சனி, 27 செப்டம்பர், 2014

முருகன் தமிழ்க் கடவுள்






 
முருகன் எனும் தமிழ் கடவுள் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல இந்தியாவின் பல பகுதிகளிலும் சமிஸ்கிருத மொழிப் பெயரான கார்த்திகேயர், சுப்பிரமணியர் மற்றும் ஸ்கந்தன் என்றும் வணங்கப்பட்டு வந்துள்ளார். கார்த்திகைப் பெண்கள்அறுவர் பாலுண்டு வளர்ந்ததால் கார்த்திகேயன் (வடநாட்டினர் அறிந்த பெயர்இதுவேயாகும்).
 
முருகனே தமிழ் மொழியை முதன் முதலில் அறிவுறுத்தினான் என்பது வரலாறு. மேலும் சிவபிரானுக்குப் பிரணவப் பொருளைத் தமிழிலேயே முருகன் உபதேசித்தான். சங்ககாலத்திற்கு முன்பிருந்தே குறிஞ்சிக் கடவுளான முருகன் தமிழ் மக்களை ஆண்டு வந்திருக்கின்றான். மலை மீது கோவில் கொண்டுள்ள  முருகன் தமிழர்களின் இதயத்தில் நீங்காத இடம் கொண்டு நிலை பெற்ற கடவுளாகும். தமிழகத்தில் பலர் ‘பரமகுரு’ என்றும் ‘குருநாதன்’ என்றும் முருகனை வணங்கி வருகின்றார்கள். உலகில் பல இடங்களில் முருக வழிபாடு தொன்றுதொட்டு நிகழ்ந்து வருகின்றது. முருக வழிபாடானது தமிழ் மக்களிடையே காணப்பட்ட மிகத் தொன்மையான வழிபாடாகும். சில காலங்களுக்கு முன் தமிழகத்திலே மேற்கொள்ளப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சிகளின் போது சேவற் சிலைகள், காவடிச் செதில்கள், வேல் என்பன காணப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.காவடி என்றாலே அது முருகனுக்கு மட்டும் உரியது

முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும்.

தேவர் மூவரின் பெயர்களின் முதலெழுத் துக்கள் சேர்ந்ததே ‘முருக’ என்றதிருநாமம்.முகுந்தன் – மு – திருமால்
ருத்ரன் – ரு – சிவன்
கமலோத்பவன் –  – பிரம்மன்

''முருகன் என்றால் அழகு என்று பொருள். முருகனின் வரலாற்றைக் குறிக்கும் ஆறுபடை தலங்களும் தமிழகத்திலேயே உள்ளன. அவ்வையார், நக்கீரர், அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களின் தமிழ்ப்பாடல்களை கேட்டு மகிழ்ந்தவர் முருகன். அதனால், அவர் தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகிறார்

தமிழ்க் கடவுள் என்பது முருகனையேமொழிக்கு கடவுளான ஆறுமுகனுக்குவிழிகளோ பன்னிரண்டுஅருந்தமிழுக்கு உயிரெழுத்துக்களும் பன்னிரண்டு!முக்கண் சிவனின் மைந்தனுக்கு மூவாறு கண்கள்முத்தமிழ் மொழியின்மெய்யெ ழுத்துக்களும் மூவாறு (பதினெட்டுஅவை வல்லினம்மெல்லினம்,இடையினம் என மூவாறாய் பகுக்கப்பட்டுள்ளனமுருகன் கை வேலாயுதம்ஒன்றே போல் தமிழில் ஒரே ஒரு ஆய்த எழுத்தும் உண்டுபிற மொழி எதிலும்இல்லாத சிறப்பெழுத்து!

முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம்







மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும்ஒயிலாக ஆடும்நடனமும்தான்ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமானவண்ணம்தான் காரணமாக இருக்கிறதுஅதுதான் அழகாக ஆடுவதாகநினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்துகட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான்தனக்குஅழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான்தன்னால் நினைத்துப் திட்டமிடக்கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான்கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால்எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான்இதில்ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதைஉணரமுடிவதில்லைஇந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும்அவனுள்இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன்தெரிந்து கொள்ள வேண்டும்கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாகஏற்றுக் கொள்ள வேண்டும்இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும்சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டுமயில் பாம்பைக் கொல்லுவதில்லை.ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறதுஅதைப்போல உலக பந்தங்கள்ஆசைகள்எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டியஅவசியம் இருக்கிறதுஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமானால்இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்க வேண்டும்இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும் பாம்புநமக்கு உணர்த்துகிறது.

முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்!



முருகனுக்கு வேல்:-

முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்
பட்டிருக்கிறதுவேல் வெற்றிக்கும்அறிவுக்கும் அடையாளமாகத்
திகழ்கிறதுவேல் நடுவில் அகன்றும்உருவில் நீண்டும்முனையில்
கூர்மையாகவும் இருக்கிறதுஇதுபோல் இக பர வாழ்வில் மனிதன்
சிறந்தோங்க அகன்றஆழ்ந்தகூர்மையான அறிவுடையவனாக
இருக்கவேண்டும்அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய ..இறைவனேஇதையே திருவள்ளுவர்,

     
 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
      
நற்றாள் தொழாஅர் எனின் ... என்கிறார்.
முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி
வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து
அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும்கூவுகின்ற
கோழி நாத வடிவானதுகோழிக் கொடி வெற்றியின் சின்னமாக
விளங்குகின்றதுஅழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான்முருகன்.மயில் மனத்தின் சின்னம்பரிசுத்தமானஅழகான உள்ளம்தான்
இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம்
விளக்குகிறதுபாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா
சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறதுதீராத
நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன்.

தமிழ் இந்துக்களின் பெயர்களில் சக்திவேல்ராஜவேல் பழனிவேல் போன்றவேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன்வேலப்பன்வேலம்மாள்என்ற பெயர்களும் அதிகமாக காணப்படுகின்றன

 

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம்நமது அறிவு ஆழமானதாகவும்,பரந்ததாகவும்கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதைஉணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடிஅகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்றுகருதப்படுகிறது.

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்பற்றி கூறப்பட்டுள்ளது

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றிகூறப்பட்டுள்ளதுகந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன்வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத்தெளிவுப்படுத்துகின்றதுஎனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல்,வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரிமுருகனின் போர்க்குணம் மற்றும்முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.
வேல் விடுமினையோன்திறல்வேலன்வேல் கொண்டன்று பொருதவீரன்,துங்கவடிவேலன்ப்ரசண்ட வடிவேலன்வேல் தொட்ட மைந்தன்அசுரர்தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும்அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில்செல்வாக்குப் பெறலாயிற்று.
ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு,வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின்சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.
வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமானஅருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ,சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடியகுறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.
வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானதுதமிழகத்தில் முருகனைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத்தெளிவுப்படுத்துகின்றதுஇன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ளதிருப்பத்தூர்கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம்,மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகியஇடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.
திருச்செந்தூர்திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ளமுருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளனஅவை வெகு தொலைவு வரை முருகன்கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றனமேலும் தமிழகத்தில்உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை.
இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாகஉள்ளனதமிழகத்தில் சுந்தரவேல்சக்திவேல்கதிர்வேல்கனகவேல்,வடிவேல்குமரவேல்கந்தவேல் ஞானவேல்வேலப்பன்வேல்ச்சாமி,வேலன்வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச்சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்

முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார்பெரும்பாலான ஹிந்துமத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர்.இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளைஅழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவைவாஸனைகளும்அவற்றால்ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூலகாரணம்இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணரமுதல் தடைஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான்.வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான்முருகனின் சக்திஆயுதமாகிய வேல்இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்லசக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்