நாடி ஜோதிடம் என்றாலே ஒரு வித மோகம் ஏற்படவே செய்கிறது.
சாதாரணமாக ஜாதகம் பார்த்து பலன் சொல்வதற்கும் நாடி பார்த்து பலன்
தெரிந்து கொள்வதற்க்கும் என்ன வித்தியாசம் எனில் ஜாதகம் பார்ப்பவரின்
தெய்வ பலம், ஆன்ம பலம், ஞானம், ஜோதிட அறிவு ஆகியவற்றைப்
பொறுத்து பலன் அமைகிறது. ஒருவர் சொல்லுவார் அப்படியே நடக்கும்.
அதே ஜோதிடர் மற்றொருவருக்குச் சொல்லுவார் அது அப்படியே
நடக்காமல் போய்விடும். காரணம் அது ஜோதிடரிடம் எந்தக் குறையும்
கிடையாது. ஜோதிடம் பார்க்க வருபவரின் கர்ம வினையே காரணம்.
அதனால்தான் 1+2=3 எனும் Forumula வின்படியெல்லாம் ஜோதிடத்தில்
அரிதியிட்டுக் கூறமுடிவதில்லை. அப்படி பலிக்காமல் போனவர் ஜோதிடர்
பொய் என்கிறார். நன்கு பலித்து நலன் அடைந்தவர் ஜோதிடத்தையும்,
ஜோதிடர்களையும் தெய்வமாகப் பாவித்துக் கொண்டாடுகிறார். இந்தக் கதை
நாடியில் பலன் சொல்லும் போது ஜோதிடராக இருக்க வேண்டிய
அவசியம் இல்லை. அடிப்படை ஜோதிடம் தெரிந்தால் கூட போதுமானது.
அந்த நாடியில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை படித்து விளக்கும்
மீடியமாக, Translator ஆகத்தான் ஜோதிடரின் நிலைமை இருக்கிறது. இவரை
ஜோதிடர் என்று கூட சொல்ல முடியாது காரணம் இவர் பலன்
சொல்லுவதில்லை. ஏதோ ஒரு முனிவர் சுவடியில் எழுதி வைத்ததை
படித்து அதை தெரிவிக்கிறார் என்பது மட்டுமே இவரது பணி. எனவே
இவரை மீடியேட்டர் என்று சொல்லலாம். ஆனால் இந்த முறையான நாடி
ஜோதிடத்தில் பல்வேறு ஏமாற்று வேலைகள் இருப்பதால் மக்கள் மரியாதை
குறைவாகப் பேசுகின்ற நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார்கள். எனவே அதைப்
பற்றி எழுதுவது எமது பணியல்ல. அவரவர் அனுபவத்தைப் பொறுத்து
பலன் நடக்கும் விதத்தைப் பொறுத்து நம்புவதும் நம்பாமல் போவதும்
அவரவர் பொறுப்பு. என்வேதான் அடியேன் கூட இதைத் தொழிலாகச்
கொள்வதில்லை. நான் சத்தியமாக ஜோதிடன் கிடையாது. அதாவது
ஜோதிடத் தொழில் இல்லை.
ஆனால் இதில் எந்தவித வரையறுக்கும் விஷயங்களுக்கெல்லாம்
உட்பட்டதல்ல ஜீவநாடி. ஜீவநாடி என்றால் ஓலைச்சுவடி என்று மட்டும்
அர்த்தம் கிடையாது. ஜீவநாடியில் எதுவுமே எழுதப்பட்டு இருக்காது. ஒரு
சாதாரண வெறும் தாளில் கூட என்னால் ஜீவநாடி படிக்க முடியும்.
சுவடிதான் தேவை என்பதில்லை. இது சித்தர்களின் வாக்கு.
சித்தர்களுக்கெல்லாம் சித்தரான முருகப் பெருமானின் வாக்கு. இது ஒரு
வகையான சித்தி. இதை விலை கொடுத்து வாங்க முடியாது. என்னிடம்
நான்கு ஜீவநாடி சுவடிகள் இருக்கின்றன. எல்லாமே வெறும் எழுதப்படாத
ஓலைகள் தான். மிகச் சாதாரண ஓலைகள் தான். ஆனால் ஒரு சுவடியில்
கர்ம காண்டம் மட்டும் வரும். அதை நான் யாருக்கும் படிப்பதில்லை.
இன்னொன்றில் ஞான காண்டம் மட்டும் வரும். மீதமுள்ள இரண்டு
சுவடிகளில் சாதாரண எதிர்காலப் பலன்களும், பரிகாரங்களும் வரும்.
இதையெல்லாம் அனுபவித்து வருகிறேன். இது எப்படி சாத்தியமாகிறது
என்ற குழப்பம் எனக்கே ஆரம்ப காலத்தில் இருந்தது. ஆனால் ஒவ்வொருவர்
வாழ்விலும் மாற்றங்கள் நடப்பதைப் பார்க்கும் போது சில நேரங்களில்
எனக்கே பிரமிப்பாய் இருக்கிறது.
எழுதாத ஓலைச் சுவடிகளை கையில் எடுத்த உடனேயே என்ன
வருகிறதோ அதை மட்டும் படிப்பதே என் பணி. நான் ஜோதிடன் அல்ல.
எனக்கு ஜோதிடம் தெரியும் என்பதை “குருவருள் ஜோதிடம்” இதழில்
வருகின்ற ஆய்வு கட்டுரைகளைப் பார்த்தாலே தெரியும். ஆனால் நான்
ஜோதிடம் சொல்வதில்லை. ஜீவநாடி படிப்பது என்பது சித்தர்களோடும்,
முருகப் பெருமானோடும் உரையாடும் கலை. அதில் ஆத்ம திருப்தி
உண்டாகிறது. அதில் இறைகாட்சி கிட்டுகிறது. வாக்கிலே வகை
வகையான வருங்கால நிகழ்ச்சிகள் வெளிப்படுகிறது. வந்தோரெல்லாம்
வாழ்த்துகின்ற நிலை கிட்டுகிறது.
எது எப்படி இருந்தாலும் ஆர அமர நாடி படிக்கும் வாய்ப்பு
கிட்டுவதில்லை. என்னை பல வருடங்களாக தொடர்ந்து தொடர்பு
கொண்டிருப்பவர்களுக்கு கூட நாடி படிக்க முடியவில்லை. எனவே
வாசகர்கள் வருத்தப்பட வேண்டாம். நாடிக்கு நாள் கேட்டு தொடர்பு
கொள்வதைத் தவிர்ப்பது நலம் என்ற வேண்டுகோளை தங்களுக்கு
வைக்கிறேன். பணிச்சுமை காரணமாக இப்போது அனைவருக்கும் நாடி
படிக்க முடியாது என்ற வருத்தமான செய்தியை உங்களுக்கும் சொல்லிக்
கொள்கிறேன். எனதருமை வாசகர்கள், எனது அபிமானிகள், எனது
அன்பர்கள் என்னைப் புரிந்துக் கொண்டு மன்னிப்பார்களாக! வாய்ப்பு
முழுமையாக வந்த பின்பு முறையான அறிவிப்பை “குருவருள் ஜோதிடம்”,
“திருவருள் சக்தி” இதழ்களில் வெளியிடுகிறேன். அதுவரை அந்த கந்தனை
பிரார்த்தனை செய்யுங்கள். காத்திருங்கள் காலம் நிச்சயம் கனியும்.
என் அருமை வாசகர்களுக்கு உதவமுடியவில்லை என்ற வருத்தத்தின்
மேலீட்டால் தான் நாடி மூலம் சனி வக்ர நிவர்த்தி இராகு/கேது பெயர்ச்சி
புத்தகமும், சனிப்பெயர்ச்சி பலன்கள் புத்தகமும் எழுதியிருக்கிறேன்.
இரண்டுமே இப்போது விற்பனையில் இருக்கிறது. வாங்கி பலன்
அடையுங்கள். அதில் சொல்லப்பட்டுள்ள ஆலயப் பரிகாரங்களை அன்புடன்
கடைபிடியுங்கள். வாய்ப்பு நிச்சயம் வரும். அறிவிப்பு வரும். விரைவில்
வரும். அது முதல் அனைவரும் என்னைச் சந்தித்து நாடி கேட்டுக்
கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்.
அமாவாசையில் நமது ஞானஸ்கந்த மூர்த்தி பூஜையில் கலந்து
கொண்டு ஆலயத்தை 27 முறை வலம் வாருங்கள். அருள் வாக்கிற்காக
தயவு செய்து ஆலயம் வர வேண்டாம். 500க்கும் அதிகமான பேர்கள்
வருகிறார்கள். அதில் 20 பேருக்கு மட்டுமே நாடியில் வாக்கு வருகிறது.
மீதமுள்ள 480 பேரும் ஏமாற்றமடைகிறார்கள் எனவே ஏமாற வேண்டாம்
என்பதையும் இங்கு வெளிப்படுத்துவது என் கடமை.
ஞானஸ்கந்த மூர்த்தியை அலங்கார கோலத்தில் கண்டு ஆலயத்தை 27
முறை வலம் வந்தாலே ஆயிரம் பிரச்சினைகள் தீர்ந்து விடுகின்றன
என்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எனவே நாடியில்
வாக்கு வரவேண்டும் என்பது வருகின்றபடி வரட்டும். அது அவரவர்
பிராப்தத்தைப் பொறுத்தது. அதில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு
ஏதுமில்லை. அதேபோல் ஆலயத்தில் இன்னும் தங்கும் வசதிகள்
செய்யப்படவில்லை. அதற்கான ஆயத்தப் பணிகள் நடந்து வருகிறது. எனவே
வெளியில் தங்கும் வசதி, போக்குவரத்து வசதியை தற்போது தாங்களே
செய்துக் கொள்வது மிக்க நலம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது பணி வாரம் முழுவதும் விடுப்பு இல்லாத பணி. ஞாயிறு மட்டும்
கிடைத்தாலும் அதிலும் ஆயிரம் அலுவல்கள் வந்துவிடுவதால் நிச்சயமாக
நாடி படிக்க நேரமில்லை. தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளும்
அவகாசம் இல்லை. எனவே முழு ஒத்துழைப்பு தர வேண்டுமாய் எனது
வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எனது படைப்புகள், எழுத்துக்கள், ஆய்வுக் கட்டுரைகள், அனுபவங்கள்,
நாடி இரகசியங்கள், ஆண்டுப் பலன்கள், பெயர்ச்சி பலன்கள், தனிப்புத்தங்கள்
அனைத்தும் “அப்ஸரா பப்ளிக்கேஷன்ஸ்” சித்தர் அடிமை ஸ்ரீ இராஜு ஐயா
அவர்கள் மூலம் வெளி வந்து கொண்டே இருக்கும். என்னை அதன் மூலம்
தொடர்பு கொள்ளும் வசதி மட்டுமே உள்ளது. எனது எழுத்துக்களைத்
தொடர்பவர்கள் தொடர்ந்து வாருங்கள். நிச்சயம் பல அபூர்வ
கட்டுரைகளைத் தொடர்ந்து தரப்போகிறேன். வாழ்க்கைக்குப் பயனுள்ள பல
இரகசியங்களைத் தொடர்ந்து சொல்லப் போகிறேன். இந்தக் கட்டுரையில்
என் மனதில் வாசகர்களுக்கு சொல்ல வேண்டும் என்று வந்ததைச் சொல்லி
இருக்கிறேன். புரிந்து கொள்பவர்கள் நிச்சயம் புரிந்துக் கொள்வார்கள். நாம்
நமது ஜீவநாடி இரகசியங்களை இனி தொடர்வோம்.
“ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!”
jaga it's really fact about yourself and also i understand about your work.so what ever the god Skandar bless you and your family very much. i like this articles about the fact of yours words.
பதிலளிநீக்குஅருமையான தகவல்கல். கண்டேன் வியந்தேன்
பதிலளிநீக்குபதிவிற்கு நன்றி,நன்றி..........
அருமை
பதிலளிநீக்கு