சிரவையாதீனம் தவத்திரு.குமர
குருபர சுவாமிகள் அவர்களின் 47ம் நாண்மங்கல நாளுக்காக (அவதாரத் திருநாள் 06.08.2016
அன்று சனிக்கிழமை) அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் இயற்றிய கவிதை.
சாதாரண ஆண்டு ஆடித் திங்கள்
சாதனை புரியவே சரியாய்த்
தோற்றம்
வேதம் நான்கையும் மெய்ப்பொருளாக்கவே
பாதம் பதித்தார் உலகு
தில்லையாடும் சிற்றம்பலம்
நடராசன் எந்தையாய்
எல்லையில்லா கருணை வள்ளியம்மை
தாயாய்
அல்லல் வல்வினை அனைவருக்கும்
நீக்கவே
சொல்லின் வள்ளல் பிறந்தார்
புண்ணியம் மிகுந்த கன்னியின்
இராசி
கண்ணியம் மிக்க கனிவு தோற்றம்
விண்ணில் உதித்த உத்திரம்
நாளில்
பண்கள் பாடிட பிறந்தார்
இளமைக்கல்வி இன்னும் மேல்நிலைக்
கல்வி
வளமையாகக் கற்றார் வனப்பாய்
இன்னும்
இமயமாய் நின்ற சுந்தரர் தொண்டால்
சமயம் புகழ திகழ்ந்தார்
ஆடியில் பிறந்தும் விளையாடிட
வில்லை
தேடி வந்தது தெய்வீகத் தொண்டு
நாடி அதனை ஏற்றார் குமரர்
கூடி வந்தனர் கூட்டம்
கசபூசை புகழ் சுந்தர சுவாமிகள்
நிசமாய் இறை சோதியில் சேரவே
வசமாய் வந்தது குருவம்சப்
பணி
தேசமே புகழ ஏற்றார்
இருபத்தி நான்காம் அகவை தன்னில்
குருவாய் அமர்ந்தார் குவலயம்
போற்ற
உருவால் மின்னும் பொன்னென
ஆக
பெருமை பேசியது உலகு
கொங்கு நாட்டுக் கச்சியப்பர்
கவியை
எங்கும் சிறக்கவே ஆய்வுகள்
செய்து
கொங்கு மண்ணின் பெருமை சிறக்க
மங்காத புகழால் மகிழ்ந்தார்
முத்தமிழால் வைதாரையும் வாழ
வைக்கும்
சத்திய தெய்வம் முருகனார்
வம்சம்
எத்திக்கும் தமிழின் சிறப்பு
சிறக்க
தித்திக்க முனைவர் ஆனார்
சமயப் பணியொடு கல்விப் பணியும்
இமயமாய் நிற்கும் இலக்கியப்
பணியும்
அரசுப் பணிக்கென இ.ஆ.ப அகாடமி
ஆயுர்வேதமும் அன்பாய்க் கொணர்ந்தார்
நாற்பத்தி யேழாம் அகவை கானும்
போற்றிட நானிலம் எம் தேசிகரை
சாற்றிய பாடல்கள் பத்தும் இதனை
போற்றுவோர் பேறு பெறுவரே
-ஸ்ரீஸ்கந்த உபாசகர்
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக