வியாழன், 21 ஜூலை, 2016

குடமுழுக்கின் போது கோபுரத்தின் மேல் வட்டமிட்ட கருடன்

துன்முகி ஆண்டு ஆனித்திங்கள் 30 ஆம் நாள் (14.07.2016) வியாழக்கிழமை  அன்று,  விழுப்புரம் மாவட்டம், கள்ளகுறிச்சி வட்டம், சிறு நாகலூர் கிராமத்தில், எழுந்தருளியுள்ள அருள்மிகு யோகநாயகி உடனுறை ஆத்மநாத சுவாமி திருக்கோவில், திருநெறிய தமிழ்த்திருக்குடமுழுக்குப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழா கடந்த 11.07.2016 திங்கள் 6.00 மணிக்கு ஐங்கரப்பெருமான் வேள்வியில் தொடங்கி, முறையாக மங்கள இசை, ஓதுவாமூர்திகள்    திருமுறை படல்களைப்பாடி, கோவை, சிரவை ஆதீன அருட்பணி மன்றம் கௌமார மடாலயத்தர்கள் நடத்திய  ,  முதலாம் கால வேள்வி, இரண்டாம் கால வேள்வி, மூன்றாம் கால வேள்வியை   தொடர்ந்து, 14.07.2016 அன்று காலை  9.15 மணிக்கு,  சிரவை ஆதீனம், மயிலம் பொம்மபுர ஆதீனம் சுவாமிகள் ,திருவாடுதுறை திருவென்னைநல்லூர் தம்பிரான்சுவாமிகள், கள்ளக்குறிச்சி சைவசித்தாந்த பேரவை ஆகிய அனைவரும் கலந்து விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி விழாவை சிறப்பு செய்தார்கள். மேலும் இவ்விழாவிற்கு மகுடம் வைத்தாற்போல இறைவனின் திருவருளால், கோபுரத்திற்கு மேல் கருடன் வட்டமிட்டது. இந்த தரிசனம் எங்கும் காண கிடைக்காத தரிசனம் என அருளாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இந்த நிகழ்வு,  சிறு நாகலூர் கிராமத்தில், எழுந்தருளியுள்ள அருள்மிகு யோகநாயகி உடனுறை ஆத்மநாத சுவாமி திருக்கோவில் அருள் ஆற்றல்  நிறைந்தது என்பதற்கான சான்றாக அமைகிறது எனலாம்.

கருடன் வட்டமிடும் அருள் காட்சி

விழாவில் குரு மஹா சந்நிதானங்கள்

அவிநாசி கோவில் சுப்பிரமணியர் திருத்தேர் வெள்ளோட்ட நிகழ்வில் சிரவையாதீனம் அவர்கள்...... பரிவட்டம் கட்டிய அழகு என்னே அருமை....கண்கொள்ளாக் காட்சி....முருகா.....

சிரவையாதீன சீர்த்தி சிறக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக