வெள்ளி, 13 நவம்பர், 2015

சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரசாமிகளின் அருள் உரை !






Lotus Tv யில் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரசாமிகள் அவர்கள் கந்தசஷ்டியை முன்னிட்டு  அருள் உரை வழங்குகிறார் 13.11.2015முதல் 18.11.2015வரை நேரம்  
தினமும் காலை 5.30முதல் 6.00 மணிக்குள் மறுஒளிபரப்பு 16.11.2015 அன்று முதல் தினமும் மாலை 6.00முதல் 6.30 வரை அனைவரும் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகளின் அருள் உரையை கேட்டு வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ்ந்திட எமது குருநாதர் திரு.ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் சார்பாகவும் மற்றும் ஞானஸ் கந்தாசிரமம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 


                                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

கௌமார மடாலயத்தில் கந்தஷஷ்டிப் பெருவிழா!


சின்னவேடம்பட்டி கௌமார மடாலயத்தில் 57 ம்  ஆண்டு கந்தஷஷ்டிப் பெருவிழா 12.11.2015அன்று சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் தலைமையில்   வேள்வி பூஜையுடன் சிறப்பாக தொடங்கப்பட்டது.

     தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் அடியார்களுடன் வேள்வி    பூஜையில்.


சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபரர் சுவாமிகள் கந்த ஷஷ்டி அன்று முருகப்பெருமானுக்கு தீப ஆராதனை செய்யும் காட்சி- நன்றி தினமலர் நாளிதழ்.

                                         ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

வியாழன், 12 நவம்பர், 2015

திருநீறு ஏன் அணிய வேண்டும்?



  ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் திருநீற்றின் பெருமையை பக்தர்களுக்கு அருளிய காட்சி.

திருநீறு இல்லாத நெற்றியும் வெறும் நெற்றியும் வீண். திருநீறு நெற்றியில் தரிப்பது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஆன்மீக பழக்கம் என்று சொன்னால் அது மிகையாகாது. பொதுவாக இந்து மத கோட்சாரப்படி திருநீறு நெற்றியில் இட்டுக்கொள்வது என்பது அனைவரும் கடைபிடிக்கும் பழக்கம் ஆகும். திருநீறு இட்டுக்கொள்வது ஆன்மீக காரணங்களுக்கு என்றாலும் கூட அதில் பல ஆச்சரிய தக்க உண்மைகளும் இருக்கிறது.

திருநீறு அணியும் போது ஒருவர் உடலில் உள்ள துர்வாடைகள் நீங்குகின்றன. காற்றில் இருக்கும் தொற்று நோய் கிருமிகள் ஒருவரை நெருங்காது. ஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு திருநீறு முக்கிய காரணமாக இருக்கிறது.

திருநீரை இரு புருவங்களுக்கு இடையில் தான் தரிக்க வேண்டும். அப்படி செய்யும்போது அந்த இடத்திற்கும் மூளை நரம்புகளுக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இரு புருவங்களுக்கு இடையில் திருநீறு வைக்கும்போது மூளை நரம்புகள் தூண்டப்பட்டு ஒருவர் தீர்க்கமாக சிந்தனை செய்ய தூண்டப்படுகிறார். நினைவாற்றலும் அதிகரிக்க படுகிறது. மாணவர்கள் நெற்றியில் திருநீறு அணியும் போது ஞாபக சக்தி அதிகரித்து, மூளை நரம்புகள் தூண்டப்பட்டு படிப்பில் அதிக கவனம் செலுத்துவர்



மாணவர்கள் மட்டும் அன்றி திருநீறு அணியும் அனைவரும் இந்த பலனை பெறலாம். இது ஆன்மீக உண்மை மட்டும் அல்லாது அறிவியல் ரீதியான உண்மையும் ஆகும்.
           
                                        ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் ஸ்வாமிகள் 



கோயிலில் விபுதி பிரசாதம் வாங்கும்போது இடது கையை கீழே வைத்து வலது கையை மேலே வைத்து வாங்க வேண்டும். வாங்கிய விபூதியை ஒரு தாளில் இட்டு நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும். இடது கை விரலால் நெற்றியில் விபுதி இடக்கூடாது.

நம்மை விட வயதில் இளையவர்களிடம் விபூதியை அவர்கள் கையிலிருந்து 
நாம் இடக்கூடாது. நம் கையில் வாங்கி வலது கை விரலால் நம் நெற்றியில் இட்டு கொள்ள வேண்டும்.

                                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

மகேஸ்வர பூஜை என்றால் என்ன ?

நமது குருநாதர் ஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அவர்கள் ஜீவநாடியின் மூலமாக அருளிய மகேஸ்வர பூஜையின் சிறப்புகள்  பற்றி கௌமார பயண  வாசகர்கள் பயன்படும் வகையில் இந்த பதிவினை வெளியிடுகின்றோம் 

ஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன்  சுவாமிகள் அவர்கள் 


மகேஸ்வர பூஜை  - பெயர் விளக்கம் :-

ஈஸ்வரன் என்றால் உடையவன் என்று பொருள். முடிவில்லாத மகா அண்டத்தை உடையவனை மகேஸ்வரன் என்கிறோம். மகேஸ்வரனுக்கு செய்யும் பூஜை  மகேஸ்வர பூஜை. ஆதியும் அந்தமும் அற்ற அந்த மகேஸ்வரனோ, அவனுடைய தொண்டர்களின் உள்ளத்துள் ஒடுக்கம் என்கிறார் ஔவையார். இந்த தொண்டர்கள் மகேஸ்வரர்  எனப்படுவர். அத்தகைய
பெருமை உடைய மகேஸ்வரர்களுக்கு செய்யும் பூஜை மகேஸ்வரபூஜை .

மகேஸ்வர பூஜையின் பெருமை 

புண்ணியங்களுள் சிறந்தது சிவபுண்ணியமாகும். அந்த  சிவபுண்ணியத்துள்ளும் சிவபூசை மிகவும் சிறந்ததாகும். அந்த சிவபூசையிலும் சிறந்தது மகேஸ்வர பூஜை.

மகேஸ்வர பூஜை எப்படி செய்யப்படுகிறது ?

மகேஸ்வர பூஜையாவது, மகேஸ்வரர்களை விதிப்படி பூசித்து அவர்களுக்கு அன்னம் ஊட்டுதலாகும். மகேஸ்வரர்களை தூரத்தே கண்டவுன், அவர்களது சாதி, குலத்தை
ஆராயாமல், ஏழை செல்வந்தர் என்றும் பாராமல், திருநீறும், கண்டமணியும் அணிந்திருக்கும் அந்த அடியவர்களை, மனிதர் என்றும் எண்ணாமல், சிவபெருமானே வந்திருப்பதாக எண்ணி உபசரிக்க வேண்டும். சிவவேடமே சிவனாக கொள்ளவேண்டும்.


சிவனின் மீது இருக்கும் அன்பினாலும், அவன் அடியவர்களின் மீது இருக்கும் அன்பினாலும், தம் இருப்பிடத்தை விட்டு எழுந்து, அகமகிழ்வோடும் முகமலர்ச்சியோடும், தம் கைகளைக் குவித்து அவர்களை எதிர்கொள்ள வேண்டும். அவர்கள் அருகில் சென்றபின், அவர்களின் திருவடிகளில் விழுந்து வணங்கி, இனிமையான சொற்களைப் பேசி வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 


குறிப்பு: பட்த்தில் நீங்கள் காண்பது 27.5.2014 அன்று ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் நடந்த மகேஸ்வர பூஜை, அந்த அற்புதமான பூஜையைச் செய்பவர் ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் அவர்களாவார்.
ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு  மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்.)

அவர்களை வசதியான இடத்தில் இருக்கையில் அமரச் செய்து, பூஜை செய்ய உகந்த கரகநீரைக் கொண்டு அவர்களின் திருவடிகளை விளக்க வேண்டும். அந்த நீரை தீர்த்தமாக எண்ணி, நம் தலையில் தெளித்து, உள்ளும் பருக வேண்டும். பின்னர், மெல்லிய சுத்தமான ஆடையினால் அவர்களின் திருவடிகளை ஒற்றி உலர்த்த வேண்டும். பின்னர் அவர்களை பூசை செய்வதற்கு உகந்த மலர்களால் பூசித்து, தூபதீபம் காட்டி, பூமியில் விழுந்து நமஸ்காரம் செய்ய வேண்டும். கைப்பு, புளிப்பு, தித்திப்பு, துவர்ப்பு, கார்ப்பு, மற்றும் உவர்ப்பு என்னும் அறுவகைச் சுவையை உடைய உணவை, உண்ணப்படுவது, தின்னப்படுவது, நக்கப்படுவது, பருகப்படுவது என நால்வகைப்படும் உணவுகளை, அவரவர் வசதிப்படி அமுது செய்விக்க வேண்டும். நான் மனித பிறவி பெற்ற பயனை இன்றல்லவோ பெற்றேன் என்று அவர்களிடம் மனமகிழ்வோடு கூற வேண்டும். 

சிவதருமோத்தரம், 
"புலையரே யெனினுமீசன்
பொலன்கழ லடியிற் புந்தி - நிலையரே லவர்க்குப் பூசை நிகழ்த்துத தாளி னேச -
மிலரெனி லியற்றும் பூசைப் பலந்தரு வாரே யாரே." 

அவர்கள் விடைபெற்று போகும் போது, அவர்களோடு கூடவே பதினான்கு அடி சென்று வழியேற்றிவிட வேண்டும்.

இத்தனை பெரும் சிறப்பு பெற்றது மகேஸ்வர பூஜை. இந்த மகேஸ்வர பூஜையை தினம்  தோறும் தவறாது, சைவ ஆகம விதிப்படி, உண்மையான உள்ள அன்போடு செய்து
சிறப்புப் பெற்றவர் இளையான்குடிமாற நாயனார். தினமும் மகேஸ்வர பூஜை செய்ததினாலே, தன்னுடைய எல்லையில்லாத பெருஞ்செல்வம் குறைந்து வறுமையில் வாடிய போதும், இவர் “புண்ணியம் செய்த நமக்கு கடவுள் இவ்வளவு இடர் செய்கிறாரே” என்று சிவனை சிறிதும் நோகாமல் தொடர்ந்து மகேஸ்வர பூஜை செய்து வரலானார். இவர்களின் மேலான தவத்தை உலகறிய செய்யவே, பரமசிவனார் இவர்கட்கு வறுமை அருளினார். பின்னர் இவர்கட்கு பேரின்ப வாழ்வைக் கொடுத்தருளிய பரங்கருணையாளன் சிவபெருமான்..


செங்கமலத் தாளிணைகள் சேர வொட்டாத்
 திரிமலங்கள் அறுத்தீசன் நேச ரோடும் செறிந்திட்டு
அங்கவர்தம் திருவேடம் ஆலயங்கள் எல்லாம்
 அரனெனவே தொழுதிறைஞ்சி ஆடிப் பாடி
என்குமியாம் ஒருவருக்கும் எளியோம் அல்லோம்
 யாவருக்கும் மேலானோம் என்றிறுமாப் பெய்தித்
திங்கள்முடி யாரடியார் அடியோம் என்று
  திரிந்திடுவர் சிவஞானச் செய்தியுடையோரே

     சிவபெருமானது செந்தாமரை மலர்ப்பாதங்களை சேரவிடாமல் தடுக்கின்ற மும்மலங்களை(ஆணவம் கன்மம் மாயை )வலிகெடுத்து  சிவபக்திமான்களோடு கூடிக் கலந்து இவர்களின் சிவவேடத்தையும் சிவலிங்கத்தையும் சிவனெனனவே கண்டு மகிழ்ந்து ஆடிப் பாடி (மல மயக்கம் நீங்காத) எவருக்கும் நாம் எளியர் அல்லோம் ,யாவரினும் மேலானவர் யாம் என்று பெருமிதமும் களிப்பும் உற்று,

திங்களைச் சடையில் தரித்த சிவபிரானின்  டியார்க்கெல்லாம் நாம் அடியோம் என்று கூறிச் சீவன் முக்தர்கள் வாழ்வர்.

              --சிவஞான சித்தியார்  

அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே.

                         திருச்சிற்றம்பலம்

                                      ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

                                            சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!

முருகப் பெருமானின் திருவுருவங்கள் !

நமது குருநாதர் ஸ்கந்த உபாசகர் ஜெகதீஸ்வரன் சுவாமிகள் அருளிய முருகப் பெருமானின் திருவுருவங்கள் !


முருகப் பெருமான் பல்வேறு திருக்கோலங்களில் அடியவர்களின் பரிபாக நிலைக்கு ஏற்ப உருவம் கொண்டு எழுந்தருளி குறைகளை களைந்து அருள்பாளிகின்றார். அத்திருவுருவங்கள் பற்றி பின்வருமாறு

முருகப்பெருமானின் குழந்தை வடிவங்கள் ஆறு.
1.பாலசுப்ரமணியர் 
2.காங்கேயர்
3.கார்த்திகேயன்
4.குழந்தை வேலன்
5.சரவணபவன்
6.ஸ்கந்தன்

பிரம்மச்சாரி வடிவங்கள் மூன்று.  
1.தேசிக சுப்பிரமணியர்
2.குருபரன்
3.ஞான சக்திதரன்

வீர வடிவில்(பராக்கிரம வடிவில்) பத்து.  
1.அஜாரூடர் 
2.சேனாபதி 
3.சசிவாகனர்
4.வில்லேந்திய வேலன்
5.கஜாரூடர்
6.பிரம்ம சாஸ்தா
7.தாரகாரி 
8.கிளௌஞ்ச  பேதனர்.
9.சகலகலாவல்லப மூர்த்தி 
10.வராக ஹோன்மத்த பங்க மூர்த்தி.

தேவியருடன் காட்சி தரும் முருகன் நான்கு .
1.தேவசேனாதிபதி 
2.வள்ளி கல்யாணமூர்த்தி 
3.ஷண்முகர்
4.குமாரர் 

மயில் மீது அமர்ந்து மூன்று நிலைகளில்.       
1.ஷண்முகன் 
2.சசிவாகனன் 
3.தேசிக சுப்பிரமணியன் 

மற்றும் இரு திருக்கரங்களை  உடையவர் சாத்வீக மூர்த்தி 
                நான்கு  திருக்கரங்களை உடையவர் இராசத மூர்த்தி   
                நான்கிற்கும் மேற்பட்ட கரங்களை உடையவர் தாமச மூர்த்திகள் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன.


ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!






செவ்வாய், 10 நவம்பர், 2015

முருகனின் திருநாமங்களும் பலன்களும்!


சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள்


சிரவை ஆதினம் குமரகுருபரர் சுவாமிகள் அருளிய முருகனின் திருநாமங்களும் பலன்களும்:-

  1. ஆறுமுகன் - கேட்டதை கொடுக்கும்.
  2. முருகன் - நினைத்ததை அளிக்கும்.
  3. குகன் - ஞானத்தை நல்கும்.
  4. குருபரன் - குருவைச் சேர்க்கும்.
  5. குமரன் - இளமையைக் கொடுக்கும்.
  6. சண்மகனே - சித்திகள் அளிக்கும்.
  7. சக்தி வேலன் - பெற்றோரை பேணிடச் செய்யும்.
  8. சரவணபவன் -தஞ்சம் அளிக்கும்.
  9. காங்கேயன் - பிறப்பை ஒழிக்கும். 



ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!



கௌமார மடாலயத்தின் கந்தஷஷ்டி பெருவிழா அழைப்பிதழ்!









சிரவை ஆதினம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்கள்



ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

சிரவை ஆதீனத்தின் சீர்த்தி சிறக்கட்டும்!!!