மௌனத்தை விட வலிமையான ஆயுதம் எதுவும் இல்லை
பொருள் உள்ள பேச்சுக்களை மிகைபடப் பேசுபவனுக்கு அவைகளை அளவுபடப் பேசுதல் மொளனமாகும். பேச வேண்டிய நல்ல விஷயத்தையும் பிறர் கேட்டாலொழியப் பேசாதிருப்பது அதிலும் உயர்ந்த மொளனமாகும். பிறர் பேசும்படி தூண்டினாலும் அப்பேச்சு பிறருக்கோ தனக்கோ அதிகம் பயன்படாது என்று தெரிந்தால் பேசாது அடங்கியிருப்பது அதிலும் உயர்ந்த மொளனமாகும்.
இப்படி மொளனத்திலேயே போகப் போக மனம் அடங்கியிருப்பதற்கு அந்த மொளன நிலையே புறக்குறியாகிறது. ஒருவன் வாய் பேசாதிருந்தாலும் மனதுக்குள்ளே விதவிதமான எண்ணங்கள் உதித்துக் கொண்டிருக்கலாம். அது கிட்டத்தட்ட பேசுதற்குக் சமானமாகிறது. அத்தகைய எண்ணங்களும் உதிக்கலாகாது.
கqடவுள் சிந்தனை வலுத்த வந்தால் வேறு எண்ணங்கள் அடிபட்டுப்போகும். கடவுளுடைய ஒரே ஓர் எண்ணம் நிலைத்து நின்றுவிட்டால் அது பண்பட்ட நிலை. அந்தப் பண்பட்ட நிலையில் மனது நசித்துவிட்டால் மொளனம் ஆங்குப் பூர்த்தியாகிறது. எஞ்சியிருப்பது பிரம்ம சொரூபம்.
நான் யார் தெரியுமா ?
சிலர் பேச்சுவாக்கில் நான் யார் தெரியுமா?என்பாரகள்.ஆனால் அவர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியாது.அந்த" நான்" என்பது யார?அதுதான் ஒ்வொருவருக்குள்ளும் அவகர்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் ஒரு இரகசியம்.
.அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளத்தான் நமக்குள் நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதாகிறது.அதற்கு நமது மனதிற்கு பயிற்சியளிக்க வேணடும்.அதை தியானம் அல்லது ஆழ்ந்த ஆன்மீக சிந்தனையென்றும் சொல்லலாம்.ஒரு அமைதியான சூழலில் நமது ஐம்புலன்களுக்கும் .முழுமையான ஓய்வளித்து நமது மனதிற்குமட்டும் பரிபூரணமாக அனுமதியளித்து நமக்குள் அந்த இரகசியத்தைத் தேடவேண்டும்.
ஆழ்ந்த சிந்தனைக்குள் நமது மனம் நுழைந்து தேடும் போது எல்லாமே சூன்யமாகத் தோன்றும். .அப்போது இந்த உலகமே தொலைந்துவிட்டது போல் தோன்றும்.நம்மை நாமே இழநுவிட்டது போன்றும் தோன்றும் .காற்றில் மிதக்கும் மிக இலகுவான ஏதோ ஒன்றிற்குள் நாம் இருந்தும் இல்லாத நிலையில் மனதுமட்டும் அந்த இரகசியத்தைக் கண்டறிந்து கேட்கும். நீ என்பது யார்?அப்போது நமக்கு விடை சொல்லத்தெரியாது.
ஏனென்றால் நானென்ற ஒன்று அப்போது இல்லை.இதுதான் இரகசியம்.இதுதாதான் உண்மை நான் என்பது ஒரு சூன்யம் அல்லது அகங்காரம்.அக அங்காரம் என்றாலே உள்ளுக்குள் ஒன்றுமே இல்லை என்பதுதான் சரியான பொருள்.
இந்த நிலை எப்போது ஏற்படுகிறதென்றால் எப்போது ஆழ்ந்த சிந்தனையில நம்மை நாமே தொலைத்துவிடுகிறோமோ அப்போதுதான் நமக்குள் ஏதொ ஒன்று பிரகாசிக்கிறது. அதுதான் தெய்வீக ஞானொளி.அந்த ஞானம்தான் கடவுள்.அனைத்து சுயபோகங்களையும் கடந்து உள்ளிருக்கும் அந்த ஒன்றே ஒன்றுதான் தெய்வீகம்.அதாவது எப்போது நீயே இறைவன் என்ற உண்மையை உணர்கிறாயோ அப்போதே நாம் பெற்றிருக்கும் இந்த உடலானது பொய்யானதுதான் என்பது புரிந்துவிடுகிறது.
நமக்குள்ளிருக்கும் தெய்வீகம் எனும் ஆன்மாவிற்கு பெயர் என்பது கிடையாது.உயிரெனும் ஆன்மா நமது உடலில் இருக்கும் வரைதான் நமது உடலுக்குத்தான இந்த உலகம் பெயர் சொல்லி அழைக்கிறது.உயிரெனும் ஆன்மா உடலை விட்டு ஓடி விட்டால் பெயரழிந்து பிணம் என்ற பொதுவான பெயர்தான் குப்பையாகிப்போன உடலுக்கு வழங்கப்படுகிறது..அப்பெயரும ் அப்பிணம் எரியூட்டப்படும்வரைதான்.அதற ்குபின் அது சாம்பல்தான்.இந்த உண்மை எல்லோருக்கும் தெரியத்தான் செய்கிறது.
.ஆனாலும் இந்த உலகத்தின் சாபக்கேடு யாரையும் விட்டு வைப்பதில்லையே.பாவம் !உலகின் மாயைநிலையிலிருந்து தப்புவதென்பது கடினமாகிறது.அதற்கான பயிற்சிகளை பெறுவதற்கும் பொறுமை இழந்துவிடுகிறோம் .
பசியெனும் கொடுமையும் பகட்டு எனும் ஆசையும் இவ்வுலக மக்களை மெய்மையை உணரவிடாது கட்டிப்போட்டிருக்கிறது. இம்மயக்கத்திலிருந்து இவ்வுலகமக்களைக் காக்கப் பகவானே நீதான் வந்தாக வேண்டும்.
ஓம் அகத்தீசாய நம. அருமையான பதிவு. மவுனத்தின் பலத்தை உணர்த்தியதற்கும், படித்ததை பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்குGreat work... Thanks a lot for your posting.
பதிலளிநீக்கு