செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

நன்றி! நன்றி!! நன்றி!!! பெண்மை.காம்

www.penmai.com எனும் வலைப்பக்கத்தில் நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் பற்றியும், ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடி பற்றியும் தகவல் இடம்பெற்றுள்ளது. அதன் விபரம் இங்கு வெளியிடப்படுகின்றது. மேலும் தகவலுக்கு இணையத்தின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்மை.காம் வலைதளத்திற்கு நமது ஸ்ரீஞானஸ்கந்தாஸ்ரமம் சார்பாகவும், நமது குரு நாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் சார்பாகவும் நன்றி! நன்றி!! நன்றி!!!
இதோ அந்த பதிவு:  

தீராத வினைகளை ஜீவநாடி மூலம் தீர்க்கும் ஞானஸ்கந்தமூர்த்தி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுக்காடு எனும் கிராமத்தில் மலைக்காரன் தோட்டம் என்ற இடத்தில் ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி கோவில் உள்ளது.

ஞானஸ்கந்தமூர்த்தியாக முருகன் இங்கு அருள்பாலிக்கிறார். இது மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.

இங்கு பல வித துன்பங்களாலும் பிரச்சினைகளாலும் அவதிப்படுபவர்கள் வந்து ஞானஸ்கந்த மூர்த்தியை வேண்டி கொள்கின்றனர்.

இந்த கோவிலில் அமாவாசை அன்று செய்யப்படும் பூஜைகள் வழிபாடுகள் மிகவும் பிரசித்தம். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் வந்து இக்கோவிலை 27 முறை சுற்றி வந்து வழிபட்டால் சிறப்பு.

பூஜைகள் வழிபாடுகள் முடிந்தவுடன் இக்கோவிலில் ஜீவநாடி படிப்பது சிறப்பு.

முருகப்பெருமானின் வாக்காக ஜீவநாடி படிக்கப்படுகிறது. கூட்டத்தில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் நாடியில் முருகன் உரைப்பதற்கிணங்க யாருக்கு கர்ம வினைகள் குறைய வேண்டும் என்ற விதி இருக்கிறதோ அப்படிப்பட்ட குறிப்பிட்ட சிலர் மட்டும்தான் அழைக்கப்படுவார்கள்.

நாடியில் வரும் அழைப்புப்படி குறிப்பிட்ட நட்சத்திரக்காரர்கள், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் மட்டுமே அழைக்கப்படுகின்றனர். அவர்களின் துன்பங்கள் தீர உரிய பரிகாரங்களை முருகன், மற்றும் அகத்தியர் ஜீவநாடியில் தரும் வாக்குப்படி உரைக்கப்படுகிறது.

மற்றவர்கள் மனம் தளராமல் தொடர்ந்து இக்கோவிலுக்கு வருவதன் மூலம் என்றாவது ஒருநாள் ஜீவ நாடி பரிகாரங்களை தெரிந்துகொள்கின்றனர். 

தொடர்ந்து இக்கோவிலுக்கு அமாவாசைதோறும் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கர்மவினைகளையும் துன்பங்களையும் கரைக்க கூடியது.

Read more: http://www.penmai.com/forums/miscellaneous-spirituality/49911-spiritual-informations-201.html#ixzz4ZIoLhsZn

                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக