புதன், 26 அக்டோபர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-1

இந்தத் தொடர் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தொடராகும். ஜீவ நாடியைப் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் அளித்த பதில் தொரடாக அனைவருக்கும் பகிரப்படுகின்றது.இதன் மூலம் வாசகர்கள் ஜீவ நாடி குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும்.
1.ஜீவ நாடியை நம்பலாமா?
ஜீவ நாடியை நம்பலாமா? வேண்டாமா? என்பது அவரவர்களின் அனுபவத்தைப் பொறுத்த விஷயம். ஆனால் நமது ஸ்ரீஞானஸ்கந்தர் ஜீவ நாடியைப் பொறுத்தவரை 100% முருகப்பெருமானின் வாக்கு. சில நேரங்களில் அகத்தியரும் முருகனும்உரையாடும் வடிவில் வாக்கு வருகின்றது. 100% முழு நம்பிக்கை யாருக்கு இருக்கின்றதோ அவர்களே நமது ஜீவ நாடியை வந்து கேட்க முடியும். நம்பிக்கை இல்லாமலும், விளையாட்டாகவும் ஜீவ நாடியை அனுகுவது சித்தர்களின் கோபத்தை அதிகப்படுத்தி அதன் மூலம் தேவையில்லாத நிகழ்ச்சிகள் நடந்துவிடும் என்பதால் நம்பிக்கை இல்லாமல் ஜீவ நாடி கேட்க முயற்சிக்கக் கூடாது. நம்பி வந்து விட்டால் அவர்களை 100% எப்படியேனும் முருகன் கரையேற்றி விடுகின்றார் என்பதை ஏற்கனவே ஜீவ நாடி கேட்டு வரும் பலரின் அனுபவம். நமது ஜீவ நாடி 100% சத்தியமானது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துக்களும் இல்லை. எனவே 100% அனைவரும் நம்பி தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம்.
2.ஜீவ நாடியில் எல்லாமே வருமா?
 நமது ஜீவ நாடியில் ஜோதிடம் உரைப்பது போல் உரைப்பார்கள் என்று கருதக்கூடாது. முருகனும் அகத்தியரும் ஜோதிடம் சொல்வதிலை. மாறாக வந்து அமர்ந்த உடனேயே அவர்கள் அருள் வெள்ளம் உங்கள் மீது பாய்ந்து அதன் மூலம் உங்கள் முன் ஜென்மத்தின் அனைத்துவிதமான செயல்களின் பதிவுகளையும் நீக்கி இந்த ஜென்மத்தை நீங்கள் எதற்காக எடுத்துள்ளீர்களோ அதை விரைவில் புரியவைத்து பல்வேறு அதிசயங்களை நடத்துவது 100% கடந்த 20 ஆண்டுகளாக கண்கூடாக நடந்து வருகின்றது.அதே போல் அந்த நேரத்தில் என்ன உரைக்க வேண்டும் நீங்கள் எதைத் தெரிந்து கொள்ள வேண்டும் எனும் விதியமைப்பும் அனுமதியும் உள்ளதோ அதை மட்டுமே முருகன் நாடியில் உரைக்கின்றார். உதாரணமாக ஒருவருக்கு திருமணம் 30 வயதில் நடப்பதாக வைத்துக் கொள்வோம், அவருக்கு 10 வயது நடக்கும் போது திருமணம் குறித்து கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்பது தெளிவு. ஆனால் அதேசமயத்தில் நாடியில் அந்த 10 வயது சிறுவனுக்கு திருமணம் குறித்த செய்திகள் வந்தால் நம் பிராப்தம் என்று கேட்டுக் கொள்ளலாம். நாமாக கேட்பது அவசியத் தேவைகளாக இருக்க வேண்டும். ஜாதகம், ஜோதிடம் பார்க்கும் போது ஒரு சிலர் இப்படி பல கேள்விகளைக் கேட்பது உண்டு. ஆனால் தெய்வமும் சித்தர்களும் நமக்காக கீழே இறங்கி வந்து நாடியில் தோன்றி வாக்குரைக்கும் போது நாம் எவ்வளவு பக்தி சிரத்தையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும். எனவே ஜீவ நாடி கேட்க வந்து அமர்ந்த உடனேயே உங்கள் கேள்விகளின் பதில் கேட்டு யாம் பிரார்த்தனை செய்து சுவடியைப் பிரித்து பாடல் வடிவில் வருவதை அப்படியே பாடுகின்றோம். இறுதி வரை அமைதியாக இருந்து கேட்டு விட்டு ஜீவ நாடியில் வந்துள்ள வழிபாடுகளை கடைபிடிக்கத் துவங்க வேண்டும். மீண்டும் அடுத்து எப்போது வந்து ஜீவ நாடி கேட்க வேண்டும் எனும் குறிப்பும் நாடியிலேயே வந்துவிடும் என்பதால் மீண்டும் அடுத்த நாடி கேட்க பொறுமையாக குறிப்பிட்ட நாள் வரை காத்திருக்க வேண்டும்.
                                                                                                                             தொடரும்...
                    ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

1 கருத்து:

  1. respected sir,
    I am waiting . i came there on jan 2017 , again i was asked to come on july 2017 , bit i did not get appointment
    sridhar pollachi 9894823365

    பதிலளிநீக்கு