிக அவசியம், ஒரு பேட்டியில் கூட என்னைக் கேட்டார்கள் நீங்கள் பெரியாரையும் சங்கராச்சாரியாரையும் கலந்த மாதிரி பேசுகிறீர்கள் என்று,உண்மைதான் ஜோதிடம் பொய் அல்ல அதே சமயம் அதையே பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாது. நான் இப்படிச் சொல்வதால் சிலருக்கு என் கருத்துக்கள் பிடிக்காமல் கூட போகலாம் ஆனால் அதுதான் நல்லது. ஜோதிடரிடம் சென்று நல்ல சக்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே அல்லாது நமது கஷ்டங்களைச் சொல்லி ஒப்பாரி வைக்கும் இடம் என்று கருதக் கூடாது. இந்த நிக்ழ்ச்சிக்கு என்னை அழைத்தவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் ஒரு கேள்வி மட்டும் கேட்டேன். ஏதோ ஒரு கிராமத்தில் வைத்திருக்கிறீர்களே அங்கு கூட்டம் வருமா? என்பதுதான் அதற்கு அவர்கள் சொன்ன பதில் வந்து பாருங்கள் என்றார்கள். சரி ஒரு பத்து பதினைந்து பேர் இருப்பார்கள் என்று எண்ணி வந்தேன் உண்மையிலேயே அசந்து போய்விட்டேன். அடடா...என்ன கூட்டம்... என்ன கூட்டம்... உண்மையிலேயே மிக்க மகிழ்சியாக இருக்கிறது.
இவ்வளவு அருமையான ஏற்பாடுகளை எப்படிச் செய்ய முடிகிறது எனக் கேட்டேன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்களின் சீடர்களும் தொண்டர்களும் இரவு பகல் பாராது இதற்காக உழைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி அடந்தேன். சாத்தியமே படாத ஒரு விஷயம் இன்று சாத்தியாமாகி இருக்கிறது. இந்த இடம் எனக்கு திருப்பதி போன்ற உணர்வைத் தருகிறது. ஜோதிட உலகில் பி.டி.ஜெகதீஸ்வரன் எனும் ஒரு இளம் புயல் கிளம்பி இருக்கிறது. இந்த வயதில் யாருமே தொடாத விஷயங்களை ஆய்வு செய்து மூன்று நூல்களை எழுதி இருப்பது பெரிய விஷயம். அவரிடம் திறமை இருக்கிறது, அறிவு இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது, பண்பு இருக்கிறது, பரிசுத்தம் இருக்கிறது அதேபோல் பணிவு இருப்பது பெருமையான விஷயம். இதை எல்லாம் விட மேலாக பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்களிடம் தெய்வ பலம் மிகுதியாக இருக்கிறது. இந்த வயதில் இவ்வளவு சாதனைகள் என்றால் இன்னும் பெரிய வயதில் பல அரிய சாதனைகள் படைப்பார். நிச்சயம் இந்த ஜோதிட உலகம் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கும். ஐம்பெரும் நூல்களை வெளிட்டு அவரும் ஒரு அற்புத நூலை எழுதிய சித்தர் அடிமை ஸ்ரீ சி.ராஜு அவர்கள் எனது நீண்ட கால நண்பர், கடின உழப்பாளி அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ஸ்ரீநிவாசன் பஞ்சாங்கம் ஆசிரியர் திரு. நர நாராயணன் அவர்களுடன் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர்
உலகப் புகழ் தொலைதூரப் பரிகாரர் திரு.குருவருள் நடராஜன் அவர்களுக்கு நமது குருநாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்கள் பொன்னாடை, சந்தன மாலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அருகில் திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஆசிரியர் திரு ராஜீ அவர்கள்
மகிழ்ச்சி அய்யா ...........
பதிலளிநீக்குஅருமையான நிகழ்ச்சி .. அற்புதமான புத்தக வெளியீடு..
பதிலளிநீக்கு