குரு = ஞானத்தின் திறவுகோல்!
குரு = அன்பின் வெளிபாடு!
குரு = தெய்வத்தின் வடிவம்.
எல்லையற்ற அன்பால் எங்கும் வியாபித்துள்ள குருவின் திருவடிகளுக்கு வணக்கம். சுகம் அந்த சுகம் எங்குள்ளது.கல்வியிலா,செல்வத்தி லா,பதவியிலா,பட்டத்திலா எங்கே நிரந்தர சுகம்.
ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தேவையும்,தேடலும் உண்டு.அதற்கேற்பத்தான் அவரவர் சுகம் அமையும்.உடல் சுகம் , உள்ள சுகம் இரண்டும் சேர்ந்து இருப்பதுதான் சுகமா! இதையும் கடந்து போனால் சுகம் எங்குள்ளது.வேத சாஸ்திரங்களில் உள்ளதா இல்லை மந்திர தந்திரங்களில் உள்ளதா? குருவின் அருள் இல்லாமல் வேறு இடத்தில இப்புவியில் சுகமில்லை என்று குருகீதை சொல்கிறது.
சுகம் பற்றி எவ்வளவு சுருக்கமான செய்தி இது. குருவின் அருள் அல்லவா உண்மையான சுகம்.அவரின் அருளை பெற எத்தனை காலம் நாம் தவமிருந்து காத்திருக்க வேண்டும்.தேடுதலுக்கு ஏற்ப குருதேவரின் அருள் நம்மை அனைத்துக் கொள்ளும்.நாம் குருவிற்காக காத்திருப்பது போன்று குருவும் நமக்காக காத்திருப்பார்.
---- குரு பாதை அடுத்த பதிவில் தொடரும்.
send ur adress and mobile no please
பதிலளிநீக்கு