வெள்ளி, 17 மார்ச், 2017

ஜீவ நாடி அதிசயம் உண்மைச்சம்பவம்

ஒரு அன்பர் வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். அவருக்கு ஜீவ நாடியை வாசிக்க சுவடி பிரிக்கப்பட்டது. முருகப்பெருமான் பின்வருமாறு உரைத்தார்.
ஜீவ நாடி: விபத்தொன்று நேர்ந்த நேரம் மங்கையவள் மயங்கி மருத்துவமனையேகும் நேரம்…
அன்பர்: ஆம் சுவாமி அது குறித்துதான் தங்களைப்பார்க்க வந்துள்ளோம். எங்கள் மிக நெருங்கிய உறவினப் பெண் ரோட்டில் நடந்து செல்லும் போது ஒரு வண்டியில் மோதி மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் சுவாமி….முருகப்பெருமான்தான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் சுவாமி…
ஜீவ நாடி: ஊர் என்று முடிகின்ற ஊர் தன்னில் வைத்தியம் கொள்
அன்பர்: கோயம்புத்தூரில்தான் வைத்தியம் பார்க்க மருத்துவமனையில் வைத்திருக்கின்றோம் சுவாமி. அது ஊர் என்று முடிகின்ற ஊர்தான்.
ஜீவ நாடி: வைத்தியனை மாற்ற வேண்டாம் மகிமை வரும் அங்கே அஞ்சேல்
அன்பர்: மருத்துவமனையை மாற்றலாம் என்று பலர் சொன்னார்கள். இருந்தாலும் முருகப்பெருமான் வாக்கு படி நடக்கலாம் என்றுதான் இங்கு வந்தோம். சரி…மாற்றம் செய்ய மாட்டோம். முருகன் விட்ட வழி…
ஜீவ நாடி: மூன்று ஆலயங்கள் சென்று வழிபட்டு கனி வைத்து பூஜித்து அந்தக் கனியை கொண்டு சென்று மங்கை இருக்கும் இடத்தில் வை.
அன்பர்: அப்படியே செய்கின்றோம் சுவாமி
  இப்படி ஜீவ நாடியில் குறிப்பிட்டபடி அந்த அன்பர் ஜீவ நாடியில் சொல்லிய அந்த மூன்று ஆலயங்கள் சென்று ஜீவ நாடியில் சொன்ன வழிபாடுகளைச் செய்துவிட்டு ஒரு எலுமிச்சம் பழம் வைத்துப் பூசித்து பின் அந்த பெண் இருக்கும் மருத்துவ மனையில் இருக்கும் அந்தப் பெண்ணின் கணவனிடம் வைத்துக் கொள்ளும்படி கொடுத்துவிட்டார்கள். பின்பு ஒருவாரம் கழித்து மீண்டும் ஜீவ நாடி கேட்க நமது ஸ்ரீஞானஸ்கந்தர் பீடத்திற்கு வந்தார்கள்.
ஜீவ நாடி: குணமுண்டு குறையில்லை முன்னேற்றம் உண்டு பயமில்லை
அன்பர்: ஆம் சுவாமி முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள்ள் சொல்கின்றார்கள். இருந்தாலும் இன்னும் கண் திற்ககவிலை சுவாமி என்று அழுதார்கள்.
ஜீவ நாடி: ஆயுள் உண்டு அவணியில் வாழ வழியுண்டு மூச்சிலே குறையுண்டு ஆதலால் மூளைக்கு சுகக்காற்று தடை உண்டு மார்பெழும்பு ஒன்று உடைந்து காற்றுப்பையைத் தடை செய்யும் தருணமிது கவனியும்…கவனியும்… முன்பு போல் இன்னும் மூன்று ஆலயங்களில் குங்கும பூஜை செய்து வா குணமாகும்.
 இப்படி சொன்ன பின்பு மருத்துவரிடம் இந்த உண்மைகளைச் சொல்ல நல்ல வேளையாய் மருத்துவரும் பக்தராக இருந்ததால் முருகன் வாக்கை செவிமடுத்து நுரைஈரலைச் சோதிக்க முருகன் ஜீவ நாடியில் சொன்னது போல் 100% இருந்தது கண்டு பிரமித்து பின்பு வைத்தியம் செய்ய சில நாட்களிலேயே மூச்சு சீராகி நினைவு திரும்பி கண்விழித்து பேசி பின் உணவு உண்டு இப்போது பூரண குணத்துடன் வீடு திரும்பி விட்டார். இது தான் ஜீவ நாடியின் மகிமை. நவீன எந்திரங்களில் கண்டுபிடிக்காத பல இரகசியங்கள் ஜீவ நாடியில் வெளிப்பட்டுவிடுவது நம்ப முடியாத பேரதிசயம்தான். இதை தாங்களே அனுபவித்துப் பார்க்கும் போது மிகுந்த பிரமிப்பாக இருக்கும். ஜீவ நாடி மகிமை தெரியாதவர்களுக்கு நாடி ஜோதிடம் என்று நினைத்து சாதரணமாக எடுத்துக் கொள்கின்றார்கள். இது நாடி ஜோதிடம் இல்லை இறைவன் மற்றும் சித்தர்களின் ஜீவ வாக்கே ஜீவ நாடி என்பது அந்த சித்தர்கள் ஆசியிருந்தால் மட்டுமே அறிந்து கொள்ள முடிகின்றது. 
               
                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!! 

செவ்வாய், 14 மார்ச், 2017

ஜீவ நாடி உரைத்தபடி மருதமலையில் படித்திருவிழா - படங்கள்

மருதமலை படித்திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை 14.03.2017 காலை 6:30 மணிக்கு மருதாசலன் அருளால் நிகழ்ந்தது. அதில் சில படங்கள்





ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

வெள்ளி, 3 மார்ச், 2017

மருதமலை அலங்காரம்

சிரவை இரண்டாம் குரு மஹாசந்நிதானம் தவத்திரு.கந்தசாமி சுவாமிகள் அவர்கள் இயற்றிய மருதமலை அலங்காரம் நூறு பாடல்களைக் கொண்டதாகும். அந்த பாடல்களைப் பாடிக்கொண்டே வரும் பங்குனி மாதம் 1ம் தேதி செவ்வாய் காலை 6 மணிக்கு (14.03.2017) மருதமலை அடிவாரத்தில் இருந்து படி பூஜை செய்து கொண்டே மலை மேல் சென்று மருதாசலனக் கண்டு அருள் பெற இருக்கின்றோம். இந்த நேரத்தில் மருதமலை அலங்காரம் பாடல்களில் இருந்து இரண்டு பாடல்களைக் காண்போம்.  
பாடல்:
பகடேறி வந்ததட் டுங்கொடுங் கூற்றனும் பாவையர்த
மகடே றிடப்புரி மாரனும் வேதனு மான்றதையிற்
சகடே றிடுமரு தாசலன் றாளன்றிச் சாற்றுமண்ட
முகடேறி னாலும் விடார்மன மேசற்றுண் முன்னுதியே

விளக்கம்: எருமை வாகனத்தின் மீது வந்து அதட்டும் கொடும் கூற்றனாகிய எமதர்மனும், காமத்தை உருவாக்கும் மன்மதனும், படைக்கும் பிரம்மாவும் விண்ணின் முகடு ஏறினாலும் விடமாட்டார்கள் மனமே ஆதலால் தை மாதத்தில் தேரில் ஏறி வரும் மருதாசலன் திருத்தாள்களே இந்த மூன்றையும் வெல்லும் சக்தியைத் தரும் ஆதலால் மருதாசலன் திருப்பாதங்களை மனதில் இருத்துவாயாக.

பாடல்:
திருவளிக் கும்பெருங் கல்வியு நல்கிடுஞ் சேணுலகார்
தருவளிக் கும்பத ம்யாவையு மீந்திடுந் தன்னனைய
வுருவளிக் குந்தொண்ட ரெண்ணிய யாவு முடனளிக்கு
மருவளிக் கும்பொழில் சூழ்மரு தாசலன் வண்பதமே. 

விளக்கம்:
செல்வம் அளிக்கும், பெரும் கல்வியைத் தரும், இந்திரலோகத்தில் உள்ள கற்பகத்தரு அளிக்கும் பதங்கள் எல்லாவற்றையும் ஈந்திடும், முருகப்பெருமான் போன்றே உரு அளிக்கும், தொண்டர்கள் எண்ணிய யாவும் உடனே அளிக்கும் இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும் மருதாசலனின் திருத்தாள்களே.
                                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
                                             சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

திங்கள், 27 பிப்ரவரி, 2017

சிரவை ஆதீனங்களின் ஓவியங்கள் கண்கவர் காட்சிகள்

                                                       தவத்திரு இராமானந்த சுவாமிகள்
                  
                                                         தவத்திரு கந்தசாமி சுவாமிகள்
                                                      
                                                           தவத்திரு சுந்தர சுவாமிகள்
                                                      
                                                        தவத்திரு குமர குருபர சுவாமிகள்
                                                         

                                                    சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

மருதமலை படித் திருவிழா அழைப்பிதழ் 14.03.2017

                                                              அழைப்பிதழ்

                                                 
          
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!
சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!

ஜீவ நாடி உரைத்தபடி மருதமலையில் படி விழா 14.03.2017

                                                                   மருதமலை
நிகழும் துன்முகி வருடம் பங்குனி மாதம் 1ம் தேதி 14.03.2017 செவ்வாய்க்கிழமை அன்று கோயம்புத்தூர் மருதமலையில் காலை 6 மணிக்கு படி விழா, மருதாசல முருகப்பெருமானுக்கு அபிடேகம், அருச்சனை, ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள்  ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்தபடி செய்யப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் சான்றோர்கள்:

கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமை தாங்குகின்றார்கள்,
 கோவை பேரூராதீனம் இளையபட்டம் கயிலைப் புனிதர் தவத்திரு. மருதாசல அடிகளார் அவர்கள்,
                                                        
தென்சேரிமலையாதீனம் தெற்கு நந்தவனத் திருமடம் தவத்திரு. முத்து சிவராமசாமி அடிகளார் அவர்கள்,
                                           
அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த பீடம், ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஆகியோர் முன்னிலையில் படி பூஜை ஆரம்பம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தி அதைத் தொடர்ந்து குரு மஹா சந்நிதானங்களின் அருளுரைகள் நடைபெற இருக்கின்றது.
                                   
படி பூஜை நடக்கும் போது சிரவையாதீனம் இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் இயற்றிய மருதமலை அலங்காரம் நூல் பாராயணம் செய்யப்பட உள்ளது.

                                   அனைவரும் வருக! அருள் பெறுக!!

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

நன்றி! நன்றி!! நன்றி!!! பெண்மை.காம்

www.penmai.com எனும் வலைப்பக்கத்தில் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் பற்றியும், ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி பற்றியும் தகவல் இடம்பெற்றுள்ளது. அதன் விபரம் இங்கு வெளியிடப்படுகின்றது. மேலும் தகவலுக்கு இணையத்தின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்மை.காம் வலைதளத்திற்கு நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும், நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் சார்பாகவும் நன்றி! நன்றி!! நன்றி!!!
இதோ அந்த பதிவு:  

தீராத வினைகளை ஜீவநாடி மூலம் தீர்க்கும் ஞானஸ்கந்தமூர்த்தி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு எனும் கிராமத்தில் மலைக்காரன் தோட்டம் என்ற இடத்தில் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி கோவில் உள்ளது.

ஞானஸ்கந்தமூர்த்தியாக முருகன் இங்கு அருள்பாலிக்கிறார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.

இங்கு பல வித துன்பங்களாலும் பிரச்சினைகளாலும் அவதிப்படுபவர்கள் வந்து ஞானஸ்கந்த மூர்த்தியை வேண்டி கொள்கின்றனர்.

இந்த கோவிலில் அமாவாசை அன்று செய்யப்படும் பூஜைகள் வழிபாடுகள் மிகவும் பிரசித்தம். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் வந்து இக்கோவிலை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால் சிறப்பு.

பூஜைகள் வழிபாடுகள் முடிந்தவுடன் இக்கோவிலில் ஜீவநாடி படிப்பது சிறப்பு.

முருகப்பெருமானின் வாக்காக ஜீவநாடி படிக்கப்படுகிறது. கூட்டத்தில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் நாடியில் முருகன் உரைப்பதற்கிணங்க யாருக்கு கர்ம வினைகள் குறைய வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அப்படிப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் அழைக்கப்படுவார்கள்.

நாடியில் வரும் அழைப்புப்படி குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர். அவர்களின் துன்பங்கள் தீர உரிய பரிகாரங்களை முருகன், மற்றும் அகத்தியர் ஜீவநாடியில் தரும் வாக்குப்படி உரைக்கப்படுகிறது.

மற்றவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து இக்கோவிலுக்கு வருவதன் மூலம் என்றாவது ஒருநாள் ஜீவ நாடி பரிகாரங்களை தெரிந்துகொள்கின்றனர். 

தொடர்ந்து இக்கோவிலுக்கு அமாவாசைதோறும் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கர்மவினைகளையும் துன்பங்களையும் கரைக்க கூடியது.

Read more: http://www.penmai.com/forums/miscellaneous-spirituality/49911-spiritual-informations-201.html#ixzz4ZIoLhsZn

                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!