ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பழநி முருகனின் கோவண ரகசியம்!



]


ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியில் அருளும் முருகனுக்கு ஞானப் பழம் என்ற பெயருண்டு. இங்கு முருகப்பெருமான், மாலையில் ராஜ அலங்காரத்தில் காட்சி தருவார். இது போலியான உலக வாழ்வைக் குறிக்கிறது. இவரே காலை வேளையில் கோவணத்துடன் காட்சியளிப்பார். நேற்று இருப்பது இன்றில்லை என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. இந்த உலக வாழ்வு போலியானது. உன்னோடு நான் உடுத்தியிருக்கும் கோவணம் கூட வரப்போவதில்லை. ஏதுமில்லாமல் வந்தாய், ஏதுமில்லாமல் போவாய், என்று முருகப்பெருமான் இத்தலத்தில் உணர்த்துகிறார். இந்த ஞானத்தை உலக மக்களுக்கு வழங்கும் கனி போன்று திகழ்வதால் இங்கு முருகனுக்கு ஞானப்பழம் என்ற பெயர் ஏற்பட்டது. இதனால்தான், இங்கு வந்த அவ்வையாரும் முருகனை பழம் நீ! என்று அழைத்தாள்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

பதினாறு லட்சுமிகளின் பெருமைகள்!!!



ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதிலட்சுமி மேலும் பதினைந்து லட்சுமிகளாக உருவெடுத்து, நமது வாழ்க்கை சிறக்க பதினாறு வகை பாக்கியங்களைக் கொடுத்து வருகிறாள். அந்த பதினாறு லட்சுமிகளின் பெருமைகளைக் காண்போம்.
1. சௌந்தர்ய லட்சுமி


நாம் யாரையாவது பார்க்கப் போனால் முதலில் நம் முகத்தைத்தான் பார்ப்பார்கள். முக வசீகரம் இருந்தால்தான் அவர்கள் நம்மை வரவேற்பார்கள். இதற்கு "சௌந்தர்ய லட்சுமீ கரம்' என்று பெயர். இந்த பாக்கியம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். இதற்காக முதல் லட்சுமியான சௌந்தர்ய லட்சுமியைப் பூஜை செய்ய வேண்டும்.

2. சௌபாக்கிய லட்சுமி

போகும் இடத்தில் நமக்கு வரவேற்பு நன்றாக இருந்தாலும், நமது சௌபாக்கியங்கள் நல்ல முறையில் இருக்க வேண்டும். அதாவது நல்ல மனைவி, நல்ல கணவன், வீடு, வாகனம், மற்ற வசதிகள் என பலவிதங்களில் நன்மை ஏற்பட சௌபாக்கிய லட்சுமியின் அருள் வேண்டும். அதற்காக சௌபாக்கிய லட்சுமியை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.

3. கீர்த்தி லட்சுமி

எவ்வளவு அழகும் செல்வங்களும் இருந்தாலும், நமது பெயர் சமூகத்தில் பல பேருக்குத் தெரிந் திருக்க வேண்டும். இத்தகைய கீர்த்தியைத் தருபவள் கீர்த்தி லட்சுமி. அவளை வணங்கினால் கீர்த்தியுடன் வாழலாம்.

4. வீரலட்சுமி

நம்மையும், நமது மனைவி, மக்கள், செல்வம் போன்றவற்றையும் காப்பாற்றிக் கொள்ள நம்மி டம் வீரம் இருக்க வேண்டும். இந்த வீரத்தை அளிப்பவள் வீர லட்சுமி. வீர லட்சுமியை வணங்கினால் இந்த பாக்கியத்தைப் பெறலாம்.

5. விஜயலட்சுமி

மனிதனுக்கு எவ்வளவு செல்வங்கள், மதிப்பு இருந்தாலும் அவனுக்கு செல்வாக்கு என்பதும் அவசியம் வேண்டும். எதை எடுத்துச் செய்தா லும் அதில் வெற்றியைக் காண வேண்டும். அதற்கு அருள் புரியும் விஜயலட்சுமியை வணங்கி அந்த பாக்கியத்தைப் பெறலாம்.

6. சந்தான லட்சுமி

மனிதனுக்கு அழகு, செல்வம், செல்வாக்கு என பல பாக்கியங்கள் இருந்தாலும், அவனுக்கு குழந்தை இருந்தால்தான் அவன் பெருமை அடைகிறான். அது நல்ல குழந்தையாகவும் இருக்க வேண்டும். இதற்கு அருள் புரிபவள் சந்தான லட்சுமி. அவளை வணங்கினால் சந்தான பாக்கியம் கிடைக்கும்.

7. மேதா லட்சுமி

பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்க வேண்டிய சூழல் நமக்கு ஏற்படும். அதில் சரியான முடிவைத் தீர்மானிக்க புத்தி சரிவர வேலை செய்ய வேண்டும். அதற்கு மேதா லட்சுமியின் அருள் வேண்டும். அவளை வணங்கினால் அந்த பாக்கியம் கிடைக்கும்.

8. வித்யா லட்சுமி

கல்வி என்பது தொழிற்கல்வி, வாழ்க்கைக் கல்வி, அறிவுக்கல்வி போன்று பலவகைப்பட்டது. இவை அனைத்தையும் அடைந்தாலும் வித்தை என்பது "ஸ்ரீவித்யை' என்று கூறப்படும் காமேச்வரியின் பஞ்சதசீ மந்திரங்களேயாகும். இந்த மந்திர சக்தியினால் எதையும் சாதிக்க முடியும். அதனை அடைவதற்கு வித்யாலட்சுமி யின் அருள் வேண்டும்.

9. துஷ்டி லட்சுமி

எல்லா பாக்கியங்களும் இருந்தாலும் எவரிடமும் சொல்லிக் கொள்ள முடியாதபடி மன வேதனையும் இருக்கும். அந்த மன வேதனையை அகற்றி ஆனந் தத்தை அளிப்பவள் துஷ்டி லட்சுமி ஆவாள்.

10. புஷ்டி லட்சுமி

வெளியுலகில் நாம் பழகும் போது நம்முடைய சரீரத்தைக் கண்டு எவரும் அருவருப்புக் கொள்ளாமல் இருக்க வேண்டும். அந்த பாக்கியத்தைப் பெற புஷ்டி லட்சுமியின் அருள் அவசியம் வேண்டும்.

11. ஞான லட்சுமி

வாழ்க்கையில் எல்லா சுகங்களையும் அனுபவித்தாலும் அவ்வளவு சுகங்களும் நிலையானது அல்ல. நாம் ஆசைப்பட்ட பொருட்கள் யாவும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டுப் பிரிந்து விடும் என்ற அறிவு நமக்கு இருந்தால், நாம் அதற்குப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்த அருளை நமக்கு அளிப்பவள் ஞானலட்சுமி ஆவாள்.

12. சக்தி லட்சுமி

இறை அருளால் எல்லாவித பாக்கியங்களை நாம் அடைந்திருந்தாலும், நம் உடலிலும் மனதிலும் சக்தி வேண்டும். எல்லா காரியங் களையும் சாதிக்க வேண்டுமானால் மனோ பலம் அவசியம் தேவை. இதனைப் பெற சக்திலட்சுமியை வணங்கினால் போதும்.

13. சாந்தி லட்சுமி

எவ்வளவு செல்வம், செல்வாக்கு இருந்தாலும் ஏதோ ஒன்று மனதை உறுத்திக் கொண்டு நமது அமைதியைக் கெடுத்து வரும். அத்தகைய தொல்லைகள் எதுவும் இல்லாமல் இருக்க சாந்தி என்னும் அமைதி அவசியம் வேண்டும். இந்த அருளைப் பெற சாந்தி லட்சுமியை வணங்க வேண்டும்.

14. சாம்ராஜ்ய லட்சுமி

மனிதனுக்குப் பெருமை என்பது மிக மிக அவசியம். வீட்டில் குழந்தைகள் நம்மை மதிக்க வேண்டும். மனைவி பெருமை கொள்ள வேண்டும். நல்ல மனைவியை அடைந்ததற்கு கணவனும் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தில் ஒரு உயரிய அந்தஸ்து கிடைக்க வேண்டும். இந்த பாக்கியங்களைப் பெற சாம்ராஜ்ய லட்சுமியின் கடாட்சம் தேவை.

15. ஆரோக்கிய லட்சுமி

மனிதனுக்கு எல்லா வசதிகளும் இருந்து உடல் ஆரோக்கியம் இல்லையென்றால் எந்த வசதிகளையும் அனுபவிக்க முடியாது. உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மேற்கூறப் பட்ட பதினான்கு லட்சுமிகளின் அருளைப் பெற்றதன் பலன்களைப் பெற முடியும். அந்த உடல் ஆரோக்கியத்தைப் பெற ஆரோக்கிய லட்சுமியின் அருள் தேவை.

16. ஸ்ரீகாமேச்வரி என்ற ஆதி மகாலட்சுமி

மகாலட்சுமி பாற்கடலிலிருந்து தோன்றியது அமாவாசை தினத்தில்தான். அமாவாசை தினத்தன்று ஆதிமகாலட்சுமிக்குப் பூஜை செய்வது மிக மிக விசேடமானது. இந்த ஆதி மகாலட்சுமி முக்கோணத்தின் நடுவில் காமேச்வரி என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கிறாள். முக்கோண வடிவில் உள்ள யந்திரத்தில் மூன்று பக்கங்களிலும் ஐந்து, ஐந்து லட்சுமிகளால் சூழப்பட்டு நடுவில் ஆனந்தமாக வீற்றிருக்கிறாள். இவளது அம்சங்களே மற்றைய பதினைந்து லட்சுமிகளாகும்.

ஆகவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு லட்சுமிகளைப் பூஜை செய்து எல்லா பாக்கியங்களையும் பெற்று வளமுடன் வாழ்வோம்.

ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க'த்தின் தமிழ் ஆக்கம்!!!


ஸ்ரீஆதிசங்கரர் அருளிய "ஸ்ரீசுப்ரமண்ய புஜங்க'த்தின் தமிழ் ஆக்கம் கீழே தரப் பட்டுள்ளது. அதை தினமும் ஸ்ரீசுப்ர மண்யரை மனதில் நினைத்துப் பாராய ணம் செய்து வந்தால், வளமான வாழ்க் கையும் நிலையான செல்வமும் பெற்று நலமுடன் வாழலாம்.


பிள்ளையாய் நின்றே விக்ன

பெருமலை தகர்க்கும் தெய்வம்
தொல்லிறை சிவமாம் சிங்கம் 
தொழுதிடும் யானைத் தெய்வம்
வெள்ளை வாரணன் பிரம்மாவும்
விரும்பியே தேடும் தெய்வம்
நல்லருள் உருகணேச
நம் தெய்வம் அருள்வதாக. 



திறமிலேன் சிறிதும்; உண்மை 
தெரிந்து நற் கவியைப் பாட!
உரைநடை அறியேன்: வார்த்தை
ஒலியோடு பொருளும் தேறேன்!
அறுமுகம் கொண்ட தெய்வ
அறிவே என் உள்ளிருந்து
பொருள் நிறை கவியாய் வந்து 
புனிதமாய்க் காட்சி நல்கும்!



மயிலேறி வருவோனாகி,
மனங்கவர் எழிலோனாகி,
பயில் மறைப் பொருளோனாகி
பரந்தங்கு மறைவோனாகி
கயிலையோன் மகனாய், மேலோர்
கருத்தில் வாழ் தெய்வமாகி
தயவினால் உலகம் காப்போன்
தாள் மலர் வணங்குகின்றேன்.


"அடைந்திடும் போதே என்றன்
அலைவாயில் கோவில் தன்னைக்
கடந்தனர் பிறவி என்னும்
கடலினை' என்று காட்டி
இடங்கொண்டங்கினி திருக்கும்
இளையவேல் முருகன் தன்னை
படியெலாம் காக்கும் சக்தி
பாலனைப் போற்றுகின்றேன்!


"கோவிலின் முன்வந்தென்னைக்
கும்பிட்டு வணங்குவோர்க்குத்
தீயவை, கடலின் மீது
திரை தோன்றி மறைவதைப் போல்
மாய்வுறும்' என்று காட்டி
மனிதரைத் தேற்றுகின்ற
தூய நல் குகனை என்றும்
தொழுவேனுள் மலரில் வைத்தே!


கந்தமா மலையின் மீது
காலடி வைத்த போதே
சுந்தரக் கயிலை யேறி
சுக முற்றோர் ஆவரென்று
வந்தவர்க் குரைப்பாரைப் போல்
வடிவேலன் அங்கிருக்கும்!
அந்த நற்றெய்வம் என்றும்
அகமகிழ்(வு) அருள்வதாக!


தண்கடற் கரையின் ஓங்கித்
தவத்தவர் விழைவதாகி
மண்ணவர் பாவமெல்லாம்
மாய்த்திடும் சுகந்தமென்னும்
புண்ணிய மலைக்கு கைவாழ்
பொங்கொளி குகனை அன்பர்
துன்பங்கள் துடைத்தாள் வோனைத்
துதிக்கின்றேன் விருப்பினோடு!



உலகினர் விருப்பமெல்லாம்
உவந்தருள் ஒளிர்பொன் வீட்டில்
மலர் நிறை மணி மஞ்சத்தில்
மகிழ்ந்திருப்பவனைத் தேவர்
தலைவனைக் கார்த்திகையார்
தனயனைக் கோடி சூரிய
ஒளிமிகு வடிவினோனை
உணர்வுடன் தொழுவேன் என்றும்!


ஒலிக்கின்ற சிலம்பினோடும்
ஒப்பிலா அழகினோடும்
சொலிக்குஞ்செந் நிறத்தினோடும்
சுடரும் நின் கமலபாதம்
அளிக்கின்ற அமுதம் மாந்தி
ஆறுமுகத் தேவே என்றன்
உளத்துயர் வண்டு நாளும்
உயரின்பம் அடைவதாக!


பொன்னொளி வீசுகின்ற
புகழ்மிகு பட்டினாலும்
இன்னொலி சலங்கையொட்டி
யாணத்தின் ஏற்றத்தாலும்
மின்னொளி அரை ஞாணாலும்
மேன்மை கொள் நின்னிருப்பின்
தன்னெழில் போற்றி வாழ்வேன்!
சண்முகத் தேவே என்றும்!


தாரகக் கொடியோன் தன்னைத்
தடிந்தவேல் முருகா! இந்தப்
பாரகம் அடங்கக் காக்கும்
பரிவினால் உயர்ந்து வள்ளி 
மார்பகச் சாந்தில் தோய்ந்து
மணக்கும் நின் அகன்ற மார்பாம்
சீரகம் தனை வணங்கிச்
சிந்தித்து வாழ்வேன் என்றும்!


மருவிடும் அண்டமெல்லாம்
மலைந்திடச் செய்தும், இந்த்ரன்
செனுநரைத் தேய்த்தும் வேதன்
செருக்கினைத் தீர்த்தும் நன்மை
பெருகிடக் காத்தும் யானைப்
பெருங்கையும் நாண ஓங்கிக்
கருணை செய் நின் ஈராறு
கைகளே சரணம் கந்தா!


அழகனே! நின்றன் கோலம்
அளவிட்டிங் குரைப்பாருண்டோ?
மழைபொழி பருவம் தன்னில்
மங்குலில் வானில், திங்கள்
முழுமையாய் என்றும் ஆறாய்
முளைத்திடின் களங்கமின்றி
எழில்வளர் நின்முகங்கட்(கு)
ஈடாகும் ஒருகால் என்பேன்!


புன்னகை அன்னம் தோன்றப்
புகழ் கடைக் கண்களான
வண்டுகள் இனிதியங்க
வண்சுவை அமுதைச் சிந்தும்
இன்னுதடு இதழ்கள் கொண்டு
எமக்கருள் சிவகுமாரா!
நின்முகக் கமலம் ஆறும்
நேரினில் யான் கண்டுய்ந்தேன்!


அருள் நிறை முருகா! நீண்டு
அகன்ற நின் விழியீராறும்
கருணையைச் சுரந்து நல்கும்
கடல்களே! அவற்றால் என்றும்
வரையிலா தெவர்க்கும் நீதான்
வழங்கும் நின் அருட்பார்வையில்
ஒரு சிறிதென்மேல் பெய்தால்
உமக்கொரு குறையுண்டாமோ?


என்னருள் குமரா! வாழ்க,
இனிது என ஈசனார் தாம்
அன்பொடிம் மந்த்ரம் கூறி
அறுமுறை மோந்தங்குச்சி
இன்புறற் கேற்றவாகி
எழில் ஒளிர் முடிகள் தாங்கி
மண்பொறை கொளும் நின்ஆறு
மலர்தலைக்கென் வணக்கம்!


மணியணித் தோள்வளையால்
மாலையால் குண்டலத்தால்
அணிபெறு கன்னம் தன்னால்
அழகு கை வேலால் அன்போடு
அணிந்திடும் மஞ்சள் பட்டால்
அழகிற்கோர் வடிவன் ஆன
இனியனாம் முருகன், ஈசன்
ஈன்றவன் இருக்க என்முன்!


வருக என் செல்வ என்றே
வாஞ்சையாய்ச் சிவனழைக்க
விரைவில் தாய்மடியை விட்டு
விருப்புடன் சென்ற பால
முருகனை, உவகை பொங்க
முன்னவன் தழுவிக் கொண்ட
சிறுவனைச் சேயோன் தன்னைச்
சிந்தித்து வணங்குகின்றேன்!


பரமன் தன் குமரா! சேனா
பதி! குகா! கந்தா! வேலா!
குறமகள் வள்ளி தன்னைக்
கொண்டவா! குறையில் செல்வா!
அறங்கொல்தாரகனை மாய்த்த
அருளாளா! அடியார்க் கின்ப
வரந்தரும் மயில்மேல் வீரா!
வந்தெனைக் காப்பாய் என்றும்!


அடங்கியே புலன்கள் ஐந்தும்
அறிவற்றுச் செயலும் அற்று
மடங்கிட நினைவும் நெஞ்சில்
மல்கியே கோழை பொங்க
நடுங்கிடும் உடலினின்று
நமனுயிர் பிரிக்கும்போது
தடையிலா தென்முன் வந்து
தயை நிறை குகனே நிற்பாய்!


கொடுமை செய் கால தூதர்
கோபத்தோ டென்முன் வந்து
கடலென ஆர்ப்பரித்துக்
கலங்கிடச் செய்யும்போது
நடுங்கிடேல் என்று கூறி
ஞானவேல் கையிலேந்தி
உடன் எதிர் மயிலில் தோன்றி
உளத்துயர் தீர்ப்பாய் அப்பா!
கருணையங் கடலே! அந்திக்
காலத்தில் வாயடைத்தொன்(று)
உரைக்கவும் மாட்டேனாகி
ஊமையாய்க் கிடப்பேன் அப்போது
இறைவனே! நினைப் போற்றாத
இழுக்கினால் துறந்திடாதீர்!
குறை நீக்கிக் கொள்ள இன்றே
கும்பிட்டேன் வேண்டி வேண்டி!


ஆயிரம் அண்டங்கட்கோர்
அதிபனாம் சூரன் என்னும்
தீயனோடுற்ற சிங்க
முகனும் தாரகனும் எல்லாம்
மாயவே கருணை கொண்ட
மாவீர! என் மனத்துள்
ஏயுமோர் துயர் வீழ்த்தாயேல்
என் செய்வேன்! எங்கு செல்வேன்!


வளர் துன்பச் சுமையால் என்றும்
வாடுவேன் நாயேன் நீயோ
தளர்பவர் தம்மையெல்லாம்
தாங்கிடும் கருணாமூர்த்தி!
மலைமகள் மைந்தா! உம்மை
மறந்து வேறெங்கும் செல்லேன்!
அளியன் நின்னை துதிக்கவொட்டாது
அலைக்குமென் மனநோய் தீர்ப்பாய்!


தீய தாரகனை கொன்றோய்!
திவ்விய இலையில் நின்றன்
நேயமார் நீற்றைக் கண்டால்
நீரிழி(வு) என்புருக்கிப்
பேயொரு குன்மம் குஷ்டம்
பெருகுகாக் கைவலிப்பும்
சாயபைத்தியமே மூலம்
சளிச்சுரம் அனைத்தும் ஓடும்!


கண்ணவன் வடிவே காண்க!
காதலன் புகழே கேட்க!
அன்னவன் சரிதமேவாய்
அன்புடன் உரைக்க; கைகள்
பண்ணுக தொழில வற்கே!
பணிகட்கே உடலம் ஆக!
எண்ணங்கள் எல்லாம் அந்த
எழில் குகனிடமே சேர்க!


அன்புடன் பக்தி செய்வோர்,
அருந்தவ முனிவர்க் கெல்லாம்
இன்பத்தை யருளு தற்கிங்(கு)
எண்ணற்ற தெய்வமுண்டு!
பண்பிலா ஈனர் கட்கும்
பரிந்தருள் புரிவதற்குச் 
சண்முக மன்றி வேறு
சாமியான் காணேன் காணேன்!


செந்தில் வாழ் முருகா! என்னைச்
சேர்ந்துவாழ் மனைவி மக்கள்
பந்துக்கள் பசுக்கள் ஆண் பெண்
பலரும் நின் பதமே பற்றிச்
சிந்தித்தல் துதித்தல் யாகம்
செய்தல் சேவித்த லென்னும்
இந்த நற்பணிகளே செய்(து)
இருக்க நீ அருள்வாய் அப்பா!


மாயக்கி ரவுஞ்சம் என்னும் 
மலையினைப் பொடியாச் செய்தோய்!
நோயென துடலிற் செய்யும்
நுண்புழு விலங்கு புட்கள்
ஆயவை அனைத்தும் நின்றன்
அயில் வேலால் துளைக்கப்பட்டும்
போயழித்திடுக! இந்தப்
புவியினை தாண்டி அப்பால்!


தெய்வ யானை மணாள!
தேசத்தில் அன்பு மைந்தன்
செய்திடும் பிழையைப் பெற்றோர்
சிந்தையில் பொறுத்தி டாரோ!
உய்வருள் மகேச! நாயேன்
ஒரு சிறு குழந்தை! நீயோ
வையத்தின் தந்தை! என்றன்
வசையெலாம் பொறுத்தருள்வாய்!


கந்தவேள் போற்றி! நீ வாழ்
கடற்கரை தனக்கும் போற்றி!
சந்தமா மயில் தனக்கும்
சக்தி வேலுக்கும் போற்றி!
வந்தனை போற்றி, ஆட்டு
வாகனம் தனக்கும் கோழிச்
செந்திருக் கொடிக்கும்! மீண்டும்
சேவடி போற்றி! போற்றி!


ஈசனார் மகனே வெல்க!
எல்லோர்க்கும் உறவே, வெல்க!
மாசிலாப் புகழோய் வெல்க!
வானுயர் பதத்தோய் வெல்க!
ஆசையோ டன்பர் ஆடும்
ஆனந்தக் கடலே வெல்க!
ஏசிலா இன்பம் ஈவோய்!
என்றும் நீ வெல்க! வெல்க!


போற்றியே குமரன் தன்னைப்
புகழுமிப் புஜங்க மாலை
சாற்றியே வணங்கும் அன்பர்
சன்மார்க்க ராகி, உள்ளம்
ஏற்றிடும் மனைவி மக்கள்
இருஞ்செல்வம் நீண்ட ஆயுட்
பேற்றுடன் வாழ்ந்து கந்தன்
பெரும் பதம் அடைவர் திண்ணம்!
வாழ்க சீரடியாரெல்லாம்.

ஆறு ஆதாரங்களும் அழகுறும்!


முருகா என்றழைக்க
ஆறு ஆதாரங்களும் அழகுறும்!


பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்தி திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே "முருகா' என்னும் திருநாமம்.

இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு திருமுகம். இத் திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது.

அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம் தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.

வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.

நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.

துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம்.

தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம் ஆறாவது திருமுகம்.

இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான் பன்னிரண்டு திருக்கரங் களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார்.

நீலமயில் ஓங்கார சொரூபம். ஓங்காரமே பிரம்மம். அகர, உகர, மகார ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன். முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடி வரும்.

"சரவணபவ' என்னும் சடாக்ஷர மந்திரத்தை மனதில் நினைத்து, "குகாய நம ஓம்' என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள் புரிவான்.

முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத் தாலே மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு. முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.

திருப்பரங்குன்றம்- மூலாதாரம்.

திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம்.

பழனி- மணிபூரகம்.

சுவாமிமலை- அநாகதம்.

திருத்தணி- விசுத்தி.

பழமுதிர்சோலை- ஆக்ஞை.

"முருகா முருகா' என்று மனமுருகி வணங்கி னால், நிலையான இன்பம் அளித்து நம்மைக் காப்பான் வேலவன்.


ஓம் ஸ்ரீ ஞானஸ் கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 16 !



 இறைவன் மீது நம்பிக்கை இல்லாமல் ஜீவநாடி சொல்வதும், கேட்பதும்,

நடைமுறையில் பலன்களைத் தருவதில்லை. நம்பிக்கைதான் முக்கியம்.

நம்பிக்கைதான் வாழ்க்கையின் தும்பிக்கை. ஆராய்ச்சி மனத்தோடு அணுகி

இவர் எப்படி இதைச் சொல்கிறார்? எப்படி எழுத்துக்கள் தோன்றுகிறது?

என்று அலைபாயும் மனதுடனும், ஆதங்கத்துடனும், அங்கலாய்ப்புடனும்

வருகின்றவர்களுக்கு ஜீவநாடி பாடம் புகட்டி விடுகிறது என்றே சொல்ல

வேண்டும். கலியுகத்தில் யாரையும் நல்லவர் என்று நம்ப முடிவதில்லை.



நாடியை ஆராய்ச்சி செய்யும் நோக்கில் அணுகுவதும், அதில் என்ன

மர்மம் உள்ளது என்பதை அறிந்துக் கொள்ள வருவதும் நடைமுறையில்

பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில்

என்னிடம் இருக்கும் ஜீவநாடி மந்திர நாடி அல்ல. சாட்சாத் முருகப்

பெருமானின் ஆசியோடு சொல்கின்ற அருள்வாக்கு நாடி. தம்மை

உண்மையோடும், பக்தியோடும், பக்குவத்தோடும் நாடி வருபவர்களுக்கு

தேடிச் சென்று திருவிளையாடல்களை நடத்துகின்ற நமது ஸ்ரீஞானஸ்கந்த

மூர்த்தியின் வாக்கு இதுவரை பொய்த்தது கிடையாது.



இந்த தொடரை எழுதுவது கூட சுய விளம்பரமாகப் போய்விடுமோ

என்று எழுதும் முன்பு யோசித்தேன். பொய்யைச் சொன்னால் தானே

விளம்பரமாகப் போகும். உண்மையை, உணர்ந்ததை ஊரரியச் சொல்லுவதில்

எந்த வித தவறும் இல்லை என்று அறிவுறுத்தியது. எனது குரு

சக்திவேல் அடிகளாரும், ஆசிரியர் ஸ்ரீராஜு ஐயா அவர்களிடமும்

ஆரம்பம் முதலே பல இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டேன். அவர்கள்

கொடுத்த ஊக்கம் தான் இதை எழுதத் துடிக்கும் தாக்கம் எனக்கு

ஏற்பட்டது. இந்த தாக்கம் தான் அனைவருக்கும் ஒளிவு மறைவுமின்றி

வெளிப்படுத்திடும் வாய்ப்பு கிட்டியது. அனுபவித்தவர்களின் ஆர்ப்பரிப்பான

ஆதங்க வெளிப்பாடுகள் ஏராளம், ஏராளம். இந்த தொடரை ஆவலோடு

எதிர்பார்க்கும் வாசகர்கள் ஏராளம் விரும்பிப் படிக்கின்றவர்களும் தாராளம்.



இதைப் படித்த பின்பு உடனடியாக என்னைச் சந்திக்க வேண்டும் என்று

நினைப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தற்போது அதற்கான

கால அவகாசம் இல்லை என்பது தான். வாய்ப்பு கிடைக்கும் போது

முறையாக அறிவிப்பு செய்கிறேன். அதன்பின்பு தடையில்லாமல் சந்தித்து

விடை காணலாம். வாழ்வின் வெற்றிக்கு தடையில்லா நிலை காணலாம்.

தடம் மாறாமல் வாழ்வில் வளம் பெறலாம்.



 ஒரு மிகப் பெரிய நகைக்கடையின் அதிபர் தனது மகள் திருமணம் பற்றி

கேட்க வேண்டும் என்று என்னிடம் அனுமதி வாங்கி ஒரு நாள் வந்து

சந்தித்தார். பெரிய கோடீஸ்வரன் என்றே சொல்லும்படியான தோற்றம்

தெரிந்தது. பலவரன் பார்த்தும் படியவில்லை ஐயா தாங்கள் தான் இதற்கு

ஒரு தீர்வு சொல்ல வேண்டும் என்று வந்தார். சரி கந்தன் விட்ட வழி

என்று சுவடியைப் பூஜித்து பிரித்து படித்தேன். பின்வரும் விஷயம்

பாடலாக வந்தது.

“கச்சிதமாய் முடியும்

காலமது கனியும்

கந்தனது ஆசிகள்

கனிவாக உண்டுண்டு

கவலைகள் தேவையில்லை

கட்டழகு கொண்டவன்

கன்னியை விரும்பி வந்து

கைப்பிடிப்பான் அஞ்சேல்

கவலைகள் வந்ததுவும்

கஷ்டங்கள் வந்ததுவும்

காட்சிகளங்கே கண்டதும்

காணுகின்ற அக்னி ஸ்தலம்

கச்சிதமாக ஏகியங்கு

கந்தனின் தந்தை நாமம்

கொண்டதன் அடியார்கள்

காவி பூஜை செய்து பின்

கச்சிதமாய் வில்வமொன்றை

கந்தனை தொழுது நட்டுவா

நலம் என்றோம் நலம்!

ஆசி! ஆசி! ஆசி!”

 ஸ்ரீஞானஸ்கந்தர் நாடியில் வாக்கு தந்தது ஸ்ரீஅகத்தியர்.


முருகப் பெருமானது வாக்கு வராமல் அகத்திய மகரிஷி வாக்கு தந்தார்.

எந்த நேரத்தில் யாருக்கு யார் சொல்ல வேண்டும் என்ற விதி இருக்கிறது

என்பதால் யார் வாக்கு தந்தாலும் அதை உரைப்பது மட்டுமே எமது பணி.

சித்தர்கள் ஆசி இருப்பதால் பணத்தின் மீது ஆசை எனும் பேய் என்னைப்

பிடிக்காததால் தூய்மை இருக்கிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லை என்பதால்

வாய்மை இருக்கிறது. வாக்கு பலிக்கிறது. கேட்பவர்கள் வாழ்வு சிறக்கிறது.

 அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை சென்று சிவனடியார்களுக்கு



மகேஸ்வர பூஜை செய்து பின்பு வில்வமொன்றை பிரதிஷ்டை செய்து

வந்தால் கந்தனது ஆசியால் விரைவில் திருமணம் நடக்கும் என்று வாழ்த்தி

முருகனது ஆசி இருப்பதாகவும் கூறி ஆசி கொடுத்தார் அகத்தியர்.

முகமலர்ச்சியோடு ஆசி வாங்கிச் சென்றார்கள்.



திருவண்ணாமலையைப் பொறுத்தவரை அடியார்கள் அதிகம். யாருக்கு

தானம் செய்தாலும் சிறப்புதான். ஆனாலும் சிவனை சிந்தையில் வைத்து

சிவ நாமத்தை உச்சரித்து சிவவேடம் பூண்டு இருக்கும் உண்மையான

சிவனடியார்களுக்கு பூஜை செய்து, போஜனம் செய்து ஆசி வாங்குவது

முடிகின்ற காரியமா? என்ற யோசனை வரும். உண்மைதான் பாத்திரம்

அறிந்து பிச்சையிடு என்பது பழமொழி. ஆசி வாங்குவதும் அப்படித்தான்

இதற்கு ஒரு விடை கொடுக்கும் வகையில் திருவண்ணாமலையில் ஓர்

ஆசிரமம் சிறப்பான சேவை செய்து வருகிறது. எனது குருநாதர் ஸ்ரீவகாப்

ஜோதி அக்பர் சுவாமிகளின் ஆசியோடு அவர் அறிவுறுத்தலின் பேரில்

ஸ்ரீசரவணபவா சுவாமிகளின் தொடர்பு கிடைத்தது. மீனாட்சி நாடியின்

அற்புதங்களையும், நமது ஞானஸ்கந்தர் நாடியின் அற்புதங்களையும்

பல ஆண்டு எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஸ்ரீ ஜோதி

அக்பர் சுவாமிகள் யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டார்.



அவரிடம் முருகப் பெருமானும், மீனாட்சியும் உரையாடி வருவது என்

அனுபவத்தில் கண்டுக் கொண்ட உண்மை. ஜோதி அக்பரின் ஆசியால்

அன்னை வாராஹி தேவியே எனக்கு காட்சி கொடுத்து என்னிடம்

உரையாடி இருக்கிறாள் என்றால் சுவாமியிடம் இன்னும் எத்தனை அதிசயம்

உண்டோ அறியேன். என்னைப் பொறுத்த வரையில் எனது முன் ஜென்ம

பலனால் கிடைத்த பொக்கிஷம் ஸ்ரீ ஜோதி அக்பர் சுவாமிகள் அவர்கள்.


ஸ்ரீ வகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் ஸ்ரீ சரவணன் சுவாமிகளை

அறிமுகம் செய்து வைத்தார். பொள்ளாச்சியில் இருந்து அண்ணாமலைக்கு

இளமை காலம் முதலே வந்து சரணாகதியடைந்தவர். சரவணன் சுவாமி

வள்ளலார் பேரில் அன்பு பூண்டு அவர் மார்க்கத்தில் நிற்பவர். பல

சித்தர்களுக்கு அன்னம் படைத்து அவர்களின் ஆசியையும், அன்பையும்

பெற்றவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இவர் செய்யும் மகேஸ்வர

பூஜையை கண்ணால் கண்டு தொழும் பாக்கியம் கிடைக்கப் பெற்றேன்.



எத்தனை அடியார்களுக்கு அன்னதானம் செய்து பூஜை செய்ய

வேண்டும் என்று முன் கூட்டியே சொல்லி விட்டால் அத்துணை

அடியார்களுக்கும் தகவல் கொடுத்து பூஜைக்குத் தயார் செய்து

விடுவார். அவர் அழைக்கும் அடியார்கள் உண்மையான சிவனடியார்களாக

இருப்பார்கள். அவர்களை வரிசையாக அமர வைத்து இலை போட்டு

அறுசுவை உணவு படைத்து அடியார்கள் நமசிவயா வாழ்க... நாதன் தாள்

வாழ்க... என்று சிவபுராணம் ஓதி பூஜை செய்பவர்களுக்கு ஆசி வழங்கி

பின்பு அன்னம் உண்டு செல்வார்கள். இது போன்ற பூஜை சாதாரணமாக

யாரும் செய்து விட முடியாது. பிராப்தம் உள்ளவர்கள் தான் செய்ய முடியும்.
                 
                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.  
                        ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் - துணை ஆசிரியர்  திருவருள் சக்தி மாத இதழ்.

வியாழன், 9 அக்டோபர், 2014

பாவங்களை கரைக்கும் - உன்னதமான சில புண்ணிய காரியங்கள்!



 பாவங்கள் செய்யத மனிதர்களே இல்லை. சந்தர்ப்பம், சூழ்நிலை அப்படி அமைந்துவிடுவது உண்டு. சற்று , சுமாரான நிலையை வாழ்வில் எய்தியவுடன், செய்த தவறுக்கு பரிகாரம் செய்ய  உள்மனசு துடிக்கும்.
சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரடியாக பரிகாரம் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால், அவர்கள் கீழ்க்காணும் ஏதாவது ஒரு தானம் செய்து, மனம் திருந்தி வாழ்வது நல்லது .  


எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உணவளிப்பது (அன்னதானம்) புண்ணியங்களில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

இருப்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதை விட இல்லாதவர்களுக்கு/மனவளம் குன்றியவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வயிறு நிறைய உணவு அளித்தால் அனைத்து வகைப் புண்ணியமும் கிடைக்கும். சில தோஷங்களையும் நீக்கும்.

அன்னதானத்திற்கு அடுத்தபடியாக வஸ்திர தானம் (ஆடையை தானமாக வழங்குதல்), மாங்கல்ய தானம் (ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி செய்வது முன்னின்று செய்வது) சிறந்தவையாக கருதப்படுகிறது.
இவைகளை விட சிறந்த புண்ணியம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அனாதைப் பிணங்களை அடக்கம் செய்ய உதவலாம். இதனை செய்வதால் பிரம்மஹத்தி தோஷம் கூட விலகும் என சில ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.
பசுவிற்கு பழங்கள் , அகத்திக்கீரை அளிப்பதும் - ஒரு சிறந்த புண்ணிய காரியம் ஆகும்.  பிராமண சமூகத்தில் - இன்னொரு மிகச்சிறந்த விஷயம் நடைமுறையில் இருக்கிறது. கோ தானம் என்று பெயர். ஆச்சார , அனுஷ்டானங்களில் ஈடுபாடுள்ள , சற்று வசதியுள்ள குடும்பத்தில் இது நடைமுறையில் உள்ளது.  அவர்கள் குடும்பத்தில் - தாயோ, தந்தையோ  இறந்து விட்டால்  அவர்கள் ஞாபகார்த்தமாக - ஆரோக்கியமான பசு ஒன்றை வாங்கி - ஒரு கோசாலைக்கு தானம் அளிக்கிறார்கள்.

இறந்துபோன அவர்கள் ஆத்மா சாந்தி அடைய , அந்த பசு கறக்கும் பாலில் - அதிகாலையில் - அந்த கோசாலை அருகில் இருக்கும் - சிவன் ஆலயத்திற்கோ , பெருமாள் ஆலயத்திற்க்கோ - அந்த பாலில் இருந்து அபிசேகம் செய்கிறார்கள். அந்த பசுவினை நல்ல முறையில் பராமரித்து , போஷிப்பது - அந்த கோசாலை உரிமையாளரின் கடமை ஆகும். அந்த பசுவினால் வரும் இதர வருமானம் முழுவதும் அவருக்கே.
சுமார் ஒரு வருடம், அவர்கள் முதல் திதி கொடுக்கும் வரை - நாள் தவறாது - இறைவனுக்கு பாலபிசேகம் செய்யும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.
இதனால், இறந்து போனவரின் ஆத்மா சாந்தி அடைந்து - அந்த குடும்பத்திற்கு சகல ஐஸ்வர்யங்களும் தங்கு தடையின்றி கிடைக்க வலி ஏற்படுகிறது..
நீங்களும் இதைக் கடைபிடிக்க நினைத்தால் , வசதி வாய்ப்பு இருந்தால் - நீங்களும் செய்யலாமே ..!!கோசாலைக்கு கொடுக்க முடியவில்லையானாலும், தாமே பசுவை வளர்த்து , யார் மூலமாவது பாலபிசேகம் செய்யலாம். இல்லை இந்த கடமையை நிறைவேற்றக்கூடிய ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கலாம்.

சண்முகக் கவசத்தின் மகிமை!!!


 சண்முகக் கவசத்தின் மகிமை:-


முருகப்பெருமானைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை என்ற கொள்கையோடு முருகன் மீது 6666 பாடல்கள் பாடியவர் பாம்பன்சுவாமிகள்.இவர் இயற்றிய சண்முக கவசம் புகழ்பெற்ற நூலாகும். கந்த சஷ்டி கவசம் போல் இது பயமும் நோயும் தீர்க்கும் மருந்து என்றால் மிகையில்லை;


பாம்பன் சுவாமிகள்,சென்னையில் இருக்கும் தம்புச்செட்டித் தெருவில் செல்லும்போது எதிர்பாராமல் குதிரைவண்டி மோதியதில் இடக்காலில் முறிவு ஏற்பட்டது.73 வயதில் நேர்ந்த இந்த விபத்தால் இனி சுவாமிகளால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்.

சுவாமிகள் மீது அன்பு கொண்ட சில பக்தர்கள்,அவர் அருகே அமர்ந்து சண்முகக் கவசத்தை விடாமல் நம்பிக்கையோடு பாராயணம் செய்து வந்தனர். “சீருடைக் கணைக்கால் தன்னை சீரலை வாய்த்தே காக்க”என்னும் அடியைப் பாடியபோது சுவாமிகளின் கால் குணமானது.அப்போது வானத்தில் இரு மயில்கள் தோகை விரித்து ஆடிய காட்சியை சுவாமிகள் கண்டார்.

தமிழில் இருக்கும் உயிர் எழுத்துக்கள் 12 ஐயும்,மெய் எழுத்துக்கள் 18 ஐயும்,முதல் எழுத்தாகக் கொண்டு 30 பாடல்களுடன் பாடப்பட்டது சண்முக கவசம்.தினமும் ஆறுமுறை சண்முக கவசத்தைப் பாடுபவர்கள் எத்தகைய நோயிலிருந்தும் விடுபடுவர் என்பது நம்பிக்கை.குறிப்பாக முருகக் கடவுள் பிறந்த வைகாசி விசாகத்தன்று பாடினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.