ஞாயிறு, 16 அக்டோபர், 2016

குருவை மறந்தவரைக் கண்டித்த ஜீவ நாடி


ஒருவர் வந்து ஜீவ நாடி கேட்க அமர்ந்தார். அவருக்கு ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் முருகப்பெருமான் மீது பாடல்களைப் பாடி ஜீவ நாடி உரைக்கத் துவங்கினார்கள். வந்தவர் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். அவருக்கு ஜீவ நாடியில் இரு பட்டம் படிக்கும் யோகம் என வந்தது. ஆம் அவர் இரு பட்டம் படித்திருக்கின்றார். அதுவும் MBA படிப்பு. சரி இதுவரை மணமாகவில்லை இப்போது அதற்குரிய நேரம் வந்துவிட்டது முயற்சி செய். சரி என்றார் வந்தவர். பெண்களால் தொல்லை இதுவரை வந்திருக்கக்கூடும் ஆனாலும் பயமில்லை. ஆம் சுவாமி என்றார். இப்படி அவரது எதிர்காலம் குறித்து முருகப்பெருமான் ஜீவ நாடி மூலம் உரைக்கும் கருத்துக்களை அப்படியே எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் உரைத்து வந்தார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள். அப்போது திடீரென ஜீவ நாடியில் இரண்டு கைகளையும் உயரே தூக்கி ஆசிர்வாதம் செய்யும் ஒரு மஹானின் உருவம் வந்தது. அவரது படம் உங்கள் வீட்டிலும் உள்ளது என்கின்றார் முருகப்பெருமான் யார் அவர் என்றார் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள். சுவாமி அவர் என் குரு என்றார் வந்தவர். சரி நல்லது என மேலே உரைக்கத் தொடங்கினார் முருகபெருமான். சரி அவர் உன் குரு தான் தவறில்லை அவருடைய படம் உன் வீட்டிலும் உள்ளது நல்லதுதான். ஆனால் நீ குருவை மறந்துவிட்டாய். வீட்டில் படம் மட்டும்தான் உள்ளது. அவர் சமாதி அடைந்த பின்பு அவரது ஆலயம் தேடி நீ இதுவரை செல்லவே இல்லையே…இது சரியா? என்றார் முருகப்பெருமான். அந்த இளைஞருக்குத் தூக்கி வாரிப்போட்டது. சுவாமி 100%சத்தியம். அவரது தபோவனத்திற்கு இப்போது நான் செல்வது கிடையாது மன்னியுங்கள் என்றார். குருவை மறப்பது மிகக்கொடிய செயல் என்றும் இனி அவ்விதம் செய்யாதே என்றும் எச்சரித்தார் முருகப்பெருமான்.
மனிதனின் வாழ்க்கையானது அகல் விளக்கை போன்றது.அகல் விளக்கில் நெய் இருக்கும் வரை அது எரிகின்றது அதுபோல மனிதனின் வாழ்க்கை உயிர் இருக்கும் வரைதான். அகல் விளக்கில் எரிகின்ற ஜோதி நிலையானது அதுபோல மனித உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா என்றும் அழிவதில்லை. இந்த உலகத்தில் உள்ள அனைத்து பொருளும் அணுக்களின் தொகுப்பே.எனவே இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணர்வுதான் உயிராகிறது.அந்த உணர்வுதான் கடவுளாகும்.அந்த உணர்வை அடைவதற்குதான் இந்த மனிதப்பிறவியை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார்.
நம்மை படைத்த கடவுள் ஒவ்வொரு மனிதனுக்கும் இறை தன்மையை உணர வாய்ப்பைக்  கொடுத்து கொண்டே இருக்கிறார். அதற்கு உதாரணம் கோதுமை குளவியனது புல்வெளிகளில் இருக்கும் புலுவிடம் சென்று ரீங்காரம் செய்கிறது.அதில் எந்த புழு தன்னை பார்க்கிறதோ 
அதை தன் கூட்டுக்கு கொண்டு வந்து ரீங்காரம் பாடியே அந்த புழுவை குளவியாக மாற்றுகிறது.அதுபோல எந்த ஒரு மனிதன் குருவின் வழியாக தனக்கு பிடித்த தெய்வத்தின்  உபாசனை மந்திரத்தை தினமும் ஜெபம் செய்கிறானோ அவனே கடவுள் தன்மையை அடைய தகுதி ஆகிறான்.
எனது வாழ்கையில் ஏற்பட்ட எல்லாவித மாற்றங்களுக்கும் எனது குருவே காரணமாகிறார். குரு தொட்டு காட்டாத வித்தை குருட்டு வித்தை என்ற பழமொழியை போல குரு உபதேசித்த அனைத்தையும் சரியாக செய்தாலே இவ்வுலகத்திலும் அவ்வுலகத்திலும் இடம் உண்டு என்பது சத்தியமான உண்மையாகும் என்று ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் அவர்கள் தனது அனைத்து குரு நாதர்களின் பெயர்களை உரக்கச் சொல்லி கண்ணீர் மல்கினார். அதைப் பார்த்த அந்த இளைஞர் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகள் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். பின் குரு பெருமையை அறிந்து கொண்டாயா? என வினவி திருநீறு அளித்து அந்த இளைஞனுக்கு நல்லாசி கூறி அனுப்பி வைத்தார். இப்போது அந்த இளைஞன் ஸ்ரீஸ்கந்த உபாசகர் சுவாமிகளையும் தனது குருபோல் எண்ணி முருகனின் வாக்கைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றான்.
                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக