திங்கள், 19 ஜனவரி, 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 23 !




  ஒரு 70 வயது மதிக்கத்தக்க தம்பதிகள் நீண்ட முயற்சிக்கு பின்பு 

என்னிடம் வந்தவர் இருதய ஆபரேசன் செய்து உயிர்பிழைத்தவர் மூலம் 

வந்தார்கள். அவருக்கு ஜீவநாடியில் வாக்கு தந்தார் முருகப் பெருமான். 

அதில் சுவராஸ்யமான பல விஷயங்கள் வந்தது. 

“கந்த வடிவேலனது நாமம் கொண்டான்

சொந்தமாய் இரு பெயரு கொண்டவன் கேள் 

மந்தமாய் இக்காலம் இருந்தாலும் 

வந்தமாய் மூவான பட்டம் உண்டு”

   வந்தவர்கள் தனது பேரனுக்கு நாடி கேட்டார்கள். தங்களது பேரனுக்கு 

முருகனது நாமமா அதாவது தங்கள் பேரனது பெயர் முருகனது 

பெயர்களில் ஒன்றா? ஆம் சுவாமி. 

   அது சரி அவருக்கு இருபெயர் உண்டு என்கிறாறே முருகப் பெருமான். 

ஆம் சுவாமி வைத்த பெயர் கார்த்திக் கூப்பிடும் பெயர் அப்பு. இப்போது 

மந்தமான காலம்தான். ஆனாலும் இவன் மூன்று பட்டம் படிக்க வேண்டும். 

என்ன படிக்கிறார்? 

   சுவாமி MBBS படித்து பின்பு MS படித்து இப்போது ஒரு டிப்ளமோ 

மருத்துவத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். மிகச் மிகச் சரி. 

“குருவாரம் ஒட்டி இவன் 

குவலயத்தில் தோன்ற 

அன்னைக்கு ஆங்காங்கு வலிக்கும் 

தகப்பனுக்கு பித்தப்பை ஆகாதென்போம்”

   அடுத்தது நெற்றிப் பொட்டில் அடிக்கிறார் முருகப் பெருமான். இவன் 

பிறந்தது வியாழக்கிழமையா ஆம் சுவாமி. இவனது தாய்க்கு உடலில் பல 

இடங்களில் வலி வந்து கொண்டே இருக்கும் தந்தைக்கு பித்தப்பை ஆகாது 

என்கிறாறே முருகப் பெருமான்? எப்படி? இது நான்.

   

சுவாமி இவரது அன்னைக்கு உடலில் பல வலிகள் வரும். வைத்தியமே 

இதுவரை பலிக்கவில்லை. தந்தைக்கு பித்தப்பையில் கல் வந்து சீழ் பிடித்து 

விட்டது. அதை அகற்றி விட்டோம். இப்போது பித்தப்பை இவருக்கு இல்லை 

சுவாமி. இது அவர்கள். சற்று வியர்க்கத் தொடங்கியது வந்தவர்களுக்கு 

அந்த பையனின் தாய், தந்தையாரும் வந்திருந்தார்கள். எங்கும் இதுபோல் 

யாரும் இப்படிச் சொன்னது கிடையாது. சாட்சாத் முருகப் பெருமானின் 

வாக்கு என்றார் இவரது தந்தை. காரணம் இவரது பித்தப்பைக் கல்லைக் 

கண்டுபிடிக்கவே  மருத்துவர்களுக்கு பல வருடம் ஆனது. முருகப் 

பெருமான் எடுத்த எடுப்பிலேயே ஒரு நொடியில் நாடியில் சொல்லி 

      “மணக்கோலம் இதுவரைக்கு மில்லை

      இனிமேலும் சிலகாலம் பொறுமைதேவை

 முறையற்ற சண்டாள கன்யா தோஷம் 

உண்டுண்டு என்பதாலே 

பெண்களால் பீடை வரும் 

தொந்தரவு வரும் பொறு”

   இவருக்கு இதுவரைக்கும் திருமணம் ஆகியிருக்கக் கூடாது. ஆம் 

சுவாமி. தற்போது தான் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம் சுவாமி. சரி நல்லது. 

ஆனாலும் சண்டாள கன்யா தோஷம் என்கிற தோஷம் இருப்பதால் சற்று 

சில காலம் பொறுமை தேவை. பெண்கள் வகையில் பல தொல்லைகள் 

வரும் என்கிறார் முருகப் பெருமான். அப்படி ஏதேனும் வந்ததா? இதுவரை 

இல்லை சுவாமி. சரி இனிமேல் கவனமாக இருங்கள். இந்த சண்டாள கன்யா 

தோஷம் இவருக்கு ஒரு சண்டாளியை மனைவியாக்க காத்திருக்கிறது. 

எனவே நன்கு பொருத்தம் பார்த்து மணம் முடிக்க வேண்டும். படிப்பு 

முடியும் வரை கூட சற்று பொறுத்து பின்பு முடிவு செய்யலாம். 

படிக்கின்ற இடத்தில் ஏதேனும் பெண்கள் சகவாசம் உண்டா என்பதையும் 

கண்டுபிடிப்பது நல்லது என்று சொன்னேன். சரி சுவாமி என்றார்கள். 

“வெளிநாட்டு யோகங்கள் 

விரும்பியே வரும் ஏற்கலாம் நட்பு”

   வெளிநாடு செல்ல வேண்டுமா? சுவாமி இந்த டிப்ளமோ வெளிநாட்டில் 

(US) தான் படித்து கொண்டிருக்கிறார். சரி சரி தொடரட்டும். வெளிநாட்டு 

யோகம் உண்டு. 

“படிப்பிலே பாங்கான வெற்றி 

பக்குவமாய் வந்து சேரும் 

பட்டம் பெறும் யோகம் 

உண்டுண்டு ஆனாலும் 

அடிமை பணி கொள் 

முப்பான மூன்று பின்பு 

சுயமாகலாம் சொல்”

   படிப்பில் வெற்றி வந்து விடும். பட்டம் பெற்று விடுவார். சில காலம் 

ஏதேனும் மருத்துவ மனையில் அடிமைத் தொண்டாக jobல் இருக்க 

வேண்டும். 33 வயது வரை சுயதொழிலோ மருத்துவமனையோ 

வேண்டாம். சரிங்க சுவாமி. தற்போது அவருக்கு 29 வயதாகிறது. 

“முப்பானம் ஒட்டி இவனுக்கு 

முறையான திருமணமே 

காந்தர்வம் ஆகா 

உறவிலது மங்கையில்லை 

நங்கையில்லை 

பிற வகையில் வருமே”

   30 வயது ஒட்டி இவருக்கு முறையான நிச்சயித்த திருமணம் நடக்கும். 

காந்தர்வம் என்று சொல்லக் கூடிய காதல் திருமணம் கிடையாது. உறவில் 

பெண் கிடையாது. ஆம் சுவாமி இருந்தாலும் ஆகாது. பிற வகையில் தேட 

வேண்டும். எனவே நன்கு ஜாதகம் பார்த்து பொறுமையாக ஒரு இடத்திற்கு 

நான்கு இடம் பார்த்து செய்ய வேண்டும். தற்போது 29 வயது நடப்பதால் 30 

வயது ஒட்டி என்று வருவதால் இப்போதே அதற்குரிய ஆயத்தப் பணிகளில் 

ஈடுபடுவது நலம் என்றேன். அவர்களும் அதைத்தான் செய்கிறோம் 

“முருகனது ஆசியது 

முழுமையாய் உண்டு 

நல்லவன்தான் 

பொல்லானில்லையே”

   முருகனது ஆசி உண்டு என்கிறாறே முருகப் பெருமான் இவருக்கு 

முருகனைப் பிடிக்குமா? சுவாமி சஷ்டி விரதம் இருந்து வருகிறார் 

முருகனது தீவிர பக்தர் என்றார்கள். முருக பக்தர்கள் நல்லவர்கள் தானே 

எப்படி பொல்லாதவனாக முடியும் என்றேன். 

“விடைகழி கந்தனை 

குராவடிக் குமரனை 

அபிடேக ஆராதனை 

செய்து ஆடை கொடுத்து 

அர்ச்சித்து வணங்கிய பின் 

அன்புடனே அவயாம்பிகையை 

சேவி அங்கு ஒருவள் 

செந்நிற ஆடைதாங்கி வருவர் 

ஆசி வாங்கி பின் 

அறுபத்தியாரு பேர்க்கு 

அண்ணாமலை தனிலே 

மகேஸ்வர பூஜை செய் 

அன்னையும் தந்தையும் 

அபிராமி தரிசனம் 

காலசங்கார மூர்த்தியையும் 

கச்சிதமாய் சேவிக்க வேனிமே”

   பின்பு பரிகாரம் உரைத்தார் முருகப் பெருமான். திருவிடைக் கழியில் 

அபிசேக பூஜையும், மயிலாடுதுறை அவயாம்பிகைக்கு அர்ச்சனையும், 66 

பேருக்கு திருவண்ணாமலையில் மகேஸ்வர பூஜையும், தாய், தந்தை 

இருவரும் திருக்கடையூர் தரிசனமும் செய்ய வேண்டும் என்றார் முருகப் 

பெருமான். இதை செய்தால் எல்லா நலமும் வரும் என்றார். சொன்ன 

உடனேயே இவரது தாய், தந்தையர் தனது 60ஆம் கல்யாணத்தை 

திருக்கடையூரில் நடத்த திட்டமிட்டுருப்பதாகவும் அதற்கு முருகனது ஆசி 

கிடைத்து விட்டதாகவும் குதூகலித்தார்கள். இவர்களை அழைத்து வந்தவர் 

பெருமை தாங்காமல் ஐயா தங்களால் தான் இருதய ஆபரேஷன் மூலம் 

உயிர் பிழைத்தேன் என்று கண்ணீர் விட்டார். இவரைப் பற்றி ஏற்கனவே 

கன்னிமார் பூஜை செய்ததை எழுதியிருக்கிறேன். வியப்பில் ஆழ்ந்து 

விழுந்து வணங்கி விடை பெறும் நேரத்தில் பெரியவர் ஐயா எனக்கு 70 

வயதாகிறது எனக்கும் முருகன் நாடி படிக்க வேண்டும் என்றார். 

சுவடியைப் பிரித்தேன் அதிர்ந்துப் போனேன். 

                                           ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!


அதிசயம்  தொடரும்............

6 கருத்துகள்:

  1. ஓம் அகஸ்திய மஹா ரிஷி நமஹ!!!ஞான ஸ்கந்த சரவண ஜோதியே நமோ நமஹ.!!!...ஞான ஜோதி அம்மா திருவடிகள் சரணம் சரணம்!!!

    பதிலளிநீக்கு
  2. அன்புள்ள கௌமாறபயணம் ஆசிரியர் அவர்களுக்கு,
    அனந்த கோடி நமஸ்காரம். தங்களுடய website-ஐ போன வாரம் தான் பார்க்க நேர்ந்தது. என்னுடய ஆன்மீக தேடலில் மற்றுமொரு முத்து கிடைத்த சந்தோஷம்.
    நானும் USA-யில், வசித்து வருகிறேன். தங்களிடம் சில personal விஷயங்கள் பேச வேண்டும். தயவு செய்து தங்களுடய E-MAIL முகவரியை என்னுடய e-mail- க்கு, அனுப்ப வேண்டும் என மிகவும் தாழ்மையோடு கேட்டு கொள்கிறேன். Thank you.

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்

    பதிலளிநீக்கு
  5. it is one of the beautiful articles. முருகப் பெருமான் நாடி never fails guru. all the best.

    பதிலளிநீக்கு