சனி, 27 செப்டம்பர், 2014

முருகனுக்கு வாகனமாக மயிலை வைத்திருப்பதற்கு என்ன தத்துவம்







மயிலின் முக்கியமான பண்பு அதன் அழகான தோற்றமும்ஒயிலாக ஆடும்நடனமும்தான்ஆனால் அவை கவர்ச்சியாகத் தோன்றுவதற்கு நீலமயமானவண்ணம்தான் காரணமாக இருக்கிறதுஅதுதான் அழகாக ஆடுவதாகநினைக்கும்போது அந்தக் கர்வத்தை அடக்க ஒருவர் அதன் மீது அமர்ந்துகட்டுப்படுத்த வேண்டி இருக்கிறது.

மனிதன் எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கர்வப்படுகிறான்தனக்குஅழகான உடம்பு இருப்பதாக நினைக்கிறான்தன்னால் நினைத்துப் திட்டமிடக்கூடிய மனம் இருப்பதாக எண்ணுகிறான்கற்பனை சக்தி மிகுந்த சிந்தனையால்எதையும் திறமையுடன் சாதிக்க முடியும் என்று கருதுகிறான்இதில்ஊறிப்போகும் மனிதனால் தனக்குள் ஆண்டவன் இருப்பதைஉணரமுடிவதில்லைஇந்த நிலையிலிருந்து அவன் மாற வேண்டும்அவனுள்இருக்கும் ஆத்மாவே அவனுடைய உண்மையான வடிவம் என்பதை அவன்தெரிந்து கொள்ள வேண்டும்கடவுள் அந்தப் பண்பட்ட மனத்தை வாகனமாகஏற்றுக் கொள்ள வேண்டும்இதையே கர்வத்துடன் ஆடும் மயிலின் மீது அமரும்சுப்பிரமணியர் நமக்கு உணர்த்துகிறார்.

மயிலுக்கும் - பாம்புக்கும் பகைமை உண்டுமயில் பாம்பைக் கொல்லுவதில்லை.ஆனால் மிதித்து அடக்கி வைக்கிறதுஅதைப்போல உலக பந்தங்கள்ஆசைகள்எல்லாமே நமக்கு ஓரளவேனும் வாழ்க்கையில் கூடவே இருக்க வேண்டியஅவசியம் இருக்கிறதுஆனால் நாம் ஆன்மீக முன்னேற்றம் அடையவேண்டுமானால்இவற்றை முழுவதுமாக அழிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்க வேண்டும்இதையே மயில் காலடியில் மிதித்து அடக்கிவைக்கும் பாம்புநமக்கு உணர்த்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக