திங்கள், 31 அக்டோபர், 2016

ஜீவ நாடி கேள்வி பதில் பகுதி-2


3.திருமணம் ஆக வேண்டி இருப்பவர்களுக்கு ஜீவ நாடி என்ன சொல்கின்றது?
 ஒருவருக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா? என்று 100% மிகத்துல்லியமாக ஜீவநாடியில் முருகப்பெருமானும் அகத்தியரும் உரைத்துவிடுகின்றார்கள்.நீண்ட காலமாகத் திருமணம் ஆகவேண்டி காத்து இருப்பவர்கள் ஜீவ நாடி கேட்க வந்து அமரும்போது திருமணம் குறித்த அனைத்துவிதமான தகவல்களும் வருகின்றது. பூர்வ ஜென்மத்தில் ஆண்கள் அல்லது பெண்களிடம் வாங்கிய சாபம் ஏதேனும் இருப்பினும் அதை நீக்கும் வழிகளை எந்த ஒரு ஒளிவு மறைவின்றி ஜீவ நாடி உரைக்கின்றது. ஜீவ நாடி சொல்லும் வழிகளைக் கடைபிடித்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் திருமணமே ஆகாது என்று வெறுப்படைந்தவர்கள் கூட 100% உடனடியாக திருமணம் ஆகும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றார்கள். தங்கள் சாபங்கள் தீரும் வரை தொடர்ந்து சில மாதங்கள் இடைவெளிவிட்டு மீண்டும் மீண்டும் ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைக்கும் வாக்குகளைக் கேட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு திருமணம் நடந்துவிடுகின்றது. இதை விடுத்து சன்னியாசியாகும் அமைப்பு, காதல் திருமணம் செய்யும் யோகம், துறவு செல்லும் தகுதி என மிகத்துல்லியமாக ஜீவ நாடியில் முருகப்பெருமான் உரைத்து நல்வழிகாட்டி ஒருவரின் வாழ்விற்கே ஒரு கலங்கரை விளக்கமாக ஜீவ நாடி திகழ்கின்றது எனலாம். அதேபோல் இல்லறவாழ்வில் சதா சண்டையிட்டு ஒற்றுமை இல்லாத தம்பதிகளுக்கும் ஜீவ நாடி நல்ல வழி காட்டி வருகின்றது. விவாகரத்து வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஸ்திரீ சாபத்தை ஜீவ நாடி மூலம் நிவர்த்தி செய்யப்பட்ட உடனேயே ஒரு முடிவுக்கு வருவதைப் பார்த்து வருகின்றோம். அப்படி விவாகரத்துப் பெற்றவர்கள் உடனடியான மறுமண வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவும் ஜீவ  நாடியில் வழி கிடைக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை 100% ஜீவ நாடி மீது நம்பிக்கை வைப்பதும் முருகனை நாடி வந்து ஜீவ நாடி கேட்டு இன்னவன் வாழ்வில் ஒரு வசந்தம் வரவேண்டும் என்ற பிராப்தமும் இருக்க வேண்டும் என்பதும் அவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். பிராப்தம் இருப்பவர்களுக்கே ஆருடம் எனும் முறையில் இதுபோன்ற தகவல்களைப் படிக்கும் வாய்ப்பை இறைவன் வழங்குகின்றார் எனலாம்.
தொடரும்…
                ஓம் ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக