செவ்வாய், 30 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 32 !




சதுரகிரி பயணம் முடித்த பின்பு பொதிகைமலை செல்ல வேண்டும் அங்கு நமது ஜீவ நாடியை வைத்துப் பூஜிக்க வேண்டும் என்ற ஆவல் மீண்டும் கொழுந்து விட்டு எரிந்தது.

1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை தமிழகம் வழியாகச் செல்ல அனுமதி வழங்கியது.

  இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல மீண்டும் அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது. அதுவும் அனுமதி கிடைப்பது மிகவும் சிரமமாக எங்களுக்கு இருந்தது.

இந்த நிலையில்மதுரை இறையருள் மன்றம் பரமசிவம் அவர்கள் நீண்ட நாட்களாக என்னிடம் ஜீவ நாடி கேட்டு அதன் படி நடந்து வருபவர். அவர் சதுரகிரியில் சிவ சங்கு ஐயா அவர்களின் ஆஸ்ரமத்தில் இரவில் தங்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து தந்தார். அதேபோல் அவரிடம்  இந்த பொதிகைமலை பயணம் குறித்துச் சொல்லி இருந்தேன். அதற்கு தகுந்த நபர் மும்பை
கணேசரத்தினம் ஐயா அவர்கள்தான் என எண்ணி அவரிடம் என்னைப் பற்றியும் ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி இதுவரை நடத்தி வந்த அதிசயங்கள் பற்றியும் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்.

நான் உங்களைப் பொதிகை மலைக்கு என்னுடன் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்கிறேன் என்று மும்பை கணேச ரத்தினம் அவர்கள்  சொல்ல அவர்தான் உன்னை கூட்டிச் செல்லும் சரியான நபர் என முருகப் பெருமான் ஜீவ நாடியில் சொல்ல இத்தனை அதிசயங்களையும் அந்த அகத்தியரும் முருகப்பெருமானும் நடத்தி இருக்கிறார்கள்.

மும்பை கணேச ரத்தினம் அவர்கள் சிறந்த அகத்தியர் அடியவர் ஆவார். இவருக்கு அகத்தியர் பல திருவிளையாடல்களை நடத்தி இருக்கிறார். இவர் ஒருமுறை பொதிகைமலை செல்லும் போது ஒரு தேங்காயை உடைத்து அகத்தியர் அருளால் கொட்டுகின்ற மழையை நிறுத்தி உடனே சூரியனை தோன்றச் செய்து பின் பொதிகை மலை சென்று அகத்தியரை தரிசனம் செய்தவர்.

பொதிகை மலையில் அகத்தியராலேயே கொடுக்கப்பட்ட யோக தண்டத்தை வைத்து பூஜித்து வருபவர். ஒருமுறை இவர் திருப்பதியில் முடிகாணிக்கை செலுத்த சென்ற போது இவரது தலையில் முடியெடுக்க தீர்த்தம் போட இவர் மீது ஒரு சொட்டு தண்ணீர் கூட பட முடியாமல் தெளிக்கின்றவர் தலை மீதே அந்த தண்ணீர் கொட்டியது. என்வே மொட்டை அடித்துக் கொள்ளாமல் சென்ற இவர் முன்பு பெரிய தாடியுடன் அகத்தியர் தோன்றி காட்சி கொடுத்திருக்கிறார்.

நீண்ட நாட்களாக இவருக்கு ஆண்வாரிசு இல்லாத குறையை அந்த அகத்தியரே போக்கி வாரிசு தந்திருக்கிறார். அந்த ஆண் குழந்தைக்கு அகத்தியன் என்ற பெயரை வைத்திருக்கிறார். அந்த குட்டி அகத்தியனும் என்னுடம் பொதிகைமலைக்கு வந்து ஜீவ நாடியில் முருகன் மற்றும் அகத்தியரின் ஆசியைப் பெற்றான். அதேபோல் கருத்தடை செய்து கொண்ட ஒரு பெண் அகத்தியர் ஆசியால் கருவுறும் பாக்கியத்தைக் கொடுத்து இருக்கிறார் இவர் இதுவரை எங்கும் நாடி கேட்கவில்லை. இரு இடத்தில் கேட்டு இவருக்கு சரியாக வரவில்லை. இந்த நிலையில்  அவரிடம் 24.01.2015 அன்று அகத்தியர் நீ கடுக்கண் போடு பச்சை, சிவப்பு என்று சொல்லி இதன் சூட்சுமம் விரைவில் ஒருவர் அறிவிப்பார் என்று சொல்லியிருக்கிறார். உடனே தற்செயலாக மதுரை இறையருள் மன்றம் திரு.பரமசிவம் என்னைப் பற்றி இவரிடம் சொல்ல நமது ஜீவ நாடி உண்மை என்று இவரிடம் அகத்தியர் உரைக்க  உடனே என்னைத் தொடர்பு கொண்டார்.


 நானும் முருகனிடம் உத்தரவு கேட்க என்  சீடனிவன் உடனே படி என முருகனும் உரைக்க 25.1.2015 ஞாயிறு சஷ்டி அன்று ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவநாடி படிக்கப்பட்டது. எனக்கும் ஜீவ நாடியை பொதிகை மலையில் வைத்து வர வேண்டும் என்ற உத்தரவு வர அவருக்கும் என் மீது ஒரு வித ஈர்ப்பு வந்து எனக்கும் எனது சீடர்கள் சிலருக்கும் கேரள வனத்துறையில் அனுமதி வாங்கி பொதிகை மலை செல்ல் ஏற்பாடுகளை கணேச ரத்தினம் அவர்கள் செய்தார். 14.4.2015 மன்மத வருடம் முதல் தேதி யில் நமது ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் அப்ஸரா பப்ளிகேஷன்ஸ் நடத்திய முப்பெரும் விழாவை முடித்த உடனேயே எனது பொதிகைமலைப் பயணம் தொடங்கியது.

பொதிகை மலை செல்லும்  அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி,சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.

படம்: பொதிகை மலைப் பயணம் என்னுடன் ஞானஸ்கந்தாஸ்ரம அடியவர்கள்

அகத்திய முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள
வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது. 14.4.2015 ம் தேதி இரவு தென்காசியில் உள்ள அகத்தியர் பக்தர்களான வக்கீல் வீட்டில் தங்கினோம். 15.4.2015 புதன் கிழைமை காலை 5 மணிக்கு பயணம் ஆரம்பமானது. 16.4.2015 வியாழக்கிழைமை மதியம் குரு ஹோரையில் நமது ஜீவ நாடி அகத்தியப் பெருமானிடம் வைத்துப் பூஜிக்கப்பட்டது.

  முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

                                                      ...தொடரும்  பல அதிசயங்களுடன் 

செவ்வாய், 9 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 31!

                                    குரு வாழ்க!                                                குருவே சரணம்!

1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன்  --  அவினாசி அருகில் உள்ள

     பூண்டியிலும்,

2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன்  --  பெத்திக்கோட்டை

    ஓதிமலையிலும்,

3. நான்கு முகம் எட்டு கரங்களுடன்  --  திண்டுக்கல்

   சின்னாளப்பட்டியிலும்,

4. மூன்று முகம் ஆறு கரங்களுடன்  --  கோபி, காசிபாளையம்

    குமரன்கரட்டிலும்,

5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன்  --  சென்னிமலையிலும்,

6. ஒரு முகம்  தண்டாபுதபாணியாக  --  பழனியிலும்,

    முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.




திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் வழிபட்ட தலமாகும்.

அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள்

வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர்

செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத

கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப்

பறித்துக்கொண்ட தலம் எனக்கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்தி

தோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி,

சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்

பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை

வழிபட்டுச் செல்கின்றனர்.

 

ஓதிமலை சிறப்பு என்னவென்றால் படைப்புக் கடவுளான பிரம்மா

கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு

முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன்,

பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். அவர்

தெரியாது நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்

தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. படைக்கும்

கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது.

எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன்

இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”

எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய

ஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்

முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி

கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார்.




முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.

   சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம்

சொன்ன முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை

உபதேசித்தார். இவ்வறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த

மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு

“ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது. 18 சித்தர்களில்

ஒருவரான போகர் முருகனை தரிசிக்க பழனிக்கு செல்லும்போது

அவருக்கு சரியாக வழி தெரியாத நிலை ஏற்பட்டது. வழியில் இந்த

தலத்தில் தங்கிய போகர் முருகனை வேண்டி யாகம் நடத்தினார்.

அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார்.




இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ

வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை

நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்

கூறுகின்றனர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்

சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என அழைக்கப்படுகிறது.

கோவில் 1600 படிக்கட்டுக்கள் கொண்டது.

 



அதே போல் திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு

முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்

பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்

பெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்

கடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர்

நான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

 


அடுத்து மூன்று முக முருகனாக ஈரோடு மாவட்டம் கோபி

வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி

ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800

ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால்

முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த

முகமாக நிந்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.




எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை

பீடத்தில் அமைத்திருப்பதை காணலாம். ஆனால் இத்திருக்கோவில்

முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை

வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின்

ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன்

சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.




   இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில்

செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில்

இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே

இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்

அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல

கிரக பீடைகளும் உடனே விலகும்.

 


 பழனி பற்றி அறியாதார் உண்டா என்பதால் கூடுதல் விளக்கம்

தேவையில்லை என நினைக்கிறேன். இது போல் இன்னும் பல

இரகசியங்களை தொடர்ந்து சொல்லப் போகிறேன்.

                              “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

சனி, 6 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவநாடி இரகசியங்கள் பகுதி 30 !



   ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஜீவநாடியை நம்பிக்கையுடன் கேட்டு

பல்வேறு நலன்களை அடைந்து வரும் ஒரு நலம் விரும்பி நாடி பற்றிய

ஒரு சுவராஸ்யமான சம்பவத்தை எனக்கு அனுப்பி வைத்தார். அதை

அனைவரும் தெரிந்து கொண்டால் நலமாக இருக்கும் என்பதால் அதை

அப்படியே இங்கு எழுதுகிறேன்.


காண்ட நாடி பற்றிய சம்பவக் கதை இது.

   36 ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆதீனத்தின் முந்திய ஆதீனகர்த்தராகிய

ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிகர் கூறிய உண்மைச் சம்பவம் இது.

மதுரையைச் சேர்ந்த ஒரு நபர் நாடி ஜோதிடம் பார்ப்பதற்காக தஞ்சை

மாவட்டத்தில் ஓரிடத்திற்குச் சென்றார். அவருடைய ஏடு கிடைத்தது.

ஜோதிடர் படித்துக் கொண்டே வந்தார். எல்லாம் சரியாகவே இருந்தது.

திடீரென்று பாதியிலேயே நின்றுவிட்டது. ஏனெனில் அதற்கு மேல்

தொடர்ச்சியாக இருக்கவேண்டிய ஏடுகளைக் காணோம்! ஜோதிடர் கூறினார்.

 

“இந்த ஏடுகள் என்னுடைய மூதாதைகளுக்குச் சொந்தம். என்

தந்தையாருக்குப் பிறகு நானும் என் தம்பியும் பாகப்பிரிவினை செய்துக்

கொண்டோம். அப்போது சரி பாதி ஏட்டுச் சுவடிகளை என்னுடைய தம்பி

எடுத்துக்கொண்டான். இப்போது நான் படித்த சுவடியின் மீதிப் பாகம்

என்னுடைய தம்பியிடம் இருக்கலாம். அவனிடம் சென்று பாருங்கள்.



தற்சமயம் அவன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருக்கிறான்”.  என்று

கூறி ஜோதிடர் தன் தம்பியின் விலாசத்தையும் கொடுத்தார்.

   சில காலம் கழித்து மதுரைக்காரர் , திருவனந்தபுரத்திற்குச் சென்றார்.

பாதி வழியில் ஒரு விபத்தில் அவர் இறந்து போனார். அவருடன் சென்ற

நண்பர் தப்பினார். விடுபட்டுப் போன அந்த ஏடுகளில் என்னதான் இருந்தது

என்பதைப் பார்க்க அவர் ஆர்வம் கொண்டார். ஆகையால் திருவனந்தபுரம்

சென்று இளைய ஜோதிடரைச் சந்தித்து அவருடைய அண்ணன் கூறிய

விபரங்களைச் சொல்லி அவர் கொடுத்த சுவடிக்கட்டின் முதல் பாகத்தின்

ஏடுகளைக் கொடுத்தார். அவற்றை வைத்து மீதிப் பகுதியைத் தேடிக்

கண்டு பிடித்து இளைய ஜோதிடர் படிக்கலானார்.



அப்பகுதியில் ஒரே ஓர் ஏடுதான் இருந்தது. அதன் ஆரம்பத்தில் ஒரே ஒரு

வாசகம் மட்டுமே காணப்பட்டது.

“மலையாள தேசஞ்சென்று

மரணத்தில் ஏகுவானே” என்றிருந்தது!

   சாகவேண்டிய தருணத்தில் அவர் மலையாளதேசம் செல்ல

வேண்டியிருந்தது.  ஏட்டைத் தேடி அவர் மலையாள தேசம் சென்றார்.

முழுச்சுவடியும் தஞ்சாவூரிலேயே இருந்திருந்தால் அவர் மலையாள

தேசம் சென்றிருக்க மாட்டார்.

 

இப்படி ஆங்காங்கே பல்வேறு உண்மைச் சம்பவங்கள் நடந்து

வருகின்றன. வாசகர்கள் இது போல் அனுபவம் இருந்தால் அதை எனக்கு

அனுப்பி வைக்கலாம். பல பேருக்குப் பயன்படும். ஒரு சில இடங்களில்

போலி நாடி ஜோதிடர்களால் இந்த கலைக்குக் களங்கம் வந்தாலும் உண்மை

எப்போதுமே தோற்காது.



நமது ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி ஜீவநாடி மூலம் நடத்தி வரும் பல

திருவிளையாடல்களைப் பார்க்கும் போது ஜீவநாடியில்

வாக்கு உரைப்பது சாட்சாத் அந்த முருகனே என்பது  நிரூபணமாகிக்

கொண்டே இருக்கிறது. எதற்கெடுத்தாலும் சந்தேகப்பட்டால் இந்த இறைக்

காட்சி கிட்டுவதில்லை. நம்பிக்கை ஒன்றே நமது மூலதனம். நம்பிக்கை

இல்லாமல் எதுவும் நடக்காது என்பது திண்ணம். நமது ஜீவ நாடியைப்

பொறுத்தவரை முருகன் அருள் யார் மீது விழுகிறதோ அவருக்குத்தான்

நான் நாடி உரைத்து நலம் செய்ய முடிகிறது என்பது திண்ணம். நமது

ஜீவநாடியைப் பொருத்தவரை முருகன் அருள் யார் மீது விழுகிறதோ

அவருக்குத்தான் நான்  நாடி உரைத்து நலம் செய்ய முடிகிறது என்பது

என்னிடம் வருகின்ற அனைவருமே அறிந்த கூற்று. காரணம் பிரணவ

சொரூபியான முருகப் பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும்

ஒருங்கே நிறைந்துள்ளது. காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும்

மூர்த்தியான ருத்ரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய

மும்மூர்த்தி திரு நாமங்களின் முதல் மூன்று எழுத்துக்கள்

ஒன்றிணைந்ததே “முருகா” என்னும் திரு நாமம்.






1. இருள் படைத்த உலகம் ஒளி நிறைந்து விளங்க, ஒளி தருகிறது ஒரு

திருமுகம். இத்திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும்

ஞானக்கதிராக விளங்குகிறது.


2. அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து, அன்புடையோர்க்கு வரம்

தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது முகம்.


3. வேத மந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின்

கருணை மிகுந்த மூன்றாவது திருமுகம்.


4. நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம்

பொழிவது ஞான பண்டிதனின் நான்காவது திருமுகம்.


5. துஷ்டசம்ஹார சிஷ்ட பரிபாலகராக வீரத்தை விளங்கச் செய்வது

ஐயனின் ஐந்தாவது திருமுகம்.


6. தெய்வயானை, வள்ளியம்மை என்னும் கிரியா சக்தி, இச்சா

சக்திகளைக் கொஞ்சி மகிழ, கோடி சூரிய ஒளி காட்டும் அழகு முகம்

ஆறாவது திருமுகம்.


இவ்வாறு ஆறு திருமுகங்களைப் பெற்ற கந்தப் பெருமான்

பன்னிரண்டு திருக்கரங்களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு

அருள்பாலிக்கிறார்.நீலமயில் ஓங்கார சொரூபம், ஓங்காரமே பிரம்மம். அகர,

உகர, மகரா ஒலிகள் கூடியது தான் ஓங்காரம். இந்த தத்துவம்தான் முருகன்.

முருகா என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள்

நம்மை நாடி வரும். முருகனின் ஆறுபடை வீடுகளை நினைத்தாலே

மனம் ஆறும். நமது உடலில் ஆறு விதமான ஆதாரங்கள் உண்டு.

முருகப் பெருமான் இந்த ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக்

கொண்டுதான் எழுந்தருளி உள்ளார்.



திருப்பரங்குன்றம்  -- மூலாதாரம்

திருச்செந்தூர்      -- சுவாதிஷ்டானம்

பழனி             -- மணிபூரகம்

சுவாமிமலை      -- அநாகதம்

திருத்தணி         -- விசுத்தி

பழமுதிர்சோலை   -- ஆக்ஞை



இப்படிப்பட்ட சிறப்புகள் ஒருங்கே அமையப்பெற்ற முருகப் பெருமான்

எப்படி ஒரு சாதாரண மனிதனுக்கு ஓலையில் ஒளி ரூபத்தில்

தோன்றி வாக்கு உரைக்க முடியும் என்ற சந்தேகம் வருவது

இயற்கையே. அதற்கு முருகனே விடை தந்திருக்கிறார். எவர் ஒருவர்

என்னை முழுமையாக நம்பி பக்தி செய்கிறார்களோ அவர்களுக்கு

நான் தோன்றுவேன் என்பதே அது. அதுபோல் பலருக்கும் முருகன்

திருவிளையாடல்கள் நடத்திய வரலாறுகள் பல்லாயிரக்கணக்கில்

உண்டு. அது போல் இந்த ஜீவ நாடியில் தோன்றி வாக்குரைப்பதும்

அவரின் ஒரு விளையாட்டே. அப்படி ஒரு நாள் முருகப் பெருமானை

பூஜித்து சுவடியைக் கையில் எடுத்துப் பிரித்தேன். அப்போது ஸ்ரீ

ஞானஸ்கந்தர் ஜீவ நாடியில் கொங்கு நாட்டிலுள்ள ஆறுபடை

வீடுகள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் வந்தது.




அதன் விபரத்தை வாசகர்களும் முருக பக்தர்களும் தெரிந்து கொண்டால்

அந்த ஆறுமுகன் அருள் பெற வசதியாக இருக்கும் என்பதால் அதை

அப்படியே இங்கு எழுதுகிறேன். ஒவ்வொரு முருக பக்தர்களும்

தரிசனம் செய்யவேண்டும் என்றும் நாடியில் வந்துள்ளது. விருப்பம்

உள்ளவர்கள் இதைக் கடைபிடிக்கலாம்.

                                                                                   .....தொடரும்

                          “ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்”

வியாழன், 4 ஜூன், 2015

சித்தர்கள் ஜீவ நாடி இரகசியங்கள் பகுதி 29 ! ! !

                 பொதிகை மலையில் அலங்காரத்தில் அகத்திய மாமுனிவர்.

ஒரு நாள் பூஜைகளை முடித்து விட்டு நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியைப் பிரித்து முருகன் வாக்கிற்காகக் காத்திருந்தேன்.  அப்போது அகத்தியர் தோன்றி இந்த ஜீவ சுவடியை எடுத்துக் கொண்டு எனது மலைக்கு வா என்று வாக்கு கொடுத்தார். முருகப் பெருமானும் அதற்கு ஆசி என்றார். சரி என்று என்னிடம் நெருக்கமாக இருக்கும்  நமது ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தின்
அடியார்கள் சிலரிடம் இதைப் பற்றிச் சொன்னேன். சரி நாங்களும் உங்களுடன் வருகிறோம் தனியாக நீங்கள் செல்ல வேண்டாம் என்று சொல்லி திருமுருகன் பூண்டியில் இருக்கும் குமாரமான சிவன் அடியவர் ஒருவர் கேரள வனத்துறையினரிடம் அனுமதி வாங்குதல் மற்றும் இணையதளத்தில் பதிவு செய்தல் போன்ற காரியங்களைக் கவனிப்பதாகக் கூறினார்.



 இன்னும் சரியாக ஒரு வாரத்தில்  நமது பயணம் தொடங்கும்படி இருக்கும் என்று சொன்னவர் திடீரென்று சாமி நமக்கு அனுமதி கிடைக்க வில்லை என்றார். உத்தரவு இருந்தும் எப்படி இப்படி நடந்தது என அறிந்து கொள்ள வேண்டும் என்றும் காரணம் என்ன என்றும் முருகப் பெருமானிடம் கேட்டேன். ஜீவ நாடியில் பின் வருமாறு வந்தது.

”ஆசிரெனவாதம் உண்டு

அகத்தியன் ஆசியும் உண்டு

அற்புதமும் நடக்கும்

பொதிகைமலை செல்லவும் கூடும்

அதற்கு முன்பு சதுரகிரி செல்லு

முன் சேந்தமங்கலம் தரிசனம்

அவசியமாமே கந்தன் கூற்று கச்சிதம்

ஆசி! ஆசி! ஆசி! ”

 என்று வந்தது. சேந்தமங்கலம் பற்றி முன் பின் எந்த ஒரு தகவல்களும் தெரியாததால் சரி சேந்தமங்கலத்தில் என்ன இருக்கிறது எனப் பார்போம் என்று ஒரு குழுவுடன் அங்கு சென்றோம். சேந்தமங்கலம் எனும் ஊர் நாமக்கல் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தத்தாத்ரேயர் ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் சன்னியாசி கரடு என்றும் சன்னியாசி குன்று என்றும்
அழைக்கப்பட்ட இந்த ஸ்தலம், தற்போது தத்தகிரி முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.


ஞானம் பெற்ற பல முனிவர்கள், தவசிகள், யோகிகள், அருளாளர்கள், ஆன்மீகவாதிகள், சித்தர்கள் எனப் பலர் இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இத்திருக்கோயிலின் குகாலயத்தில் 29.12.1948 அன்று ஜீவசமாதி அடைந்த ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி
அவதூத மகா சுவாமிகள் சன்னிதானம் உள்ளது.  குகாலயத்திற்கு மேல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் விக்கிரகம் 29.5.1931ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இங்குள்ள தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் மையத்தில், சிவபெருமான் உருவம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள், விழுப்புரம் மாவட்டத்தில் கல்பட்டு அக்ரஹாரத்தில் ராமசாமி சாஸ்திரி- ஜானகியம்மாள் தம்பதியினருக்கு 1817ம் ஆண்டு 4வது மகனாக பிறந்தார்.


சிறு வயதிலேயே ஆத்மஞானம் பெறும் நோக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் இருந்தது.  பின்னர் தஞ்சாவூர் அருகில் ஆடுதுறையில் காவேரி கரையில் தவம்புரிந்தார். திருவிடை மருதூரில் பள்ளிக்கல்வியை
பயின்று, நாராயண சாஸ்திரி என்பவரிடம் வேதம் படித்தார். அதன் பிறகு காசி மாநகரில் சுமார் 3 ஆண்டுகள் தங்கியிருந்து, வேதங்களை பயின்றார். அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பி, மதுரை மாநகரை சேர்ந்த சதாசிவ பிரேம்மானந்தர், சரஸ்வதி அவதூத சுவாமிகளின் செயல்பாடுகளால்
கவரப்பட்டு நெரூரை அடைந்து ஜட்ஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.


 பின்னர் திருவண்ணாமலை, சேலம் வழியாக சேந்தமங்கலம் குகாலயத்தை வந்தடைந்தார். சுவாமிகள் அவதூத கோலத்தை தனது 28 வயதில் ஏற்றார்.  பிறகு சேந்தமங்கலம் குகாலயத்தில் தீவிர தவத்தில் இருந்து, சமுதாயம்
உய்வதற்கான நெறிமுறைகளை மக்களுக்கு போதித்து வந்தார். சைவம், வைணவம் என்ற பேதங்களை போக்கும் விதமாக இந்த குகாலயத்தில் தத்தாத்ரேயர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து 29.5.1931 ல் கும்பாபிஷேகம் நடக்க வைத்தார். குருவின் தீவிர சீடரான சாந்தானந்த சுவாமிகள்,



இக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரியவேண்டும் என்ற நோக்கத்தில் குகாலயத்தில் 20.1.1983ல் தமிழ்க்கடவுளான முருகன் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்தார்.  அன்று முதல் இத்திருத்தலம் தத்தகிரி முருகன் குகாலயம் என்று அழைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இத்திருத்தலத்தில் ஆன்மீக பணியாற்றிய சாந்தானந்த சுவாமிகள் 28.1.1985ல் சபா மண்டபத்தை அமைத்தார். சபா மண்டபத்தில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஐயப்பன், கருப்பண்ண சுவாமி, தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், வன துர்க்கை ஆகிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார். சபா மண்டபத்திற்கு வலப்புறம் குருநாதர் பல மாதங்கள்
தவம் புரிந்த குகை உள்ளது.  இத்திருக்கோயிலில், ஒவ்வொரு ஆங்கில மாதமும் கடைசி சனிக்கிழமையன்று சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனையும், ஒவ்வொரு மாதமும் முருகனுக்கு கிருத்திகை விழாவும், சிவனுக்கு பிரதோஷ வழிபாடும் நடந்து வருகிறது.


இந்த தகவல்களை எல்லாம் நேரில் சென்ற பின்பு அங்கு உள்ளவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். மிகவும் சுவாரசியமான தகவல்களாக இருந்தது மட்டுமில்லாமல் மிகவும் ரம்மியமான இடமாகவும் இருந்தது. ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி எதோ ஒரு காரண காரியத்துடந்தான் இங்கு அனுப்பி இருப்பார் என்று எண்ணி பிரார்த்தனை செய்து பின் விடை பெற்றோம். அத்ற்கு பின் சதுரகிரி செல்ல வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிக்கும் ஆயத்தப் பணிகளைக் கவனித்தோம்.



சதுரகிரி மகாலிங்கம் கோவில் நான்கு பக்கமும் நன்னான்காக 16 மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம். சித்தர்கள் வாழும் புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும்
மலைப் பாதைகள் உள்ளன.

மதுரை மாவட்ட மக்கள் வாழைத்தோப்பு பகுதி மற்றும் வத்திராயிருப்பு பகுதி மலைப்பாதையையும், தேனி மாவட்ட மக்கள் வருசநாடு பகுதி வழியிலான மலைப்பாதையையும் பயன்படுத்துகின்றனர். இப்பாதைகளில் வத்திராயிருப்புப் பகுதியிலிருந்து செல்லும் பாதை கடினமற்றது என்பதால் விருதுநகர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்ட மக்கள் இப்பாதையை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

இம்மலையில் ஐந்து கோவில்கள் உள்ளன

 சுந்தரமூர்த்தி லிங்கம்

 சந்தன மகாலிங்கம்

 இரட்டை லிங்கம்

 காட்டு லிங்கம்

இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி, தீராத நோயுள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு உள்ளது. மிகுந்த திகைப்பூட்டும் இந்த மலைகளில், இன்னமும்கூட சித்தர்கள் சிவபெருமானை வணங்கிவருவதாக நம்பப்படுகிறது.

சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.

கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள்,

ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம். சிலிர்ப்பூட்டும் செங்குத்தான லையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார்.

வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர், காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே. வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும்.

சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு. இப்படி சிறப்புகள் பல பொருந்திய சதிரகிரி மலையில் அகத்தியர் எங்களுக்குப் பல அதிசயங்களை நிகழ்த்தினார்...

                        ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!   (தொடரும்...)

புதன், 3 ஜூன், 2015

ஜீவ நாடியில் தோன்றிய எழுத்துக்களைப் படித்த மலேசிய முருக பக்தர் !

                                                    குரு வாழ்க!   குருவே சரணம்!

                                 சதுரகிரியில் தவக்கோலத்தில் ஸ்கந்த உபாசகர்


மலேசியாவில் இருந்து ஒரு முருக பக்தர் நமது குரு நாதர் ஸ்ரீ ஸ்கந்த உபாசகரைப் பார்த்து ஜீவ நாடி கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்தார். ஒரு நாள் பௌர்ணமி அன்று ஸ்ரீ ஸ்கந்த உபாசகரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு ஜீவ நாடி படித்தார் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர். படித்த சில நொடிகளிலேயே முருகப் பெருமான் ஒரு மந்திரத்தை அவருக்கு உபதேசம் செய்வதாகவும் அதனால் வந்திருப்பவரிடமே சுவடியைக் காட்டினால் அவரது கண்களுக்கு எழுத்துக்கள் தெரியும் என்றும் அதையே மந்திரமாக உச்சரித்து வரும்படியும் சொன்னார்.


அதை அவரிடம் சொன்னவுடம் கண்ணீர் மல்க சுவாமி என்னே நான் செய்த பாக்கியம் என்று சொல்லி சுவடியைப் பார்க்க பொன்னிறமாக 13 எழுத்துக்கள்  தோன்றியது. அனைத்தையும் சேர்த்துப் பார்த்தபோது ஒரு மிகப் பெரும் மந்திரம் இருந்தது. அதை அப்படியே எழுதிக் கொண்டார். பின்னர் மீண்டும் ஒருமுறை அவரிடம் சுவடியைக் காட்ட சொன்னார் முருகப் பெருமான். அதே போல் காட்டப் பட்டது.


எழுத்துக்கள் ஏதும் அதில் வரவில்லை. இதுதான் ஜீவ நாடி என்றும் தோன்றும் எழுத்துக்கள் மீண்டும் மறைந்து விடும் என்று ஜீவ நாடியின் பெருமைகளை ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் இவருக்குச் சொன்னார். வந்தவர் ஆச்சரியம் தாங்க முடியாமல் அழுதே விட்டார். மீண்டும் உரைத்தார் முருகப் பெருமான் இந்த மந்திரத்தை திருப்போரூர் சென்று 108 முறை ஜபம் செய்து சிதம்பரம் சுவாமிகளை குருவாகக் கொண்டு ஜபித்து வருமாறு சொன்னார்.


அதேபோல் இந்த மந்திர ஜபம் தொடங்கிய சில நாட்களிலேயே பல அதிசயங்களை நிகழ்த்துவதாகவும் அதைத் தனியாக எழுதி வைத்து மீண்டும் வரும்போது கொண்டு வரும்படியும் கூறினார். வந்தவர் மிகுந்த மகிழ்ச்சியோடு விடைபெற்றார். மலேசியா சென்ற பின் ஒரு வாரம் கழித்து அவர் மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொண்டார். முருகப் பெருமான் நாடியில் உரைத்தது போலவே ஜபம் செய்து வருவதாகவும் ஜபம் செய்த அடுத்த நாளே வரவே வராது என்று 8 வருடம் இழுத்தடித்து வந்த 15லட்சம் ரூபாய் தொகையை கொடுக்க வேண்டியவரே வீடு தேடி வந்து கொடுத்து விட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.


முருகனிடம் அந்த தொகை வருமா வராதா? எனத் தெரிந்து கொள்ளவே ஜீவ நாடி பார்க்க வந்ததாகவும், அப்படி அந்த தொகை வராவிட்டால் தமது குடும்பமே மிகுந்த கஷ்ட்த்திற்கு உள்ளாகி விடும் என்றே வந்த்தாகவும் தெரிவித்தார். முருகப் பெருமான் மலேசியாவில் இருந்து வந்த எனக்கு வேறு எந்த வாக்கும் உரைக்காமல் வெறும் மந்திரம் மட்டுமே உரைத்தாரே என்று அப்போது நினைத்தேன் அவர் பலன் சொல்ல வில்லை 100% விடை(சொல்யூசன்) கொடுத்துவிட்டார் என்பது இப்போதுதான் புரிகிறது என
நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அதே போல் எந்த முருகன் கோவிலிலும் இல்லாத ஒருவித தனி அதிர்வலைகள் இந்த ஞானஸ்கந்த மூர்த்தி இருக்கும் ஸ்ரீ ஞானஸ்கந்தாஸ்ரமத்தில் இருந்த்தாகவும் தெரிவித்தார். அருகில் இருந்தால் அடிக்கடி இங்கு வருவேன் ஆனாலும் வருடம் ஒருமுறையாவது இங்கு வர வேண்டும் என்றும் இனி என் வாழ்வு முழுதும் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தியை மறக்காமல் அவருக்கு சேவை செய்யும் பாக்கியம் வேண்டும்

அதற்கு ஆசியிடுங்கள் என்று ஸ்ரீ ஸ்கந்த உபாசகரை கேட்க அவரும் ஆசி என்றார். இப்படி தினம் தினம் திவ்யமான திருவிளையாடல்கள் பலவற்றை பலருக்கும் நிகழ்த்திவருகிறார் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி.

                                   ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

செவ்வாய், 2 ஜூன், 2015

ஜீவ நாடி அற்புதம்!!!



குரு வாழ்க!  குருவே சரணம் !


கோயம்புத்தூரில் இருந்து சுரேந்திரமான அடியவர் ஒருவர் நமது குருநாதர் ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் முருக தீட்சை பெற்று உபாசனை செய்து வருகிறார். அவரது மூத்த மகள் +2 தேர்வு எழுதும் முன்பு வந்து நமது ஸ்ரீ ஞானஸ்கந்தர் ஜீவ நாடியைக் கேட்டார். முருகப் பெருமான் பின்வருமாறு உரைத்தார்.

தேளேறி வந்தவள்

திவ்யமாய் வித்தை வரும்

மந்தனது சஞ்சாரம்

மந்த நிலை தந்தாலும்

மயிலேறி வந்து காப்போம்

ஆசி ஆசி ஆசி

இப்படி வந்ததால் ஒரு சிறு குழப்பம் ஏற்பட்டது. சுவாமி எனது மகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று அவள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் அதுதான் என் பிரார்த்தனை என்று ஸ்ரீஸ்கந்த உபாசகரிடம் சொல்ல குருநாதரும் 71/2 சனி நடப்பதால் சற்று மதிப்பெண்கள் குறைந்தாலும் முருகன் மயிலேறி வந்து காப்பேன் என்று சொல்வதால் இறுதியில் வெற்றி உனக்கே உண்டு அஞ்சாதே என்று சொல்லி சில வழிபாடுகளும் சொல்லி அனுப்பி வைத்தார். +2 தேர்வு முடிவுகள் வந்தது.

நாடியில் முருகப்பெருமான் உரைத்ததுபோன்று சற்று மதிப்பெண்கள் குறைந்தே வந்த்து 1132 மதிப்பெண்கள் பெற்று இவரது பெண் தேர்ச்சி பெற்றாலும் கட் ஆப் மதிப்பெண்கள் குறைந்து கல்லூரி சேர்க்கைக்கு அலையும்படி நேர்ந்தது. தேர்வு எண், விண்ணப்ப எண், தேதி எனெ அனைத்து எண்களின் கூட்டுத்தொகையும் 8 ஆகவே வந்து 71/2 சனி தனது வேலையைக் காட்டிக்கொண்டு இருந்தது. மீண்டும் நாடி கேட்க வந்தவர் வருத்தமாக சுவாமி அவள் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் அதுதான் என் பிரார்த்தனை என்று சொன்னார்.

 ஜீவ நாடி படிக்கப்பட்டது. முருகப் பெருமான் பின்வருமாறு உரைத்தார்.

ஆசிரெனவாதம் உண்டு

அவள் விரும்பும் இடமே கிட்டும்

அச்சமது கொள்ள வேண்டாம்

ஆறுமுகம் காப்பேன்


இப்படி வந்த்தும் சுவாமி பல லட்சங்கள் கட்டி அந்த கல்லூரியில் சேர பலர் காத்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் எனப் புரியவில்லை என்றார். அதற்கு ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் முருகனின் ஆசி இருப்பதால் நீயும் ஒரு விண்ணப்பம் போட்டு வை நிச்சயம் கிடைக்கும் என்றார். சரி என்று அவர் அரை மனதுடன் விடை பெற்றார். திடீரென ஒரு நாள் ஸ்ரீ ஸ்கந்த உபாசகர் ஐயாவை போனில் தொடர்பு கொண்டு சுவாமி முருகன் உரைத்தது போலவே

எனது மகளுக்கு அவள் விரும்பிய கல்லூரியில் இடம் கிடைத்து விட்டது உங்களுக்கு கோடான கோடி நன்றி என்றார். பல லட்சங்கள் கட்டி அந்த கல்லூரியில் சேர பலர் காத்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு எப்படி இடம் கிடைத்தது என்றே பெரிய ஆச்சரியமாக உள்ளது.

இது நிச்சயம் முருகனின் திருவிளையாட ல்தான் என்பது எனக்குப் புரிகிறது. கடைசி காலம் வரை கந்தனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது அவா என்று தெரிவித்தார். இப்படி முருகப் பெருமான் தனது ஜீவ நாடி மூலம் பல திருவிளையாடல்களை நடத்தி வருகிறார்.

                          ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!