சனி, 16 மே, 2015

படித்ததில் பிடித்தது!


சனீஸ்வரனின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சித்த மகாபுருஷர் சொன்ன பரிகாரமுறை இது.
நீங்கள் எத்தனை கோடி ,கொடுத்தாலும் இதைப்போன்ற அரியதகவல்கள் ,நீங்கள் அறிய விதி இருந்தால் மட்டுமே நடக்கும்.தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா?
அதை நடைமுறைப்படுத்த உங்களுக்கு ஜாதக அமைப்பு இருக்க வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் சர்வநிச்சயம்.
இதை தவறாது செய்து முடித்தால் ,உங்களுக்கு அந்த சனிபகவான் —முழு அருள் கடாட்சம் வழங்கி ,உங்களுக்கு தலைமைஸ்தானம் கிடைப்பது உறுதி. அப்படிப்பட்ட ,ஒரு தேவரகசியம் போன்ற தகவலை ,நமது வாசக அன்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் மட்டற்றமகிழ்ச்சி…….
தினமும் உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே )
ஒருகைப்பிடி அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும்.
உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும் ,
அதையே மாற்றக்கூடியசக்தி இதற்கு உண்டு என்கிறார்.
இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி,
வன்னி மரவிநாயகருக்கு பச்சரிசிமாவு படித்தாலும்,
சனிக்கிழமைகளில் விரதம் இருந்தபடி எள் கலந்த தயிர்சாதம்
படித்தாலும்,
ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.
காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை!.. ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,விபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்வழிபாடுதான்.உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான
ஜீவ ராசி – காக்கை இனம்.
குடும்பஒற்றுமைவேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலிபெண்கள் காக்கைகளை வழிபடுவதுவழக்கம்.தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க,தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழ இந்த
காணுப் பிடிபூஜையைச்செய்கிறார்கள்.திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக் கோலமிடுவார்கள்.அங்கேவாழை இலையைப் பரப்பிஅதில் வண்ண வண்ண சித்ரான்னங்களைஐந்து,ஏழு,ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,
காக்கைகளை “கா…கா…’என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.
அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும் பறந்துவரும்.அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.வாழை இலையில் உள்ள அன்னங்களைச்சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…கா…’
என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும்.அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,
வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.
இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை.இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.
மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை.மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாவு ம் கருதுகிறார்கள்.
காக்கை சனிபகவானின்வாகனம்.காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில்நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,
அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு.காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம்.
அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்எமன்மகிழ்வாராம்.எமனும் சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால்,
காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும் திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.தந்திரமானகுணம்கொண்டகா காலையில்நாம்எழுவதற்குமுன்,காக்கையின் சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும்.
நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவே எனவே,காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான்,எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்வாழலாம்
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சனி, 2 மே, 2015

முப்பெரும் விழாவில் ஸ்ரீஸ்கந்த உபாசகர் அவர்களுக்கு பண்டித காழியூர் நாராயணன் அவர்கள் வாழ்த்து!


உலகப் புகழ் ஜோதிட மேதை” பண்டித காழியூர் நாராயணன் அவர்கள் விழாவைத் தலைமை ஏற்று தலைமை உரையாற்றினார். அவர் பேசுகையில் மக்கள்

"ஜோதிடம் என்றால் ஜோதிடத்தையே முழுதும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது, அதேபோல் மருத்துவர் என்றால் மருத்துவரையே முழுதும் நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது, கடவுள் என்றால் கடவுளையே நம்பிக் கொண்டு இருக்கக் கூடாது" 


தன்னம்பிக்கை மிக மிக அவசியம், ஒரு பேட்டியில் கூட என்னைக் கேட்டார்கள் நீங்கள் பெரியாரையும் சங்கராச்சாரியாரையும் கலந்த மாதிரி பேசுகிறீர்கள் என்று,உண்மைதான் ஜோதிடம் பொய் அல்ல அதே சமயம் அதையே பிடித்துக் கொண்டு இருக்கக் கூடாது.  நான் இப்படிச் சொல்வதால் சிலருக்கு என் கருத்துக்கள் பிடிக்காமல் கூட போகலாம் ஆனால் அதுதான் நல்லது. ஜோதிடரிடம் சென்று நல்ல சக்தியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே அல்லாது நமது கஷ்டங்களைச் சொல்லி ஒப்பாரி வைக்கும் இடம் என்று கருதக் கூடாது. இந்த நிக்ழ்ச்சிக்கு என்னை அழைத்தவுடன் எந்த மறுப்பும் சொல்லாமல் சரி என்று ஒப்புக் கொண்டேன். ஆனால் ஒரு கேள்வி மட்டும் கேட்டேன். ஏதோ ஒரு கிராமத்தில் வைத்திருக்கிறீர்களே அங்கு கூட்டம் வருமா? என்பதுதான் அதற்கு அவர்கள் சொன்ன பதில் வந்து பாருங்கள் என்றார்கள். சரி ஒரு பத்து பதினைந்து பேர் இருப்பார்கள் என்று எண்ணி வந்தேன் உண்மையிலேயே அசந்து போய்விட்டேன். அடடா...என்ன கூட்டம்... என்ன கூட்டம்... உண்மையிலேயே மிக்க மகிழ்சியாக இருக்கிறது. 

இவ்வளவு அருமையான ஏற்பாடுகளை எப்படிச் செய்ய முடிகிறது எனக் கேட்டேன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்களின் சீடர்களும் தொண்டர்களும் இரவு பகல் பாராது இதற்காக உழைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.மிக்க மகிழ்ச்சி அடந்தேன். சாத்தியமே படாத ஒரு விஷயம் இன்று சாத்தியாமாகி இருக்கிறது. இந்த இடம் எனக்கு திருப்பதி போன்ற உணர்வைத் தருகிறது. ஜோதிட உலகில் பி.டி.ஜெகதீஸ்வரன் எனும் ஒரு இளம் புயல் கிளம்பி இருக்கிறது. இந்த வயதில் யாருமே தொடாத விஷயங்களை ஆய்வு செய்து மூன்று நூல்களை எழுதி இருப்பது பெரிய விஷயம். அவரிடம் திறமை இருக்கிறது, அறிவு இருக்கிறது, ஆற்றல் இருக்கிறது, பண்பு இருக்கிறது, பரிசுத்தம் இருக்கிறது அதேபோல் பணிவு இருப்பது பெருமையான விஷயம். இதை எல்லாம் விட மேலாக பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்களிடம் தெய்வ பலம் மிகுதியாக இருக்கிறது. இந்த வயதில் இவ்வளவு சாதனைகள் என்றால் இன்னும் பெரிய வயதில் பல அரிய சாதனைகள் படைப்பார். நிச்சயம் இந்த ஜோதிட உலகம் அவரைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்கும். ஐம்பெரும் நூல்களை வெளிட்டு அவரும் ஒரு அற்புத நூலை எழுதிய சித்தர் அடிமை ஸ்ரீ சி.ராஜு அவர்கள் எனது நீண்ட கால நண்பர், கடின உழப்பாளி அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.


F:\book release photos\DSC_7320.jpg

ஸ்ரீநிவாசன் பஞ்சாங்கம் ஆசிரியர் திரு. நர நாராயணன் அவர்களுடன் நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர்
F:\book release photos\DSC_7243.jpg



உலகப் புகழ் தொலைதூரப் பரிகாரர் திரு.குருவருள் நடராஜன் அவர்களுக்கு நமது குருநாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் பி.டி.ஜெகதீஸ்வரன் அவர்கள் பொன்னாடை, சந்தன மாலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். அருகில் திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஆசிரியர் திரு ராஜீ அவர்கள்

வியாழன், 30 ஏப்ரல், 2015

அறியாமை என்றால் என்ன ?



ஆசை, பற்று, தனக்கு வேண்டும், தன் குடும்பத்திற்கு வேண்டும், தன் வாரிசுக்கு வேண்டும், தனக்குப் பின்னால் தன் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கவேண்டும். எனவே எப்படியாவது முடிந்தவரை தனத்தை சேர்க்கவேண்டும் என்று எண்ணுகிறானே இதை முதலில் மனதைவிட்டு அகற்றினாலே பாவங்கள் அகன்றுவிடும். 

எனவேதான் மீண்டும், மீண்டும் எங்கள் ஞானஸ்கந்த  ஜீவநாடியிலே முருகப்பெருமான் கூறுகின்ற தர்ம விளக்கத்தைக் கூறிக்கொண்டே இருக்கிறோம். சோதித்துக்கூட பார்க்கலாம். ‘ பாவம் இருக்கிறது. என்னால் ஆலயம் செல்லமுடியவில்லை, பிரார்த்தனை செய்ய முடியவில்லை. குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது. அடுத்தடுத்து நஷ்டம் வருகிறது. போராட்டமாக இருக்கிறது. போர்க்களமாக இருக்கிறது. ஒன்று போனால் ஒன்று கஷ்டம் வருகிறது. இதில் எப்படி நான் தர்மத்தை செய்யமுடியும் ? முதலில் நான் பட்ட ருணத்தையெல்லாம் அடைக்கவேண்டும். நான் படும் கஷ்டங்களிலிருந்து வெளியே வரவேண்டும். 

நான் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருந்தால்தானே எதனையும் செய்யமுடியும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அந்த நிம்மதியும், சந்தோஷமும் கிடைப்பதற்காக முதலில் எப்படி அன்றாடம் உலகியல் கடமைகளை மனிதன் ஆற்றுகிறானோ அதைப்போல அவனவனால் முடிந்த உதவியை, அன்னத்தை, ஆடையை, தனத்தை, மருத்துவ உதவியை தேடி, தேடி, தேடி, தேடி, தேடி, தேடி, தேடிச் சென்று தர, தர பாவங்கள் குறைந்துகொண்டே வரும். பாவங்கள் குறைந்தாலே மனம் அறியாமையிலிருந்து விடுபட்டுவிடும். 

எனவேதான் கடுமையான பூஜைகளையும், தவங்களையும் நாங்கள் கூறாமல் இந்த எளிய வழிமுறைகளைக் கூறுகிறோம். வாய்ப்புள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதன், 29 ஏப்ரல், 2015

முப்பெரும், விழா முடி சூடிய திருவிழா ! ! !


14.04.2015 செவ்வாய்க் கிழைமை அன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் புதுக்காடு விலாங்குட்டை மலைக்காரன் தோட்டத்தில் அமைந்துள்ள ஜீவ நாடி புகழ் ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம், ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி திருக்கோவிலில் அப்ஸரா பப்ளிகேஷன்ஸ்  முப்பெரும் விழா இனிதே நடை பெற்றது.

ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி படிக்கும் கலையைக் கைவரப்பெற்ற எனது குரு நாதர் "ஜீவநாடி கலையரசு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர்" அவர்கள் எழுதிய மூன்று நூல்களை உலகப் புகழ் ஜோதிட மேதை” பண்டித காழியூர் நாராயணன் அவர்கள் வெளியிட்டார்.

கௌமாரப் பயண வாசகர்கள் பலர் முப்பெரும் விழாவிற்கு ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களுக்கு நன்றிகள் பல.



எனது குரு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் உலகப் புகழ் ஜோதிட மேதை பண்டித காழியூர் நாராயணன் அவர்களுக்கு ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கிறார் அருகில் திருமுருக சுரேந்திரன் அவர்கள்


ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள்:

  1. துல்லிய பலன்களை மிக எளிதாகக் கணித்திட உதவும் திம்ப சக்கரம்,
  2. இறப்பின் இரகசிய புண்ணிய சக்கரம்,
  3. ஞானம் அருளும் காலக்கண்ணாடி.



உலகப் புகழ் ஜோதிட மேதை பண்டித காழியூர் பண்டித காழியூர் நாராயணன் அவர்களுடன் எனது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் அருகில் திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஆசிரியர் ஸ்ரீ ராஜீ அவர்கள்
ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் எங்கு கிடைக்கும் எனப் பல கௌமாரப் பயண வாசகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர். அவர்கள் அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் உரிமையாளர் திருவருள் சக்தி குருவருள் ஜோதிடம் ஆசிரியர் திரு.ராஜீ அவர்களைத் தொடர்பு கொண்டு புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அவரது கைப்பேசி எண்:9710421880.


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியுடன் பொதிகை மலை திகில் பயணம்!

பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்தியரின் அற்புத தரிசனம்!
நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் அவர்களுடன் அடியேனும் மற்றும் மும்பை கணேசன் குழுவினரும் ஞானஸ்கந்தர் ஜீவ நாடியை எடுத்துக் கொண்டு பொதிகை மலை பயணம் சென்று வந்தோம். அதில் ஜீவ நாடி நடத்திய அற்புதங்களும், அகத்தியர் மற்றும் முருகப் பெருமான் நடத்திய அதிசய திருவிளையாடல்களும் ஏராளம்!!! ஏராளம்.!!! அது பற்றிய பதிவுகள் விரைவில் வெளிவரும். அகத்தியர் பொதிகை மலை உச்சியில் ஜீவ நாடியில் கொடுத்த வாக்கின் முழு விபரங்கள் விரைவில் வெளிவரும். ஓம் அகத்தீசாய நமஹ! ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!


ஸ்ரீஸ்கந்த உபாசகருடன் அடியேன்!


ஸ்ரீஸ்கந்தஉபாசகருடன் மும்பை கணேசன் குழுவினர்!


பொதிகை மலை உச்சியில் உள்ள அகத்தியரின் வலது புறம் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடி சுவடி மற்றும் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் பூஜிக்கும் வேல் இருப்பதை தரிசனம் செய்யுங்கள்!!!

ஓம் அகத்தீசாய நமஹ! 
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

ஜீவ சமாதி என்றால் என்ன? இது சாத்தியமா?


நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வதேயாகும்
.
ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். ஆனால் நம்மால் எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும்.இதைத்தான் ஜீவ சமாதி என்கிறோம்.



சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்திவேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது.


உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது.யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும்.

அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார். மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை.
அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். இது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுண்டு. உண்மை தான் ,அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.


இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மையாக விளக்கி அருளுவார்கள்.
உயிர் போகினும் போகாதுடலினை வீங்கித்
தலைகிறுத்த கல்வது தனஞ்செயன்.
பிராணனைக் கட்டுப்படுத்த வல்லவர்களுக்கு இந்த தனஞ்செயன் வாயுவை மற்ற ஒன்பது பிராணன்களில் இருந்து பிரியாமல் இருக்க வைத்து நீண்ட நாள் தன் ஆயுளை நீட்டித்துக் கொள்ள முடியும். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்திமா? என்று கேட்டால் திருமூலர் சாத்தியமே என்கிறார்.

ஒத்த இவ்வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்த இவ்வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்து இவ்வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த உடலும் உயிரும் இருந்தவே.


பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த யோகியர் பிராணாயாமப் பயிற்சியின் வல்லமையால் இந்த தனஞ்செயன் என்கிற பத்தாவது பிராணனை மற்ற பிராணன்களில் இருந்து பிரியாமல் செய்து உடலையும், உயிரையும் காத்துக் கொண்டனர். திருமூலர் 4500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்ததாகச் சொல்வார்கள். அகத்தியரோ பல யுகங்களாக வாழ்வதாகச் சொல்வது உண்டு.
ஆனால் இந்த திருமந்திரப் பாடலைப் படித்தால் அது சாத்தியமே என்று தோன்றுகிறது.இந்த தனஞ்செயன் வாயுவானது உயிர் போனாலும் உடலை விட்டுப் போகாமல் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து பின் உடலை வீங்கச் செய்து கபாலம் வழியாக வெளியேறும் என்பது சித்தர்கள் கூற்று. இவ்வாயுவானது உடலைவிட்டு வெளியேறி விட்டால் உடலானது உடனே வீங்கி வெடித்து விடும்.

இருக்கும் தனஞ்செயன் ஒன்பது காலில்
இருக்கும் இருநூற்று இருபத்து மூன்றாய்
இருக்கும் உடலில் இருந்தில ஆகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

இந்த தனஞ்செயன் என்கிற வாயு மட்டும் மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ?
அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடி இருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால் தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கி விடுகிறது.

இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால் தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும்.மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக்கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார்.

வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு. முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார்.


யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள்.

அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்து விடும்.

திங்கள், 20 ஏப்ரல், 2015

முருகனை காண உதவும் பகை கடிதல் பதிகம் !





பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த பகை கடிதல்

திருவளர் சுடர் உருவே, சிவைகரம் அமர்உருவே,
அருமறை புகழ்உருவே, அறவர்கள் தொழும்உருவே
இருள்தபும்ஒளிஉருவே, எனநினை எனதுஎதிரே,
குருகுகன்முதல்மயிலே,கொணர்திஉன்இறைவனையே.

மறைபுகழ் இறைமுனரே, மறைமுதல்பகர்உருவே,
பொறைமலிஉலகுஉருவே, புனநடை தரும்உருவே
இறைஇளமுகஉருவே, எனநினைஎனதுஎதிரே
குறைவுஅறுதிருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

இதரர்கள்பலர்பொரவே, இவன்உறை எனதுஎதிரே
மதிரவி பலஎனதேர், வளர்சரன்இடைஎனமா,
சதுரொடு வருமயிலே, தடவரைஅசைவுஉறவே,
குதிதரும்ஒருமயிலே, கொணர்திஉன்இறைவனையே.

பவநடை மனுடர்முனே, படர்உறும்எனதுஎதிரே
நவமணி நுதலணிஏர், நகைபல மிடறுஅணிமால்,
சிவணிய திருமயிலே, திடனொடு நொடிவலமே
குவலயம்வருமயிலே, கொணர்தி உன்இறைவனையே.

அழகுஉறுமலர் முகனே, அமரர்கள்பணிகுகனே,
மழஉரு உடையவனே, மதிநனி பெரியவனே
இழவுஇலர்இறையவனே, எனைநினைஎனதுஎதிரே
குழகுஅதுமிளிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

இணைஅறும்அறுமுகனே, இதசசிமருமகனே,
இணர்அணிபுரள்புயனே,எனநினை எனதுஎதிரே,
கணபணஅரவுஉரமே, கலை(வு)உறஎழுதரும்ஓர்
குணம்உறு மணிமயிலே, காணர்திஉன்இறைவனையே.

எளியவ, என் இறைவ, குகாஎனநினைஎனதுஎதிரே
வெளிநிகழ்திரள்களைமீன், மிளிர்சினைஎனமிடைவான்,
பளபள எனமினுமா பலசிறைவிரிதருநீள்,
குளிர்மணி விழிமயிலே, கொணர்தி உன் இறைவனையே

இலகுஅயில்மயில்முருகா, எனநினைஎனதுஎதிரே,
பலபல களமணியே, பலபல பதமணியே
கலகல கலஎனமா, கவினொடுவருமயிலே,
குலவிடு சிகைமயிலே, கொணர்தி உன் இறைவனையே.

இகல் அறுசிவகுமரா, எனநினை எனது எதிரே
சுகமுனிவரர் எழில்ஆர், சுரர் பலர்புகழ்செயவே,
தொகுதொகு தொகுஎனவே, சுரநடம் இடுமயிலே,
குகபதி அமர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.

கருணைபெய் கனமுகிலே, கடமுனிபணிமுதலே,
அருணையன்அரன்எனவே,அகம்நினைஎனதுஎதிரே
மருமலர் அணிபலவே,மருவிடு களமயிலே,
குருபல அவிர்மயிலே, கொணர்தி உன் இறைவனையே.


நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பாடல் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த பாடல் ஆகும். இது மொத்தம் 10 பாடல்களை உடையது. இதில் பாம்பன் சுவாமிகள் முருகனை துதித்து பின்பு அவரின் வாகனமான மயிலிடம் இறைவனாகிய முருகனை அழைத்து வருமாறு பாடுகிறார். இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் கனவிலும், நனவிலும் முருகனின் அருள் உண்டாகும்.

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத் திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 9 முறை பாராயணம் செய்ய வும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 9 முறை பாராயணம் செய்யவும்.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும். முருகன் படத்திற்கு பதிலாக பித்தளையால் செய்யப்பட்ட வேல் ஒன்றினை வாங்கிக் கொள்ளலாம். வேலினையே முருகனாக பாவித்து வழிபாடு செய்து வரவும்.
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முருகனின் அருளினை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் கொண்ட துதி ஆகும். பாராயணம் செய்யும் காலத்தில் கனவில் முருகனின் வாகனமான மயில் தோன்றும். அதன் பின்பு கனவில் குமரக்கடவுள் தோன்றுவார் என்பது திண்ணம். நேரில் தோன்றுவது என்பது அவரவர் செய்த புண்ணியத்தினைப் பொறுத்தது.

பாராயணம் செய்யும் காலத்தில் பாராயணத்திற்கு தடைகள் உருவாகலாம். தடைகள் வந்தாலும் அவற்றை கடந்து தொடர்ந்து பாராயணம் செய்து வரவும். அவ்வாறு பாராயணம் செய்தால் நமது கர்ம வினைகள் படிப்படி யாக கரைய ஆரம்பிக்கும். அகத்திலும், புறத்திலும் உள்ள பகை நீங்கும் என்பது உண்மையாகும்.

தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து முருகனின் தரிசனத் தையும் தந்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
ஓம் சரவணபவ
ஓம் குமர குருதாச குருப்யோ நம: