திங்கள், 31 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !


29.08.2015 சனிக்கிழமை அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் சிறப்பாக நடந்தது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பித்தார்கள்.
கௌமாரபயணம் வாசகர்கள் பலர் வந்து கலந்து கொண்டார்கள். சுமார் 1400 பக்தர்கள் இந்த திருக்கல்யாண வைபவத்தைக் கண்ணுற்றனர் அந்த கந்தன் அருள் பெற்றனர். நிகழ்வுகளில் சில படங்கள்:
கல்யாண கோலத்தில் முருகப் பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை
சிரவை ஆதீனத்துடன் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள்


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சுப்ரமண்யர் திருக்கல்யாண வைபவம் !




                                                 தவத்திரு.குமர குருபர சுவாமிகள்

வருகின்ற 29.08.2015 அன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் 12 மணி வரை வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமண்யருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்க இருக்கிறது. அந்த விழாவை கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி சிரவை ஆதீனம் தவத்திரு.குமர குருபர சுவாமிகள் தலைமை ஏற்று சிறப்பிக்க இருக்கிறார்கள் என்பதையும் கௌமாரபயணம்
வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.



                                          ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்  ஞானஸ்கந்தாஸ்ரமம்


நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் அடிக்கடி இந்த கௌமார மடம் பற்றி வருவதும் இப்போது அதன் ஆதீனமே இந்த திருக்கல்யாண நிகழ்வைத் தலைமை தாங்கி நட்த்துவதும் அந்த முருகன் திருவிளையாடல் என்பது நிரூபணமாகிறது. கௌமாரப் பயணம் வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு சேர குரு அருளையும் திருவருளையும் பெற 29.08.2015 அன்று சனிக்கிழமை ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் வரும் படி அழைக்கப்படுகிறார்கள்.



ஈரோட்டில் இருந்து பவானி வழியாக அந்தியூர் வர வேண்டும். அந்தியூரில் இருந்து புதுக்காடு எனும் ஊரில் உள்ள மந்தை பஸ் ஸ்டாப் வர வேண்டும். மந்தையில் இருந்து விலாங்குட்டை எனும் ஊர் செல்லும் வழியில் மலைக்காரன் தோட்ட்த்தில் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது. வாசகர்கள் இந்த வழித்தடங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

                         
                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஆடி அமாவாஸை அன்று 18 அடி வேலுக்கு அபிஷேகம் ! ! !





ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் ஆடி அமாவாஸை அன்று 18 அடி வேலுக்கு அபிஷேகம்14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமத்தில் உள்ள 18 அடி வேலுக்கு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களால் சிறப்பு அபிஷேகமும் ஆராதானையும் செய்யப்பட்டது. மீனாட்சி நாடியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பே நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களைப் பற்றியும் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் பற்றியும் ஏற்கனவே சித்தர்களால் எழுதப் பட்டிருக்கிறது.



அதனால்தான் நமது குருவைச் சந்தித்த உடனே ஒரு மாற்றம் வருவதை அனைவராலும் உணர முடிகிறது. முன் ஜென்மத்தில் சித்தர் பிறப்பாக இருந்த்ததாலும் இறை அருளால் ஜீவ நாடி படிக்கும் கலையை நமது குரு கைவரப் பெற்று இருக்கிறார். கௌமாரப் பயணம் வாசகர்களுக்க்காக ஒரு சில படங்களை இணைத்து இருக்கிறேன். நேரில் வர முடியாதவர்கள் இதை தரிசனம் செய்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைய குருவடி தொழுகிறேன்.



                                 ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

திருமணம் ஆக ஜீவ நாடி உரைத்த அபூர்வ ரகசியம் !



 நீண்ட காலமாகத் திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி!!!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுக்காடு கிராமம் விலாங்குட்டை மலைக்காரன் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில்  நிகழும் மன்மத வருடம் ஆவணி மாதம் 12 ம் தேதி (29.08.2015) சனிக்கிழைமை பௌர்ணமி திதியும்,அவிட்டம் நட்சத்திரமும், விஷ்டி கரணமும்,அதிகந்த யோகமும் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 7 மணிக்கு சிம்ம லக்கினத்தில் சுப்ரமண்யர் வள்ளி தேவசேனா திருமணம் கொங்கு முறைப்படி எல்லா வகையான சீர்களையும் செய்து மங்கல வாழ்த்துப் பாடி அருமைப் பெரியவர்களை வைத்து நடக்க இருக்கிறது.

 எவர் இந்த திருமணத்தைக் காண்கிறார்களோ அவர்கள் அஷ்ட ஐஸ்வர்யங்களை அடைவதோடு திருமண வாழ்வில் பெரிய நன்மைகளை அடைவார்கள் என்றும், நீண்ட காலமாகத் திருமணத் தடை உடையவர்கள் விரைவில் நல்ல இல்லற வாழ்க்கையை அடைவார்கள் என்றும் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் முருகப் பெருமான் வாக்கு உரைத்து இருக்கிறார். அதே போல் இந்த வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர் விக்ரஹங்கள் வந்த உடனேயே நீண்ட காலமாகத் திருமணமாகாத ஐந்து நபர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுவரை கொங்கு முறைப்படி இறைவன் திருமணங்கள் நடத்தப்படவில்லை. முதன் முறையாக நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது. இந்த திருமண நிகழ்வுகளைப் பற்றி கோவை சரவணம்பட்டியில் உள்ள கௌமார மடாதிபதி தவத்திரு குமர குருபர சுவாமிகளிடம் தெரிவித்த போது அவர் உளம் மகிழ்ந்து ஸ்ரீ ஸ்கந்த உபாசகரிடம் ஆசி கூறி அவரது அருளாசி இருப்பதாகத் தெரிவித்தார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.  எனவே இந்த திருமணத்தை அனைவரும் கண்டு ஆனந்தம் அடைந்து ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியின் அருளுக்குப் பாத்திரமாகும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இந்த நாளில் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் கரங்களில் விபூதி பெற்று அவரது ஆசியையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்




திருமண நிகழ்வுகள்

 முகூர்த்தக் கால் நடுதல்

 படைக்கலம் வைத்தல்

 கங்கணம் கட்டுதல்

 சீர் தண்ணீர் கொண்டு வருதல்

 சுப்ரமண்யருக்கு சீர் செய்தல்

 தெய்வானைக்கு சீர் செய்தல்

 வள்ளிக்கு சீர் செய்தல்

 ஆக்கை சுற்றிப் போடுதல்

 செஞ்சோறு அஞ்சடை கழித்தல்

 நிறை நாழி செய்தல்

 கணபதி வணக்கம்

 நாட்டுக்கல் வணங்குதல்

 சீர் வரிசையுடன் ஆலய வலம் வருதல்

 சிவன் பார்வதிக்கு பாத பூஜை செய்தல்

 மங்கல வாழ்த்து

 சுபமுகூர்த்தம்

 விரல் கோர்வை

 அம்மி மிதித்து அருந்ததி காட்டுதல்

 பரியம் செலுத்துதல்

 தாம்பூலம் கொடுத்தல்

 கல்யாண விருந்து

 புதுமணத் தம்பதிகள் பெண்வீடு செல்லுதல்

 மஹா தீபாராதனை

                                ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

இனிய உதயம் ! ! !



அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் புதிய இணைய தளம் துவங்கப்பட்டுள்ளது. அதில் நமது குரு நாதர்  ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஜீவ நாடி கலை அரசு P.D.ஜெகதீஸ்வரன் அவர்களின் சனிப் பெயர்ச்சிப் பலன்கள் ஜீவ நாடி பரிகாரங்களோடு வெளிவந்துள்ளது. அதில் உள்ள ஜீவ நாடி பரிகாரங்களை நமது கௌமாரப் பயணம் வாசகர்கள் பயன்படுத்தி வாழ்வில் வளம் அடையலாம்.

அதேபோல் குரு நாதர் எழுதிய நூல்களின் விபரங்களும் வந்துள்ளது. அது மட்டுமல்லாமல் குருவருள் ஜோதிடம் மற்றும் திருவருள் சக்தி ஆகிய மாத இதழ்களில் நமது குரு நாதர்  எழுதி வருகின்ற ஜோதிடம் மற்றும் ஆன்மீக கட்டுரைகள், ஜீவ நாடியில் வருகின்ற தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அதை இந்த இணையதளத்தில் தரவிறக்கமும் செய்து கொள்ளலாம். இந்த
வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

குரு சேவையே
குமரன் சேவை.

                   

இணைய தள முகவரி: www.apsaraepublications.com

http://www.apsaraepublications.com/special.php

http://www.apsaraepublications.com/books.php

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வியாழன், 23 ஜூலை, 2015

ஜீவ நாடி ரகசியம் - குரு பௌர்ணமி!




ஆடி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை குரு பௌர்ணமி என்பர். அந்த வகையில் வருகின்ற 30.07.2015 அன்று வியாழன் இரவு முதல் 31.07.2015 வெள்ளி  இரவு வரை பௌர்ணமி இருக்கிறது. அதில் வியாழக்கிழைமை குருவிற்கு உகந்த தினமாதலால் பௌர்ணமியும் வியாழன் இரவு தங்குவதால் இந்த நாள் குருவை வழிபட உகந்த நாளாகிறது. உங்களுக்கு யாரெல்லாம் குருவாக இருக்கிறார்களோ அவர்களிடம் வஸ்திரம் கொடுத்து ஆசி வாங்கினால் இந்த ஆண்டு முழுதுமே குரு பகவானால் பல நல்ல செயல்கள் நடக்கும் என்கிறது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி.


குரு பூர்ணிமா , ஆடி மாதத்தில் (ஜூ ன் - ஜூலை) வரும் ழுழுநிலவு (பௌர்ணமி) நாள் அன்று, சீடர்கள் (மாணவர்கள்) தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய குருவை (ஆசிரியரை) போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாசபூசை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.



மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதைஅருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுசர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

சப்தரிஷிகள் என அழைக்கப்படும் ஏழு பேர் சிவனிடமிருந்து பெற்ற சில யோகப் பயிற்சிகளை 84 வருடங்கள் தொடர்ந்து செய்தனர். அந்த 84 வருடங்களும் சிவன் அவர்களை பார்க்கவில்லை,

அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்களின் தீவிரத்தை உணர்ந்த சிவன் மனமிரங்கி, உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்ட தட்சிணாயனத்தின் முதல் பௌர்ணமியன்று தெற்கு நோக்கி அமர்ந்து, அவர்களுக்கு முறையான போதனைகளை வழங்கினார். சிவன் ஒரு குருவாக அமர்ந்து போதனைகள் வழங்கியதால் அந்த பௌர்ணமி குரு பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. சிவன் தெற்கு நோக்கி அமர்ந்ததால் சிவன் அன்று முதல் தக்ஷிணாமூர்த்தி என்றும் அறியப்பட்டார்.

ஆன்மீக சாதகர்கள் அனைவரும் அன்று தங்கள் குருவிற்கு குருபூஜை செய்து, அடுத்துவரும் 6 மாதங்களுக்கு ஆன்மீகப் பயிற்சிகள் தீவிரமாக செய்து வந்தால் அப்பயிற்சியின் பலன்கள் அடுத்த 6 மாதங்களில் பலனளிக்கக் துவங்கும்.கௌமாரப் பயணம் வாசகர்கள் இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

                               ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

புதன், 15 ஜூலை, 2015

ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது!



ஓர் இந்துவின் வாழ்க்கை குருவை சந்தித்த பிறகு தான் பூரணமடைகிறது. தான் யார்? தனது உண்மைத் தன்மை என்ன? போன்ற எதுவும் தெரியாத நிலையில், அறியாமையுடன், காலம் கொண்டு செல்கின்ற விதத்தில், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்கின்ற ஓர் இந்து, தான் நம்புகின்ற பூர்வஜென்மப் புண்ணிய வசத்தினால் தன் குருவைச் சந்திக்கிறான். 


அந்தச் சந்திப்பு இறையருளால் தான் நிகழ்கின்றது. குருவும் தானுமாக சந்திக்கின்ற அந்த நிகழ்வு அவனுக்கு வாழ்க்கையின் திருப்பமாக அமைகின்றது. இறைவனே தன் விருப்பத்தால் குருவாக அவதரித்துத் தன் படைப்பாகிய மனிதனைத் தன்னிடத்தில் சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபடுகின்றான். இது ஒன்றும் ஒரு சாதாரணமான செயல் அல்ல. ஒரு பூ மலர்வதைப் போல், ஒரு விதை முளைவிடுவதைப் போல், ஒரு குழந்தை பூமியில் ஜனிப்பதைப்போல் அற்புதமான ஓர் இணைவு இது.

இவ்வகையில் யாராயிருந்தாலும் ஒருவனுக்குக் குரு மிக மிக அவசியமாகின்றார். பிற மதத்தினரை விட ஓர் இந்துவிற்குத்தான் இந்தத் தேடல் எளிதில் வாய்க்கின்றது. குரு கிடைப்பதும் அவனது வாழ்க்கைப் போக்கில் தான் சுலபமாக அமைகின்றது. ஏனெனில் அவனது வாழ்க்கையே அந்தப் போக்கில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது.