வியாழன், 30 ஏப்ரல், 2015

அறியாமை என்றால் என்ன ?



ஆசை, பற்று, தனக்கு வேண்டும், தன் குடும்பத்திற்கு வேண்டும், தன் வாரிசுக்கு வேண்டும், தனக்குப் பின்னால் தன் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கவேண்டும். எனவே எப்படியாவது முடிந்தவரை தனத்தை சேர்க்கவேண்டும் என்று எண்ணுகிறானே இதை முதலில் மனதைவிட்டு அகற்றினாலே பாவங்கள் அகன்றுவிடும். 

எனவேதான் மீண்டும், மீண்டும் எங்கள் ஞானஸ்கந்த  ஜீவநாடியிலே முருகப்பெருமான் கூறுகின்ற தர்ம விளக்கத்தைக் கூறிக்கொண்டே இருக்கிறோம். சோதித்துக்கூட பார்க்கலாம். ‘ பாவம் இருக்கிறது. என்னால் ஆலயம் செல்லமுடியவில்லை, பிரார்த்தனை செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது. அடுத்தடுத்து நஷ்டம் வருகிறது. போராட்டமாக இருக்கிறது. போர்க்களமாக இருக்கிறது. ஒன்று போனால் ஒன்று கஷ்டம் வருகிறது. இதில் எப்படி நான் தர்மத்தை செய்யமுடியும் ? முதலில் நான் பட்ட ருணத்தையெல்லாம் அடைக்கவேண்டும். நான் படும் கஷ்டங்களிலிருந்து வெளியே வரவேண்டும். 

நான் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தால்தானே எதனையும் செய்யமுடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த நிம்மதியும், சந்தோஷமும் கிடைப்பதற்காக முதலில் எப்படி அன்றாடம் உலகியல் கடமைகளை மனிதன் ஆற்றுகிறானோ அதைப்போல அவனவனால் முடிந்த உதவியை, அன்னத்தை, ஆடையை, தனத்தை, மருத்துவ உதவியை தேடி, தேடி, தேடி, தேடி, தேடி, தேடி, தேடிச் சென்று தர, தர பாவங்கள் குறைந்துகொண்டே வரும். பாவங்கள் குறைந்தாலே மனம் அறியாமையிலிருந்து விடுபட்டுவிடும். 

எனவேதான் கடுமையான பூஜைகளையும், தவங்களையும் நாங்கள் கூறாமல் இந்த எளிய வழிமுறைகளைக் கூறுகிறோம். வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக