வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

ஜீவ நாடி உண்மைச் சம்பவங்கள்

ஒரு வாசகர் ஜீவ நாடியில் தான் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.   நாங்கள் கேரளாவில் வசிக்கும் ஒரு குடும்பம். நாங்கள் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி கோவிலுக்கு சென்றிருந்தோம். அப்போது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அருள்வாக்கு வந்தது. அதில் எங்களுடைய வீட்டின் முன்பு மா மரம் ஒன்று இருப்பதையும், அதில் பூ, காய் ஒன்றும் இல்லாததையும் குறிப்பிட்டு, பின் வீட்டின் பூஜை அறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் போட்டோ சுவற்றில் நன்கு ஒட்டப்படாமல் இருந்ததையும், ஜீவ நாடியில் உரைத்தார். பின் வீட்டில் பச்சை கலர் மூடி போட்ட பாக்ஸில் சாப்பிடுவதற்கான பொருள் இருந்ததையும், பின் வீட்டிற்க்கு பின்புறம் ஏதோ ஒரு  மிருகம் ஒன்று தெரிகிறது அது என்ன என்றும் கேட்டார். நாங்கள் அந்த மிருகத்தை பார்த்திருக்கிறோம். அதை கேரளாவில் மரப்பட்டி என்று அழைப்பதுண்டு. அது ஜீவ நாடி அருள்வாக்கில் வந்தது எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும், இருந்தது. ஆனால் ஸ்ரீஸ்கந்த உபாசகருக்கோ எங்களைப் பற்றியோ, எங்கள் வீட்டைப் பற்றியோ, எந்த ஒரு தகவலும் அப்போது தெரியாது. அது முதல் எங்கள் குடும்பம் முழுவதும்  ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியைச் சரணடைந்து விட்டோம். ஜீவ நாடியில் வரும் வாக்கின் படி நடந்து வருகிறோம்.
மேலும் இன்னுமொரு வாசகர் பின்வருமாறு எழுதியுள்ளார். எனது உறவினர் ஒருவருக்கு ஸ்ரீ ஸ்கந்த உபாஸகரின் அருளாலும், ஆசியாலும் ஜீவநாடி படிக்கும் பாக்கியம் கிடைத்தது. சுவடியைப் பிரித்து முருகனைப் பிரார்த்தனை செய்து சுவாமிகள் நாடி படிக்கத் தொடங்கினார். சிறிது நேரம் படித்தவுடன் நாடியில் ஒரு சிறிய வேல் தோன்றியது. அந்த வேலை ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அடியேனுக்கு காண்பித்தார்கள். முருகா, முருகா, முருகா எனப் பிரார்த்தனை செய்து வேலை தரிசனம் செய்தேன். பின் அந்தப் பெண்ணுக்கு மாத வயிற்று வலி வரும் என்றும், அதற்கு மருந்தாக ஒரு ஆயுர்வேத மருந்தின் பெயரும் ஜீவநாடியில் வந்தது. மருந்து கூட நாடியில் வருமா என ஆச்சரியத்துடன் சுவாமிகளைப் பார்த்து கேட்டதற்க்கு வரும் என்றும், அந்த மருந்தின் பெயரின் எழுத்தையும் ஜீவநாடியைக் காண்பித்து படித்துக் காண்பித்தார்கள். (மருந்தின் பெயர் குறிப்பிட அனுமதி இல்லாததால் குறிப்பிடவில்லை.) ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் சுவாமிகள் கௌமாரப் பயணம் வலைத்தளத்திலும், திருவருள் சக்தி புத்தகத்திலும் ஜீவநாடியில் தோன்றும் எழுத்துக்களை வந்து அமர்கின்ற அடியவர்களுக்கு முருகப் பெருமானின் அனுமதியோடு காண்பித்ததாக எழுதியிருக்கிறார்கள். நமக்கும் இந்த பாக்கியம் கிடைக்காதா என்று முருகப் பெருமானை வேண்டியிருக்கிறேன். உண்மையான பக்தி யார் வைத்தாலும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி அருள்புரிவார். முருகப் பெருமான்  கருணைக் கடல். கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் தெய்வம். கந்தனை நம்பினோர் என்றும் கைவிடப்படுவதில்லை. இதுபோல் நிறைய திருவிளையாடல்களை ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடி மூலம் நடத்தி வருகிறார். 

              ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக