திங்கள், 20 ஜூன், 2016

கௌமார மடாலயத்தில் திருப்புகழ் இசைவிழா

20.06.2016 திங்கட்கிழமையாகிய இன்று ஆனி மூலம் அருணகிரி நாத சுவாமிகளின் திரு நட்சத்திரம் ஆகும். அதன் அடிப்படையில் கோவை கௌமார மடாலயத்தில் திருப்புகழ் இசைவிழா 19.06.2016 ஞாயிறு அன்று காலை முதல் மாலை வரை சிரவையாதீனம் அவர்களின் தலைமையில்  சிறப்புற நடந்தது. அதன் படங்களில் சில....



சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கௌமார மடாலயத்தில் திரு.தருண் விஜய் M.P அவர்கள்

கோவை கௌமார மடாலயத்தில் 19.06.2016 ஞாயிற்றுக்கிழமையன்று மடாலயத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு திரு.தருண் விஜய் M.P அவர்கள் மாலை அணிவித்து உரையாற்றினார்கள். அதன் படங்களில் சில
                                     


பத்திரிகைச் செய்தி 

                                           சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

செவ்வாய், 14 ஜூன், 2016

17ம் ஆண்டு திருப்புகழ் இசை விழா

கோவை கௌமார மடாலயத்தில் 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 17ம் ஆண்டு திருப்புகழ் இசை விழா சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
                                                                    அழைப்பிதழ்


                                 
                                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!
சிரவையாதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள்

ஸ்ரீஸ்கந்த உபாசகர் அருளுரை பகுதி-1

  • மந்திரம் என்றால் என்ன?
  • மந்திர சித்தி என்றால் என்ன?
  • இறை நாமத்தின் வலிமை
  • இதயத்தில் இறைவன் உறைதல்
  • மனதைத் தூய்மை செய்தல்
  • உள்ளமே பெரும்கோவில்
  • மந்திரவாதிகள் யார்?
  • பகவத்கீதையில் இறைவனைப் பற்றி
  • திருமந்திரம்
  • விலங்கும் மனிதனும்
  • அகத்தியர் அருளிய மந்திரம் 

என பல்வேறு வகையான அரிய ரகசியங்கள் அடங்கிய ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் வழங்கிய அருளுரையின் முழுத்தொகுப்பு வீடியோவைக்காண பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.

https://youtu.be/I_X9lEwL0bo

 நமது கௌமாரபயணம் வாசகர்கள் அனைவரும் வீடியோவை subscribe செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம். subscribe செய்ய gmail ல் LOGIN ஆக வேண்டும். அதன் பின்பு subscribe எனும் button வரும். அதை சொடுக்கவும். நன்றி.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கஜபூஜை சுந்தர சுவாமிகள் 22 வது குரு பூஜை விழா காட்சிகள்

கஜபூஜை சுந்தர சுவாமிகள் 22 வது குரு பூஜை விழா 10.06.2016 வெள்ளிக்கிழமையன்று சிறப்பாக கௌமார மடாலயத்தில் நடந்தது. அதன் காட்சிகளில் சில






                                          சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கௌமாரம் குமரகுரு IAS அகாடமி தொடக்க விழா காட்சிகள்

கௌமாரம் குமரகுரு IAS அகாடமி தொடக்க விழா 09.06.2016 வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரை மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காட்சிகளில் சில


                                            சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

புதன், 8 ஜூன், 2016

அமாவாஸை பூஜைக் காட்சிகள்

                                                   
                    ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி அமாவாஸை பூஜை அலங்காரத்தில்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகில் புதுக்காடு கிராமத்தில் விலாங்குட்டை எனும் ஊரில் உள்ள மலைக்காரன் தோட்டத்தில் இருக்கும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் வைகாசி மாத அமாவாஸை பூஜை 04.06.2016 சனிக்கிழமை அன்று மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை அபிடேகம், பேரொளி வழிபாடு, மலர் வணக்கம், அன்னம்பாலிப்பு, சிறப்பு வேள்வியுடன் 18 அடி வேலுக்கு சிறப்பு பூஜைகள் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்களால் சிறப்பாக செய்யப்பட்டது. சுமார் 600 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற்றுச் சென்றார்கள். அதன் காட்சிகளில் சில.



                                               
                             ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!