செவ்வாய், 2 ஜூன், 2015

ஜீவ நாடி அற்புதம்!!!



குரு வாழ்க!  குருவே சரணம் !


கோயம்புத்தூரில் இருந்து சுரேந்திரமான அடியவர் ஒருவர் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் முருக தீட்சை பெற்று உபாசனை செய்து வருகிறார். அவரது மூத்த மகள் +2 தேர்வு எழுதும் முன்பு வந்து நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியைக் கேட்டார். முருகப் பெருமான் பின்வருமாறு உரைத்தார்.

தேளேறி வந்தவள்

திவ்யமாய் வித்தை வரும்

மந்தனது சஞ்சாரம்

மந்த நிலை தந்தாலும்

மயிலேறி வந்து காப்போம்

ஆசி ஆசி ஆசி

இப்படி வந்ததால் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. சுவாமி எனது மகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் அதுதான் என் பிரார்த்தனை என்று ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் சொல்ல குருநாதரும் 71/2 சனி நடப்பதால் சற்று மதிப்பெண்கள் குறைந்தாலும் முருகன் மயிலேறி வந்து காப்பேன் என்று சொல்வதால் இறுதியில் வெற்றி உனக்கே உண்டு அஞ்சாதே என்று சொல்லி சில வழிபாடுகளும் சொல்லி அனுப்பி வைத்தார். +2 தேர்வு முடிவுகள் வந்தது.

நாடியில் முருகப்பெருமான் உரைத்ததுபோன்று சற்று மதிப்பெண்கள் குறைந்தே வந்த்து 1132 மதிப்பெண்கள் பெற்று இவரது பெண் தேர்ச்சி பெற்றாலும் கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்து கல்லூரி சேர்க்கைக்கு அலையும்படி நேர்ந்தது. தேர்வு எண், விண்ணப்ப எண், தேதி எனெ அனைத்து எண்களின் கூட்டுத்தொகையும் 8 ஆகவே வந்து 71/2 சனி தனது வேலையைக் காட்டிக்கொண்டு இருந்தது. மீண்டும் நாடி கேட்க வந்தவர் வருத்தமாக சுவாமி அவள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் அதுதான் என் பிரார்த்தனை என்று சொன்னார்.

 ஜீவ நாடி படிக்கப்பட்டது. முருகப் பெருமான் பின்வருமாறு உரைத்தார்.

ஆசிரெனவாதம் உண்டு

அவள் விரும்பும் இடமே கிட்டும்

அச்சமது கொள்ள வேண்டாம்

ஆறுமுகம் காப்பேன்


இப்படி வந்த்தும் சுவாமி பல லட்சங்கள் கட்டி அந்த கல்லூரியில் சேர பலர் காத்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் எனப் புரியவில்லை என்றார். அதற்கு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் முருகனின் ஆசி இருப்பதால் நீயும் ஒரு விண்ணப்பம் போட்டு வை நிச்சயம் கிடைக்கும் என்றார். சரி என்று அவர் அரை மனதுடன் விடை பெற்றார். திடீரென ஒரு நாள் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஐயாவை போனில் தொடர்பு கொண்டு சுவாமி முருகன் உரைத்தது போலவே

எனது மகளுக்கு அவள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது உங்களுக்கு கோடான கோடி நன்றி என்றார். பல லட்சங்கள் கட்டி அந்த கல்லூரியில் சேர பலர் காத்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு எப்படி இடம் கிடைத்தது என்றே பெரிய ஆச்சரியமாக உள்ளது.

இது நிச்சயம் முருகனின் திருவிளையாட ல்தான் என்பது எனக்குப் புரிகிறது. கடைசி காலம் வரை கந்தனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது அவா என்று தெரிவித்தார். இப்படி முருகப் பெருமான் தனது ஜீவ நாடி மூலம் பல திருவிளையாடல்களை நடத்தி வருகிறார்.

                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

3 கருத்துகள்:

  1. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

    பதிலளிநீக்கு
  2. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

    பதிலளிநீக்கு
  3. ஓம் முருகா சரணம்.

    என்னே கருணை ஸ்ரீ ஞானஸ்கந்த பெருமானுக்கு தன் பக்தர்கள் மீது.

    எங்களது கல்வி (Project GRINATI) பணி உலகமெங்கும் சேர ஸ்ரீ ஞானஸ்கந்தர் பாதம் பணிகிறோம்.

    நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள், நன்றி. சாய்ராம்

    பதிலளிநீக்கு