சனி, 13 செப்டம்பர், 2014

முருகனின் அறுபடை வீடுகளைக் குறிக்கும் ஒரே பாடல்!






உல்லாச நிராகுல யோக இதச்
சல்லாப விநோதனும் நீயலையோ?
எல்லாமற என்னை உணர்ந்த நலம்
சொல்லாய் முருகாசுர பூபதியே
என்னும் சுந்தரனுபூதிப் பாடல், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளைக் குறிப்பிடுகிறது. 

உல்லாசம்- தெய்வானையை மணந்த திருப்பரங்குன்றம்
நிராகுலம்- சூரசங்காரம் நிகழ்ந்த திருச்செந்துõர்.
யோகம்- யோகியாக நின்ற திருவாவினன்குடி
இதம்- பிரணவத்தின் பொருளை சிவபெருமானுக்கு உபதேசித்த சுவாமிமலை.
சல்லாபம்- வள்ளியை மணந்து, வள்ளியுடன் நின்ற திருத்தணிகை. 
வினோதம்- ஔவையாருக்காக பழத்தை உதிர்த்து விளையாடிய பழமுதிர் சோலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக