வியாழன், 28 மே, 2015

ஜீவ நாடி பேரதிசயம் ! ! !



ஒருவர் நமது ஞானஸ்கந்தர் ஜீவ நாடி கேட்க வந்தார். அவர் வயிற்றில் வலி ஏற்பட்டுக் கொண்டே இருந்த்தாகக் கூறினார். பூஜை செய்து நாடி படிக்கப் பட்டது. முருகப் பெருமான் அவரது வயிற்றில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் அந்த வலிக்கு இவர் முன் ஜென்மத்தில் ஒருவரை கத்தியால் குத்தி வயிற்றில் வேதனையை உண்டாக்கி இருந்ததாகவும் நல்ல வேளையாக அவர் பிழைத்துக் கொண்டதாகவும் ஆனாலும் நீண்ட நாட்கள் மரண வயிற்று வலியை அவர் அனுபவித்து வந்ததாகவும் கூறி அந்த கர்ம
வினையைக் கரைக்காமல் நீ வேறு எந்த வைத்தியம் செய்தாலும் பலிதம் ஆகாது என்றும் கூறினார்.

 வந்து நாடி கேட்டவருக்கு ஒரே அதிர்ச்சி. ஐயா இந்த ஜென்மத்தில் நான் யாருக்கும் எந்த விதக் கெடுதலும் செய்ய வில்லை என்றார். அதற்கு முருகப் பெருமான் இந்த ஜென்மத்தில் நீ நல்லவன் என்பது எனக்கும் தெரியும் அதனால்தான் உனக்கு இந்த நாடி மூலம் நான் வாக்குரைக்கிறேன் என்றார். தெய்வமே பேசுகிறது என்று கண்ணீர் மல்கக் கதறி அழுதார். சிறிது நேரம் அழுத பின்பு சுவாமி இதற்குத் தக்கதான ஒரு பரிகாரம் சொல்ல வேண்டும் என்றார். அந்த கர்ம வினையை நீக்கும் பரிகாரம் உரைத்தார் முருகப் பெருமான்.


யாம் திருத்தணி செல்லும் போது எனது பாதம் பட்ட இடம். யாம் ஜீவ நாடியில்
தோன்றி அருள் வாக்கு சொல்லும் அற்புத ஸ்தலம். எனது பாதம் பட்ட இடம் என்று மீனா நாடியிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்தில் இரண்டு மூலவர்கள் உண்டு. ஒன்று சுயம்பு வடிவில் உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியாகிய யாம் இரண்டாவது ஸ்ரீ பால சுப்ரமண்யர். யாம் அருளாசி செய்யும் இந்த ஆலயத்தில் மூலவர் முன்பு இரண்டு வாகனங்கள் உண்டு. ஒன்று கஜ வாகனம், இரண்டாவது மயில் வாகனம்.இரண்டு பலி பீடங்கள் உண்டு.இரண்டு விநாயகர்கள் உண்டு.


ஒன்று வலம்புரி விநாயகர்,  இரண்டாவது இடம்புரி விநாயகர். எனக்கு முன்பு 18 சித்தர்களைக் குறிக்கும் விதமாக 18 அடி வேல் உள்ளது. இந்த வேலை பிரதிஷ்டை செய்யச் சொன்னது மீனாட்சி தேவி தனது நாடி மூலம் என்பதால் எனது கந்த லோகத்தில் இருந்து ஒரு நேரடியான கதிர்வீச்சு இந்த 18 அடி வேலின் மீது விழுகிறது.போகர் தவம் செய்த இடம். எனது தேவிகளான வள்ளி மற்றும் தெய்வானை பாதம் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


இப்படிப்பட்ட பெருமைகளை உடைய இந்த ஸ்தலத்தில் நீ வந்து எனது வாக்கை இந்த ஜீவ நாடியில் கேட்பதால் மூன்று மாதம் அமாவாஸை அன்று நடக்கும் பூஜையில் வந்து கலந்து கொண்டு ஆலயத்தை 27 முறை சுற்றி வா நிச்சயம் மருந்து மாத்திரை ஏதுமில்லாமல் உனக்கு பூரண குணம் உண்டாகும் என்று முருகப் பெருமான் தனது ஆலயச் சிறப்பை தானே உரைத்து ஆனந்தம் அடையச் செய்தார். அதன் பின்பு மற்றொன்று உரைக்கிறேன் என்று முருகப் பெருமான் உரைத்தார். இந்த ஆலயம் நமது குருநாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களால் ஞானஸ்கந்தர் ஜீவ நாடி படிக்கும் ஆலயமாகும்.


அமாவாஸை இரவில் நடக்கும் பூஜையில் மட்டுமே நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களிடம் ஆசி பெற முடியும். பணிச்சுமை காரணமாக அதிக அளவில் ஜீவ நாடி தற்சமயம் படிக்கப்படுவதில்லை. முழுமையாக அனைவருக்கும் படிக்கும் காலம் வரும்போது அறிவிப்பு வரும்.


ஈரோடுபவானிஅந்தியூர்புதுக்காடு(மந்தை பஸ் ஸ்டாப்)மலைக்காரன்
இந்த முகவரியில் மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில் தோட்டத்தின் நடுவே ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில்தான் ஜீவ நாடி
படிக்கப்படுகிறது. முன் அனுமதி தேவை. எங்கு முருகன் நாடியில் தோன்றி வாக்கு உரைக்கிறாரோ அந்த ஆலயத்தையே பரிகாரஸ்தலமாக உரைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர் அதேபோல் செய்து தனது வயிற்று வலியை நீக்கிக் கொண்டார்.

இது முருகப் பெருமான் தனது ஜீவ நாடியில் நடத்திய அதிசயம் எனப் பலரால்
பேசப்பட்டது எனலாம்.

                                  ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


2 கருத்துகள்: