முக்கிய குறிப்பு : முருகப்பெருமானின் திருவடிகளின் கீழ் உள்ள லிங்கமானது முருகப்பெருமானேசுயம்புவாக தோன்றி பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த லிங்க வடிவில் உள்ள முருகப்பெருமானே நமது ஸ்கந்த உபாசகரை ஆட்கொண்டு ஜீவநாடி மூலம் முக்காலத்தையும் உணர்த்தி வருகிறார்.ப்ராப்தம் உள்ளவர்கள் மட்டுமே இந்த சுயம்பு லிங்க முருகப்பெருமானை தரிசனம் செய்யவும்,ஜீவநாடியின் மூலம் அருள்வாக்கு கேட்கவும் முடியும் என்பது அனுபவ உண்மையாகும்.
ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவ நாடியைப் பொறுத்தவரை 100% முருகனின்
அருள்வாக்கே. இதில் மந்திரமோ, மை வித்தையோ, எட்சினியோ கிடையாது.
எனது குருநாதரிடமும் கிடையாது. என்னிடமும் கிடையாது. சிலர்
எப்போதும் சந்தேகப்பட்டுக் கொண்டே இருப்பதற்குக் காரணம் மிகத்
துல்லியமாக வருவதால் தான். இதை எப்படிச் சொல்ல முடியும் என்று
நினைக்கிறார்கள். மேலும் ஒரு சம்பவம் நமது ஞானஸ்கந்த மூர்த்தியிடம்
தீட்சை பெற்று ஸ்ரீமுருக உபாசனை செய்து வரும் சுரேந்திரமான அடியார்
ஒருவரும், பிரகாசமான அடியார் ஒருவரும் பவானி லட்சுமி நகரில் ஒரு
டீகடையில் டீகுடித்தார்கள். அதற்கு சுரேந்திரமான அடியார் பணம்
கொடுத்து அதுவும் ரூ100/- கொடுத்து சில்லறை வாங்கியிருக்கிறார். இதை
அப்படியே ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி உரைத்தார். கேட்ட அனைவருக்கும்
அதிர்ச்சி. இது எப்படி சாத்தியம். நிச்சயம் மை, மந்திரம், எட்சினி
இருக்குமோ? ஏன் அப்படி நினைக்க வேண்டும். எட்சினியை விடவா முருகப்
பெருமான் கீழாகப் போய்விட்டார். இதை உரைத்தது முருகப் பெருமான் இது
தான் இரகசியம்.
ஜீவநாடியைப் பிரிக்காமல் அதை கையில் வைத்துக் கொண்டே இத்தனை
இரகசியங்களையும் ஞானஸ்கந்த மூர்த்தி உரைத்து விடுகிறார்.
எனவே ஆய்வு செய்வதை நிறுத்தி விட்டு ஆறுமுகப் பெருமானே கதி
என்று சரணாகதி அடைபவர்களுக்கே ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி நூறு
சதவீதம் நன்மை செய்கிறார். ஆராய்ச்சியில் விளைவது குழப்பம் மட்டுமே.
நாடியில் வருகின்ற பரிகாரங்கள் அனைத்தும் ஆலய தரிசனங்களாகவே
இருக்கின்றன. ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு ஆலயம் வருகிறது. அவர்
அந்த குறிப்பிட்ட ஆலயத்தை தரிசனம் செய்த உடனேயே பல அற்புத
மாற்றங்கள் நடந்து விடுகின்றன. சிலருக்கு அந்த ஆலயங்களிலேயே பல
அதிசயங்கள் நடக்க ஆரம்பித்து விடுகின்றன. இதெல்லாம் நமது
ஞானஸ்கந்த மூர்த்தி நம் மீது காட்டுகின்ற கருணை. நமது ஞானஸ்கந்தர்
ஜீவநாடி பணத்திற்கு அடிமை அல்ல. நாடி படிக்க ஒரு சிறு காணிக்கை
சித்தர்களே நிர்ணயம் செய்து வைத்ததை தவிர வேறு எந்த பணமும்
வாங்கப்படுவதில்லை. பணம் குறிக்கோள் இல்லை என்பதால் உண்மையை
மட்டுமே உரைப்பதைக் கடமையாகக் கொண்டுள்ளேன். சித்தர்கள் நிர்ணயம்
செய்துக் கொடுத்த தொகைக்கு கீழ் வாங்கப்படுவதில்லை. அதற்கு
மேலும் வாங்குவதில்லை. எல்லாமே சித்தர்களாலும், ஞானஸ்கந்த
மூர்த்தியாலும் வழி நடத்தப்படுவதால் பொய் என்பது இங்கு
பொய்யாகவே இருக்கும். உண்மை இருப்பதை உணர்ந்து மாதந்தோறும்
ஒவ்வொறு அமாவாசையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வந்து ஞான
தரிசனம் செய்து அற்புத மாற்றங்களை உடனே அடைகிறார்கள்.
ஒருவர் நாடி கேட்க வேண்டும் என்று வந்து அமர்ந்தார். முருகப்
பெருமான் பின் வருமாறு உரைத்தார்.
“தோஷமது உண்டு
தொந்தரவும் உண்டு
தொல்லைகளும் உண்டு
உண்டுண்டு கேள்
உறுதியில்லா இதயமாய்
அடைப்பு போலும்
அதிசயமாக நீங்க
வழியுரைப்போம்
வகை வகையாய்
வழி வழியாய்
பூஜித்து வந்த
வரிசை தெய்வம்
கற்சிலையாய் நின்று காக்கும்
கன்னி தெய்வம்
கச்சிதமாய்க் காசோலை
கருகு மணி வைத்து
கற்கண்டை நிவேதனம் செய்து
கைதொழுது பின்
ரண சிகிச்சை செய்
அஷ்டமம் தன்னியே
ஆட்சியான மங்களன்
ஆயுள் தருவான் அஞ்சிடாதே!
செய்ய வேண்டும்
ஜெயமாகுமே செய்”
என்ற நீண்ட விளக்கப் பாடலை மட மடவென நாடியில் உரைத்தார்
முருகப் பெருமான் வந்து அமர்ந்தவருக்கு இதயத்தில் அடைப்பு. அதைப்
பற்றிய விபரம் எதுவும் முன்பே எனக்குத் தெரியாது. தொலைபேசியில்
தொடர்பு கொண்டது மட்டுமே அறிமுகம். ஆனால் அருகில் இருந்து
பார்த்ததைப் போல் அப்படியே அப்பட்டமாக உரைத்ததோடல்லாமல்
உரிய பரிகாரமும் சொல்லி அந்த இதய அடைப்பு சரியாகி ஆபரேசன்
செய்தாலும் உயிர் பிரியாது என்பதையும் துல்லியமாக உரைத்தார். வந்து
நாடி கேட்டவருக்கு வயது 45. இந்த வயதிலேயே இதயத்தில் அடைப்பு
இருந்தது.
அதுவும் தொன்னூறு சதவீதம் அடைப்பு. மருத்துவர்களே மலைத்து
விட்டார்கள். இவரது மனைவி இதை நினைத்து நினைத்து அழுது அழுது
பாதி காலியாகி விட்ட நிலைக்கு தள்ளபட்டார். மிகவும் சிறிய குழந்தைகள்
இவர்களுக்கு நாடியை படித்து விளக்கம் சொல்லி முடித்த பின்பு சொன்ன
சம்பவங்கள் இத்துணையும், சேலத்தில் மிகப் பிரபலமான தனியார்
பேருந்தின் உரிமையாளர். ஏற்கனவே என்னிடம் அடிக்கடி நாடி கேட்பவர்
அதன் மூலம் அவருக்கும் ஏராளமான அதிசயங்கள் கிடைக்கப் பெற்றவர்.
அவரிடம் சென்று இந்த இதய அடைப்பு உடையவரின் மனைவி அழ
அவர் ஞானஸ்கந்தர் ஜீவநாடியில் நிச்சயம் வழி கிடைக்கும் என என்னிடம்
தேதி வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். அவரும் என்னிடம் எதுவும்
சொல்லவில்லை. இது எப்படி சாத்தியம் 100% பலன் வந்திருக்கிறதே என
அதிசயப்பட்ட இருவரும் மருத்துவர்களே கை விட்ட நிலையில் நாங்கள்
எப்படி ஐயா ஆபரேஷன் செய்வது எனப் புலம்பினார்கள்.
அதற்கு நாடியில் வந்த விபரங்களை மீண்டும் விளக்கினேன்.
“பூஜித்து வந்த
வரிசை தெய்வம்”
“கற்சிலையாய் நின்று காக்கும்
கன்னி தெய்வம்”
எது எனக் கண்டு பிடியுங்கள் அதாவது முன்னோர்கள் பூஜித்த
கன்னிமார் எங்கு உள்ளது எனக் கேட்டேன். ஐயா எங்களது பூர்விக
சொத்தில் தோட்டத்திலேயே கன்னிமார் 7 பேரும் உண்டு. சிலை கிடையாது.
கல் வடிவில் சுயம்பு போன்று உள்ளது. அதற்கு வருடம் ஒரு முறை
பொங்கல் வைத்து, காதோலை கருகுமணி போட்டு பூஜித்து வருவோம்.
ஆனால் கடந்த 5 வருடங்களாக அந்த பூஜையை நாங்கள் செய்யவில்லை
என்றார்கள். முதலில் அந்த அம்மனை ஒரு சுப நாளில் பூஜித்து வந்து
பின்பு அதே மருத்துவரிடம் செல்லுங்கள் உற்ற வழி கிடைக்கும் என்றேன்.
ஐயா எப்படியாவது குணம் கிடைக்க வேண்டும் என்றார்கள். ஆசிர்வதித்து
மந்திர விபூதி கொடுத்து அணியச் சொன்னேன்.
2 மாதம் எந்தத் தகவலும் இல்லை. நானும் அலுவல் காரணமாக மறந்து
விட்டேன். 2 மாதம் கழித்து அந்த பெண்ணிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஐயா தங்களைப் பார்க்க வேண்டும் என்றனர். சரி என ஒரு தேதியைச்
சொல்லி வரச் சொன்னேன். மீண்டும் கணவன்/மனைவி இருவருமே
வந்தனர். சரி இன்னும் ஆபரேசன் செய்யவில்லை போலும் என நினைத்து
என்னாயிற்று எனக் கேட்டேன்.
இருவரும் தேம்பித் தேம்பி அழுதார்கள். சரி பெரிய பிரச்சினை போல்
தெரிகிறது என நினைத்து ஞானஸ்கந்த மூர்த்தியைப் பூஜித்து சுவடியைப்
பிரித்தேன்.
“சுபமானது
சுகமானது
சூட்சுமமானது”
என வந்தது. ஐயா அதை சொல்லத்தான் நாங்கள் வந்தோம். உங்களைப்
பார்த்ததில் பேச்சே வரவில்லை. மிகப் பெரிய மரணப் போராட்டத்தின்
பின்பு அறுவை சிகிச்சை வெற்றி பெற்று இவர் பூரண குணமாகி விட்டார்
என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார்கள். இப்படி அவசரத்திலும்
ஆபத்திலும் காப்பாற்றிய ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தியின் புகழ் ஓங்கட்டும்.
கல்லூரியில் பணி புரிவதாலும், வாரம் ஒரு முறை ஞாயிறு மட்டுமே
நாடி படிக்க முடிவதாலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே
தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு வாசகர்களைக் கேட்டுக்
கொள்கிறேன். நாடி படிக்க பல மாதங்கள் ஆனாலும் ஆகும்,பொறுமை
தேவை!
“ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”