செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கஜபூஜை சுந்தர சுவாமிகள் ஓவியமும் ஸ்ரீஸ்கந்த உபாசகரின் கவிதையும்

கார்த்திகை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் வெள்ளிக்கிழமை அன்று கஜ பூஜை சுந்தர சுவாமிகள் அவதரித்தார்கள்.  நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களின் குரு நாதர் தவத்திரு சுந்தர சுவாமிகள் ஆவார்கள். அந்த வகையில் சுவாமிகள் அடியேனுக்கு பரம குரு நாதர் ஆவார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் விசாகம் அன்று கௌமார மடத்தில் சுவாமிகள் அவதார விழா பூசை   நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. சுவாமிகள் செய்த கஜ பூஜை அனைவராலும் இன்றும் மெய் சிலிர்க்கும் வகையில் போற்றப்பட்டு வருகின்றதுஇது போல் ஒரு பூஜையை இது வரையில் யாருமே செய்ததில்லை. இனி எவரும் செய்ய இயலாது. அப்போதே உரிய படி பதிவு செய்திருந்தால் இந்த கஜ பூஜை கின்னஸ் சாதனையில் இடம் பெற்றிருக்கும். இந்த கஜ பூஜை நடத்தி 25 ஆண்டுகளாகி அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு 108 கோ பூஜை, கஜபூஜை, 1008 திருவிளக்கு பூஜை கஜ பூஜை சுந்தர சுவாமிகள் திரு உருவம் திறப்பு, சீர் மிகு சிரவை ஆதீனம் எனும் நூல் வெளியீடு, அறுபத்து மூவர் நீராட்டு என தனது ஞானாதேசிகரைப் போற்றும் விதமாக  நமது குரு நாதர் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் அவர்கள் கஜ பூஜை வெள்ளி விழாவைக் கொண்டாடினார்கள்.
கொங்கு நாடு செய்த தவப் பயணாய் அவதரித்தவர் நம் சுந்தர சுவாமிகள். அவருக்கு நாம் என்ன கொடுத்தாலும் ஈடு இணை ஆகாது எனவே தூய்மையான பக்தியைச் செலுத்தலாம். தமிழ்ப்பற்று இருப்பவர்கள் நம் சுந்தர சுவாமிகள் இயற்றிய சுந்தரர் சொற்றமிழை படித்து ஆய்வு செய்து இன்புறலாம். ஆலய வழிபாட்டில் விருப்பமுடையவர்கள் சுந்தர சுவாமிகள் திருப்பணிகள் செய்த கௌமார மடாலயம், அவினாசி, திருச்செங்கோடு, திருப்பெருந்துறை, வெஞ்சமாக்கூடல் போன்ற தலங்களை தரிசனம் செய்யலாம். வழிபாடு செய்பவர்கள் தமிழ் முறையில் வழிபாடு செய்து சுவாமிகளின் செயல்களைப் போற்றலாம். இப்படி ஏதேனும் ஒரு வகையில் நமது சுவாமிகளைப் போற்றி வழிபட்டு குருவே பரம்பொருள் எனும் கௌமார நெறியில் இணைந்து குருவருளால் அந்த தண்டபாணிக்கடவுள், ஞானஸ்கந்தப் பெருமானின் அருளைப் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

கஜபூஜை சுவாமிகளின் திருவுருவம் ஓவியத்தில் மெய் சிலிர்க்கும் காட்சி

தவத்திரு குமர குருபர சுவாமிகள் திருவுருவ ஓவியம் உருவாகிக் கொண்டிருக்கின்றது..... அந்த  காட்சி....
ஓவியம் உருவாகிவிட்ட காட்சி....


கவிதை:
ஓம்கார உபதேசம் தந்தைக்குச் செய்த
ஓம்கார உருவ கணபதியின் தம்பி
காவியமாய் கண்ட கௌமார வம்சம்
ஓவியத்தில்  மின்னும் காட்சியிதே

பாவிகளை பரிசுத்தம் ஆக்கி பாரினில்
காவியங்கள் படைத்த கௌமார வம்சம்
ஆவிதனை அப்படியே அழகாக ஆட்கொள்ள
ஓவியத்தில் மின்னும் காட்சியிதே

நிஜமாக இருக்கும் நிலை போலேவே
கஜபூஜை சுவாமிகள் திருவுருவம் மின்ன
குமர குருபரர் என் குருவின் உருவம்
சாமரம் வீசி துதிக்கவே
                                                                                    -ஸ்ரீஸ்கந்த உபாசகர் 

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!



வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

கோவை கௌமார மடாலயத்தில் அடியார்கள் மாநாடு ஏப்ரல் 21,22,23-2017

கோவை கௌமார மடாலயத்தில் அடியார்கள் மாநாடு  ஆன்மீக அருள்நெறிக் கண்காட்சி  ஏப்ரல் 21,22,23-2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
                                                    

  • 5 அடி உயர ஐம்பொன் சிவ பெருமான் சிலைக்கு லட்சம் சங்காபிசேகம்
  • 1008 திருக்குண்டங்கள் தமிழ் முறை வேள்வி
  • 108 ஓதுவார்கள் -திருமுறை பாராயணம்
  • 5000 அடியார்கள் சங்கு நாத முழக்கம்
  • 1008 அடியார்கள் கயிலாயம் வாத்தியம் வாசிப்பு
                                         அனைவரும் வருக! அருள் பெறுக!!


திங்கள், 13 பிப்ரவரி, 2017

ஜீவ நாடி அதிசயம் உண்மைச்சம்பவம்

ஒரு பெரியவர் ஜீவ நாடி கேட்க வந்து அமர்ந்தார். அவருக்குப் பின்வருமாறு ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்தார்.
ஜீவ நாடி: சிறு கல்வி கற்றவன்
பெரியவர்: ஆம் சுவாமி
ஜீவ நாடி: இதுவரை தொழில் இல்லை தொல்லைதான். பெரிய சம்பாத்யமும் இல்லை.
பெரியவர்: ஆம் சுவாமி உண்மை
ஜீவ நாடி: பூமியும் வழக்கிலும் வம்பிலும் இருக்கும். நீதிமன்றம் ஏகவேண்டும்
பெரியவர்: ஆம் சுவாமி. எனது பூமி மீது வழக்கு உள்ளது. நீதி மன்றத்தில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
ஜீவ நாடி: இல்லற சாபம் இல்லாள் இல்லை பிள்ளை இல்லை. சந்நியாசி போல் அலைய நேரும்
பெரியவர்: சத்தியமான உண்மை. எனக்கு மனைவி குழந்தைகள் கிடையாது. ஒரு சந்நியாசி போல்தான் அலைந்து வருகின்றேன்.
ஜீவ நாடி:ஜோதிட சாத்திரம் ஆய வல்லவன் பலருக்கும் பயன்படக்கூடியவன். உன் மூலம் பலர் நலம் அடைவர். மற்றவரால் உனக்கு நலம் இல்லை. வேதாந்தம் ரகசியம் அறிவாய். அகத்தியன் ஆசி உண்டு. சித்தர்கள் மார்க்கத்தில் வருவாய். பல சித்துக்களும் பெறுவாய். இன்னும் ஆயுள் உண்டு. ஆரோக்யம் தொல்லை தரும். மூட்டோடு முதுகு வலி ரத்தம் என ரோகம் வரும் கவனம்.
பெரியவர்: மிகச் சரி மிகச் சரி.
ஜீவ நாடி: அம்பாள் ஒருவள் ஸ்தம்பனக்காரி அன்னவளே உன்னுள் இருந்து உன்னை வழி நடத்தி வருகின்றாள். அன்னவளின் மந்திரத்தை அதிகாலையில் 5 மணி முதல் 6 மணி வரை ஜபித்து வா. விரைவில் மௌனம் சித்திக்கும். பின் வழக்கும் வெல்லும். சொத்து வந்து சேரும். பலருக்கும் குரு போல் இருப்பாய். ஜோதிடம் சொல்வாய். உபாசனை புரிவாய். ஸ்தம்பனக்காரி உன்னிடம் வந்து விளையாடுவாள்.
பெரியவர்: கடவுளே….மிக மிக உண்மை. எனக்கு ஜோதிடம் தெரியும். பலருக்கும் சொல்லி வருகின்றேன். அப்படியே பலித்து வருகின்றது. நீங்கள் சொல்லும் இந்த அம்பாள்தான் எனக்கு உற்ற துணை. இந்த அம்மனின் கோவில் அபூர்வமாக ஒரு சில இடங்களில் மட்டுமே உண்டு. அடியேன் அமாவாசை மற்றும் முழு மதியில் தவறாமல் சென்று பூஜையில் கலந்து கொண்டு வருகின்றேன். அந்த அம்மனே எனக்கு எல்லாம். முருகப்பெருமான் புட்டு புட்டு வைத்து விட்டார் ஐயா. எனக்கு இனி என்ன வேண்டும். பல இடங்களில் சென்று அலைந்து திரிந்து இன்று இங்கு ஒரு பெரும் மன நிம்மதி கிடைப்பதை உணர்கின்றேன். இது வரை எனக்கு இது போல் யாரும் நாடி உரைத்ததது கிடையாது. நான் 3 மணிக்கே எழுந்து விடுவேன். நீங்கள் சொல்லும் மந்திரம் எனக்கு ஏற்கனவே உபதேசம் ஆகியுள்ளது. எனவே இனி முதலாய் காலை 5 மணி முதல் 6 மணி வரை ஜபம் செய்யத் துவங்குகின்றேன். எனக்கு மௌனம் சித்திக்குமா சுவாமி?
ஜீவ நாடி: ஜபத்தால் ஸ்தம்பனம் ஆகும் மௌனம் சித்திக்குமே.
மனம், வாக்கு, காயம் இந்த மூன்றையும் அசையாமல் வைத்திருப்பதற்குப் பெயர்தான் மௌனம். ஆன்மீக வாழ்வை ஒரு கனி எனக் கொள்வோமேயானால், மௌனம் அதன் சுவையாகும். நாம் அடைகின்ற முடிந்த பூரண நிலையே மௌனம். எண்ணம், சொல், செயல் இந்த மூன்றிலும் கடைபிடிக்கப்படும் மௌனத்தில், பேசாமல் இருக்கும் வாக்கு மௌனமே எளிதானது. எனவே முதலில் மௌனம் பழகுகின்றவர்கள் பேசாமல் இருந்து பழகுவார்கள். வாயை அசைக்காமல் வைத்திருப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். இதனால் வாக்கு சித்தி உண்டாகும். இல்லறத்தார்கள் விரத நாட்களில் மௌனம் கடைபிடிப்பார்கள். மௌனத்தோடு இறை சிந்தனையும் சேரும் போது அதன் பலன் மிகுதியாகும். வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்கள் முதலில் தனிமையில் இருப்பதே நல்லது. அதில் சித்தி அடைந்த பிறகு கூட்டமாக உள்ள இடத்தில் அமரலாம். வாக்கு கட்டுப்படுத்தப்படும் போது மற்ற இந்திரியங்களும் கட்டுக்குள் வருகின்றன. வாக்கு மௌனம் கடைபிடிப்பவர்களுக்கு கோபம் என்கிற குற்றம் நீங்கும். பேச்சில் தெளிவு ஏற்படும். பெண்களுக்கு இந்த பயிற்சி நல்ல பலனைத் தரும். அவர்கள் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளே ஏற்படாது. சக்தி விரையமாவது தடுக்கப்படும். பேச்சு குறைகின்ற அளவு செயல்திறன் அதிகரிக்கும்.
பெரியவர்: மிகுந்த மகிழ்ச்சி சுவாமி என்று கூறி ஆசி வங்கி விபூதி பெற்று விடைபெற்றார்.
                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் தைப்பூச விழா கொடியேற்றம்

ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் தைப்பூச விழா கொடியேற்றம் படங்கள்
வலம்புரி செல்வ விநாயகர்

ஸ்ரீஞானஸ்கந்தர்
பாலசுப்ரமண்யர்

கொடியேற்றம் நிகழ்வு
ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஜீவ நாடி உண்மைச் சம்பவங்கள்

ஒரு வாசகர் ஜீவ நாடியில் தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.   நாங்கள் கேரளாவில் வசிக்கும் ஒரு குடும்பம். நாங்கள் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அருள்வாக்கு வந்தது. அதில் எங்களுடைய வீட்டின் முன்பு மா மரம் ஒன்று இருப்பதையும், அதில் பூ, காய் ஒன்றும் இல்லாததையும் குறிப்பிட்டு, பின் வீட்டின் பூஜை அறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் போட்டோ சுவற்றில் நன்கு ஒட்டப்படாமல் இருந்ததையும், ஜீவ நாடியில் உரைத்தார். பின் வீட்டில் பச்சை கலர் மூடி போட்ட பாக்ஸில் சாப்பிடுவதற்கான பொருள் இருந்ததையும், பின் வீட்டிற்க்கு பின்புறம் ஏதோ ஒரு  மிருகம் ஒன்று தெரிகிறது அது என்ன என்றும் கேட்டார். நாங்கள் அந்த மிருகத்தை பார்த்திருக்கிறோம். அதை கேரளாவில் மரப்பட்டி என்று அழைப்பதுண்டு. அது ஜீவ நாடி அருள்வாக்கில் வந்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், இருந்தது. ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கோ எங்களைப் பற்றியோ, எங்கள் வீட்டைப் பற்றியோ, எந்த ஒரு தகவலும் அப்போது தெரியாது. அது முதல் எங்கள் குடும்பம் முழுவதும்  ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைச் சரணடைந்து விட்டோம். ஜீவ நாடியில் வரும் வாக்கின் படி நடந்து வருகிறோம்.
மேலும் இன்னுமொரு வாசகர் பின்வருமாறு எழுதியுள்ளார். எனது உறவினர் ஒருவருக்கு ஸ்ரீ ஸ்கந்த உபாஸகரின் அருளாலும், ஆசியாலும் ஜீவநாடி படிக்கும் பாக்கியம் கிடைத்தது. சுவடியைப் பிரித்து முருகனைப் பிரார்த்தனை செய்து சுவாமிகள் நாடி படிக்கத் தொடங்கினார். சிறிது நேரம் படித்தவுடன் நாடியில் ஒரு சிறிய வேல் தோன்றியது. அந்த வேலை ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியேனுக்கு காண்பித்தார்கள். முருகா, முருகா, முருகா எனப் பிரார்த்தனை செய்து வேலை தரிசனம் செய்தேன். பின் அந்தப் பெண்ணுக்கு மாத வயிற்று வலி வரும் என்றும், அதற்கு மருந்தாக ஒரு ஆயுர்வேத மருந்தின் பெயரும் ஜீவநாடியில் வந்தது. மருந்து கூட நாடியில் வருமா என ஆச்சரியத்துடன் சுவாமிகளைப் பார்த்து கேட்டதற்க்கு வரும் என்றும், அந்த மருந்தின் பெயரின் எழுத்தையும் ஜீவநாடியைக் காண்பித்து படித்துக் காண்பித்தார்கள். (மருந்தின் பெயர் குறிப்பிட அனுமதி இல்லாததால் குறிப்பிடவில்லை.) ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் கௌமாரப் பயணம் வலைத்தளத்திலும், திருவருள் சக்தி புத்தகத்திலும் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற அடியவர்களுக்கு முருகப் பெருமானின் அனுமதியோடு காண்பித்ததாக எழுதியிருக்கிறார்கள். நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்காதா என்று முருகப் பெருமானை வேண்டியிருக்கிறேன். உண்மையான பக்தி யார் வைத்தாலும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள்புரிவார். முருகப் பெருமான்  கருணைக் கடல். கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் தெய்வம். கந்தனை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லை. இதுபோல் நிறைய திருவிளையாடல்களை ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடி மூலம் நடத்தி வருகிறார். 

              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


வாழ்வை வளமாக்க வழி கூறும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி

  • ஜீவன் என்றால் உயிர். ஜீவிதம் என்றால் வாழ்க்கைஎனவே  ஒரு மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு உடனடித் தீர்வை வழங்குவதுதான் ஜீவநாடியின் சிறப்பு. மற்ற நாடிகளில், ஓலைச்சுவடியில் எழுத்துக்கள் முன்னரே எழுதப்பட்டிருக்கும். ஆனால் ஜீவநாடியில், ஒரு மனிதனின் சிக்கல்களுக்குத் தகுந்தவாறு எழுத்துக்கள் தோன்றித் தோன்றி மறையும். அதுவும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையான அமைப்பில் காணப்படும். இதுவே ஜீவநாடியின் சிறப்பு மற்றும் தனித்தன்மையாகும்.
  • மேலும் இதனைக் காண மற்ற நாடிகளைப் போன்று விரல் ரேகையையோ, பிற விவரங்களையோ அளிக்கத் தேவையில்லை. நாம்  போய் அமர்ந்து கொண்டால் போதும். கேள்விகள் கூட கேட்காமல், தாமே நமக்குத் தேவையான விவரங்களைத் தரும் நாடிகளும் இருந்திருக்கின்றன.
  • இந்த ஜீவ நாடியைக் கைவசம் வைத்திர்ப்பவர்கள் மிகவும் ஒழுக்கசீலர்களாகவும், தினமும் இறைவழிபாடு செய்கிறவர்களாகவும், பக்தி மிகுந்தவர்களாகவும், மிகுந்த சுத்தத்துடன் நடந்து கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும். பொன், பொருள், புகழ், பணம் போன்றவற்றிற்கு ஆசைப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் தொழிலைச் செய்து வர வேண்டுமே தவிர மற்ற ஆசைகளுக்கு இடம் தரக் கூடாது.
  • அவரவர் கர்மாவின்படி பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ற பலன்களை இப்பூவுலகில் அனுபவித்து வருகின்றனர் மனிதர்கள்.
  • நடுக்கடலில் வழிதெரியாது தத்தளிப்பவர்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் போன்றதே ஜோதிடம். பிரச்னைகளில் சிக்கி வழி தெரியாது தவிக்கும் ஜீவன்களுக்கு உதவும்பொருட்டு தோன்றியுள்ளவையே இது போன்ற ஜோதிட வழிமுறைகள். இவற்றை உலகுக்கு அளித்த ரிஷிகளின் நோக்கமே, மக்களுக்கு அவர்களின் நற்பலன்களை கூட்டிக்கொடுத்தும், தீய பலன்களை குறைத்து கொடுப்பதும் தான்.
  • ஜோதிடத்தை வணிகமாக கருதாமல், அதை ஒரு சேவையாக செய்பவர்களாலேயே அதை சரியாக கூறமுடியும். எனவேதான் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஜீவ நாடி உரைக்க ஒரு சிறு காணிக்கை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படுகின்றது. பணம் மட்டுமே குறிக்கோள் இல்லை.
  • ஏதேனும் ஒரு வகையில் தொடர்ந்து கஷ்டத்தில் இருப்பவர்கள்  ஜீவ நாடியை அணுகி, பரிகாரம் தேடிக்கொள்ளவேண்டும்.  ஜாதகத்தின் மூலம் தீர்க்கப்படமுடியாத கர்ம வினைகள் ஜீவ நாடி மூலம் உடனடியாகஹ் தீர்வதை அனுபவத்தில் காணலாம்.
  • ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைப்பது சித்தர்களும் தேவதைகளும் என்பதால் எந்த சூழ்நிலையிலும் பரீட்சித்து பார்க்கக்கூடாது. அது மிகப் பெரிய பாபம். தவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.
  • ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, கண்டகச் சனி என எல்லாவிதமான சனி தோஷங்களையும் நீங்க வழி கூறும் ஜீவ நாடி
  • ஒரு மனிதனுக்கு ஏற்படும் எல்லாவிதமான கிரக தோஷங்களுக்கும் கிரகங்கள் காரணம் அவன் செய்த பூர்வ ஜென்மங்களின் கர்ம வினைகளே அந்த கர்ம வினைகளைக் கரைக்கும் துல்லிய வழிகளை ஜீவ நாடியில் அறிந்து கொண்டு அதைக் கடைபிடித்து வந்தால் 100% வாழ்வில் ஒரு அதிசயம் நடப்பதைக் காண முடியும்.
  • பல பரிகாரங்கள் செய்தும் தொழில் சிறப்பாக இல்லை என்பவர்கள் ஜீவ நாடியில் வரும் வழிமுறைகளைக் கடைபிடிக்க அடுத்த நொடியே பல்வேறு மாற்றங்கள் வருவதை அனுபவத்தில் உணரலாம்.
  • பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் ஏங்கித் தவிப்பவர்கள் ஜீவ நாடி வழிகாட்டுதலின் படி கடைபித்தால் நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கின்றது. இதுபோல் பல நூறு நபர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைத்துள்ளது.
  • நீண்ட காலமாகத் திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் ஜீவ நாடி சொல்லும் வழிகளைக் கடைபிடித்தால் உடனடியாக திருமணயோகம் பெறுவதை அனுபவத்தில் பல நூறு நபர்களின் திருமணங்கள் மெய்ப்பித்து இருக்கின்றன.
  • கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வம்பு வழக்குகள் என வாழ்க்கையில் நிம்மதி இல்லாதவர்கள், தினமும் நோய் நொடித் தொந்தரவுகளுடன் வாழ்வை நடத்துபவர்கள் அனைவருக்கும் அவர்களின் கர்ம வினைகளை நீக்கி உடனடியான ஒரு தர உயர்வை நிம்மதியான வாழ்க்கையை வாழ வழிகாட்டி வருகின்றது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி.
  • கணவன் மனைவி பிரச்சினை, காதல் தோல்வி, பிள்ளைகளின் படிப்பு, தொழில் மேன்மை, அரசுப் பணி கிடைக்க, வேலையில்லாதவர்கள் வேலை பெற உன்னத வழியைக் காட்டி வருகின்றது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியாகும்.
  • பெரிய கோடீஸ்வரர்களாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் வாழ்வை அமைத்துக் கொள்ள பல சூட்சும இரகசியங்களை வருகின்றவர்களுக்கு உரைத்து ஒரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தருகின்றது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி.
  • எந்த தெய்வத்தை உபாசனை செய்தால் இறையருள் கிடைக்கும் என்றும் நாம் பிறவி எடுத்ததன் நோக்கம் என்னவென்றும், எந்த ஆலயத்தை வழிபட்டால் உடனடியான உன்னத மாற்றம் வாழ்வில் வரும் என்றும் எந்த சித்தர் நமக்கு வழிகாட்டுவார் என்றும், நமக்கு குரு யார் என்றும், நமது குல தெய்வம் எங்குள்ளது என்றும் 100% அற்புதங்களைக் கூறும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி.
  • தேவதா உச்சாடனம் எனும் கோடீஸ்வரனாகும் இரகசிய உபாசனை மார்க்கங்கள் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உத்தரவின் பேரில் பிராப்தம் இருப்பவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றது.
  • பல நூறு நபர்கள் கடந்த 20 ஆண்டுகளாக முருக உபாசனை, அம்பிகை உபாசனை, வாராஹி உபாசனை, மாதங்கி உபாசனை என பல்வேறு தேவதை உபாசனைகளை ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி மூலம்  பெற்று வாழ்வில் 100% தர உயர்வை அடைந்துள்ளார்கள்.
  • சென்னை அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் எனும் நூலில் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த அதிசயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
           

                   ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!