மருதமலை
நிகழும் துன்முகி வருடம் பங்குனி மாதம் 1ம் தேதி 14.03.2017 செவ்வாய்க்கிழமை அன்று கோயம்புத்தூர் மருதமலையில் காலை 6 மணிக்கு படி விழா, மருதாசல முருகப்பெருமானுக்கு அபிடேகம், அருச்சனை, ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் உரைத்தபடி செய்யப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் சான்றோர்கள்:
கோவை சரவணம்பட்டி கௌமார மடாலயம் சிரவையாதீனம் தவத்திரு குமர குருபர சுவாமிகள் அவர்கள் தலைமை தாங்குகின்றார்கள்,
கோவை பேரூராதீனம் இளையபட்டம் கயிலைப் புனிதர் தவத்திரு. மருதாசல அடிகளார் அவர்கள்,
தென்சேரிமலையாதீனம் தெற்கு நந்தவனத் திருமடம் தவத்திரு. முத்து சிவராமசாமி அடிகளார் அவர்கள்,
அந்தியூர் ஸ்ரீஞானஸ்கந்த பீடம், ஸ்ரீஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் அவர்கள்,
ஆகியோர் முன்னிலையில் படி பூஜை ஆரம்பம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடத்தி அதைத் தொடர்ந்து குரு மஹா சந்நிதானங்களின் அருளுரைகள் நடைபெற இருக்கின்றது.
படி பூஜை நடக்கும் போது சிரவையாதீனம் இரண்டாம் குரு மஹா சந்நிதானம் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் இயற்றிய மருதமலை அலங்காரம் நூல் பாராயணம் செய்யப்பட உள்ளது.
அனைவரும் வருக! அருள் பெறுக!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக