புதன், 19 பிப்ரவரி, 2014

வெள்ளெருக்கு விநாயகர்





வெள்ளெருக்கு எருக்கஞ்ச்செடிகள்குடும்பத்தைச்சேர்ந்தது. நீல எருக்கு, ராம 

எருக்கு என ஒன்பது வகை எருக்கு இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். 

எருக்கன் செடி 12 வருட காலம் மழை இல்லாவிட்டாலும், அதன் பருவ 

காலங்களில் பூத்து, காய்த்து, வளர்ந்து வரும் இது சூரியனுடைய மூலிகை 

சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை இது நுட்பமாக கிரகித்து வளரக்கூடியது . 


இந்த விசேஷ அம்சம் உடையதுதான் வெள்ளெருக்கு.இந்த வெள்ளெருக்கு 

செடியின் இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. தான் 

நினைக்கும் போது இறக்கும் பாக்கியம் கிடைத்தும்கூட துரியோதனனின் 

பாவசெயலை தடுக்க திராணியின்றி மவுனம் சாதித்த நிலையால் வரம் 

சாபமாகிறது.அதிலிருந்து விடுபட தன் தந்தையை அழைத்து தன்னை எரிக்க 

சூரியனை கொண்டு பிழிய சொல்கிறார். அது முடியாது வேண்டுமானால் 

சூரியனின் ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த 

எருக்கஞ்ச்செடி இலையை கொண்டு தகிக்கலாம் என்று வழி கூறுகிறார். 

அத்தனை சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி.


இதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும் 

சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க 

பயன்படுகிறது. வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு 

திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு 

வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். 


ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும் 

பண வரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.

இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. சைவ 

உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக 

நிலை விளக்கம்தான்.


 வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை 

தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண 

கணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம் 

ஆகர்ஷணம் ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் 

விற்பனை செய்கின்றார்கள். வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில் 

விநாயகர் செய்துவிற்கின்றாகள்.

  
அதனால்அது  விரைவில்உளுத்துப்போய்உதிர்ந்துவிடுகின்றது.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் 

வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை 

உணரலாம்.

யந்திரங்களின் சக்தி



இனி எந்த முயற்சி செய்தாலும் பயன் கிடையாது என்று கைவிடப்பட்ட

எத்தனையோ நபர்கள் மந்திர சக்தியால் யந்திரங்களின் துணையால் உயிர்

பிழைத்து எழுந்து இருக்கிறார்கள். துன்பத்திற்கு மேல் துன்பம் தொடர்ந்து

வந்து கொண்டிருக்க என்ன காரணம் என்பதை அறியாமல் தவித்த

எத்தனையோ பெரும் செல்வந்தர்கள் முறையாக மந்திரவாதிகளைத்

வரவழைத்து வீட்டில் யாகம் செய்து யந்திரங்களை மண் கலசத்தில் வைத்து

வீட்டில் நான்கு மூலைகளிலும் முறையாக மந்திரம் சொல்லி புதைத்து

வைக்க அந்த வீடுகளில் துன்பம் நிங்கி சுபிட்சம் பெருகி வந்தது.


மந்திரங்களாலும் எந்திரங்களாலும் சாதிக்க முடியாதவை எதுவுமே இல்லை.

வறுமை, நோய் இவை அறவே விலகி இல்லத்தில் ஏற்றம் பெறுவதற்கு

மந்திரங்களோடு கூடிய எந்திரங்கள் அதர்வண வேதத்தில் உண்டு. இதனை

அனுபவம் மிக்கவர்களோடு தயாரித்து வீட்டில் வைத்தால் நமது வாழ்வு

மிகவும் சிறக்கும். சக்கரம்,
யந்திரம் மற்றும் மந்திர உச்சாடனம் இன்று

நேற்று தோன்றியவை அல்ல. வழிவழியாக வந்து கொண்டு இருப்பவை.


பீஜாட்சரங்களின் மூலம் உயிர் பெரும் சக்தியை உருவாக்கும் ‘வித்துக்கள்’

எழுந்து வடிவம் பெறும் போது அதை ஒலி வடிவத்தில் உச்சாடனம் செய்து

ஜெயிக்கலாம்.


எல்லை இல்லாமல் எங்கும் பரந்து விரிந்து வியாபித்து எங்கும் நிறைந்து

காணப்படும் கடவுளை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் கொண்டு வந்து

பூஜிக்க உதவுவது யந்திரம்// சக்கரம் ஆகும். சக்கரத்தில் வரையப்பட்டுள்ள

கோடுகள் சாதாரண கோடுகள் அல்ல. அவை ஒலிமிக்க கதிர்வீச்சினை

கொண்டவை.

ஒவ்வொரு தெய்வத்தையும் வணங்கி வழிபட்டு அந்த தெய்வ

சக்தியை பெறுவதற்க்கு ஒவ்வொரு சக்கரம் உண்டு.அடக்கவே முடியாத

பெரும் சக்தியை உள்ளடக்கிய இந்த சக்கரங்கள் அதிக சக்தி வாய்ந்தவை

ஆகும். இதனை முறைப்படி பூஜை செய்தால் மிக அதிகமான பவர் கிடைக்கும்.

புகழ்பெற்று விளங்கும் திருக்கோவில்களிலுள்ள மூல விக்கிரகங்களின்

பீடத்திற்கு அடிப்பாகத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்களை பொருத்தி

வைத்தார்கள்.

இவ்விதம் பொருத்தி வைக்கப்பட்ட கோவில்களில் உச்சரிக்கப்படும்

மந்திரங்கள் அனைத்தும் அதிக வல்லமை பெற்று மூலஸ்தானத்தில் ஒலித்து

பின் அது எதிரொலிக்கும் போது இந்தமந்திர ஒலிகளை கேட்கும் பக்தர்கள்

பூரண நலம் பெறுகின்றனர்.


யந்திரங்கள் கோடுகளின் சேர்க்கை அல்ல,.இந்த கோடுகள் அனைத்தும்

ஒன்று சேர்ந்து சுற்றிலுமுள்ள சக்திகளை இயக்க வல்லது. தாயத்து என்ற

பெயரில் மந்திரம் உச்சரிக்கப்பட்ட தகடுகள் அல்லது யந்திரங்கள் குண்டலினி

சக்தியை எழுப்பிவிடும் அற்புத ஆற்றல் படைத்தவை.


தெய்வங்களுக்கு படம் வைத்து வழிபடுவதைவிட யந்திரங்கள்/ சக்கரங்கள்

வைத்து வழிபட்டால் அதன் பலனை உடனே உணரலாம். கணபதி மஹா

யந்திரம் 64 விநாயகரையும் வசியம் செய்யும் சக்தி உடையது. இந்த

யந்திரத்தை பூஜையில் வைத்து விநாயகர் மந்திரம் ஜெபிக்க விநாயகர்

விரைவில் ஆகர்ஷ்னமாகி வசியமாவார்..இதனால் மற்ற தெய்வ சக்திகளும்

எளிதாக வசியம் ஆகும்.

எந்த தெய்வத்தை உபாசனை செய்பவர்களாக இருந்தாலும் மஹா கணபதி

யந்திரம் வைத்து விநாயகர் மந்திரம் ஜபித்துவிட்டு பின் மற்ற தெய்வ மந்திரம்

ஜபித்து வழிபாடு செய்தால் விரைவில் எல்லாம் வசியமாகும்.


நினைத்த காரியம் நடக்கும், தடைகள் அனைத்தும் நீங்கி நாளுக்கு நாள்

முன்னேற்றம் கிடைக்கும்.தொழில் ஸ்தானத்தில் வைத்து பூஜிக்க வியாபாரம்

பெருகும். நஷ்டம் உண்டாகாது. செல்வ செழிப்பு, புகழ், ஜனவசியம் உண்டாகி,

லக்ஷ்மி கடாட்சம் பெருகும். இதை போலத்தான் நம்முடைய ஜாதகத்தையும்

யந்திரத்தில் அடைத்து அதாவது ராசிகளின் பீஜ மந்திரங்களை அடைத்து

பிரயோகம் செய்யலாம். எந்த தோஷத்தையும் மாற்றும் சக்தி கொண்டது

யந்திர மந்திர ஜாதகம் சகல யந்திரங்களும் எழுதும் முன் அந்தந்த மந்திர

பிரயோகங்களுக்கு தகுந்தாற்போல், செம்பு, வெள்ளி, தங்கம், பனை ஓலை

என எந்த உலோக தகட்டில் வரைய வேண்டுமோ அதனை குறிப்பிட்ட

அளவுகளில் வெட்டி எடுத்துக்கொண்டு யந்திர தெய்வ, தேவதைகளுக்குத்

தகுந்த நாட்களில் அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி போன்ற நாட்களில்

சுபஹோரை பார்த்து கிழக்கு அல்லது வடக்கு பார்த்து எழுதவேண்டும்.


வசிய யந்திரங்கள், தெய்வ யந்திரங்கள், மாரணம், பேதனம், வித்வேசனம்,

உச்சாடனம் போன்ற யந்திரங்க்களை அதற்கு தகுந்த திசையை பார்த்து

எழுதவேண்டும். வசிய யந்திரங்கள் பிரம்ம முகூர்தத்திலும், மற்ற யந்திரங்கள்

இரவிலும் எழுதவேண்டும். யந்திரங்கள் எழுத ஹோரைகள் மிகவும் முக்கியம்

சில யந்திரங்களை சுருட்டிதான் வைக்க வேண்டும் மடித்து வைக்க கூடாது.

பிரயோக யந்திரங்கள் எந்த அளவு வேண்டுமானாலும். வரைந்து

கொள்ளலாம்.

ஆனால் உபாசனை யந்திரங்கள் கொடுக்கப்பட்ட அளவுகளில் வரைந்தால்

தான் பலன் தரும். எழுத்துக்களை தவறாக எழுத கூடாது. யந்திரம்

வரைந்தவுடன் சைவ/ அசைவ பூஜைக்கு ஏற்றாற்போல பலி கொடுத்து 8

விதமான அபிஷேகம் செய்து விபூதியால் துடைத்து மல்லிகை மலர் தூவி

படையல் வைத்து மந்திரம் ஜெபிக்க உரு ஏறும்.


மஹா பெரியவர் ஆதிசங்கரர் பூஜித்து பதித்த சொர்ணா ஆகர்சன யந்திரங்கள்,

ஸ்ரீசக்கரம், மஹா மேரு போன்றவைகளினால் இன்றும் சில கோவில்கள்

மிகுந்த சக்தி உள்ளதாக இன்றும் இருக்கிறது. (திருப்பதி, காளிகாம்பாள்,

மாங்காடு காமாட்சி அம்மன்).

மந்திராலயம் பற்றி ஜீவநாடி



மந்திராலயத்தில் எவர் ஒருவர் 72 மணி நேரம் தங்கி தியானம் செய்கிறாரோ

அவர் பல சித்திகளை அடைகிறார். அது மட்டும் அல்லாமல் ஸ்ரீ

ராகவேந்திரரின் தரிசனத்தையும் பெறுகிறார் என ஸ்ரீ ஞானஸ்கந்தர்            

ஜீவ நாடியில் வந்துள்ளது. அங்கு செல்பவர்கள் பின்வரும் இடங்களையும்

தரிசனம் செய்யலாம்.

ராகவேந்திரர் பிருந்தாவனம்: 339 வருடங்களுக்கு முன்னர் 1671-ல் ஜீவசமாதி

அடைந்த மகான் ராகவேந்திரரது பிருந்தாவனம். முஸ்லிம் மன்னரே

ராகவேந்திரருக்கு விருப்பமான இடமான மாஞ்சலம்மா என்பவரிடம் இருந்து

பெற்றுத் தந்த இடம். அருகில் துங்கப்பத்ரா நதி ஓடும் அருமையான தலம்.

இன்றும் பல பக்தர்களுக்கு பலவிதமான அதிசயங்கள் நிகழும் இடம்.

 ராகவேந்திரரது பாதுகைகள் : 339 வருடங்களாக ராகவேந்திர சுவாமி

தமது கால்களில் அணிந்து ஆசீர்வதித்து கொடுத்த பாதுகைகள்

பரம்பரை பரம்பரையாக ஒருவரது வீட்டில் உள்ளது. பாலாஜி மந்திருக்கு

அருகில் இவ்வீடு உள்ளது.

 பாலாஜி மந்திர் : ராகவேந்திரர் தமது திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்து

வழிபட்ட வெங்கடசபெருமாள் கோவில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தின்

வடகிழக்கு திசையில் உள்ளது. அவர் நட்ட பூச்செடிகள் பச்சை பசேலென

பூத்துக் குலுங்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.


ராமலிங்கசுவாமி திருக்கோயில் : இதுவும் ராமர் ஸ்தாபித்து வழிபட்ட

சிவன் கோவிலாகும். எனவே ராமலிங்க சுவாமி எனப்படுகிறார். 3 அடி உயர

பிள்ளையாரும், மற்றொரு லிங்கமும் இத்திருக்கோயிலின் காலத்தை நமக்கு

பறைசாற்றுபவையாகும்.

வீரபத்திரர் திருக்கோயில்: ராமலிங்கசுவாமி திருக்கோயிலை அடுத்து உள்ளது.

4 அடி உயர வீரபத்திரர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அஷ்டமி, பவுர்ணமி

நாட்களில் வெற்றிலை மாலை பிரபைகள் வைத்து அலங்காரம் செய்து சிறப்பு

வழிபாடுகள் செய்யப்படுகிறது.

ஆஞ்சநேயர் கோயில்: பாலாஜி மந்திரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு

வலதுபுறம் திரும்பும் இடத்தில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம்.

ஆஞ்சநேயரின் வாலில் மணியுடன் அபயஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறார்.

முன்புறமுள்ள தூண்களில் சிவன், விஷ்ணு உருவங்கள் அழகாக

செதுக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸாவரம் ஷீரடி பாபா கோவில் : ரெயில் நிலையத்தில் இருந்து ராகவேந்திரர்

பிருந்தாவனம் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் பஸ்ஸாவரத்தில்

சாலையின் வலது புறத்தில் உள்ளது.

மாதவரம் ராமர் அமர்ந்த கல்: ரெயில் நிலையத்தில் இருந்து மந்திராலயம்

செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தூரத்தில்

சாலை வலதுபுறம் திரும்பும்போது இடதுபுறத்தில் சிறிது தொலைவில்

தகரக்கொட்டகை ஒன்று தெரியும். அதுவே ராகவேந்திரர் பிருந்தாவனத்தில்

அமர்ந்து ஜீவ சமாதியானபோது அமர்ந்த கல்லின் மற்றொரு பாதியாகும்.

இதன் மீதுதான் ராமர் இவ்வழியே செல்லும்போது அமர்ந்தார் என்று கூறி

இக்கல்லையே ராகவேந்திரர் எடுத்துவரச் செய்து அதன் மீது அமர்ந்து

பிருந்தாவனம் எழுப்பச் செய்தார். அதன் ஒரு பகுதியே இங்கு ஆஞ்சநேயர் சிலை

வடிக்கப்பட்டு தற்போது சிறிய கோவிலாக உள்ளது.

மாதவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்: ரெயில் நிலைத்தில் இருந்து மந்திராலயம்

செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தொலைவில்

சாலையின் இடதுபுறம் உள்ளது. பல காலங்கள் பூமிக்கடியில் புதைந்து

கிடந்த நரசிம்மர் சிலை, தற்போது மிகச்சிறப்பான கோயிலாக

கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராஜமாதங்கி வழிபாடு



இசை,இலக்கியம் ,நடனம் மற்றும்சகலகலைகளிலும்சிறப்பான

தேர்ச்சியும்,பதவி நிர்வாக சாமர்த்யமும் நல்கும் ஞான வடிவினள் அன்னை

ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா தேவி .அந்த அன்னையை வணங்கி

அவளை வழிபடும் முறைகளை விளக்குகிறேன்.


மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா

உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி மந்திரம் ,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி

மந்திரம்,பின்னர் ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம் உபதேசிக்கப்படும் அதன் பிறகே ஸ்ரீ

வாராஹி மந்திரம் உபதேசம் செய்யப்படும்..


ஸ்ரீ மகாகணபதி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை இரண்டும்

சித்தி செய்தவர்களுக்கு எந்த மந்திரமும் எளிதில் சித்திக்கும்.ஸ்ரீ

மகாகணபதி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை ஸ்ரீ வித்யா உபாசனைக்கான

உள்ளப்பண்பாடு,சித்த சுத்தி,சத்வ குணம், இவற்றை நல்கும்.அது ஸ்ரீ

ராஜமாதங்கி வழிபாட்டில் முழுமை பெறும்.


ஸ்ரீ மதங்க முனிவர் ஸ்ரீ பஞ்சதசி மந்திரத்தை அக்ஷர லக்ஷம் ஜெபம் செய்து

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் தரிசனம் பெற்று அவளையே தன் மகளாக பிறக்க

வேண்டும் என்று வரம் பெற்றார்.அதன் பயனாக ஸ்ரீ ராஜமாதங்கி மதங்க

முனிவரின் மகளாக ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று தோன்றினாள்.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் கரத்தில் உள்ள கரும்பு வில்லில் இருந்து

உண்டானவள்.ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி எனும் பராசக்தியின் மந்திரியாய்

விளங்குகிறாள்.அவளின் ராஜ்ய பாரம் முழுதும் கவனிப்பவள்.சங்கீதத்திற்கு

இவளே அதிபதி(அதிஷ்டான தேவதை .


ஸ்ரீ ராஜமாதங்கி நம் உடலில் புத்தி தத்துவமாகவும்,ஸ்ரீ வாராஹி நம்

உடலில் சைதன்ய தத்துவமாகவும் விளங்குகிறார்கள்.மனம் செயல்பட

புத்தியும்,உடல் செயல்பட சைதன்யமும் வேண்டும்.ஸ்ரீ ராஜராஜேஸ்வரிக்கு

மிக நெருக்க மானவர்கள் இவர்கள் இருவரே இதற்கு மேல் உயர்ந்த ஸ்தானம்

வகிப்பது பராசக்தி ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே .


இவளை அனாஹத சக்கரம் என்ற ஹ்ருதய ஸ்தானத்தில் தியானிக்க வேண்டும்.

இவளது அங்க தேவதை லகுஷ்யாமளா,உபாங்க தேவதை

வாக்வாதினி ,பிரத்யங்க தேவதை நகுலீ.இவர்கள்சாதகனுக்கு நல்ல

வாக்குவன்மை, கலைகளில் தேர்ச்சி ,சங்கீத ஞானம்,சகலகலா பாண்டித்தியம் அருள்வார்கள்.

இவள் உபாசனை அருள்,புகழ் பெற்றோர் ஸ்ரீ மகாகவி காளிதாசர், ஸ்ரீ

பாஸ்கரராயர்,சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர் ஆகியோர்.

மதுரை மீனாக்ஷி ஸ்ரீ ராஜமாதங்கி அம்சம்.திருவானைக்காவல் ஸ்ரீ

அகிலாண்டேஸ்வரி ஸ்ரீ மகா வாராஹி அம்சம்.எனவே இவள் மந்திரத்தை

ஜெபிக்க ஆரம்பிப்பவர்கள் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் வைத்து

ஜெபத்தைத் தொடங்கலாம்.

ஸ்ரீ ராஜமாதங்கியைத் தினமும் வழிபடலாம். அதிலும், அஷ்டமி, பௌர்ணமி,

சித்திரை மாதம் வளர்பிறை,மாசி மாதம் வளர்பிறைகளிலும் வழிபட,பூஜை

செய்ய இவள் பேரருள் பெறலாம்.

அரசாங்க காரிய வெற்றி,சர்வ ஜன வசீகரம்,பெரிய பதவிகள் கிடைத்தல்,

அவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்தல் போன்ற பலன்களுக்கு ஸ்ரீ

ராஜமாதங்கியையும்,சங்கீதம்,கலைகளில் தேர்ச்சி இவைகளுக்கு ஸ்ரீ லகு

ஷ்யாமாவையும் வழிபடலாம்.

ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்:

ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் \ஓம் நமோ பகவதி ஸ்ரீ

ராஜமாதங்கேச்வரி|சர்வஜன மனோஹரி| சர்வ முக ரஞ்சனி |க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம்|

சர்வ ராஜ வசங்கரி |சர்வ ஸ்திரீ புருஷ வசங்கரி |சர்வ துஷ்டமிருக வசங்கரி |

சர்வ சத்வ வசங்கரி |சர்வ லோக வசங்கரி த்ரைலோக்யம் மே |வசமானய நமோ

நமஹா ||

என்றும் ஜெபிக்கலாம்.ஹோமம் செய்தால் அப்பொழுது நமோ நமஹ

என்பதற்குப் பதிலாக ஸ்வாஹா என மாற்றி ஜெபிக்கவும்.

மூலமந்திரம் ஜெபிப்பவர்கள் கீழே காணும்இவளது 16 நாமங்களை தினமும்

குளித்து முடித்ததும்கிழக்கு நோக்கி நின்றோ,அமர்ந்தோஒரு முறையேனும்

சொல்பவர்களுக்கும் இவள் அருள் கிட்டும்.முக்கியமான அலுவல் நிமித்தமான

பேச்சு வார்த்தை, மேடைப் பிரசங்கம்,பாடங்கள் படிக்கும் முன் இந்த

நாமங்களை ஜெபிப்பது நன்மை தரும்.

ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-

1.சங்கீதயோகினி

2.ஷ்யாமா

3.ஷ்யாமளா

4.மந்திரநாயிகா

5.மந்திரிணி

6. சசிவேசானி

7.ப்ரதானேசி

8.சுகப்ரியா

9.வீணாவதி

10.வைணிகீ

11.முத்ரிணி

12.ப்ரியகப்ரியா

13.நீபப்ரியா

14.கதம்பேசி

15.கதம்பவனவாசினி

16.சதாமதா

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

வாழ்வில் நல்ல நிலையை அடைய

லக்ஷ்மி கடாட்சம்பெருக


வாழ்வில் நல்ல நிலையை அடைய யார்தான்விரும்ப மாட்டார்கள்?

குடும்பத்தில், என்றும் மங்கலம் பொங்க, லக்ஷ்மி கடாட்சம் பெருக, கடன்,

வறுமை, தரித்திரம் முற்றிலும் நீங்கி - ஒரு நல்ல முன்னேற்றம் அடைய

 சொல்ல வேண்டிய மந்திரங்கள்.

மந்திரம் 1

சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம்

அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்

மந்திரம் 2

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்

ச் ரீயம் தேவி முபஹ்வயே ஸ்ரீர்மாதேவீர் ஜீஷதாம்

இந்த இரண்டு மந்திரங்களையும் ஜபிக்கும்போது, லட்சுமியை வெள்ளைத்

தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சிக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து 48 நாட்கள் ஜபித்துவந்தால், மிக உயர்ந்த பதவி / பதவி

உயர்வு கிடைக்கும்.

லக்ஷ்மி கடாட்சம்பெருக சில யோசனைகள்



• அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று

பெயர். அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க

வேண்டும்.முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு

பழக்கமாகிவிடும். இப்படி செய்வது  ஆரோக்கியம், நீண்ட ஆயுள் முதலிய

பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும்

நம்வீட்டை நோக்கி வருகிறார்கள் . அப்போது விழித்திருந்து

மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து

வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

• அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன்

பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

• அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன்

வலது உள்ளங்கையையாவதுமுதலில் பார்த்து விட வேண்டும்.

• செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி

திருமகளை வழிப்பட வேண்டும்.

• வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும்

வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல

ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,

சந்தோசமும் பெருகும்.

• ஒவ்வொரு பௌர்ணமி  அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி,

செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து , பால், பாயசம், கல்கண்டு ,கனி

வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன

வேண்டும்.

• வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே

கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத்

தனது ஜீவித காலத்தில் விற்கவோ,தன் பிள்ளைகளுக்கோ கூட

அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே

அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக

வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில .........

• ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில்

நின்று கொடுக்க கூடாது .கொடுப்பவரும் , வாங்குபவரும் வாசல்

படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க

வேண்டும் .

• வாசற்படி, அம்மி,ஆட்டுக்கல், உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

• இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல

அனுமதிக்க கூடாது .

வெற்றிலை • வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது

 .வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

• சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

• குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும்

அணைக்ககூடாது . புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

• வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும்

கூறக்கூடாது

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது

• துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

• உப்பைத் தரையில் சிந்தக் கூடாது .

• ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.

அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல,

ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள்

ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.

ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும்,

மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த

வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

• வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின்

அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம்

செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி

குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும்

வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும்

அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர்

தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

• சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம்,

கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு,

யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு

மிகவும் பிடித்தவை.

 தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

•

5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி

•வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?

பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர

பூஜைக்கு சமம்.

• செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள்

வளர்க்கலாம்.

 சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான

ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

 காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம்,

இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்


 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம்

கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

 விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான்

சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே

கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.


• வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே

கூடாது.

• மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

• ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை

செய்யுங்கள்.

 எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த

வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித

ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

 எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில்

பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு

திருமகள் குடியேறுவாள்.


வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும்

வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல

ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும்,

சந்தோஷமும் பெருகும்.

• எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப்

பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

 எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.


• சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில்

மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.


 தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக

இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று

தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

• குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும்

கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை

உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம்

உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு

உலகம் தலை வணங்கும்.

 அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.

•

கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம்,

உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

• பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

• அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

 வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.


• இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

• வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக

இருப்பது அவசியம்.


 பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக்

கூடாது.

• மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக்

கூடாது.


 விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக்

கொடுக்கக் கூடாது.

• விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

• கோலம் இட்ட வீட்டில்திருமகள்தங்குவாள். வீட்டு வாசலில்கோலம்

இடுவது அவசியம். பிளாட்களில்வசிப்பவர்கள்தங்கள்மெயின்டோர்

வாசலில் கோலம் வரையலாம்.


• வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

• பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில்

வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை

பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில்

வைத்துக்கொள்ளவேண்டும்.

• வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

 சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள்

தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

 அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

• அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

 நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.


• பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

• சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில்

உபயோகிக்கவேண்டும்.

• ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.

 பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல்

இருக்கக்கூடாது.

• தங்கம் எனப்படும் சொர்ணம்மகாலக்ஷ்மியின்அம்சம்என்பதால்அதை

இடுப்புக்கு கீழே பெண்கள்அணியக்கூடாது.

• பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி

படங்கள் மீது விழக்கூடாது

• தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை

அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.

இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு

தேடி ஓடி வருவாள்.

மகேஸ்வர பூஜை:

                             ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.



திருவண்ணாமலையில் ஸ்ரீ தயவு சித்த ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சரவணபவா

சுவாமிகள் மூலம் செய்யப்படும் மகேஸ்வர பூஜை குருவையே தரிசிக்க

வைக்கும் என்றால் மிகை இல்லை. சன்னியாசிகளை அமரவைத்து

அன்னதானம் செய்து மகேஸ்வர காலமான 12 முதல் 1 மணிக்குள் சிவ

பெருமானுக்கு எப்படி பூஜை செய்யப்படுகிறதோ அது போலவே

சிவனடியார்களுக்குச் செய்யப்படுகிறது. அன்னதானத்தின் மகிமையை

அறியாதார் யாரும் இல்லை.ஆனால் சிவனடியார்களை அமர வைத்து

அவர்களை சிவனாகவே பாவித்து செய்யப்படும் அன்னதானத்தின்

மகிமையை அனுபவித்து பார்த்தல்தான் தெரியும். எந்த ஒரு லாப

நோக்கமின்றி முற்றிலும் இறை பணியாகவே இந்த பூஜை செய்யப்படுகிறது.

இது எல்லாப் பரிகாரங்களையும் விட மேலான பரிகாரம் என்று எனது

குருநாதர் திருவண்ணாமலை ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர்

சுவாமிகள் மீனாட்சி நாடி மூலம் சொல்லியுள்ளார்கள். அத்துடன்

அடியேனிடம் இருக்கும் ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவ நாடி அருள் வாக்கிலும்

அடிக்கடி மகேஸ்வர பூஜையைப் பற்றி வருகிறது. எந்த காரியம் தடையாக

இருந்தாலும், எப்பேர்பட்ட கர்ம வினையாக இருந்தாலும் இந்த மகேஸ்வர

பூஜை நிவர்த்தி செய்து விடுவதை நாங்கள் அனுபவத்தில் பார்த்து

வருகிறோம். கர்ம வினை தீர அன்னதானமே ஒரே வழி. யாருக்கு பிராப்தம்

இருக்குமோ அவர்களே இதைப் படிக்க முடியும், பூஜையும் செய்ய முடியும்.