நீண்ட காலமாகத் திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!!!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுக்காடு கிராமம் விலாங்குட்டை மலைக்காரன் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் நிகழும் மன்மத வருடம் ஆவணி மாதம் 12 ம் தேதி (29.08.2015) சனிக்கிழைமை பௌர்ணமி திதியும்,அவிட்டம் நட்சத்திரமும், விஷ்டி கரணமும்,அதிகந்த யோகமும் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 7 மணிக்கு சிம்ம லக்கினத்தில் சுப்ரமண்யர் வள்ளி தேவசேனா திருமணம் கொங்கு முறைப்படி எல்லா வகையான சீர்களையும் செய்து மங்கல வாழ்த்துப் பாடி அருமைப் பெரியவர்களை வைத்து நடக்க இருக்கிறது.
எவர் இந்த திருமணத்தைக் காண்கிறார்களோ அவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைவதோடு திருமண வாழ்வில் பெரிய நன்மைகளை அடைவார்கள் என்றும், நீண்ட காலமாகத் திருமணத் தடை உடையவர்கள் விரைவில் நல்ல இல்லற வாழ்க்கையை அடைவார்கள் என்றும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப் பெருமான் வாக்கு உரைத்து இருக்கிறார். அதே போல் இந்த வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர் விக்ரஹங்கள் வந்த உடனேயே நீண்ட காலமாகத் திருமணமாகாத ஐந்து நபர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இதுவரை கொங்கு முறைப்படி இறைவன் திருமணங்கள் நடத்தப்படவில்லை. முதன் முறையாக நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த திருமண நிகழ்வுகளைப் பற்றி கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி தவத்திரு குமர குருபர சுவாமிகளிடம் தெரிவித்த போது அவர் உளம் மகிழ்ந்து ஸ்ரீ ஸ்கந்த உபாசகரிடம் ஆசி கூறி அவரது அருளாசி இருப்பதாகத் தெரிவித்தார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். எனவே இந்த திருமணத்தை அனைவரும் கண்டு ஆனந்தம் அடைந்து ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் அருளுக்குப் பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நாளில் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் கரங்களில் விபூதி பெற்று அவரது ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்
திருமண நிகழ்வுகள்
முகூர்த்தக் கால் நடுதல்
படைக்கலம் வைத்தல்
கங்கணம் கட்டுதல்
சீர் தண்ணீர் கொண்டு வருதல்
சுப்ரமண்யருக்கு சீர் செய்தல்
தெய்வானைக்கு சீர் செய்தல்
வள்ளிக்கு சீர் செய்தல்
ஆக்கை சுற்றிப் போடுதல்
செஞ்சோறு அஞ்சடை கழித்தல்
நிறை நாழி செய்தல்
கணபதி வணக்கம்
நாட்டுக்கல் வணங்குதல்
சீர் வரிசையுடன் ஆலய வலம் வருதல்
சிவன் பார்வதிக்கு பாத பூஜை செய்தல்
மங்கல வாழ்த்து
சுபமுகூர்த்தம்
விரல் கோர்வை
அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல்
பரியம் செலுத்துதல்
தாம்பூலம் கொடுத்தல்
கல்யாண விருந்து
புதுமணத் தம்பதிகள் பெண்வீடு செல்லுதல்
மஹா தீபாராதனை
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!